• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Thought for today!

Did youfind this useful Yes - No

  • YES

    Votes: 44 88.0%
  • NO.

    Votes: 6 12.0%

  • Total voters
    50
மறக்காதே மறக்காதே . . .

சில விஷயங்களை
ஒருபோதும் மறக்கவே கூடாது . . .

நாமஜபத்தை மறக்காதே . . .

அன்பை மறக்காதே . . .

நன்றியை மறக்காதே . . .

பெற்றோரை மறக்காதே . . .

வாங்கின கடனை மறக்காதே . . .

உன் கடமையை மறக்காதே . . .

நல்லவைகளை மறக்காதே . . .

நல்லவர்களை மறக்காதே . . .

உழைப்பை மறக்காதே . . .

உதவியவை மறக்காதே . . .

உதவியவரை மறக்காதே . . .

தெய்வத்தின் அருளை மறக்காதே . . .

தாய்மொழியை மறக்காதே . . .

பக்தர்களை மறக்காதே . . .

பக்தியை மறக்காதே . . .

பஜனையை மறக்காதே . . .

சத்சங்கத்தை மறக்காதே . . .

சத்குருவை மறக்காதே . . .

மறக்காதே . . .
இதில் ஒன்றை மறந்தாலும்
நீ மனிதரில்லை . . .
 
விழு . . . விழு . . . விழு . . .தெய்வத்தின் திருவடியில் விழு !
நினை . . . நினை . . . நினை . . தெய்வத்தினை என்றும் நினை !
நினை . . . நினை . . . நினை . . .
மற . . . மற . . . மற . . .
மற்றவர் தவறை மற !
செய் . . . செய் . . . செய் . . .
எப்பொழுதும் முயற்சி செய் !
விடு . . . விடு . . . விடு . . .
உன் அஹம்பாவத்தை விடு !
சொல் . . . சொல் . . . சொல் . . .
நல்லதை மட்டுமே சொல் !
நில் . . . நில் . . . நில் . . .
இவ்வுலகில் தைரியமாக நில் !
கொடு . . . கொடு . . . கொடு . . .
உன்னால் முடிந்ததைக் கொடு !
கேள் . . . கேள் . . . கேள் . . .
குரு சொல்வதை சரியாகக் கேள் !
விதை . . . விதை . . . விதை . . .
நல்ல எண்ணங்களை மட்டுமே விதை !
அழி . . . அழி . . . அழி . . .
உன் சுயநலத்தை முற்றிலும் அழி !
படி . . . படி . . . படி . . .
உன் வாழ்க்கையை ஒழுங்காய் படி !
அழு . . . அழு . . . அழு . . .
தெய்வத்தின் பக்தியில் சுகமாய் அழு !
விழு . . . விழு . . . விழு . . .
தெய்வத்தின் திருவடியில் விழு !
எழு . . . எழு . . . எழு . . .
வீறு கொண்டு வாழ்வை வெல்ல எழு !
பிடி . . . பிடி . . . பிடி . . .
நம்பிக்கையை இறுக்கிப் பிடி !
ஓடு . . . ஓடு . . . ஓடு . . .
சத்சங்கத்திற்கு ஆசையாய் ஓடு !
தடு . . . தடு . . . தடு . . .
கெட்டவர் உன்னை நெருங்காமல் தடு !
கூடு . . . கூடு . . . கூடு . . .
நல்லவரோடு மட்டுமே கூடு !
எடு . . . எடு . . . எடு . . .
சீக்கிரமாய் நல்ல முடிவை எடு !
 
��தினம் ஒரு மூலிகை ��


ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். சந்தையில் விலை மலிவாக கிடைக்கும் மூலிகைச்சாறு மற்றும் பழரசங்களில் (செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவை) எந்த ஒரு சத்துக்களும் கிடைக்காது. நோய்கள் தான் பெருகும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம்.

