உத்தமவமர்த்தலமமைத்ததொரெழிற்றனுவினுய்த்த கணையால்
அத்திரவரக்கன் முடிபத்தும் ஒரு கொத்தென உதிர்த்த திரலோன்
...
இதுபோன்ற அசாதாரண சந்த முயற்சிகள் சமஸ்கிருதத்தில் ஏராளம். தமிழுக்கு அவை சமஸ்கிருதத்திலிருந்து வந்தவை என்பது என் துணிபு. ஒரு உதாரணம்:
யாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயா |
யாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயா ||
--வேதாந்த தேசிகர், ’பாதுகாசஹஸ்ரம்’, ஸ்லோகம் 936
இந்த வரிகளை இப்படிப் பிரித்துப் பொருள்கொள்ள வேண்டும்:
यायाया, आय्, यायाया, आय्, आयाय्,अयाय, अयाय्, अयाय्,अयाय्, अयाय्, ।
अयाय्, अयाया, यायाय्, आयाया, आयाय्, या, या , या, या, या, या, या, या ॥
யாயாயா, ஆய், யாயாயா, ஆய், ஆயாய்,அயாய, அயாய், அயாய்,அயாய், அயாய், |
அயாய், அயாயா, யாயாய், ஆயாயா, ஆயாய், யா, யா , யா, யா, யா, யா, யா, யா ||
பொருள்:
பகவானின் பாதங்களை அலங்கரிக்கும் அவன் பாதக்குறடுகள், ஞானம் தருவன, அவனை அடையும் ஆசையத் தருவன, தடைகளை நீக்குவன, அவனை அடைய உதவுவன, தவிர எங்கும் செல்லக் கூடியன---மஹாவிஷ்ணுவின் இந்தப் பாதக்குறடுகள்.
*****
சமஸ்கிருதத்தில் உள்ள சில கவிதை உத்திகளைத் தமிழில் கொண்டுவர பெரும்பாலும் முடியாது. உதாரணமாக, ஶ்ரீ வேங்கடேச கவியின் ’ஶ்ரீ ராகவ யாதவீயம்’ முப்பது ஸ்லோகங்களிலும் ’அனுலோம-ப்ரதிலோம’ என்ற உத்தி பயன்படுத்தப் பட்டுள்ளது. இந்த உத்தியில் ஒரு ஸ்லோகத்தின் பதங்களை முதலில் இருந்து இடம்-வலமாகப் படித்தால் (இது அனுலோம) ஒரு பொருளும், கடைசியில் இருந்து வலம்-இடமாகப் படித்தால் (இது பிரதிலோம) மற்றொரு பொருளும் தென்படும். ’ஶ்ரீ ராகவ யாதவீயம்’ படைப்பில் ஒவ்வொரு ஸ்லோகமும் அனுலோமத்தில் ஶ்ரீ ராமனையும் பிரதிலோமதில் ஶ்ரீக்ருஷ்ணனையும் வழிபடுகிறது. முதல் ஸ்லோகம் இப்படிப் போகிறது. முதலில் அனுலோமத்தில் ஶ்ரீராமன்:
वन्दॆ अहम् दॆवम् तम् श्रीतम् रन्तारम् कालम् भासा य:।
राम: रामाधी: आप्याग: लीलाम् आर आयॊध्यॆ वासॆ॥
வந்தே அஹம் தேவம் தம் ஶ்ரீதம் ரன்தாரம் காலம் பாஸா ய:|
ராம: ராமாதீ: ஆப்யாக: லீலாம் ஆர ஆயோத்யே வாஸே||
"வணங்குகிறேன் நான் அந்த தேவனை, மலைய, ஸஹ்ய பர்வதங்களுக்குப் பயணம் போனவரை, தன் மனத்தில் சீதாவைப் பற்றியே எண்ணியவரை, பின்னர் அயோத்யா திரும்பி அவளுடன் வெகுகாலம் லீலா வினோதங்கள் புரிந்தவரை."
இப்போது பிரதிலோமத்தில் ஶ்ரீக்ருஷ்ணன்:
सेवाध्येयो रामालाली गोप्याराधी मारामोरा:।
यस्साभालङ्कारम् तारम् तम् श्रीतम् वन्दॆऽहम् दॆवम्॥
ஸேவாத்யேயோ ராமாலாலீ கோப்யாராதீ மாராமோரா:|
யஸ்ஸாபாலங்காரம் தாரம் தம் ஶ்ரீதம் வந்தே அஹம் தேவம்||
"ஶ்ரீக்ருஷ்ணனை நான் வணங்குகிறேன், அவர் தவத்தாலும் தியாகத்தாலும் அறியப்படுபவர், ருக்மிணியுடனும் மற்ற தேவியருடனும் லீலைகள் புரிபவர், கோபியர்களல் வணங்கப் படுபவர், ஶ்ரீலக்ஷ்மீ உறையும் மார்புத் தலத்தினை உடையவன், ஒளிவீசும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்."
*****
திரு பசுபதி அவர்கள் தன் ’பசுபதிவுகள்’ வலைத்தளத்தில் அனுமோம-பிரதிலோம உத்திக்கு ’மாலைமாற்று’ என்று பெயரிட்டு அதனைக் கொஞ்சம் முயன்றுள்ளார்: அவர் குறித்துள்ள மாலைமாற்றுகள்:
திருமால் மாருதி, போ வேகமாகவே போ, வா வேகமாகவே வா.
பசுபதிவுகள்
[யப்பிலக்கணம் பற்றி விரிவாக அறிய இந்த வலைத்தளத்தை நாடலாம்.]
*****