• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இலக்கணமே போ! புதுக்கவிதையே வா!

Status
Not open for further replies.
புதுக்கவிதையை வா என்று அழைக்கலாம்
அதற்காக இலக்கணத்தைப் போ என்று சொல்லலாகுமோ?
...............
கவிதைகளின் இலக்கணம் மிகக் கடினமானது! சங்கக்
கவிதைகள் போலவே நம்மால் எழுதவா முடிகின்றது?

நான் எழுதும் எழுத்துக்களை, 'மிஸ்ர கவிதை' என்றே
நான் குறிப்பிடுகிறேன்; ஆங்கிலம் சிறிது கலப்பதால்!

கடினமான இலக்கணத்தைக் கொஞ்சம் விட்டு வெளிவந்து,
எளிமையாகக் கருத்துக்கள் கூறவே, அழைப்பு விடுத்தேன்!

சரியாகப் புரிந்துகொண்டால், எளிமையை ரசிக்கலாம்!
விரிவான மரபு தேடி அலைவதையும், தவிர்க்கலாம்!

உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம் :pray:
 
மீண்டும் வேண்டுகோள்!

ஆங்கிலத்தின் உதவியால், தமிழ்ச் சொற்களைத் தட்டெழுத,
பாங்காகச் சொற்களின் எழுத்துக்களை அறிதல் வேண்டும்!

இல்லாவிடில், சுவர்க்கத்தில் இருக்கும் சீத்தலைச் சாத்தனார்,
பொல்லாத தமிழைப் பொறுக்க இயலாது, அல்லாடிவிடுவார்!

சரியான தமிழை வளர்ப்போம்!
ராஜி ராம் :cheer2:
 
Last edited:
தமிழின் இலக்கண கூறுகளை ஆராய்வது என்பது என்னைப் போன்ற பாமரனுக்கு ஆழ்கடலில் இறங்கி அதன் ஆழத்தை அளப்பது
போன்று ..

தொல்காபியதிற்கே இதுவரை யாரும் முழுதாக உரை எழுதவில்லை என்பது இங்கு ஈண்டு நோக்கற்பாலது.

முடிவாக தபு சங்கரின் ஒரு புதுக்கவிதை.

உனக்காக நான் முதன் முதலாக சமைக்கும் பொழுதுதான் தெரிந்தது சமையல் ஒரு இனிமையான கலை என்று

இதில் கால் புள்ளி , அரைப் புள்ளி , ஏன் முற்றுப்புள்ளி கூட இல்லை ..ஆனாலும் சுவை குறையவில்லை ..

இதை புதுக்கவிதை என்பதை விட சொற்களின் அலங்கார அணிவகுப்பு என்று சொல்வதே சாலச்சிறந்தது.

இலக்கண வரம்பு தேவையில்லை
-----------------------------------

என்னுடைய (புதுக்கவிதை) ஒன்று மட்டும் சொல்லி விடை பெறுகிறேன் ..

நான் புதுக்கவிதை எழுத புறப்பட்டேன்
முற்றுப்புள்ளி கூட விடைகொடுத்து விட்டது
வேறு வேலை பார்க்க

நன்றி.

சிவஷன்முகம்.
 
Last edited:
ஒரு புது (கவிதை) வீடு !

புதுக்கவிதையை வா என்று அழைக்கலாம்
அதற்காக இலக்கணத்தைப் போ என்று சொல்லலாகுமோ?
இலக்கணம் இன்றி எழுதுவது எல்லா நேரமும் கவிதை ஆகுமோ?

இலக்கண சட்டை மட்டுமே அணிய வேண்டும் என்ற காரணத்தால் சட்டை இன்றி திரிவதுதான் தகுமோ?
கருத்துப் பரிமாற்றம் தான் முக்கியம். மற்றவை எல்லாம் அப்புறம்!

நம்புங்கள் என்னை. நான் எந்த கலகமும் செய்ய வரவில்லை.
போகிற போக்கில் எனக்குத் தோன்றியதைச் சொன்னேன்.

''இலக்கணம் இன்றி எழுதுவது எல்லா நேரமும் கவிதை ஆகுமோ?''
திரு. ஹரிதாச சிவா அண்ணா ,

இலக்கணம் இன்றி எழுதுவது எல்லா நேரமும் கவிதை ஆகும்.
அதன் அதன் கூடிற்க்குள் எழுதும் பொழுது .
அதற்காக வேண்டித்தானே தமிழில் எண்ணற்ற வீடுகளை கட்டயுல்லார்கள் !
சீட்டுக்கவிக்கு ஒரு வீடு
கும்மிபாட்டுக்கு தனி வீடு
இலக்கணம் மில்லா கவிக்கு
ஒரு புது (கவிதை) வீடு !
 