��திங்கள் – அருகம்புல்

ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

��செவ்வாய் – சீரகம்

இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும் . ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி , இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம்,மந்தம் நீங்கும். சீா்+அகம்
=சீரகம்.நமது (அக)
உடல் உள்ளுறுுப்புகளை
சீராக செயல்பட
வைக்கும்.

��புதன் – செம்பருத்தி

இரண்டு செம்பருத்தி பூ( மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்தவிருத்தி, இரத்தசுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

��வியாழன் – கொத்துமல்லி

ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மைஆகியவை நீங்கும்.
கொத்துமல்லித்
தழை ஒரு கைப்பிடி
அளவு எடுத்து, நீாில்
அலசி, மிக்ஸியில்
போட்டு அரை டம்ளா்
நீா் சோ்த்து அரைத்து,
அதன் சாறை மட்டும்
வடிகட்டி காலையில்
வெறும் வயிற்றில்
அருந்தினால்,ரத்தம்
சுத்திகாிக்கப்பட்டு,
கெட்ட கொழுப்பபை
நீக்கி,கிட்னியின்
சுத்திகாிக்கும் செயல்
பாட்டுக்கு உதவும்
ஒரு அரும் மருந்து.

��வெள்ளி – கேரட்

ஒரு கேரட்(உள்ளங்கை அளவு), ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும்.ஆண், பெண் மலட்டுத் தன்மையை சரி செய்யும் . கண்பார்வை தெளிவுறும்.இதய சம்பந்தபட்ட நோய்கள் சரி ஆகும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் கரையும்.மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக காரட் ஜூஸ் நல்ல மருந்து.

��சனி – கரும்புச்சாறு

கரும்பு சாறு (இஞ்சி, எலுமிச்சை, ஐஸ் சேர்க்காதது) ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் தீரும். காமாலை வராமல் தடுக்கும்.உடல் பருமன், தொப்பை குறையும்.ஜீரண
சக்தியைத் தூண்டும்.

��ஞாயிறு – இளநீர்

ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.
உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும்.இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.
இளநீரை காலை
வெறும் வயிற்றில்
அருந்தக்கூடாது.
ஏனெனில்
வயிற்றுப்புண்
ஏற்படும்.

இன்றைய மகளிா் அணைவரும் தொிந்துகொள்ள வேண்டிய விசயம்.

 

உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?
அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் & ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.
பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.
மிளகு சேர்ப்பதால், உணவில் உள்ள விஷம் நீங்குவதோடு உடலில் உள்ள விஷமும் முறிகிறது.
உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல்; குளிர்ச்சியையும் தருகிறது.
வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் அது உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.
கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.
உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.
காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.
உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது.
இடதுகையை கீழே ஊன்றிக் கொண்டை சாப்பிடக்கூடாது.
சாப்பிடும் சமயம் டி.வி பார்க்கக் கூடாது.
வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.
காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது.
சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.
உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். தயவுசெய்து வலைத்தளம் முதலியன அப்போது வேண்டாமே!
இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.
சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது.
நின்று கொண்டு சாப்பிக் கூடாது.
அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.
சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது.
தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது.
இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்.
ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.
எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது.
அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.
புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.
வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.
நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.
இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.
உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.
அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.
உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்.

