Link
ஷண்ணவதி தர்பண ஸங்கல்பம். 2024-25. மடத்து பஞ்சாங்கம் திருகணிதம்.
ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே.
மயா அனுஷ்டித, வர்கத்வய பித்ரூன் உத்திஶ்ய , தில தர்ப்பண மந்த்ர ஸாத்குண்யார்த்தம் யதா சக்தி ஹிரண்யம் ஆசார்யாய ஸம்ப்ரததே. ஓம் தத்ஸத். வாத்யாரிடம் பைசா கொடுத்து விடவும்.
ஷண்ணவதி தர்ப்பணம் செய்பவர்களுக்கு: - முசிறி அண்ணா வாக்கு
வ்யதீபாதமும் மன்வாதியும் ஒரே நாளில் வந்தால் வ்யதீபாத தர்ப்பணம் மட்டும் செய்தால் போதும்.
வ்யதீபாதமும் அஷ்டகாவும் ஒரே நாளில் வந்தால் அஷ்டகா தர்ப்பணம் மட்டும் போதும்.
மன்வாதியும் வைத்ருதியும் ஒரே நாளில் வந்தால் மன்வாதி தர்ப்பணம் மட்டும் போதும்
மாத பிறப்பும் வைத்ருதியும் ஒரே நாளில் வந்தால் மாத பிறப்பு தர்ப்பணம் மட்டும் போதும்.
மாத பிறப்பும் அமாவாசையும் ஒரே நாளீல் வந்தால் மாத பிறப்பு தர்ப்பணம் மட்டும் செய்தால் போதும்.
அமாவாசையும், யுகாதியும் ஒரே நாளில் வந்தால் யுகாதி மாத்திரம் செய்தால் போதும்.
அமாவாசையும் மன்வாதியும் ஒரே நாளில் வந்தால் மன்வாதி மாத்திரம் செய்தால் போதும்.
அமாவாசையும் வ்யதீபாதமும் ஒரே நாளில் வந்தால் அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டும். வ்யதீபாத தர்ப்பணம் செய்தாலும், செய்யலாம். தவறில்லை.
அமாவாசையும் வைத்ருதியும் ஒரே நாளில் வந்தால் அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டும். வைத்ருதி தர்ப்பணம் செய்தாலும் தவறில்லை.
மாத பிறப்பும் மன்வாதியும் ஒரே நாளில் வந்தால் முதலில் மாதபிறப்பு தர்ப்பணம். பிறகு மன்வாதி தர்ப்பணம் செய்ய வேண்டும்.
மஹாளயம், வ்யதீபாதமும் ஒரே நாளில் வந்தால் முதலில் வ்யதீபாத தர்ப்பணம், பிறகு மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டும்.
மஹாளயமும் யுகாதியும் ஒரே நாளில் வந்தால் முதலில் யுகாதி தர்ப்பணம், பிறகு மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டும்.
மஹாளயமும் அமாவாசையும் ஒரே நாளில் வந்தால் முதலில் அமாவாசை, பின்னர் மஹாளய தர்ப்பணமும் செய்ய வேன்டும்.
மாத பிறப்பு, மன்வாதி, வைத்ருதி ஒரே நாளில் வந்தால் முதலில் மாதபிறப்பு, பின்னர் மன்வாதி தர்ப்பணம் செய்தால் போதும்.
அமாவாசை அன்று சூர்ய கிரஹணம் மாலை 3-30 மணிக்குள் வந்தால் கிரஹண தர்ப்பணம் மட்டும் போதும்.