Last edited:
கந்தரகோளமோ?

'வீட்டுக்கு வீடு வாசப்படி'

அதுதான் புதுக் கவிதை வீட்டில்

இத்தனை கந்தரகோளமோ? :noidea:
 
24 மணி நேரம்

(சமீபத்தில் கேட்ட 'கடி'!)

புது மனை வாங்கி

மகிழ்ந்தார் ஒருவர்

24 மணி நேர நீர்வரவு என!

இவர் சென்ற

மறுநாள்

நின்றுபோனது நீர் வரவு!

ஏன் எனக் கேட்டார்

பதில் வந்தது

24 மணி நேரம்

முடிந்துவிட்டதே!

:faint2:
 
''இலக்கணம் இன்றி எழுதுவது எல்லா நேரமும் கவிதை ஆகுமோ?''
திரு. ஹரிதாச சிவா அண்ணா ,

இலக்கணம் இன்றி எழுதுவது எல்லா நேரமும் கவிதை ஆகும்.

அதன் அதன் கூட்டிற்குள் எழுதும் பொழுது .

அதற்காக வேண்டித்தானே தமிழில் எண்ணற்ற வீடுகளை கட்டியுள்ளார்கள் !

சீட்டுக்கவிக்கு ஒரு வீடு
கும்மிபாட்டுக்கு தனி வீடு
இலக்கணம் மில்லா கவிக்கு
ஒரு புது (கவிதை) வீடு !

எண்ணிக்கையில்லா கவிதை வகைக்கு
அதன் அதன் இடத்தில் அடுக்கி வைப்பதற்கு
எண்ணிலடங்கா எத்தனையோ வீடுகள் !
விரலி விடு தூது
பாணன் பாணி பாட்டு
சீட்டுகவி
போர் முழக்கப் பாடல்
சிலேடை பாட்டு
கலம்பகம்
காவடி சிந்து
என்னும் எத்தனையோ...
 
இந்த 'நூலில்' நான் எதிர்பார்ப்பதும், அளிக்க விழைவதும்,

எந்தப் பொருட்குற்றமும், சொற்குற்றமும் இல்லாத,

அழகிய, எளிய, குறும், அரும் கவிதைகளையே!

நல்ல தமிழ் வளர்க,
ராஜி ராம் :typing:
 
முண்டாசுக்கவிக்கு ஒரு முக்காடு

இந்த 'நூலில்' நான் எதிர்பார்ப்பதும், அளிக்க விழைவதும்,

எந்தப் பொருட்குற்றமும், சொற்குற்றமும் இல்லாத,

அழகிய, எளிய, குறும், அரும் கவிதைகளையே!

நல்ல தமிழ் வளர்க,
ராஜி ராம் :typing:

சேது சமுத்திர கால்வாய் திட்டம்
அதை சேற்றிலே புதைத்து விட்டு
முண்டாசுக்கவிக்கு நல்லதொரு
முக்காட்டையும் போட்டனர்.
 
Last edited:
முண்டாசு கவிக்கொரு முக்காடு

:eyebrows:காவிரி வெற்றிலைக்கு உள்ளே
மாயங்கள் பல செய்து (கர்)நாடகம்
ஆடி விட்டனர் பேச்சுவார்த்தை_
வெற்றி இல்லை என்றே ! பின்
எப்படி ஐயா கங்கை கோதுமைக்கு
மாறு கொள்வோம் ?
 
Last edited:
மரங்களைக் காப்போம்!

நாட்டு மக்களுக்கு

மரங்களைக் காக்கும்படி

வேண்டுகோள் விடுக்க

நோட்டீஸ் அடித்து

விளம்பரம்;

பலகைகளில் எழுதி

விளம்பரம்;

காலியானது

ஒரு சின்னக் காடு!

:ohwell: . . . :faint:
 
இலக்கணமே போ! புதுக்கவிதையே வா!

எழுத்தாளர் சுஜாதா எழுதிய "ஸ்ரீ ரங்கத்துக் கதைகள்" என்ற தொகுப்பை ஒரே மூச்சில் ஒண்ணரை நாட்களில் படித்து முடித்தேன் . அவருடைய எழுத்துக்களில் கவரப்படாதவர்கள் தமிழ் உலகில் இல்லை. நல்ல நகைச்சுவை கலந்த படைப்பு . வைணவ பிரபந்தங்களிலிருந்து கதைகளுக்கு முகப்பு கொடுத்திருக்கிறார் . அவைகளிலிருந்து ஒன்றைக் கொடுக்கிறேன் :

விடம் கலந்த பாம்பின்மேல்
நடம் பயின்ற நாதனே.