 
Last edited:
காயத்ரி மந்திரம் உடலை இயக்கும் ஒரு ஜிம்
காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது, ‘மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892-1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் ‘நதிகளில் நான் கங்கையாகவும், மலைகளில் நான் விந்திய மலையாகவும், மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சுவாமி இராம கிருஷ்ண பரமஹம்சர் கூறுகையில் ‘பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும், காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும்.
இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
காஞ்சி பெரியவர் காயத்ரி ஒரு சிறந்த மனத் தூய்மைக்கான அருமருந்து என்கிறார்.
ஸ்ரீ சத்ய சாயி பாபா "ஒரு நாளைக்கு குறைந்தது 3 முறையாவது கூறுங்கள். குறிப்பாக குளிக்கும் போது கட்டாயம் கூறுங்கள்.
அப்போது உடல் தூய்மையுடன் மனத்தூய்மையும் ஏற்படும்" என்கிறார்.
பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் ‘காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் சமம்’ எனக் குறிப் பிட்டுள்ளார்.
ஜெர்மன் தத்துவ ஞானி மெக்ஸ் முல்லர் (1823-1900) அவர்கள் ‘ஒளியினை தவம் செய்து நம் மூளை, மனதினை உயர்த்துவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மகாத்மா காந்தி (1869-1948) அவர்கள் ‘யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தினை ஜபிக் கின்றாரோ அவன் நோய்க்கு ஆளாக மாட்டார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் ‘உயர் அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை நீக்க வேண்டும்’ என்பதாகும்.
இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது.
இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன.
காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி, மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது.
தத் - வெற்றி ச - வீரம் வி - பராமரிப்பு து - நன்மை வ - ஒற்றுமை ரி - அன்பு நி - பணம் யம் - அறிவு ஃபர் - பாதுகாப்பு
க்கோ - ஞானம் த்தி - அழுத்தம் வா - பக்தி ஸ்யா - நினைவாற்றல் ஃத்தி - மூச்சு மா - சுய ஒழுக்கம் யோ- விழிப்புணர்வு
யோ- உருவாக்குதல் நஹ- இனிமை பரா- நல்லது சோ- தைரியம் த்தா- ஞானம் யட் - சேவை
காயத்ரி மந்திரம் என்றால் என்ன?
வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.
ஓம் - தெய்வீக சக்தி, ஒலி சின்னம் ப்பூ - உடல் விமானம் புவஹா - நிழலிடா விமானம் ஸ்வ - வான விமானம்
தத் - அந்த தலை தெய்வத்தின் ஸவித்து - பிரபஞ்சம் தயையும் சக்தி வரேன்யம் - வணங்க வேண்டும்
பர்கோ - பிரபல தேவஸ்ய - பிரகாசமிக்க தீமஹி - நம் த்யானம் தியோ - அறிவினை யா - யார் நஹ - எங்கள்
ப்ரசோதயாத் - தெளிவுப்படுத்துங்கள் ஓம் பூர் : புவ : ஸீவ : தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ : யோந: ப்ரசோதயாத்
நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத் மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள்.
இம் மந்திரம் ரிஷி விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது.
சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது.
அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்துவது.
வேதங்களின் தாய் தான் காயத்ரி தேவி.
இம் மந்திரம் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் இத்தேவி இருப்பாள்.
இத் தேவிக்கு சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயரும் உண்டு.
காயத்ரி ஐம்புலன்களின் அதிபதி.
சாவித்திரி ப்ராண சக்தி. சாவித்திரி என்பது உண்மையைக் குறிக்கின்றது.
சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக, உண்மையான சிந்தனை, சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகின்றது.
காயத்ரி மந்திரம் வேதத்தின் சாரம்.
இதனை முழு கவனத்தோடே சொல்ல வேண்டும்.
