• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

'மோஹ முத்கரம்' ( மோஹத்தைத் தகர்க்கும் சம்ம&#2

Status
Not open for further replies.
'மோஹ முத்கரம்' ( மோஹத்தைத் தகர்க்கும் சம்ம&#2

அத்வைத மார்க்கத்தை நிலை நிறுத்தியவர் ஆதி சங்கரர். அவர்
எழுதிய பல பக்தி ஸ்தோதிரங்களிலும் மிகவும் புகழ் வாய்ந்தது
'மோஹ முத்கரம்' ( மோஹத்தைத் தகர்க்கும் சம்மட்டி)
என்ற பாடல்களின் தொகுதி.

இதன் முதல் பாடல் 'பஜ கோவிந்தம்' என்று தொடங்குவதால்
இந்நூல் அந்தப் பெயரிலேயே புகழ் பெற்றுவிட்டது.

ஒரு கிழவர் 'டுக்ருஞ் கரணே' என்னும் சமஸ்க்ருத இலக்கணச் சொல்லை மனனம் செய்வதைப் பார்த்து மனம் வருந்தி சங்கரர் இந்நூலை இயற்றியதாக வரலாறு உண்டு.

திருக்குறளைப் போன்றே சிறிய உருவம் கொண்டுருந்தாலும், உயர்ந்த உண்மைகளை எளிதில் புரிய வைப்பதாலும், இசையோடு பாடுவதற்கு ஏற்றதாக இருப்பதாலும், இதற்கு ஈடு இணையே இல்லை என்றே கூறிவிடலாம்.

தினமும் ஒன்று என்று இவற்றை நாளை முதல் காண்போம்.

குருசரணாரவிந்தங்களே துணை!
 
1. கோவிந்தனைத் தொழுவாய்.

ப4ஜ கோ3விந்த3ம் ப4ஜ கோ3விந்த3ம்
கோ3விந்த3ம் ப4ஜ மூட4மதே |
ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி 'டு3க்ருஞ் கரணே' ||

மூட மனிதா! மன, மொழி, மெய்களால் இறைவனைப் பணியாமல் 'டுக்ருஞ்
கரணே' போன்ற இலக்கணச் சொற்களை படிப்பதால் என்ன பயன்? அது இறுதிக் காலத்தில் உன்னைக் காப்பாற்றாது. கோவிந்த நாமத்தையே எப்போதும் பஜனை செய்!
 
2. பொன்னாசையை ஒழி!

மூட4! ஜஹீஹி த4நாக3ம த்ருஷ்ணாம்
கு1ரு ஸத்3புத்3தி4ம் விஷயவித்ருஷ்ணாம் |
யல்லப4ஸே நிஜகர்மோபாத்தம்
வித்தம் தேன வினோத3ய சித்தம் ||

ஓ மூடனே! இன்னும் பண
ம் வேண்டும் என்ற பேராசையை ஒழி. நீ முற்பிறவியில் செய்த நல்ல கர்மங்களுக்கு ஏற்ப இப்பிறவியில் செல்வம் கிடைக்கும். தானாக வரும் செல்வத்துடன் திருப்தி அடைந்து, மனக் குழப்பத்தை விட்டு விடு!
 
3. பெண்ணாசையை விடு!

நாரீ ஸ்தனப4ர நாபீ4 தே3ச'ம்
த்3ருஷ்ட்வா மாகா3 மோஹாவேச'ம் |
ஏதன் மாம்ஸ வஸாதி3விகாரம்
மனஸி விசிந்தய வாரம் வாரம் ||

ஹே மூடனே! ஒரு பெண்ணின் நாபி, ஸ்தனங்களைக் கண்டு மயங்கிவிடாதே. இவையெல்லாம் மாமிசம், ரத்தம், உவர்நீர் போன்றவற்றால் உருவானவை என்று அடிக்கடி நீ நினைவுறுத்திக் கொண்டால், உனக்கு இவற்றின் மீது மோஹம் தோன்றாது.
 
4. வாழ்க்கையே நிலையற்றது !

நளினி த3ளக3த ஜலமதி தரளம்
தத்3வத் ஜீவித மதி3ச'ய சபலம் |
வித்3தி4 வ்யாத்4யபி4மான க்3ரஸ்தம்
லோகம் சோ'கஹதம் ச ஸமஸ்தம் ||

தாமரை இலைமீது உள்ள நீர்த்துளியைப் போன்றே மனித வாழ்வும் நிலையற்றது. எங்கு நோக்கினும் நோய்களும், கர்வமும் தான் காணப்படுகின்றன. யாருமே தான் இன்பமாக இருப்பதாக நினைப்பது இல்லை. உலக வாழ்க்கைக்காக வீணாக அலையாதே!
 
