• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

'அ' முதல் 'க்ஷ' வரை.

Status
Not open for further replies.
371. கோண: = மூலை, கோணம், பிடிலின் வில்,ஆயுதங்களின் கூறிய நுனி, கோல். கதை.

372. கோப: = சினம், கோபம், உடலில் ஏற்ப்படும் மூன்று தோஷங்கள்.

373. கோமல = மிருதுவான, நாசூக்கான, இனிமையான, அழகான, மகிழ்வூட்டும்.

374. கோச'ம் = பாத்திரம், பெட்டி, அறை, உறை, குவியல், கஜானா, தங்கம், வெள்ளி, மொக்கு.

375. கோஷ்டம் = சுற்றுச் சுவர், பழத்தோல்.

376. கௌதுகம் = விருப்பம், ஆசை, ஆவல், ஊக்கம், மகிழ்ச்சி, ஆனந்தம், கேளிக்கை, உத்சவம்.

377. கௌதூஹலம் = தீவிர ஆசை, ஆவல், விருப்பம்.

378. கௌமாரம் = குழந்தைப்பருவம், கன்னிப் பருவம், முருகனை வழிபடும் ஒரு மதம்.

379. கெளமுதீ3 = நிலா, மகிழ்ச்சி தரும் பொருள், பௌர்ணமி, உத்சவம்.

380. கௌமோத3கீ = விஷ்ணுவின் கதாயுதம்.
 
381. கௌசே'யம் = பட்டு, பட்டுத்துணி.

382. க்ரந்த3னம் =அழுகை, அழுகுரல், அழைத்தல்.

383. க்ரம: = கால், காலடி, பாதம், நாடி, செல்லல், செய்தல், ஆரம்பம்.

384. க்ரியா = செய்தல், கார்யம், வேலை, தொழில், உழைப்பு.

385. க்ரீடா3 = விளையாட்டுப் போட்டி, பொழுதுபோக்கு, களிப்பு, கேலி.

386. க்ரூர= தயை அற்ற, கடுமையான, கடினமான, பயங்கரமான.

387. க்ரோத4: = கோபம், சினம், சீற்றம்.

388. க்ளிஷ்ட = வாடிய, துன்புற்ற, ஒவ்வாத, முரணான.

389. க்ளைப்3யம் = பேடித்தனம், ஆண்மை இன்மை, சக்தியற்ற.

390. க்வணிதம் = ஒலி, சப்தம், சங்கீத வாத்ய ஒலி.
 
391. க2ம் = ஆகாயம், சுவர்க்கம், ஐம்புலன்கள், வயல், பூஜ்ஜியம், புள்ளி, தொளை, பொந்து, துவாரம்.

392. க2ட்வாங்கி3ன் = சிவபிரான்.

393. க2ண்ட3ம் = பிளவு, இடைவெளி, வெடிப்பு, உடைதல், சமூகம்.

394. க2ண்ட3னம் = துண்டித்தல், வெட்டுதல், காயப்படுத்துதல்.

395. க2னி = சுரங்கம், குகை.

396. க2ர = கடினமான, முரடான, உறுதியான, கூர்மையான,கொடூரமான, உக்கிரமான.

397. க2ர்ஜூரம் = பேரிச்சம்பழம்.

398. க2லம் = பூமி, நிலம், மண் குவியல், கசண்டு.

399. கா2ண்ட3வ: = கற்கண்டு.

400. கா2த்3யம் = உணவு, உணவுப்பண்டம்.
 
401. கு2ர: = விலங்குகளின் குளம்பு, கட்டில் கால், சவரக்கத்தி, ஒரு வகை வாசனைப் பொருள்.

402. கே2லனம் = விளையாட்டு, பொழுது போக்கு.

403. க்2யாதி = புகழ், கீர்த்தி, பெயர், பட்டம், விருது, துதி.

404. க்2யாபனம் = பிரகடனம், ஒப்புக் கொள்ளுதல், பிரசுரித்தல்.

405. க3: = கந்தர்வன், விநாயகருக்கு அடைமொழி.

406. க3க3னம் = ஆகாயம், விண்வெளி, பூஜ்யம், சுவர்க்கம்.