காலை, மாலை இருவேளையும் சொல்லலாம். அனைவரும் சொல்லலாம். இருதயம் சுத்தமாகும்.
தீய எண்ணங்கள், கவலைகள் நீங்கும். குறிப்பாக, பள்ளி மாணவர் திறமையாகப் படிப்பார்கள்.
காயத்ரி மந்திரம் ஜபிப்பதன் பலன்கள் * கம்பீரத் தோற்றம் * தரமான பேச்சு * வறுமை, குறை நீங்குதல்
* பாதுகாப்பு வட்டம் * கண்ணில் அறிவு தெரிதல் * அபாயம், தேவையற்ற சூழ்நிலை நீங்கும்
* நரம்புகளும், சுரப்பிகளும் ஊக்குவிக்கப்படும் மேலும் * அமைதியாய் இருப்பர் * நற்செயல்களில் ஈடுபடுவர்
* காந்த சக்தி ஆகியவை உருவாகும். மேலும் * வாழ்க்கையில் தடைகளை நீக்கும் * மூளையை பிரகாசிக்கச் செய்யும்
* உள்ளுணர்வினை தெளி வாக்கும் * உயர் உண்மைகள் தெரிய வரும் - என்றும் கூறப்படுகின்றது.
டாக்டர் ஹெவார்ட் ஸ்டியன் கெரில் என்ற அமெரிக்க விஞ்ஞானி காயத்ரி மந்திர பலன்களாக பல செய்திகளை வெளியிட்டுள்ளார்.
ஆனால், இதற்கு மேலும் ஆதாரப்பூர்வம் தேவைப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளில் சில வெளிநாடுகளில் காலை 7 மணிக்கு சுமார் 15 நிமிடங்கள் தொடர்ந்து காயத்ரி மந்திரத்தினை ஒலிபரப்புவதாக கூறப்பட்டுள்ளது. இம்மந்திரம் முழுக்க முழுக்க ஒளியினை வணங்குவதும், மனதின் இருளினை நீக்க வேண்டுவதாக அமைந்துள்ளதால், இம் மந்திரம் பெரிதும் வரவேற்கப்படுகின்றது. ஒரு மந்திரமோ, தியானமோ, யோகவோ, உடற்பயிற்சியோ ஆரம்பிப்பதற்கு முன்னால் உங்கள் மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம். ஒரு பழக்கம் உங்களை விட்டு நீங்க (உ-ம்) காபி, டீ பழக்கம் போன்றவை நீங்க 40 நாட்கள் ஆகும். த்யானமோ, மந்திரமோ அது பழக்கமாக ஆரம்பிக்கும் பொழுது அது உங்களுக்கு கை கூடி வர, பழக்கப்பட 90 நாட்கள் ஆகும். 120 நாட்களில் புதுப்பழக்கம் நன்கு பழகி விடும். 120 நாட்களில் கை விட்ட பழக்கமும் நம்மிடம் நன்கு நீங்கி விடும்.
1000 நாட்களில் நீங்கள் செய்யும் சாதனையோ, கடைப்பிடிக்கும் பழக்கமோ நீங்கள் மாஸ்டர் ஆகி விடுவீர்கள். (உ-ம்) தொடர்ந்து நீங்கள் 1000 நாட்கள் காலை 4 மணிக்கு எழுந்தால், வாழ்நாள் முழுவதும் அவ்வாறே செய்வர்.
* மந்திரத்தைத் தொடர்ந்து 3 நிமிடங்கள் ஜபிப்பது உங்களைச் சுற்றியுள்ள மின்சார காந்த அலைகளை தாக்கும். ரத்த ஓட்டம் சீர்படும். * ஏழு நிமிடம் தொடர்ந்து ஜபிப்பது உங்கள் மூளை செயல் திறனைக் கூட்டும். உடல் வலுவினைக் கூட்டும். உடலைச் சுற்றியுள்ள காந்த அலைகளில் நல்ல மாறுதல்கள் ஏற்படும். * 11 நிமிடம் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும், தியானம் செய்வதும் நரம்பு மண்டலத்திலும், சுரப்பிகளிலும் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும். * 22நிமிடங்கள் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும், தியானம் செய்வதும் ஒருவரின் அழிவுப்பூர்வ, ஆக்கப்பூர்வ இரண்டும் இல்லாத நிலைகளில் தடுமாறும் மனதினை நிலைப்படுத்தி தெளிவாக சிந்திக்க வைக்கும். உள் உணர்வினைக் கூட்டும். * 31 நிமிடங்கள் தொடர்ந்து ஜெபிப்பது சுரப்பிகளை சீர்ப்படுத்தும். மூச்சு சீராகின்றது. அனைத்துத் திசுக்களும் சீர்படத் தொடங்குகின்றன. * 62 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிக்கும் பொழுது மூளையில் ‘க்ரே’ பகுதியில் மாற்றம் ஏற்படுகின்றது. பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள் நன்கு இயங்குகின்றன. * இரண்டரை மணிநேரம் தொடர்ந்து ஜெபிக்கும் பொழுது உயர்நிலையினை மனம், மூளை அடைகின்றது. நாள் முழுவதும் ஆக்கப் பூர்வமாகவே செயல்படுவர். - மேற்கூறப்பட்டுள்ள கருத்துக்கள் விஞ்ஞான ஆய்வு முடிவுகள் இல்லை. என்றாலும், பல அனுபவ ரீதியான கருத்துக்களாக வெளியிடப்பட்டுள்ளன. மந்திரம் சொல்வதற்கென சில முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
* காலை 4 மணிக்கு எழுந்து நாலரை மணிக்குள் தயாராகுங்கள். * கிழக்கு முகமாக அமருங்கள். * ஞான முத்திரை பரிந்துரைக்கப்படுகின்றது * மந்திரத்தினை பொறுமையாய் 108 முறை சொல்லுங்கள்.
 
