• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Vaikunda Ekadesi - Triplicane Parthasarathy Temple

praveen

Life is a dream
Staff member
வைகுண்ட ஏகாதசி திருவிழா - 25.12.2020
அருள்மிகு ஸ்ரீ பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில்,
திருவல்லிக்கேணி, சென்னை - 5.

1607702009877.png


108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் தொன்மை வாய்ந்த திருத்தலமாக திருவல்லிக்கேணி, அருள்மிகு ஸ்ரீ பார்த்தஸாரதி ஸ்வாமி திருக்கோயில் விளங்குகின்றது. மேலும் ஸ்ரீபேயாழ்வார், ஸ்ரீதிருமழிசையாழ்வார், ஸ்ரீதிருமங்கையாழ்வார் ஆகிய ஆழ்வார்கள் இத்திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளையும் ஸ்ரீ வேதவல்லித்தாயார் ஸமேத ஸ்ரீமந்நாதன் ஸ்ரீயோகந்ருஸிஹஸ்வாமி ஸ்ரீ ராமபிரான் ஸ்ரீகஜேந்த்ரவரதன் ஆகிய எம்பெருமான்களுக்கு மங்களாஶாஸனம் செய்துள்ளார்கள். இத்திருக்கோயிலில் திருப்பதி பெருமாளே ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி என்ற திருநாமத்தோடு ஸ்ரீ வேங்கடகிருஷ்ணனாக , தாயார் ருக்மிணீ, அண்ணா பலராமன், தம்பி சாத்யகி, பிள்ளை பிரத்யும்னன், பேரன் அநிருத்தன் ஆகியோருடன் குடும்ப ஸஹிதமாக சேவை தருகிறார்.

இத்திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவினை முன்னிட்டு 25.12.2020 அன்று கீழ்க்கண்டவாறு முன்னேற்பாடுகள் செய்யப்படவுள்ளன :

திருக்கோயிலில் பகல் பத்து உத்ஸவம் 15.12.2020 அன்று துவங்கி 24.12.2020 முடிய நடைபெறவுள்ளது.

1. 25.12.2020 அன்று வைகுண்ட ஏகாதஶீ பரமபத வாசல் திறப்பு செய்யப்பட்டு 03.01.2021 வரை இராப்பத்து உத்ஸவம் நடைபெற உள்ளது.

2. 25.12.2020 அன்று வைகுண்ட ஏகாதஶீ திருவிழாவினை பக்தர்களின் ஆன்மீக நம்பிக்கை பாதிக்கப்படாத வகையிலும், அதேசமயம் கொரோனா நோய்தொற்றினை கட்டுப்பாட்டில் வைத்திடவும், தற்போது கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு CrPC -144 அமலில் இருக்கும்பட்சத்தில், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதஶீ திருவிழா பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி நடத்தப்படும்.

3. பகல் பத்து உத்ஸவம் (16.12.2020) 2ம் நாள் முதல் காலை 6.00 மணிமுதல் 12.00 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணிவரையிலும் திருக்கோயிலில் தர்ஶநத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

3. வைகுண்ட ஏகாதஶீ தினத்தன்று காலை 6.00 மணி வரை பக்தர்கள் (உபயதாரர்கள் உட்பட) தர்ஶனத்திற்கு அனுமதி இல்லை. காலை 6.15 மணி முதல் கோவிட்-19 நோய் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

4. இராப்பத்து உத்ஸவம் (26.12.2020) 2ம் நாள் முதல் காலை 6.00 மணிமுதல் 12.00 மணி வரையும் மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

5. அருள்மிகு ஸ்ரீபார்த்தசாரதி ஸ்வாமி திருக்கோயிலுக்கு வைகுண்ட ஏகாதஶீ அன்று வருகை தரும் பக்தர்கள் www.tnhrce.gov.in என்ற இணையதளத்தில் e-registration மூலமாக ஒரு நபருக்கு ஆதார் அட்டையின் அடிப்படையில் ஒரு நுழைவு சீட்டு என்ற முறையில் 3,000 நபர்களுக்கு மட்டும் இலவச முன்பதிவு செய்யப்படும்.

22.12.2020 காலை 10.00 மணியிலிருந்து 24.12.2020 மாலை 5.00 மணி வரை கட்டணமில்லாமல் முன்பதிவு செய்து அதனடிப்படையில், உரிய அடையாள அட்டையுடன் 25.12.2020 காலை 6.15 மணி முதல் இரவு 8.00 மணி வரை வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

6.கட்டளைதாரர்கள், உபயதாரர்கள் மற்றும் சேவார்த்திகள் முன்பதிவு செய்த 25.12.2020 தினத்திற்கு மட்டுமே தரிசனம் செய்ய திருக்கோயில் நுழைவாயிலில் சோதனை செய்து அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில் முன்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி திருக்கோயிலின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
7. இத்திருக்கோயிலில் கைங்கர்யம் செய்யக்கூடிய தொடர்பான பட்டாச்சாரியர்கள், வேத அத்யாபக கோஷ்டி, ஸ்ரீபாதம் தாங்கிகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்கி கோவிலின் உள்ளே சென்று ஸேவை செய்யவுள்ளனர்.