407. க3ங்கா3புத்ர: = பீஷ்மர், முருகக் கடவுள்.

408. க3ண: = மந்தை, கூட்டம், வர்க்கம், குவியல், வரிசை, வகுப்பு, சிவபிரானின் தொண்டர் கூட்டம், சமாஜம், சபை.

409. க3ண்ட: = கன்னம், யானையின் பொட்டு, குமிழி, கொப்பளம், கட்டி, வீரன், ஆபத்து, மூட்டு, காண்டாமிருகம்.

410. க3த = சென்ற, கழிந்த, முடிந்துபோன, அடங்கிய, விழுந்த.
 
411. க3தி: = நடை, செல்லல், போதல், நுழைவு, திருப்பம், திசை, அடைதல், தலைவிதி, தசை, நிலை, பயன்.

412. க3த்3க3த3ம் = நாத்தழுதழுத்தல், நடுங்கிய பேச்சு, திக்கிய பேச்சு, தழுதழுத்த பேச்சு.

413. க3த்3யம் = உரைநடை, வசன வியாசம்.

414. க3ந்த4: = மணம், வாசனை, பிருத்வீ, சேர்க்கை, தொடர்பு, கர்வம், மமதை.

415. க3ப4ஸ்தி: = சூரியன், ஸ்வாஹாதேவி.

416. க3மனம் = நடை, அசைவு, அனுபவித்தல், அடைதல், பழகுதல்.

417. க3மனீய = எளிதில் அடையக்கூடிய, அறிந்துகொள்ளக் கூடிய.

418. க3ரளம் = விஷம், பாம்பின் விஷம், புல் கட்டு.

419. க3ர்ஜனம் = கர்ஜனை, இடி, சப்தம், ஆவேசம், கோபம், வசை.

420. க3ர்த3ப4ம் = வெண்ணிற அல்லி.
 
421. க3ர்ஹணம் = நிந்தித்தல், திட்டுதல், மாசு கற்பித்தல்.

422. க3வ்யம் = கால்நடைகளின் மந்தை, பசுக்கூட்டம்.

423. க3ஹனம் = ஆழம், காடு, புதர், குகை, பீடை, துக்கம்.

424. கா3ட4ம் = பலமாக, அதிகமாக, பூரணமாக, தீவிரமாக.

425. கா3ணாபத்யம் = விநாயகர் வழிபாட்டை முக்கியமாகக் கொண்ட மதம், படைத் தலைமை.

426. கா3த்ரம் = உடல், அவயவம், உடலின் ஒரு பகுதி.

427. கா3ம்பீ4ர்யம் = ஆழம், மேன்மை, பெருமை, தாராள மனப் பான்மை, அமைதியுடமை.

428. கா3யக: = பாடகன், இசை அறிவு உடையவன்.

429. கா3லி: = வசை, திட்டு.

430. கி3ரி: = குன்று, மலை, மேடு, ஏற்றம், பந்து, கண் நோய்.
 
431. கி3ரிஜா = பார்வதி, மல்லிகைக் கொடி, கங்கை நதி.

432. கி3ரிச' : = சிவபிரான்.

433. கீ3ர்ணி: = புகழ், கீர்த்தி, சாப்பிடுதல், விழுங்குதல்.

434. கு3க்3கு3லு : = குங்கிலியம், சாம்பிராணி.

435. கு3ச்ச2: = கொத்து, பூங்கொத்து, மயில் தோகை, முத்துமாலை.

436. கு3ட3: = சக்கரைப்பாகு, வெல்லப்பாகு, வெல்லக்கட்டி, பந்து.

437. கு3ண: = ஸ்வபாவம், குணம், சிறப்பு, மேன்மை, லாபம், பயன்.

438. கு3ணநிதி4 = குணங்களின் இருப்பிடம்.

439. கு3ணவைசே'ஷ்யம் = குணப் பெருமை.

440. கு3ப்த = மறைக்கப்பட்ட, காக்கப்பட்ட, மூடப்பட்ட, ரகசியமான.
 
