• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

vadivudai manikka malai

  • Thread starter Thread starter ramachandran girija
  • Start date Start date
Status
Not open for further replies.
விணங்காத லன்பர்தம் அன்பிற்கும் நின்புல விக்கும்அன்றி
வணங்கா மதிமுடி எங்கள் பிரான்ஒற்றி வாணனும்நின்
குணங்காதலித்துமெய்க் கூறுதந்தான் எனக் கூறுவர்உன்
மணங்கா தலித்த தறியார் வடிவுடை மாணிக்கமே. 48
 
பன்னும்பல் வேறண்டாம் எல்லாம்அவ் அண்டப் பரப்பினின்று
துன்னும் சராசரம் யாவையும் ஈன்றது சூழ்ந்தும் உன்னை
இன்னும் இளந்தை அழியாத கன்னிகை என்பதென்னே
மன்னும் சுகாநந்த வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 49
 
சினங்கடந் தோர்உள்ளச் செந்தா மரையில் செழித்துமற்றை
மனங்கடந் தோதும்அவ் வாக்கும் கடந்த மறைஅன்னமே
தினங்கடந் தோர்புகழ் ஒற்றிஎம் மானிடம் சேரமுதே
வனங்கடந் தோன்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே. 50
 
nava 9.jpg

வல்லாரும் வல்லவர் அல்லாரும் மற்றை மனிதர்முதல்
எல்லாரும் நின்செயல் அல்லா தணுவும் இயக்கிலரேல்
இல்லாமை யால்உழல் புல்லேன்செய் குற்றங்கள் ஏதுகண்டாய்
மல்லார் வயல்ஒற்றி நல்லாய் வடிவுடை மாணிக்கமே. 51
 
எழுதா எழில்உயிர்ச் சித்திர மேஇன் இசைப்பயனே
தொழுதாடும் அன்பர்தம் உட்களிப் பேசிற் சுகக்கடலே
செழுவார் மலர்ப்பொழில் ஒற்றிஎம் மான்தம் திருந்துணையே
வழுவா மறையின் பொருளே வடிவுடை மாணிக்கமே. 52
 
தெருட்பா லுறும்ஐங்கைச் செல்வர்க்கும் நல்லிளஞ் சேய்க்குமகிழ்ந்து
அருட்பால் அளிக்கும் தனத்தனமேஎம் அகங்கலந்த
இருட்பால் அகற்றும் இருஞ்சுடரேஒற்றி எந்தைஉள்ளம்
மருட்பால் பயிலு மயிலே வடிவுடை மாணிக்கமே. 53
 
அயிலேந்தும் பிள்ளைநற்றாயே திருவொற்றி ஐயர்மலர்க்
கயிலேந் தரும்பெறல் முத்தே இசையில் கனிந்தகுரல்
குயிலே குயின்மென் குழற்பிடியே மலைக் கோன்பயந்த
மயிலே மதிமுக மானே வடிவுடை மாணிக்கமே. 54
 
செய்யகம் ஓங்கும் திருவொற்றியூரில் சிவபெருமான்
மெய்யகம் ஓங்குநல் அன்பேநின்பால்அன்பு மேவுகின்றோர்
கையகம் ஓங்கும் கனியே தனிமெய்க் கதிநெறியே
வையகம் ஓங்கு மருந்தே வடிவுடை மாணிக்கமே. 55
 
தரும்பேர் அருளொற்றி யூருடையான்இடஞ் சார்ந்தபசுங்
கரும்பே இனியகற் கண்டே மதுரக் கனிநறவே
இரும்பேய் மனத்தினர் பால்இசை யாத இளங்கிளியே
வரும்பேர் ஒளிச்செஞ் சுடரே வடிவுடை மாணிக்கமே. 56
 
சேலேர் விழியருள் தேனே அடியருள் தித்திக்கும்செம்
பாலே மதுரச்செம் பாகேசொல் வேதப் பனுவல்முடி
மேலே விளங்கும் விளக்கே அருளொற்றி வித்தகனார்
மாலே கொளும்எழில் மானே வடிவுடை மாணிக்கமே. 57
 
எம்பால் அருள்வைத்தெழி லொற்றி யூர் கொண்டிருக்கும் இறைச்
செம்பால் கலந்தபைந் தேனே கதலிச் செழுங்கனியே
வெம்பாலை நெஞ்சருள் மேவா மலர்ப்பத மென்கொடியே
வம்பால் அணிமுல்லை மானே வடிவுடை மாணிக்கமே. 58
 
ஏமமுய்ப் பேர்எமக் கென்றே இளைக்கில் எடுக்கவைத்த
சேமவைப் பேஅன்பர் தேடுமெய்ஞ் ஞானத் திரவியமே
காமமைக்கார் மலர்க் கூந்தல் பிடிமென் தனிநடையாய்
வாமநற் சீர்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே. 59
 
