• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சங்க இலக்கியத்தில் வாகனங்கள்

Status
Not open for further replies.
சங்க இலக்கியத்தில் வாகனங்கள்

garudagold-gif2.jpg


Picture shows Garuda Vahana


தமிழ் சங்க இலக்கியம் ஈராயிரம் ஆண்டு பழமையுடையது. அதில் இந்துக் கடவுளரின் வாகனங்களைப் பற்றி பல குறிப்புகள் வருகின்றன. இந்து மதம் எந்த அளவுக்கு தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்தது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. தமிழ்நாட்டுக் கோவில்களில் வாகனங்கள் பவனி வரும் அளவுக்கு வேறு எந்த மாநிலக் கோவில்களிலும் இல்லை என்று சொல்லலாம். ஆந்திரம், கர்நாடகம், கேரளம் போன்ற இதர மாநிலங்களில் மிகப் பெரிய கோவில்களில் மட்டுமே வாகன ஊர்வலம், திரு உலா நடைபெறுகிறது.


மதுரை மீனாட்சி கோவிலில் ரிஷப வாகனம் மட்டும் ஆண்டுக்கு 18 முறை உலா வருகிறது. இத்தோடு காமதேனு, கிளி, கற்பக விருட்சம், கயிலாய மலை, யானை, குதிரை, யாளி, பூத வாகனங்களும் அற்புதமாகச் செய்யப்பட்டிருக்கின்றன. மதுரை பெருமாள் கோவிலின் கருட வாகனங்கள், அழகர்கோவில் அழகரின் குதிரை வாகனம், ஆருத்ரா தரிசன நடராஜர் ஊர்வலம் ஆகியவற்றைக் காணக் கண் கோடி வேண்டும்.


தெய்வத் திரு உருவங்களையும் வாகனங்களையும் செய்து உலகம் முழுதுமுள்ள கோவில்களுக்கு அனுப்பும் பணியையும் தமிழ்நாடே செய்துவருகிறது.
வாகனங்கள் வேத காலத்திலேயே தோன்றிவிட்டன. மருத் என்னும் காற்றுத் தெய்வத்துக்கு மான் வாகனம், வருணனுக்கு சுறாமீன் வாகனம், இந்திரனுக்கு யானை வாகனம்.
முதலில் கொடியில் இருந்த சின்னங்களே பிற்காலத்தில் வாகனமாக பரிணாம வளர்ச்சி பெற்றன. இதை இலக்கியக் குறிப்புகளில் இருந்து தெளிவாகப் பெறலாம்.




Picture shows Hamsa Vahana


காளிதாசனின் காலத்தைக் கணக்கிட சங்க இலக்கியம் எப்படி துணை செய்கிறது என்பதை ஏற்கனவே ஐந்தாறு கட்டுரைகளில் விளக்கினேன். அவன் சங்க காலத்துக்கு முன்னால் கி.மு.முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவன். இப்போது அவன் அளித்த வாகனக் குறிப்புகள் தமிழ் இலக்கியத்திலும் வருவது அவன் காலத்தால் முந்தியவன் என்பதை மேலும் உறுதி செய்கிறது.


புறநானூற்றின் கடவுள் வாழ்த்தில் சிவனின் வாகனமும் கொடியும் ரிஷபம் (ஏறு) என்று பாரதம் பாடிய பெருந்தேவனார் (மஹாதேவன்) பாடுகிறார்.


ரிஷபக் கொடி: காளிதாசனின் ரகு வம்சம்11-44;
விஷ்ணுவின் கருட வாகனம்: ரகு 10-13;10-61
இந்திரன் வாகனம் 4 மருப்புடைய யானை- திரு முருகாற்றுப்படை 155-159
நல்லுருத்திரன் பாடிய முல்லைக் கலியில் யமதர்ம ராஜனின் எருமை வாகனம் பாற்றிப் பாடுகிறார்- பாடல் 1- வரி 25/26
முருகப் பெருமானின் பிணிமுக (யானை) ஊர்தி: புறம் 56;முருகு 247;பரிபாடல் 5-2, 8-10, 17-49, சிலம்பு 24-8-3;


