• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

My eldest sister's wedding was in 1966 and V R ji's was in 1970. Both were celebrated for three days, in our newly built

sweet home. The land measured 25 cents. Half of the plot was left vacant and house was built in one half. Thatched roof

was made over the vacant plot and the wedding functions were held there. Nearly 150 people attended each wedding.

Now, I wonder how all of us had our morning bath on the three days, how we dined, how we slept etc! Still, I remember

the huge jamukkALams and about three dozen pillows, which were taken for rent!

People lived a very simple during that period and taking care of them was NOT a difficult task! :cool:
 
One huge and one small kalyANa mandapams were then built in our village. So, my wedding was held in the bigger

mandapam and people from Ram's side were staying in the smaller one, which was nearer to our sweet home. Three

cars were arranged to commute between the three places! It seems dad found it a bit tough task and hence arranged

my younger sisters wedding at Palani. No fuss at all! Everything was taken care of by one middle aged Iyer mAmA. :thumb:
We enjoyed that wedding without any strain!! :peace:
 
Last edited:
ஒரு கோலாகலக் கல்யாணம் - பகுதி 16

வண்டின் ரீங்காரத்தைப் போல வம்புகள் இருக்க,
வந்துவிட்டாள் மணமகள், நாத்தனார் உடனிருக்க!

ஜொலிக்கும் கற்கள் மிளிரும் ரவிக்கை; விடியோ
ஒளிக்கு மின்னும் கூறைப் புடவை; அவள் அழகியே!

பாரம்பரிய வழக்கப்படி, தந்தையின் மடியில், தனது
பாரம் முழுதும் விழாதபடி, நாசூக்காய் அவள் அமர,

'மாங்கல்யம் தந்துனானே' மந்திரம் முழங்க, திரு-
மாங்கல்யம் அவள் கழுத்தில் ஏற, பூமாரி சொரிய,

வண்ணக் காகிதத் துகள்களை இளசுகள் வெடிக்க,
இன்னும் ஒரு ஜோடி இல்வாழ்வினில் நுழைந்தது!

கரம் குலுக்க
க் கொஞ்ச நேரத்திற்கு 144 என்பதால்,
கரைந்தது கூட்டம்; பசித்த சிலர் பந்திக்கு முந்தினர்!

திருமணச் சடங்குகள் இன்னும் தொடரும்; சப்தபதி,
அருந்ததி பார்த்தல், பொரியிடல் என்று நிகழ்வுகள்.

மணமகளின் கால் விரலை மணமகன் பற்றியதும்,
கணமும் தாமதிக்காது சாஸ்திரிகள் கலாய்த்தார்!

'அம்பீ! இப்பவே பழகிக்கோ!' என்று அவர் உரைத்திட,
அம்பியுடன் சேர்ந்து அனைவரும் சிரித்து மகிழ்ந்திட,

இனிதே வைபவங்கள் நிறைவேறின. சம்பந்திகளும்
இனிய பரிசுகளைப் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டனர்!

தொடரும் ..........................

 
ஒரு கோலாகலக் கல்யாணம் - பகுதி 17

அடுத்த போட்டோ செஷன் அப்போது துவங்கியது!
எடுக்க வேண்டாமா மடிசார் - பஞ்சகச்ச உடையை?

உறவினர் பலர் குரூப் போட்டுக்கொண்டு வந்தனர்.
உறவுகள் போட்டோவால் மட்டுமே வலுப்படுமோ?

கடைசிப் பந்தியில்தான் மணமக்கள் உண்ணுவதால்,
கருத்துடன் ஸ்பெஷல்களெல்லாம் வைத்திருந்தனர்!

உண்டு மாலை வீணைக் கச்சேரி என்றதும் மகிழ்ச்சி!
உண்ட மயக்கத்தால் எல்லோரும் தத்தம் அறையில்.

ஏ. சி அறையில் ஓய்வு சுகமாகவே இருக்கிறது - அது
ஓசியில் கிடைத்தால், இரட்டிப்பு ஆனந்தம் வருகிறது!

