V
vignesh2014
Guest
சீன மக்கள் கூட்டத்தில், ஒரு காலத்தில், Keng, Meng, Tan, Teo, Hoo, Yong, Chin இன்னும் பல, இவைகள் எல்லாம் க்ரூப் நேம் என்று சொல்லி பழகி வந்தார்கள். பின்னர் ஒரு புண்ணியவான், ஒட்டு மொத்த சீனாவும் Mandarin மொழி தான் பேசவேண்டும் என்று கிட்டத்தட்ட சர்வாதிகாரம் போல ஆணையிட்டார். ஆனால், அது சர்வாதிகாரம் என்று மக்கள் நினைக்காமல், ஒரு புரட்சி என்று நம்பினார், 80% Chinese Mandarin பேசினர். இன்று அங்கிலம் அடுத்து Mandarin தான் அதிகம் பேசப்படும் மொழி, அதனால் இந்த க்ரூப் என்ற மனப்பான்மை, Family Name என்று மாறிவிட்டது. இன்றைக்கு எல்லா சீனனும் ஒன்னு தான், Family Name தான் வித்தியாசம், அதையும் யாரும் கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு தெரிந்த ஒரே மொழி அல்லது ஜாதி ஏன் கடவுள் என்று கூட சொல்லலாம் - அது "பணம்" மட்டுமே.
18-ஆக-201406:22:39 IST Report AbusePannadi Pandian - wuxi,சீனா
சிங்கபூர்ல இருக்கறதால சீனர்களை நன்கு புரிந்து வைத்துள்ளீர்கள். இங்கு ஜாதி கிடையாது. மதம் கூட முக்கியம் இல்லை இவர்களுக்கு. கோவிலுக்கு போவதில்லை. சட்டம் கடுமையாய் உள்ளதால் தவறுகள் குறைவாய் உள்ளன. சீனர்கள் புடோங் ஹுவா endra மண்டரின் மொழியை பேசினாலும் அதனை எல்லோரும் சுத்தமாக பேசுவதில்லை. அதனை லோக்கல் டயலேக்ட்டுடம் கலந்து தான் பேசுவார்கள். அதனால் ஊருக்கு ஊர் இவர்களின் பேச்சு வித்யாசப்படும். ஆனால் புரிந்து கொள்ளலாம். அதனால் நான் இவர்களிடம் பேசும்போது விளையாட்டாக சீனாவில் சீனமொழியை பேசுவது வெளிநாட்டுக்காரர்கள் சீனர்களுக்கு சீன மொழி தெரியாது என்பேன். அப்போது இவர்களுக்கு மண்டையில் சரியாக உரைக்கும்....