நளினி த3ள க3த ஜலம் = தாமரை இலையின் மீது உள்ள தண்ணீர்
அதி தரளம் = மிகவும் சஞ்சலமானது, நிலையற்றது.
தத்வத் = அதைப் போன்றே
ஜீவிதம் = வாழ்க்கையானது
அதிச'ய சபலம் = சஞ்சலமானது, நிலையற்றது
 
5. சுற்றத்தினர் சுயநலவாதிகள்.

யாவத்3 வித்தோ பார்ஜன சக்த:
தாவன் நிஜ பரிவாரோ ரக்த: |
பச்'சாஜ்ஜீவதி ஜர்ஜர தே3ஹே
வார்த்தாம் கோபின ப்ருச்சதி கே3ஹே ||

பண
ம் சம்பாதித்துத் தரும் வரையில் மனைவி, மக்கள் அன்புடன் பழகுவர். உடல் தளர்ந்தபின் அவன் வீட்டில் தங்கிவிட்டால், யாரும் அவனுடன் பேசக்கூட மாட்டார்கள். சுற்றத்தினர்களும் சுயநலவாதிகளே என்று உணர்வாய்.
 
6. உறவுகள் உயிர் உள்ளவரையில் தான்!

யாவத் பவனோ நிவஸதி தே3ஹே
தாவத் ப்ருச்சதி குச'லம் கே3ஹே |
க3தவதி வாயௌ தே3ஹாபாயே
பா4ர்யா பி3ப்4யதி தஸ்மின் காயே ||

உடலில் மூச்சுக் காற்றுள்ள வரையே வீட்டில் உள்ளவர்கள் உன் நலத்தை விசாரிப்பார்கள். பிராணன் பிரிந்துவிட்டால், நீ கூடிக்குலாவிய உன் மனைவிகூட உன் உடலைக்கண்டு அஞ்சுகின்றாள்.
 
7. இறைவனை நினைப்பவர் எவர்?

பா3லஸ்தாவத் க்ரீடா3 ஸக்த:
தருணஸ் தாவத் தருணீ ஸக்த: |
வ்ருத்3த4ஸ் தாவத் சிந்தா ஸக்த:
பரே ப்ரஹ்மணி கோபி ந ஸக்த: ||

பாலப் பருவத்தில் விளையாடுவதிலேயே காலத்தைக் கழிக்கின்றான்.
யௌவனப் பருவத்தில் பெண்ணுடன் காலத்தைக் கழிக்கின்றான்.
வயோதிகனோ நோயிலும், மரண பயத்திலும் காலத்தைக் கழிக்கின்றான்.
எவருமே, எந்தப் பருவதிலுமே, இறைவனை நினைப்பது இல்லையே!
 
8. நீ யார் என்று சிந்திப்பாய்!

கா தே காந்தா கஸ்தே புத்ர:
ஸம்ஸாரோயமதீவ விசித்ர: |
கஸ்ய த்வம் குத ஆயாத:
தத்வம் சிந்தய ததி3த3ம் ப்4ராத: ||

தம்பி! உன் மனைவி யார்? உன் மகன் யார்?
நீ எவரைச் சேர்ந்தவன்? எங்கிருந்து இந்த விசித்திரமான சம்சாரத்திற்கு வந்து சேர்ந்தாய்?
இந்த உண்மைகளைக் கொஞ்சம் சிந்தனை செய்!
 
9. நல்லவருடன் பழகு!

ஸத்ஸங்க3த்வே நிஸ்ஸங்க3த்வம்
நிஸ்ஸங்க3த்வே நிர்மோஹத்வம் |
நிர்மோஹத்வே நிச்'சல தத்வம்
நிச்'சல தத்வே ஜீவன் முக்தி: ||

சான்றோர் சகவாசம் ஏற்பட்டால் மனம் பற்றினை ஒழிக்கும்.
பற்று அழிந்தால் மன மயக்கங்கள் மறையும். மயக்கங்கள் மறைந்தால் நிலையான உண்மைப் பொருள் வெளிப்படும். நிலையான உண்மைப்பொருளை அறிந்தால் நீ ஜீவன் முக்தி அடைவாய்.
 
10. ஆசைகளும் , செல்வமும் அழிந்து போய்விடும்.

வயஸி க3தே க: காமவிகார:
சு'ஷ்கே நீரே க: காஸார: |
க்ஷீணே வித்தே க: பரிவார:
ஜ்ஞாதே தத்வே கஸ் ஸம்ஸார: ||

வயது முதிர்ந்தபின் காம விகாரங்கள் ஏற்படாது.
நீர் வறண்டு போனால் நீர் நிலைகள் இரா.
செல்வம் குறைந்துவிட்டால் சுற்றத்தார் இரார்.
உண்மைத் தத்துவத்தை நீ அறியும்போது உன் சம்சாரத்தளைகள் மறையும்.
 