- திருச்சந்த விருத்தம்

இக்கவிதையின் அழகில் லயித்து, அடடா இவ்வறிய பொக்கிஷங்களை திறக்காமல் என் வாழ்நாட்களை கழித்துவிட்டேனே என்று ஓர் மனச்சுமை ஏற்பட்டது .

அன்புடன்,
ப்ரஹ்மண்யன்,
பெங்களூர்
 
இலக்கணமே போ! புதுக்கவிதையே வா!

சுஜாதா அவர்களின் "ஸ்ரீ ரங்கத்து க் கதைகள் " தொகுப்பிலிருந்து மற்றொரு முகப்புக் கவிதையை க் கீழே கொடுத்துள்ளேன் :

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை அரவணை த் துயிலுமாகண்டு
உடல் எனக்கு உருகுமாலோ என்செய்கேன் உலகத்தீரே.


"தொண்டரடிப்பொடியார்" இயற்றிய இவ்வழகான பாசுரம் ஸ்ரீ ரங்கநாதனை நம் கண் முன்னே கொணர்ந்து நிறுத்துகிறது .
இதோ நான் வைணவ பிரபந்தங்களை கணினியில் தேடிக்கொண்டிருக்கிறேன் இப்போது மேலும் ஆழ்வார்களின் தமிழின் சுவையை அனுபவிக்க.

அன்புடன்,
ப்ரஹ் மண்யன்
பெங்களூர் .
 
Last edited:
சுஜாதா அவர்களின் "ஸ்ரீ ரங்கத்து க் கதைகள் " தொகுப்பிலிருந்து மற்றொரு முகப்புக் கவிதையை க் கீழே கொடுத்துள்ளேன் :

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை அரவணை த் துயிலுமாகண்டு
உடல் எனக்கு உருகுமாலோ என்செய்கேன் உலகத்தீரே.


......................
அன்புடன்,
ப்ரஹ் மண்யன்
பெங்களூர் .
Dear Sir,

இலக்கணத்தைப் போகச் சொன்ன 'நூலில்' இத்தனை அழகிய பாசுரமா?

இலட்சணம் மிகுந்த இவற்றை, தாங்கள் ஒரு 'நூலாக' அளிக்கலாமே?

Regards,
Raji Ram
 
சுஜாதா அவர்களின் "ஸ்ரீ ரங்கத்து க் கதைகள் " தொகுப்பிலிருந்து மற்றொரு முகப்புக் கவிதையை க் கீழே கொடுத்துள்ளேன் :

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை அரவணை த் துயிலுமாகண்டு
உடல் எனக்கு உருகுமாலோ என்செய்கேன் உலகத்தீரே.


"தொண்டரடிப்பொடியார்" இயற்றிய இவ்வழகான பாசுரம் ஸ்ரீ ரங்கநாதனை நம் கண் முன்னே கொணர்ந்து நிறுத்துகிறது .
இதோ நான் வைணவ பிரபந்தங்களை கணினியில் தேடிக்கொண்டிருக்கிறேன் இப்போது மேலும் ஆழ்வார்களின் தமிழின் சுவையை அனுபவிக்க.

அன்புடன்,
ப்ரஹ் மண்யன்
பெங்களூர் .

பலாவின் சுவை
பாசுரம் அருமை
 
ஏன் எதற்கு எப்படி

:ear:
ஏன் எதற்கு எப்படி என்றில்லாமல் ஏமாந்தோம்
ஏற்றது ஏற்றோம் ஏதேதோ ஏற்றோம்

எரித்துவிட்டு எகத்தாளம் எங்கேயும் எப்பொழுதும்
எண்ணம் எப்பொழுதும் எத்தருக்கு எரிமலை


ஏதுமறியா என்னப்பன் எழுதிவிட்டான் ஏட்டினிலே
ஏமாளிகள் எங்கேயும் ஏனி(இ)ப்படி என்றே
 
Last edited:
இலக்கணமே போ! புதுக்கவிதையே வா!

Dear Sir,

இலக்கணத்தைப் போகச் சொன்ன 'நூலில்' இத்தனை அழகிய பாசுரமா?