441. குரு: =ஆசிரியர், மதகுரு, தந்தை, வயதானவர், பூஜிக்கத் தக்கவர், எஜமானன், தலைவன், அரசன்.

442. கு3ல்மம் = தோப்பு, காடு, புதர், கோட்டை, சாவடி.

443. குஹ்யம் = ரகசியம், மறைக்கப்படுவது.

444. க்3ருத்ஸ = கெட்டிக்கார, சாமர்த்தியமுள்ள, கூர்மையான அறிவுள்ள.

445. க்3ருஹம் = வீடு, இருப்பிடம், மாளிகை, இல்லற வாழ்க்கை.

446. க்3ருஹீத = எடுத்துக்கொள்ளப் பட்ட, பிடிக்கப்பட்ட, பறிக்கப்பட்ட.

447. கே3யம் = பாட்டு.

448. கே3ஹம் = வீடு, இருப்பிடம்.

449. கோ3 = கால்நடைகள், நட்சத்திரங்கள், ஆகாயம், வச்சிராயுதம், வைரம், சுவர்க்கம், அம்பு.

450. கோ3கர்ண: = பசுவின் காது, கோவேறு கழுதை, பாம்பு, அம்பு.
 
451. கோ3குலம் = பசுக்களின் கூட்டம், கோசாலை, கண்ணனின் கிராமம்.

452. கோ3ணி = கோணி, சாக்கு, கந்தல் துணி.

453. கோ3பதி = தலைவன், சூரியன், இந்திரன், சிவன், கிருஷ்ணன்.

454. கோ3புரம் = நகரத்தின் நுழைவாயில், கோவில் கோபுரம்.

455. கோ3மயம் = பசுவின் சாணம்.

456. கோ3ரோசனா = பசுவிடம் கிடைக்குமொரு வாசனை மருந்துப் பொருள்.

457. கோ3ஷ்டீ2 = சபை, கழகம், கூட்டம், சேர்க்கை, உறவினர்.

458. கௌ3ர = வெள்ளி நிறம், மஞ்சள் நிறம், சிவப்பு நிறம், வெள்ளைக் கடுகு, சந்திரன், ஒரு வகை மான், ஒருவகை எருமைக்கடா.

459. கௌ3ரவம் = பளு, கனம், மேன்மை, மரியாதை, உயர்ந்த விலை.

460. கௌ3ரீ= பார்வதி, எட்டு வயதுப் பெண், கன்னிப்பெண், குமாரி.
 
461. க்3ரத2னம் = கெட்டிப்படுதல், தடித்துப் போதல்.

462. க்3ரந்த: = கட்டுதல், இயற்றுதல், புத்தகம், செல்வம் சொத்து,

463. க்3ரந்தி: = முடிச்சு, கொத்து, பணப்பையின் முடிச்சு, மூட்டு.

463. க்3ரந்தி2ன் = புத்தகப்புழு, வித்வான், அறிவாளி.

465. க்3ரஹணம் = பிடித்தல், அடைதல், ஏற்றல், வாங்குதல், கை.

466. க்3ரஹபீட3னம் = கோள்களால் ஏற்படும் துன்பம்.

467. க்3ரஹ சா'ந்தி = ஹோமம், ஜபம், பூஜை செய்து கோள்களின் துன்பத்திலிருந்து விடுபடுதல்.

468. கிராம: = கிராமம், வம்சம், இனம், ஜாதி, கூட்டம், சேர்க்கை.

469. க்3ராமணி = கிராமத் தலைவன், நாவிதன், காமம் பிடித்தவன்.

470. க்3ராம்ய = பட்டிக்காட்டுத்தனமான, பண்பற்ற.
 
471. க்3ராஹ்யம் = வெகுமதி, நன்கொடை.

472. க்3ரீவா = கழுத்து, கழுத்தின் பின்புறம்.

473. க்3ரீஷ்ம = கோடைக்காலம், உஷ்ணமான காலம்.

474. க்3ளானி : = களைப்பு, சோர்வு, அழிவு, வலிமையின்மை.

475. க4: = மணி, கடகட , கலகல, களகள போன்ற ஒலிகள்.

476. க4ட: = மண் பானை, குடம், ஜாடி, யானையின் மத்தகம், தூணின் ஒரு பகுதி.