பட்டுப் புடவைகளை உடுத்தத் தூண்டும் வைபவங்கள்;
பட்டுப் புடவை சரசரக்க, பெண்களின் நடமாட்டங்கள்!

மூதாட்டிகளில் பலர், கற்களும், ஜரிகையும் மின்னும்
முதுகு உள்ள ஜாக்கெட்டுகளை அணிந்து, அசத்தினர்!

இளசுகள் காக்ரா - சோளி, டிஸைனர் புடவைகள் என
பளபளக்கும் ஆடைகளுடன், அழகாக உலா வந்தனர்.

சிற்றுண்டிகளை ரசிகர்களுக்கு வினியோகம் செய்ய,
சற்றும் சளைக்காது அனைவரும் ருசித்து மகிழ்ந்திட,

சரியாக ஆறேகால் மணிக்கு வித்வான்கள் ஏழு பேர்,
சரிகை உடைகள், ஜவ்வாதுப் பொட்டுகளுடன் ஆஜர்!

தொடரும் ............... :music: ... :drum:

 
வித்வான்கள் ஏழு பேர்
வீணை, வயலின், இரு மிருதங்கங்கள், கடம், கஞ்சீரா, மோர்சிங் - வித்வான்கள் எழுவர்.
ஒரு மிருதங்க வித்வான் கொன்னக்கோல் கலைஞர். :clap2:
 
I got this video while searching for கொன்னக்கோல். :ranger:

வியந்தேன் இந்தப் பெண்ணின் கொன்னக்கோல் கேட்டு!

நீங்களும் கேளுங்கள்: https://youtu.be/EV7KXGZdTog
 
ஒரு கோலாகலக் கல்யாணம் - பகுதி 18

இசைப் பிரியர், பிரியைகள் கரவொலி எழுப்பி, தம்
இசை ஆர்வத்தை வெளிப்படுத்த, வித்துவான்கள்

தம் மகிழ்ச்சியைக் கரம் கூப்பிப் பிரகடனம் செய்து,
தம் கரங்கள் செய்யும் இசை ஜாலங்களைக் காட்ட

வாதாபி கணபதியைப் புகழும் பாடலைத் துவங்க,
'வாதாபிதானே?' என்று சிலர் ஞானத்தைக் காட்ட,

அதிரடி ஸ்வரப் பிரஸ்தாரங்களாலே, அரங்கத்தை
அதிர வைத்தனர், அந்த வித்துவான்கள் எழுவரும்!

தொடர்ந்த நாலு கீர்த்தனைகள் விஸ்தாரமில்லை.
தொடர்ந்தன திரை இசைப் பாடல்கள்! இப்பொழுது

அரங்கத்தின் வாயிலில் கதைத்துக்கொண்டு நின்ற
அனைவரும் மிகுந்த ஆவலுடன் உள்ளே வந்தனர்!

ஜனரஞ்சகமான பல பழைய பாடல்களை இசைத்து,
மனங்களைக் கொள்ளை கொண்டனர், கலைஞர்கள்!

ரசிகர் வேண்டுகோளாகச் சில சீட்டுக்கள் சென்றிட,
ரசிக்க வைத்தனர், அவற்றில் தெரிந்தவை வாசித்து!

'என்ன இருந்தாலும் ஒல்ட் இஸ் கோல்ட்தான்', எனச்
சின்னச் சிரிப்புடன் சிலர் கூறுவது காதில் விழுந்தது!

செவிக்கு உணவு முடிந்து, மீண்டும் டைனிங் ஹால்!
ருசிக்கப் பல பதார்த்தங்கள்; இரு வித ஐஸ் க்ரீம்கள்!

தொடரும்...................

 
hi

in many marriages... there are SOME GROUP of ppl always around kitchen/very close with samayal contractor...becoz always

they get nice coffee and special food....they dont bother about religious ceremonies....some are very close with nadaswaram ppl...

they interested in music....some are good contact with vadhyars....
 