8. திருக்கோயிலின் கட்டளைதாரர்கள், உபயதாரர்கள், வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளில் 24.12.2020 இரவு 8.00 மணி முதல் 25.12.2020 காலை 6.00 மணி வரை கோயிலின் உள்ளே செல்ல அனுமதி இல்லை. காலை 6.15 மணிக்குமேல் கியூ வரிசையில் சென்று சுவாமி தரிசனம் பெற அனுமதிப்படுவார்கள்.

9.வைகுண்ட ஏகாதசி திருவிழா காலகட்டத்தில் சுவாமி திருவீதி உலாவானது, கோயிலின் வெளிபுறத்தில் உள்ள மாட வீதிகளில் நடைபெற்று வந்த நிகழ்வு ஆகும். இதனை தற்போது கோயில் வளாகத்திற்குள் ஆகம விதிகளின்படி நடத்தப்படும்.

10.இந்நிகழ்வுகளை தொலைக்காட்சி, யு டியூப் (Sriparthasarathyswamythirukovil) மூலமாக நேரடியாக ஒலிபரப்பு செய்யப்படும்.

11. முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு திருக்கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை.

12. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இருதயநோய் போன்ற இணை நோய் கொண்டவர்கள்(Comorbidities), கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் உடல் நலன் கருதி தரிசனத்திற்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

13. பக்தர்கள் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்புதான் திருக்கோயில் உள்ளே நுழைய வேண்டும். பக்தர்களின் உடல் வெப்பநிலை அறியும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதித்த பின்புதான் திருக்கோயில் உள்ளே நுழைய அனுமதிக்கப்படும்.

14.வைகுண்ட ஏகாதசி அன்று பெரிய திரை தொலைக்காட்சிகளை நிறுவி பக்தர்களுக்கு திருக்கோயிலில் நடைபெறும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி காண்பிக்கப்படும்.

15.பக்தர்கள் தேங்காய், பூ, பழம் ஆகியவற்றை கொண்டு வர அனுமதி இல்லை.

16.இயல்பு நிலை திரும்பும் வரை திருக்கோயில் உள்பகுதியில் நடைபெறும் புறப்பாடு, உத்ஸவங்களில் பக்தர்கள், உபயதாரர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.

25.12.2020 அன்று வைகுண்ட ஏகாதஶீ நிகழ்ச்சி நிரல்

அதிகாலை 3.00 மணி முதல் 4.00 மணி வரை உத்ஸவர் மஹாமண்டபத்தில் அலங்காரம்
4.00 - 4.15 மணிவரை மஹாமண்டபத்தில் உத்ஸவர் வைர அங்கி சேவை
காலை 4.16 மணிக்கு உத்ஸவர் ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி மஹா மண்டபத்திலிருந்து உள்புறப்பாடு துவங்குதல்.

4.30 மணிக்கு பரமபத வாசல் திறப்பு. நம்மாழ்வாருக்கு காட்சி தருதல்.
4.30 மணி முதல் 5.00 மணி வரை வேதம் தமிழ் செய்த மாறன் ஶடகோபன் நம்மாழ்வாருக்கு மரியாதை, வேத திவ்யப் பிரபந்தம் துவங்குதல்.
காலை 6.15 மணி முதல் இரவு 8.00 மணி வரை திருவாய்மொழி மேல் மண்டபத்தில் அமைந்துள்ள புண்ணிய கோடி விமானத்தில் வைர அங்கியுடன் உத்ஸவர் எழுந்தருளி சேவை சாதித்தல்

காலை 6.00 மணி முதல் இரவு 8.00 வரை சேவார்த்திகள் சிறப்பு காணிக்கை தரிசனக் கட்டணம் ரூ.100/- பின்கோபுரவாசல் வழியாகவும் மற்றும் கட்டணமின்றி பொது தரிசனம் முன் கோபுர வாசல் வழியாகச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை பின் கோபுர வாசல் வழியாக கட்டணமின்றி பரமபதவாசலைக் கடந்து உத்ஸவரை திருவாய்மொழி மண்டபத்தில் சேவித்து, முன் கோபுர வாசல் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரவு 8.00 மணிக்கு திருநடைக்காப்பு.

திருக்கோயில் நிர்வாகம்

வெளியீடு : மக்கள் தொடர்பு அலுவலர், இந்து சமய அறநிலையத்துறை, சென்னை - 34.
 

Latest ads

Back
Top