477. க4டகார: = குயவன்.

478. க4டனம் = உழைப்பு, முயற்சி, நிகழ்தல், ஏற்படுதல், கூடுதல், ஓரிடத்தில் சேருதல்.

479. க4டிகா = சிறு குடம், மண் கலயம், ஒரு நாழிகை = 24 நிமிஷங்கள், கணுக்கால்.

480. க4ண்டா = மணி, மணியை அறிவிக்க அடிக்கும் கனத்த இரும்பு அல்லது வெண்கலத்தகடு.
 
481. க4ன = கச்சிதமான, திடமான, கெட்டியான, கனமான, அடர்ந்த, ஆழ்ந்த, பெரிய, சுபமான.

482. க4னாக4ன: = இந்திரன், மழைமேகம், மதம் கொண்ட யானை.

483. க4ர்ம: =உஷ்ணம், வெப்பம், வியர்வை, நீரைச் சூடாக்கும் பாத்திரம்.

484. கா4துக = அடிக்கும், துன்புறுத்தும், கொடிய, கொடூரமான.

485. கா4ஸ: = புல், உணவு.

486. க்4ருதம் = நெய், தண்ணீர், சக்தி.

487. கோ4ர = பயங்கரமான, துன்பம் தரும், பயம் தரும்.

488. கோ4ஷ: = பேரிரைச்சல், சச்சரவு, கர்ஜனை, வதந்தி, புரளி, அதிகார பூர்வமான அறிக்கை,

489. கோ4ஷணம் = அறிவிப்பு, சத்தமாகச் சொல்லுதல், தமுக்கு போடுதல்.

490.க்4ராணம் = வாசனை, மூக்கு, வாசனை பார்த்தல்.
 
491. ச: = சந்திரன், ஆமை, திருடன்.

492. சக்ரம் = வண்டிச் சக்கரம், குயவனின் திரிகை, விஷ்ணுவின் சக்ராயுதம், செக்கு, கூட்டம், ராஜ்ஜியம், பிரதேசம், காலச் சக்கரம்.

493. சக்ர பாத3: = யானை, வண்டி.

494. சக்ரின் = விஷ்ணு, குயவன், வாணியன், கழுதை, உளவாளி, பாம்பு, காக்கை, பேரரசன், சக்கரவாகப் பறவை.

495. சஞ்சல = அசைகின்ற, ஆடுகின்ற, ஸ்திரமற்ற.

496. சஞ்சலா = மின்னல், லக்ஷ்மி தேவி.

497. சணக: = கொத்துக் கடலை.

498. சண்ட3= குரூரமான, மிருகத்தனமான, கோபம்கொண்ட, சூடான, தீவிரமான, கூர்மையான.

499 . சண்டா3ள: = கலப்பு ஜாதியைச் சேர்ந்தவன்.

500. சதுரங்கம் = யானை, தேர், குதிரை, காலாட்களைக் கொண்ட சேனை, ஒரு சொக்காட்டான் ஆட்டம்.
 
501. சதுரச்'ர = நாற்கோணம், சதுரம், நாற்கரம், நாற்கோட்டுருவம்.

502. சதுரானன: = பிரமன்.

503. சதுர்யுகம் = நான்கு யுகங்கள் சேர்ந்த காலம்.

504. சதுஷ்கம் = நான்கு என்ற எண், நாற்சந்தி, நான்கு மூலைகள் கொண்ட முற்றம், நாலு கால் மண்டபம்.

505. சதுஷ்டய = நான்கு மடங்கான, நான்குள்ள.

506. சந்த்3ரக: = சந்திரன், மயலின் தோகையில் உள்ள கண், விரல் நகம், வட்டமான உருவம்.

507. சந்த்ர பா3லா = பெரிய ஏலக்காய், நிலவு.

508. சந்த்3ரசி'லா = சந்திரகாந்தக்கல்.

509. சந்த்3ரகாந்தா =இரவு, சந்திரனின் மனைவி.

510. சந்த்3ரசூட3 := சந்த்3ரமௌலி: = சந்த்3ரசே'கர: = சிவபெருமான்.
 