Last edited:
ஆத்மா பற்றிய விளக்கம்
உடலுக்குள் ஆத்மா உண்டா அது அழிந்து போகாதா
உடல் அழிந்து போகிறதே விளக்கம் சொல்லுங்கள் என்ற சீடனுக்கு குரு விளக்கினார்
பால் பயனுள்ளதுதான் ஆனால் அதை அப்படியே விட்டால் கெட்டுப்போகும்..
அதில் ஒரு துளி உறை மோர் விட்டால் பால் தயிராகி விடும் கெடாது...
தயிரான பால் இன்னும் ஒருநாள்தான் தாங்கும் அப்படியே விட்டால் கெட்டுப் போகும்...
அதைக் கடைய வேண்டும். கடைந்தால் வெண்ணெய் ஆகி விடும் கெடாது.
வெண்ணெய் ஆன பால் பல நாள் தாங்காது அப்படியே விட்டால் கெட்டுப் போகும்.
அதை உருக்க வேண்டும். சரியாக உருக்கினால் சுத்தமான நெய் ஆகிவிடும்.
அந்தப் பரிசுத்தமான நெய் கெடவே கெடாது. கெட்டுப் போகும் பாலுக்குள்
கெடாத நெய் இல்லையா அதுபோலத்தான். அழிந்து போகும் உடலுக்குள் அழியாத ஆன்மா உண்டு
 