# 11. நீயும் பிரம்மமாக ஆகிவிடு.

மாகுரு த4ன ஜன யௌவன க3ர்வம்
ஹரதி நிமேஷாத் காலஸ் ஸர்வம் |
மாயாமயமித3ம் அகி2லம் ஹித்வா
ப்3ரம்மபத3ம் தவம் ப்ரவிச' விதி3த்வா ||

"நான் பணக்காரன்" ; "எனக்கு நிறைய சுற்றத்தினர் உள்ளனர்";
"நான் யௌவனம் நிரம்பியவன்" என்றெல்லாம் கர்வம் கொள்ளாதே.
காலம் நினைத்தால் இவற்றை எல்லாம் ஒரே நிமிடத்தில் கொள்ளை அடித்துக் கொண்டுபோய் விடும். உலகமே பொய்க் காட்சி.
பிரம்மம் மட்டுமே உண்மையானது என்று அறிந்து நீயும் பிரம்மமாக ஆகிவிடு.
 
# 12. காலத்தின் விளையாட்டு.

தி3னமபி ரஜனி ஸாயம் ப்ராத:
சி'சி'ர வசந்தௌ புனராயாத: |
கால: கிரீட3தி க3ச்சத்யாயு:
தத3பி ந முஞ்சத் யாசா'வாயு: ||

காலம் விளையாடுகின்றது. பகலாகவும், இரவாகவும், மாலையாகவும், காலையாகவும், குளிர் காலமாகவும், வசந்த காலமாகவும் மாறி மாறிக்
காட்சி அளிக்கின்றது. காலத்தின் விளையாட்டில் ஒருவனது ஆயுளும் முடிந்து போகின்றது. இது அத்தனையும் அறிந்திருந்த போதிலும் ஆசை அகல்வதில்லை.
மூச்சுக் காற்று நீங்கினாலும் ஆசைக் காற்று நீங்குவதில்லை.
 
13 . ஆசைகளை ஒழி!

கா தே காந்தா த4னக3த சிந்தா
வாதுல கிம் தவ நாஸ்தி நியந்தா |
த்ரிஜக3தி ஸஜ்ஜன ஸங்க3தி ரேகா
ப4வதி ப4வார்ணவ தரணே நௌகா ||

முதுமையில் வாத நோயால் நடுங்கும் கிழவனே!
நீ விழுந்து விடாமல் உன்னைத் தாங்கிப் பிடிப்பவர் யாருமே இல்லையா?
உன்னுடைய மனைவி என்பவள் யார்? பணத்தின் மீது நீ கொண்டிருந்த ஆசை எத்தகையது? அந்தப் பணம இப்போது உன் உதவிக்கு வருகின்றதா?
நல்லவர்களின் சகவாசமே உன்னை இந்தப் பிறவிக் கடலிலிருந்து கரை ஏற்ற வல்ல ஓடம் என்பதைத் தெரிந்து கொள்வாய்.
 
#14.

எல்லாமே வயிற்றை வளர்ப்பதற்கே!

ஜடிலோ முண்டி3லுஞ்சித கேச:
காஷாயாம்ப4ர ப3ஹு க்ருத வேஷ:|
பச்'யன்னபி ந பச்'யதி மூடோ
ஹ்யுத3ர நிமித்தம் ப3ஹுக்ருத வேஷ:||

ஒருவன் ஜடை தரித்து ரிஷியைப் போல வேஷம் போடுகின்றான்.
இன்னொருவன் மொட்டை அடித்துக் கொள்ளுகின்றான். மற்றொருவன் தலை முடியை முன்னும் பின்னும் கத்தரித்துக் கொள்ளுகின்றான்.
இன்னொருவன் காஷாயம் தரித்து கண்டவர்கள் மனத்தை மயங்கச் செய்கின்றான். இந்த மூடர்கள் கண்கள் இருந்த போதிலும் உலகம் மாயை என்று கண்டுகொள்வதில்லை.இவர்கள் போடும் எல்லா வேஷங்களும் ஒரு ஜாண் வயிற்றை வளர்பதற்காகவே.
 
15. ஆசை விடுவதே இல்லை.

அங்க3ம் க3லிதம் பலிதம் முண்ட3ம்
த3ச'ன விஹீனம் ஜாதம் துண்ட3ம் |
வ்ருத்3தோ4 யாதி க்ருஹீத்வா த3ண்ட3ம்
ததபி ந முஞ்சத் யாசா' பிண்ட3ம் ||

உடல் தளர்ந்து விட்டது. தலைமுடி நரைத்துவிட்டது அல்லது மொட்டை ஆகி விட்டது. பற்கள் உதிர்ந்து போய்விட்டன அல்லது உடைந்து போய்விட்டன.
தடியைப் பிடித்துக் கொண்டு நடமாடும் கிழவனையும் ஆசைகள் விட்ட பாடு இல்லை.
 