511. சந்த்3ரஹாஸ: = பளபளப்பான பட்டாக் கத்தி, ராவணனின் போர்வாள்.

512. சந்த்3ரிகா = நிலவு, வெளிச்சம், பெரிய ஏலக்காய், மல்லிகைக் கொடி.

513. சபல = அசைகின்ற, ஆடுகின்ற, ஸ்திரமற்ற, சஞ்சலமான, சிந்தனையற்ற, விவேகம் இல்லாத.

514. சமத்கரணம் = ஆச்சரியப்படுத்துதல், வியப்புண்டாக்குதல், காப்பிய அழகு, திறமை.

515. சம்பகம் = சண்பகப்பூ.

516. சர = செல்லும், அசையும், ஆடும், நடுங்கும், உயிருள்ள.

517. சரணம் = பாதம், முட்டு, தூண், வேர், செய்யுளின் ஒரு அடி, கால் பங்கு, வம்சம், வேதசாகை.

518. சரணாம்ருதம் = ஆத்யாத்மிக குருவின் பாதங்களைக் கழுவிய நீர்.

519. சரண ஸேவா = சாஷ்டாங்க நமஸ்காரம்.

520. சரிதம் = செல்லுதல், நடைபாதை, செயல், அப்யாசம், நடத்தை, காரியம், கதை , சரித்திரம்.
 
Last edited:
521. சரித்ரம் = நடத்தை, பழக்கம், செயல், காரியம், வாழ்க்கைக் குறிப்பு, வரலாறு, கதை.

522. சர்சா = உருப்போடுதல், ஸ்வரத்துடன் படித்தல், விவாதம், விசாரணை, சிந்தித்தல்.

523. சர்மன் = உடலின் தோல், தொடு உணர்ச்சி, கேடயம்.

524. சர்மகாரீன் = செருப்புத் தைப்பவன்.

525. சர்வணம் = தின்ன, சாப்பிட, ருசிக்க, ஆனந்தம் அடைய.

526. சல = நடுங்கும், துடிக்கும், நிலையற்ற, தீர்மானமற்ற, நிரந்தம் இல்லாத.

527. சலனம் = அசைவு, ஆட்டம், திரிதல், திரும்புதல், விடுதல்.

528. சக்ஷுஸ் = கண், பார்வை, தோற்றம், வெளிச்சம், பார்க்கும் திறன்.

529. சாஞ்சல்யம் = ஸ்திரமற்ற தன்மை, அநித்தியத் தன்மை, வேகமான நடை அல்லது இயக்கம்.

530. சாதுர்யம் = திறமை, சாமர்த்தியம், மதி நுட்பம், இனிய இயல்பு, அழகு.
 
531. சந்த்3ராயணம் = சந்திரனின் வளர்ச்சி அல்லது தேய்வுடன் தொடர்புள்ள ஒரு விரதம், அல்லது தவம்.

532. சாப: =வில், வானவில், வட்டப்பரிதியின் ஒரு பகுதி,
தனுர் ராசி.

533. சாமரம் = கவரிமானின் வால் ரோமத்தால் செய்யப்பட ஒரு வித விசிறி.

534. சாம்பேயம் = நார், தாமரைத் தண்டினுள்ள நார், பொன்.

535. சாரண: = ஊர் சுற்றுபவன், யாத்திரிகன், ஒற்றன், பாடகன், நடிகன், நாட்டியக்காரன், விகடகவி, பாணன்.

536. சாருலோசன = அழகிய கண்களை உடைய.

537. சார்வாக = நாஸ்திக வாதத்தை விவரித்த ஒரு தத்துவவாதி.

538. சிகித்ஸா = சிகிச்சை, மருந்து கொடுத்தல், மருத்துவம் செய்தல்.

539. சிகீர்ஷா = செயல் புரிய ஆசை, விருப்பம், இச்சை.

540. சிகுர: = தலைமயிர், மலை, ஊர்வன, பாம்பு, ஒரு பக்ஷி, ஒரு மரம்.
 
541. சித் = எண்ணம், புத்தி கூர்மை, இதயம், மனம், ஆன்மா, ஜீவன், பிரமம்.