இலட்சணம் மிகுந்த இவற்றை, தாங்கள் ஒரு 'நூலாக' அளிக்கலாமே?

Regards,
Raji Ram

திருமதி ராஜி ராம் அவர்களுக்கு,

நல்லதொரு யோசனை , ஆனால் அதற்கு வேண்டிய தகுதியோ, படிப்போ எனக்கில்லையே . நான் இப்போதுதான் தமிழ் மொழியின் அருமையறிந்து இவ்வமுதைப் பருக மெதுவாக தவழ்ந்து வருகிறேன் . திரு நாராயணன் (Nara ) போன்ற தமிழில் ஆழ்ந்த அறிவும், ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் "புதிய நூல்" ஒன்றை ஆரம்பிக்கவேண்டும் என்பது எனது அவா.

தங்கள் நலம் கோரும்
பிரஹ்மண்யன்,
பெங்களூர்
 
திருமதி ராஜி ராம் அவர்களுக்கு,

நல்லதொரு யோசனை , ஆனால் அதற்கு வேண்டிய தகுதியோ, படிப்போ எனக்கில்லையே . நான் இப்போதுதான் தமிழ் மொழியின் அருமையறிந்து இவ்வமுதைப் பருக மெதுவாக தவழ்ந்து வருகிறேன் . திரு நாராயணன் (Nara ) போன்ற தமிழில் ஆழ்ந்த அறிவும், ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் "புதிய நூல்" ஒன்றை ஆரம்பிக்கவேண்டும் என்பது எனது அவா.

தங்கள் நலம் கோரும்
பிரஹ்மண்யன்,
பெங்களூர்
'அடக்கம் அமரருள் உய்க்கும்' - இந்த

வள்ளுவத்தின் வழி தங்கள் வழி!

Regards,
Raji Ram
 
நிதி...

இல்லத்தரசர் ஆளும் கட்சிப்

பிரதிநிதி

இல்லத்தரசி எதிர் கட்சிப்

பிரதிநிதி

தேர்தல்

வரும்

யார் வென்றாலும்

சேரும்

இல்லத்தில் நிதி!

:decision: . . . :biggrin1:
 
'அந்த' விலங்கு!

தேர்தல் வருகிறது

பிரசார நேரங்கள்

புகழ் ஆரங்கள்

காரியம் ஆகும் வரை

'அந்த' விலங்கின்

காலையும் பிடிப்பார்

காரியம் ஆனதும்

'அந்த' விலங்கைப்போல

எட்டி உதைப்பார்

இதுதான் உலகம்!

:shocked:
 
சொல்லிலுமா?

ஒரு பெண்

குழந்தைப் பருவத்திலிருந்து

வைப்பது அது

திருமணத்தின்போது

பெண்ணின் நெற்றியில்

துணைவன் இடுவது

துணைவன் மறைந்தால்

துணையாகாது அது!

அவளைக் குறிக்கும்

'கைம்பெண்'

என்ற சொல்லில்

இரண்டு பொட்டுக்கள்

அதனாலேதான்

'விதவை'

என்ற சொல்லைக் கண்டீரோ?


குறிப்பு: என்னை மிகவும் வாட்டிய ஒரு கருத்து இது!

முன்பே எந்தப் பெரியவரோ சொன்ன விஷயம்தான் இது!

:flame:
 
ஏமாற்றம்!

தந்தையிடம் சென்று

சொன்னாள் மகள்

அப்பா நான் சாதிக்க விரும்பறேன்!

மகிழ்ந்த தந்தை கேட்டார்

எந்தத் துறையில் அம்மா?

போங்கப்பா என

நாணிக் கோணிய

மகளின் பதில்

எதிர் வீட்டுப் பையன் பெயர்

சாதிக்!

குறிப்பு: 'சாதிக்கை விரும்பறேன்', எனச் சொல்ல மாட்டாளோ?
:boom:
 
ஒரு தமிழ் திரைப்பாடல் நினைவுக்கு வருகிறது:
"ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்வந்தால் அடங்குதல் முறைதானே"
"கம்பன் ஏமாந்தான்..." என்பது பாடல். இங்கே "அப்பன் ஏமாந்தான்..." என்று பாட வேண்டும்.
:kev:
 
சரி? 'சாரி'?

சாதிக்கை விரும்பி, விரும்பியதை சாதித்தபின்,

சாதிக்கால் அவள் ஏமாறாமல் இருந்தால், சரி!

இல்லையேல், 'சாரி'!


:twitch: . . :bowl:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top