மன்னேர் மலையன் மனையும் நற்காஞ்சன மாலையும் நீ
அன்னே எனத்திரு வாயால் அழைக்கப்பெற்றார் அவர்தாம்
முன்னே அருந்தவம் என்னே முயன்றனர் முன்னும் ஒற்றி
வன்னேர் இளமுலை மின்னே வடிவுடை மாணிக்கமே. 60

nava 9.jpg
 
கணமொன்றி லேனும்என் உள்ளக் கவலைக்கடல்கடந்தே
குணமொன்றி லேன்எது செய்கின்றேன் நின் உள்ளக் குறிப்பறியேன்
பணமொன்று பாம்பணி ஒற்றிஎம்மானிடப் பாலில்தெய்வ
மணமொன்று பச்சைக்கொடியே வடிவுடை மாணிக்கமே. 61
 
கருவே தனையற என்னெஞ் சகத்தில் களிப்பொடொற்றிக்
குருவே எனும்நின் கணவனும் நீயும் குலவும் அந்தக்
திருவே அருள்செந் திருவே முதற்பணி செய்யத்தந்த
மருவே மருவு மலலே வடிவுடை மாணிக்கமே. 62
 
எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்குனருள்
பண்ணிய உள்ளங்கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும்
புண்ணிய மல்லிகைப் போதே எழில்ஒற்றிப் பூரணர்பால்
மண்ணிய பச்சை மணியே வடிவுடை மாணிக்கமே. 63
 
தீதுசெய் தாலும்நின் அன்பர்கள் தம்முன் செருக்கிநின்று
வாதுசெய் தாலும்நின் தாள்மறந்தாலும் மதியிலியேன்
ஏதுசெய் தாலும் பொறுத்தருள் வாய்ஒற்றி யின்னிடைப்பூ
மாதுசெய் தாழ்குழல் மானே வடிவுடை மாணிக்கமே. 64
 
மருந்தினின் நான்ஒற்றி யூர்வாழும் நின்றன் மகிழ்நன்முன்னும்
திருந்திநின் றார்புகழ் நின்முன்னும் நல்லருள் தேன்விழைந்தே
விருந்தினின் றேன்சற்றும் உள்ளிரங் காத விதத்தைக்கண்டு
வருந்திநின் றேன்இது நன்றோ வடிவுடை மாணிக்கமே. 65
 
என்போல் குணத்தில் இழிந்தவர் இல்லைஎப் போதும்எங்கும்
நின்போல் அருளில் சிறந்தவர் இல்லைஇந் நீர்மையினால்
பொன்போலும் நின்னருள் அன்னே எனக்கும் புரிதிகண்டாய்
மன்போல் உயர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 66
 
துன்பே மிகும்இவ் அடியேன் மனத்தில்நின் துய்யஅருள்
இன்பே மிகுவதெந் நாளோ எழிலொற்றி எந்தைஉயிர்த்
கன்பேமெய்த் தொண்டர் அறிவே சிவநெறிக் கன்பிலர்பால்
வன்பேமெய்ப் போத வடிவே வடிவுடை மாணிக்கமே. 67
 
சற்றே யெனினும் நெஞ்சத் துயரம் தவிரவும்நின்
பொற்றே மலர்ப்பாதம் போற்றவும் உள்ளம் புரிதிகண்டாய்
சொற்றேர் அறிஞர் புகழ்ஒற்றி மேவும் துணைவர்தஞ்செம்
மற்றேர் புயத்தணை மானே வடிவுடை மாணிக்கமே. 68
 
சந்தோட மாப்பிறர் எல்லாம் இருக்கவும் சஞ்சலத்தால்
அந்தோ ஒருதமி யேன்மட்டும் வாடல் அருட்கழகோ
நந்தோட நீக்கிய நங்காய் எனத்திரு நான்முகன்மால்
வந்தோதும் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே. 69
 
அடியேன் மிசைஎன் பிழையிருந் தாலும் அவைபொறுத்துச்
செடியேதம் நீக்கிநற் சீரருள் வாய்திகழ் தெய்வமறைக்
கொடியே மரகதக் கொம்பே எழில்ஒற்றிக் கோமளமே
வடியேர் அயில்விழி மானே வடிவுடை மாணிக்கமே. 70

nava 10.jpg
 
கண்ணப்பன் ஏத்துநற் காளத்தி யார்மங் கலங்கொள்ஒற்றி
நண்ணப்பர் வேண்டும் நலமே பரானந்த நன்னறவே
எண்ணப் பசும்பொன் வடிவே வடிவுடை மாணிக்கமே. 71
 
கற்பே விகற்பம் கடியும்ஒன்றே எங்கள் கன்நிறைந்த
பொற்பேமெய்த் தொண்டர்தம் புண்ணியமே அருட் போத இன்பெ
சொற்பேர் அறிவுட் சுகப்பொரு ளேமெய்ச் சுயஞ்சுடரே
மற்பேர் பெறும்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே. 72
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top