542. சித்தம் = பார்த்தல், கவனித்தல், எண்ணம், சிந்தனை, கவனம், மனம், புத்தி, பகுத்து அறியும் சக்தி.

543. சித்தப்ரச'ம : = மன அமைதி.

544. சித்தவிப்லவ: = மனக் குழப்பம், தடுமாற்றம், புத்தி மாறாட்டம், அறிவின்மை.

545. சித்த வருத்தி: = மனநிலை, மனதின் இயற்கை, உள்நோக்கு, மனக்கிளர்ச்சி, மனதின் உட்செயல்.

546. சித்ரம் = சித்திரம், ஓவியம், வரைபடம், ஆபரணம், அபூர்வ அழகு, திலகம், ஆகாயம், விண்ணுலகம்.

547. சித்ரகம்பளம் = பலவர்ண விரிப்பு, யானையின்
மேல் போடப்படும் வர்ணத் துணி.

548. சித்ரகர: = ஓவியன், நடிகன், நாடகம் நடத்துபவன்.

549. சித்ரமேகல: = மயில்.

550. சித்ரபா4னு = அக்னி, சூரியன், பைரவர், எருக்கஞ்செடி, சிவன், ஒரு ஆண்டின் பெயர்.
 
Last edited:
551. சித்ரா = ஒரு நக்ஷத்திரம், மாயை.

552. சித்ரிணீ = புத்திசாலித்தனமும், பலவித மேன்மைகளும் பொருந்திய பெண்.

553. சிந்தனம் = ஆலோசித்தல், சிந்தித்தல், கவலைப்படுதல்.

554. சின்மயம் = பேரறிவு, பரமாத்மா.

555. சிராயுஸ் = நீண்ட ஆயுள்.

556. சிரஜீவன் = அஸ்வத்தாமா, மகாபலி, வியாசர், ஹனுமான், விபீஷணன், மார்க்கண்டேயர் போன்ற சிரஞ்சீவிகள் .

557. சிஹ்னம் = அடையாளம், கரை, முத்திரை, குறி, ஜாடை, இங்கிதம், குறிக்கோள், திசை, ராசியின் சின்னம்.

558. சீரம் = கிழிந்த துணி, கந்தல் துணி, மரவுரி , நான்கு சர முத்து மாலை, கோடுகளைக் கொண்டு எழுதுதல்.

559. சீவரம் = துணி, ஆடை, மரவுரி, பௌத்த பிக்ஷுவின் ஆடை.

560. சுபு3கம் = முகவாய்க்கட்டை.
 
561. சும்ப்3 = முத்தமிட, மிருதுவாகத் தடவிக்கொடுக்க.

562. சும்ப3க: = முத்தமிடுபவன், காமவெறிகொண்டவன், போக்கிரி, மோசக்காரன், தராசின் முள்.

563. சுர் = கொள்ளை அடிக்க, திருட, எடுக்க, மேற்கொள்ள.

564. சுலுக: = ஆழமான சேறு, உள்ளங்கை, உள்ளங்கை அளவு நீர், சிறிய பாத்திரம்.

565. சூடா3 = தலை உச்சி மயிர், குடுமி, சேவல் அல்லது மயிலின் கொண்டை, மகுடம், கிரீடம், சிகரம்.

566. சூடா3மணி = தலையில் அணியப்படும் அணிகலன், மிகவும் உயர்ந்த ஒன்று.

567. சூர்ணம் = பொடி, மாவு, புழுதி, சந்தனம், வாசனைத்தூள், மருந்துப்பொடி.

568. சூர்ணகம் = ஒரு எளிய வசன நடை.

569. சேட: = சேட3: = வேலைக்காரன்.

570. சேடி = சேடி3 = சேடி4 = பணிப்பெண்.
 
very good information. If you post 1000 Nos this, like the Vishnu Sahasrnamas, I will be grateful. This is because, I need them for coining shorhand phrases for Sanskrit based Hindi words and Tamil shorthand.
 
dear Mr. Mahadevan,

Rest assured that the number is likely to exceed 1500! It can even be more if I am ready go on typing relentlessly. I AM surprised that we use thousands of Sanskrit words without even realizing that are Sanskrit words.