??????????

இந்துக்கள் அனைவரும் தம் இல்லத்திலோ அல்லது கோவில்களிலோ பூஜை செய்வதற்க்கு முண்னதாக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில, . . .
~~~~~~~~~~~~~~~~~~

1.தமிழ் வருடங்கள்(60)
2.அயணங்கள்(2)
3.ருதுக்கள்(6)
4.மாஸங்கள்(12)
5.பக்ஷங்கள்(2)
6.திதிகள்(15)
7.வாஸரங்கள்(நாள்)(7)
8.நட்சத்திரங்கள்(27)
9.கிரகங்கள்(9)
10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)
11.நவரத்தினங்கள்(9)
12.பூதங்கள்(5)
13.மஹா பதகங்கள்(5)
14.பேறுகள்(16)
15.புராணங்கள்(18)
16.இதிகாஸங்கள்(3).
~~~~~~~~~~~~~~~~~~

இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம் முதலில் . . .

1.தமிழ் வருடங்கள்:-

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது அவை . . .

1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண 19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு 40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய 44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன 60.அக்ஷய.
~~~~~~~~~~~~~~~~~~

2.அயணங்கள்:-

அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1.உத்தராயணம்(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
2.தக்ஷிணாயணம்(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.
~~~~~~~~~~~~~~~~~~

3.ருதுக்கள்:-

ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்
1.வஸந்தருது(சித்திரை,வைகாசி)
2.க்ரீஷ்மருது(ஆனி,ஆடி)
3.வர்ஷருது(ஆவணி,புரட்டாசி)
4.ஸரத்ருது(ஐப்பசி,கார்த்திகை)
5.ஹேமந்தருது(மார்கழி,தை)
6.சிசிரருது(மாசி,பங்குனி)
இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.
~~~~~~~~~~~~~~~~~~

4.மாஸங்கள்:-

தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும்
1.சித்திரை(மேஷம்)
2.வைகாசி(ரிஷபம்)
3.ஆனி(மிதுனம்)
4.ஆடி(கடகம்) 5.ஆவணி(சிம்மம்)
6.புரட்டாசி(கன்னி) 7.ஐப்பசி(துலாம்)
8.கார்த்திகை(விருச்சிகம்)
9.மார்கழி(தனுர்)
10.தை(மகரம்)
11.மாசி(கும்பம்)
12.பங்குனி(மீனம்).
~~~~~~~~~~~~~~~~~~

5.பக்ஷங்கள்:-

பக்ஷங்கள் இரண்டு வகைப்படும்
1.ஸுக்ல பக்ஷம்(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
2.க்ருஷ்ணபக்ஷம்(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.
க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.
இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்.
~~~~~~~~~~~~~~~~~~

6.) திதிக்கள்:-

திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும்
1.பிரதமை
2.துதியை
3.திருதியை
4.சதுர்த்தி
5.பஞ்சமி
6.ஷஷ்டி
7.சப்தமி
8.அஷ்டமி
9.நவமி
10.தசமி
11.ஏகாதசி
12.துவாதசி 13.திரையோதசி 14.சதுர்த்தசி 15பெளர்ணமி(அ)அமாவாசை.
~~~~~~~~~~~~~~~~~~

7.வாஸரங்கள்:-

வாஸரங்கள்(நாழ்) ஏழு ஆகும்
1.ஆதித்யவாஸரம்
2.சோமவாஸரம்
3.மங்களவாஸரம்
4.ஸெளமியவாஸரம்
5.குருவாஸரம்
6.சுக்ரவாஸரம்
7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்
~~~~~~~~~~~~~~~~~~

8.நட்சத்திரங்கள்:-

நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்.
1.அஸ்வினி 2.பரணி 3.கர்த்திகை 4.ரோகினி 5.மிருகசீரிஷம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம் 10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்த்தம் 14.சித்திரை 15.சுவாதி 16.விசாகம் 17.அனுஷம் 18.கேட்டை 19.மூலம் 20.பூராடம் 21.உத்ராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27.ரேவதி.
கபிலன் :
~~~~~~~~~~~~~~~~~~

9.கிரகங்கள்:-

கிரகங்கள் ஒன்பது ஆகும்
1.சூரியன்(sun)
2.சந்திரன்(moon)
3.அங்காரகன்(mars)
4.புதன்(mercury)
5.குரு(jupiter)
6.சுக்ரன்(venus)
7.சனி(saturn)
8.இராகு(ascending node)
9.கேது(descending node)
~~~~~~~~~~~~~~~~~~

10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்:-

இராசிகள் பண்ணிரெண்டு ஆகும்
ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பகுதியாக(பாகங்கள்) பிரிக்கப்படும், .. .

நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.

நட்சத்திரங்கள்
இராசி
இராசிஅதிபதி
அஸ்வினி,பரனி,கர்த்திகை முன் ¼
மேஷம்
செவ்வாய்
கர்த்திகை பின்3/4,ரோகினி,மிருகசீரிஷம் முன்1/2
ரிஷபம்
சுக்கிரன்
மிருகசீரிஷம்பின்1/2,திருவாதிரை,புனர்பூசம்முன்3/4
மிதுனம்
புதன்
புனர்பூசம் பின் ¼,பூசம்,ஆயில்யம்
கடகம்
சந்திரன்
மகம்,பூரம்,உத்திரம் முன் ¼
சிம்மம்
சூரியன்
உத்திரம் பின்3/4,ஹஸ்தம்,சித்திரை முன்1/2
கன்னி
புதன்
சித்திரை பின்1/2,சுவாதி,விசாகம் முன்3/4
துலாம்
சுக்கிரன்
விசாகம் பின்1/4,அனுஷம்,கேட்டை
விருச்சிகம்
செவ்வாய்
மூலம்,பூராடம்,உத்திராடம் முன்1/4
தனுசு
குரு
உத்திராடம்பின்3/4,திருவோணம்,அவிட்டம் முன்1/2
மகரம்
சனி
அவிட்டம் பின்1/2,சதயம்,பூரட்டாதி முன்3/4
கும்பம்
சனி
பூரட்டாதி பின்1/4,உத்திரட்டாதி,ரேவதி
மீனம்
குரு
~~~~~~~~~~~~~~~~~~