முருகப் பெருமானின் யானையை பிணிமுகம் என்று அழைப்பர்:
பிணிமுக ஊர்தி வெல்போர் இறைவன் (பரி.17-49)
பிணிமுக ஊர்தி ஒண்செய்யோன்-புறம் 56
மயில் வாகனம் : மேகதூதம் பாடல் 46 (காளிதாசன்); பாடல் 54ல் சிவ பெருமானின் விடை ஏறு (ரிஷபம்). மகாபாரதத்திலும் இதே குறிப்பு வருகிறது (8-24)
மணிமயில் உயரிய மாறாவென்றி (புறம் 56)
முருகன் மஞ்ஞையன் (முருகு 210)
விரைமயில் மேல் ஞாயிறு (பரி 18-26)
சேவலங்கொடியோன் (குறுந்தொகை கடவுள் வாழ்த்து)
சேவலங்கொடியன் (முருகு 210)
கலித்தொகையில் சிவபெருமானின் காளைவாகனம் வருகிறது (150-13; 26-5)


மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஒரே பாடலில் (புறம் 56) நான்கு கடவுளரின் கொடி வாகனங்கள் பற்றிப் பாடிப் பரவுகிறார்.


காளிதாசனும் கொடியும் வாகனமும் சிவனுக்கு ஒன்றுதான் என்று சொல்லி வ்ருஷபத்வஜன், வ்ருஷாங்கன், வ்ருஷபாருடன் என்று ரகு வம்சம் ,குமார சம்பவம் ஆகியவற்றில் புகழ்கிறார். இதைத் தமிழ் புலவர்களும் பாடியதை மேலே கண்டோம்.
காளிதாசன் இந்திரனின் வஜ்ரக் கொடி, வாகனம் ஐராவதம் ஆகியன பற்றியும் பாடுகிறார் ( ரகு3-56; 1-36. ரகு வம்சத்தில் முருகனின் மயில் பற்றி ‘மயூரப் ப்ருஷ்ட ஆஸ்ரயினா குஹேன’ என்று சொல்கிறார்.
திருமாலின் சேஷ வாகனம்: பெரும் பானாற்றுப்படை-372/5
பரிபாடல் 8-2: புள்மிசைக் கொடியோனும் புங்கவம் ஊர்வோனும்
பரி 13ல் : சேவல் ஓங்கு உயர்கொடிச் செல்வ (திருமால்)
புறம் 58- பலராமனின் பனைக்கொடியைக் குறிக்கும், தொல்காப்பியமும் பனைக் கொடியைக் குறிப்பிடுகிறது.


ஆக கொடியையும் வாகனத்தையும் மாறி மாறி ஒரே கடவுளருக்கு தமிழ் ,சம்ஸ்கிருத இலக்கியங்கள் பகர்வதாலேயே கொடியிலிருந்து வாகனம் தோன்றியதாக நான் கூறினேன்.
பிற்காலத்தில் தோன்றிய தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம் போன்ற பக்தி இலக்கியங்கள் வாகனம் பற்றிய மேலும் பல சுவையான கதைகளைக் கூறுகின்றன. திரு ஞானசம்பந்தர் தனது பதிகத்தில் துர்க்கைக்கு மான் வாகனம் இருப்பதை ‘கலையதூர்தி’ என்ற சொல்லால் விளக்குகிறார்.
“திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வம் ஆன பலவும்”– (பதிகம் 921, இரண்டாம் திருமுறை)


தொடரும்……….
Please read my other articles on Vahanas in my blogs:
Iraq: 7 Gods Procession on Vahanas
Deer Chariot: Rig Veda to Santa Claus
Hindu Vahanas around the World
Vahanas in Kalidasa and Tamil Literature
உலகம் முழுதும் இந்து தெய்வ வாகனங்கள்
சங்கத் தமிழ் இலக்கியத்தில் வாகனங்கள்
வாகனங்கள் தோன்றியது எங்கே?ஏன்? எப்போது?
எந்தக் கடவுளுக்கு என்ன வாகனங்கள்?
Who Rides What Vahanas?
Contact: [email protected]
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top