#16. துன்பத்திலும் ஆசைகள் அழிவதில்லை.

அக்3ரே வஹ்னி: ப்ருஷ்டே பா4னு :
ராத்ரௌ சுபு3க ஸமர்பித ஜானு: |
கரதல பி4க்ஷஸ் தருதல வாஸ:
தத3பி ந முஞ்சத்யாசா' பாச' : ||

ஒருவன் தவம் செய்கின்றான். பகலில் எதிரில் நெருப்பு. பின்புறம் கொளுத்தும் சூரியன். இரவில் குளிர் தாங்கமுடியாமல் தான் முகவாய்க் கட்டையை தான் முழங்காலில் வைத்துக் கொள்ளுகின்றான். திருவோடும் இன்றி கைகளிலேயே பிச்சை வாங்குகின்றான். அப்படிப் பட்டவனையும் ஆசை என்கின்ற பாசக் கயிறு விடுவதே இல்லை.
 
17. ஞானம் இன்றேல் மோக்ஷம் இல்லை!

குருதே க3ங்கா3 ஸாக3ர க3மனம்
வ்ரத பரிபாலன ம
த்2வா தா3னம் |
ஞான விஹீன: ஸர்வ மதேன
முக்திம் ந ப4ஜதி ஜன்மச'தேன||

கங்கையிலும், கடலிலும் நீராடுவதனாலும், பல விரதங்களைப் புரிவதாலும், அனேக தான தர்மங்கள் செய்வதாலும் மோக்ஷம் கிடைக்காது.
ஞானம் அடைந்தவனுக்கே மோக்ஷம் கிடைக்கும். ஞானம் ஏற்படாவிட்டால் நூறு பிறவிகள் எடுத்தபோதும் முக்தி கிடைக்காது!
 
18. வைராக்யமே பரமசுகம்.

ஸுரமந்தி3ர தரு மூல நிவாஸ:
ச'ய்யா பூ4ஸ் தரு ஜனிதம் வாஸ: |
ஸர்வ பரிக்3ரஹ போ4க3 த்யாக3:
கஸ்ய ஸுகம் ந கரோதி விராக3: ||

கோவிலிலோ அல்லது மரத்தின் அடியிலோ வாசம்; தரையே படுக்கை; மரப் பட்டைகளினால் செய்த உடை; தன்னுடைய எந்த உடமைப் பொருளையுமே அனுபவிக்காத வைராக்கியம்; இவை யாருக்குத் தான் சுகம் அளிக்காது?
பற்றற்ற நிலையே பரம சுகமானது.
 
19. பிரம்மானந்தமே உண்மை ஆனந்தம்.

யோக3ரதோ வா போ4க3ரதோ வா
ஸங்க3ரதோ வா ஸங்க3விஹீன: |
யஸ்ய ப்3ரம்மணி ரமதே சித்தம்
நந்த3தி நந்த3தி நந்த3த்யேவ ||

உலக போகங்களைத் துறந்து யோகத்தில் ஈடுபட்டவனாகிலும் சரி;
உலக போகங்களை அனுபவிப்பவனாக இருந்தாலும் சரி;
மற்றவர்களுன் தொடர்பு உடையவனாக இருந்தாலும் சரி;
யாருடனும் தொடர்பு இல்லாதவனாகிலும் சரி;
எந்த நிலையிலும் பிரம்மத்தின் மீது மனதைச் செலுத்துபவனாக அவன் இருந்தால், அவன் முக்காலங்களிலும் தப்பாமல் ஆனந்தம் அடைகின்றான்.
 
20. யமதண்டனை இல்லை!

ப4க3வத்3 கீ3தா கிஞ்சித3தீ4தா
க3ங்கா3 ஜலலவ கணிகா பீதா |
ஸக்ருத3பி யேன முராரி ஸமர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா ||

எந்த மனிதன் தான் வாழ்நாட்களில் பகவத் கீதை என்ற புனித நூலைச் சிறிதேனும் கற்கின்றானோ, எந்த மனிதன் கங்கையின் புனித நீரை ஒரு துளியேனும் அருந்தினானோ; எந்த மனிதன் ஒரு முறையேனும் இறைவனுக்கு பூஜை செய்கின்றானோ அவனிடம் யமன் வாக்குவாதம் செய்வதே இல்லை. அவனுக்கு யம தண்டனையும் இல்லை. அவன் முக்தி அடைகின்றான்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top