I am glad that someone is putting all these words to good use.

I have a good news for you. The Foreign phrases in English might be useful to you too. Very soon we will find out how many of the English words have their origin in the other ancient and modern languages!
Really fascinating information! :dance:

with best wishes and regards,
V.R.
 
571. சேதன = உயிருள்ள, உயிர் வாழும், அறிவுள்ள, உணர்வுள்ள, கண்ணுக்குப் புலப்படும்.

572. சேதஜன்மன் = சேதப4வ: = சேதபூ4: = மன்மதன்.

573. சேலம் = துணி, ஆடை.

574. சேஷ்டா = சேஷ்டிதம் =அசைவு, நடை, சமிக்ஞை, அறிகுறி, செயல், முயற்சி, உழைப்பு, நடத்தை.

575. சைதன்யம் =ஆன்மா, ஜீவன், உணர்வு, பிராணன், அறிவுத்திறன்

576. சைத்யம் = எல்லை காட்டும் கற்குவியல், சமாதி, யாக மண்டபம், கோவில், அத்தி மரம்.

577. சோடி = சிறிய பாவாடை, ரவிக்கை.

578. சோத்3யம் = ஆக்ஷேபித்தல், கேள்வி கேட்டல், ஆச்சர்யம், வியப்பு.

579. சோலி = சட்டை, ரவிக்கை, பாவாடை.

580. சோஷ்ய = உறிஞ்சி உண்ணக் கூடிய.
 
581. சௌர்யம் = திருட்டு, கொள்ளை, ரஹசியம், மறைத்தல்.

582. ச்யவனம் = அசைதல், அடித்தல், வஞ்சித்தல், நஷ்டம், சேதம், மேலிருந்து கீழே விழுவது.

583. ச்யுத = கீழே விழுந்த, நழுவிய, வெளியேற்றப்பட்ட, ஒதுக்கப்பட்ட, ஏமாற்றப்பட்ட, உடைக்கப் பட்ட.

584. ச2டா = கூட்டம், கட்டி, குவியல், காந்தி, வெளிச்சம், கிரணங்களின் கூட்டம்.

585. ச2த்ரின் = குடை பிடித்து நடப்பவன்.

586. ச2த்வர : = வீடு, கொடி வீடு, பர்ணசாலை.

587. ச2த3னம் = மூட உதவும் பொருள், சிறு துணி, போர்வை, வாளின் உறை, கூடு, மூடி.

588. ச2த்3மன் = மாறுவேடம், ஏமாற்றம் அளிக்கும் ஆடை, பொய்க்காரணம், நாணயமின்மை, தந்திரம்.

589. ச2ந்த3ஸ் = விருப்பம், ஆசை, நினைப்பு, மகிழ்ச்சி, இச்சை.

590. ச2மண்ட3: = திக்கற்றவன், யாரும் இல்லாதவன், அநாதை.
 
591. ச2ர்த3னம் = கக்குதல், வாந்தி எடுத்தல், ஆரோக்யமின்மை.

592. ச2லம் = ஏமாற்றுதல், வஞ்சித்தல், வெளிவேடம், கபடம்.

593. சா2த்ர: = மாணவன், சீடன்.

594. சா2ந்தஸ = விசேஷ வேதச் சொற்கள், வேதத் தொடர்புள்ள.

595. சா2யா = நிழல், பிம்பம், பிரதி பிம்பம், ஒரு போலத் தோற்றம், ஒரு போல அமைப்பு, பிரமை, இருள், சூரியனின் மனைவி.

596. சா2யாங்க3: = சா2யாப்4ருத் = சா2யாமான: = சந்திரன்.

597. சா2யாக்3ரஹ: = கண்ணாடி, ராஹு, கேது.

598. சா2யாத்மாஜ: = சா2யாபுத்ர: = சா2யாஸுத: = சனி கிரகம் .

599. சா2யாபத2 = விண்வெளி, நக்ஷத்திர வீதி.

600. சா2யாதரு = சா2யாத்3ரும = நிழல் தரும் மரம்.
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top