11.நவரத்தினங்கள்:-

1.கோமேதகம்
2.நீலம்
3.பவளம்
4.புஷ்பராகம்
5.மரகதம்
6.மாணிக்கம்
7.முத்து
8.வைடூரியம்
9.வைரம்.
~~~~~~~~~~~~~~~~~~

12.பூதங்கள்:-
பூதங்கள் ஐந்து வகைப்படும்
பூதங்கள்
தன்மாத்திரைகள்
நுண்மூலங்கள்
1.ஆகாயம்-வானம்
சப்தம்
ஓசை
2.வாயு-காற்று
ஸ்பர்ஷம்
தொடு உணர்வு
3.அக்னி-நெருப்பு(தீ)
ரூபம்
ஒளி(பார்த்தல்)
4.ஜலம்-நீர்
ரஸம்
சுவை
5.பிருத்வி-நிலம்
கந்தம்
நாற்றம்(மணம்)
~~~~~~~~~~~~~~~~~~

13.மஹா பாதகங்கள்:-
மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும்
1.கொலை
2.பொய்
3.களவு
4.கள் அருந்துதல்
5.குரு நிந்தை.
~~~~~~~~~~~~~~~~~~

14.பேறுகள்
பெறுகள் பதினாறு வகைப்படும்
1.புகழ்
2.கல்வி
3.வலிமை
4.வெற்றி
5.நன்மக்கள்
6.பொன்
7.நெல்
8.நல்ஊழ்
9.நுகர்ச்சி
10.அறிவு
11.அழகு
12.பொறுமை
13.இளமை
14.துனிவு
15.நோயின்மை
16.வாழ்நாள்.
~~~~~~~~~~~~~~~~~~

15.புராணங்கள்:-
புராணங்கள் பதினெட்டு வகப்படும்,இவைகளை இயற்றியவர் வேத வியாசர் ஆவார்.
1.பிரம்ம புராணம்
2.பத்ம புராணம் 3.பிரம்மவைவர்த்த புராணம் 4.லிங்க புராணம்
5.விஷ்ணு புராணம்
6.கருட புராணம்
7.அக்னி புராணம்
8.மத்ஸ்ய புராணம்
9.நாரத புராணம்
10.வராக புராணம்
11.வாமன புராணம்
12.கூர்ம புராணம்
13.பாகவத புராணம் 14.ஸ்கந்த புராணம்
15.சிவ புராணம் 16.மார்க்கண்டேய புராணம் 17.பிரம்மாண்ட புராணம் 18.பவிஷ்ய புராணம்.
~~~~~~~~~~~~~~~~~~

16.இதிகாஸங்கள்:-
இதிகாஸங்கள் மூண்று வகைப்படும்.
1.சிவரகசியம் 2.இராமாயணம் 3.மஹாபாரதம்.

இவையாவும் நாம் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டியது.

அனைவருக்கும் பகிர்வோம்.
 
0
 

Latest ads

Back
Top