ஒரு கோலாகலக் கல்யாணம் - பகுதி 19

இத்தனை உணவுகளை எப்படித்தான் தயாரித்து
அத்தனையும் ருசித்து மகிழப் பரிமாறுகிறாரோ!

கேட்டரர் பெயருக்கு முன்னர் 'நளபாகம்' என்று
போட்டிருந்தனர் பத்திரிக்கையிலே; நிஜம்தான்!

ஏற்பாடுகள் அத்தனையும் சரியாகச் செய்வதை
மேற்பார்வை பார்த்திடத் திறமைசாலி ஒருவர்!

எண்பதை நெருங்குகிற தோற்றம்; இருப்பினும்
ஐம்பது எனச் சொல்லும்படிச் சுறுசுறுப்பானவர்!

தன் பார்வையினாலே வேலைகள் வாங்குவார்!
தன் பணியாளர் செய்யாத சிறு வேலைகளைத்

தாமே முன் வந்து செய்வார்! பணியாளருக்குத்
தாமே எஜமானன் என்ற அகம்பாவமே இல்லை!

ஒரு முறை பேப்பர் நாப்கின்களை, தட்டில் இட்டு,
ஒரு மேஜை மீது அவர் வைப்பதைக் கண்டேன்!

கற்றுக்கொள்ளப் பல நல்ல விஷயங்களை அவர்
பெற்று இருப்பதை அறிந்து, மிக அதிசயித்தேன்!

இசைக் கலைஞர்களைச் சந்தித்து, கேட்டு ரசித்த
இசை நிகழ்ச்சியைப் பாராட்டியதும், மகிழ்ந்தனர்!

பாராட்டுக்கு மகிழாதவர் யார்? என் குருவையும்
பாராட்டினர், அவர் திரு. S. ராமநாதன் என்றதும்.

தொடரும் ............. :)

 
ஒரு கோலாகலக் கல்யாணம் - பகுதி 20

பாலிகை கரைப்பது மறு நாள் காலை; அதன் பின்
பத்தியச் சாப்பாடு. கட்டுச் சாதக் கூடை தந்த பின்

வழியனுப்புவர் சம்பந்திகளை. ஆனால், திரும்பும்
வழியில், பேருந்திலே ஆறு பேர்களே இருப்போம்!

திருமண ஜோடியுடன் அவர் தம் பெற்றோர்களும்,
திரும்புவர் சென்னைக்கு, ஆலய தரிசனம் செய்து!

நல்லிரவு அனைவருக்கும் உரைத்து, மீண்டும் எம்
நல்லுறக்கம் பெற அறைகளுக்குத் திரும்பினோம்.

புது மணத் தம்பதியரோ, இல்வாழ்வின் ஓர் அங்கம்
புதிரா? புதினமா? என்று ஆராயச் சென்றுவிட்டனர்!

காலை சீக்கிரமாகத் தயாராகிச் சென்று, பெண்கள்
பாலிகை கரைத்து, அதனைச் சுற்றிக் கும்மியடித்து,

சம்பந்திகளும் பரஸ்பரம் மரியாதைகளைப் பெற்று,
சந்திப்போம் மீண்டும் எனச் சொல்லி விடை பெற்று,

சிங்காரச் சென்னைக்குத் திரும்ப நேரம் நெருங்கிட,
சிரித்த முகத்துடன் உறவினர் எமை வழியனுப்பிட,

கோலாகல நிகழ்வுகளை எம் மனதிலே பதித்தோம்!
'போகன்' திரைப்படத்தைப் பேருந்திலே ரசித்தோம்!

'வாழ்க வளமுடன், புதுத் தம்பதியர்!' என்று நாங்கள்
வாழ்த்தி, அவரவரின் இனிய இல்லம் அடைந்தோம்!

முற்றும். :cheer2:
 
தலைக் கவசம்!

இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் எல்லோரும்,
ஒரு போதும் தலைக் கவசம் மறக்கலாகாது!

தரமான கவசத்தை அணியுங்கள் என்றாலோ
தரமான சாலைகள் அமைப்பீரா எனக் கேள்வி!

குண்டுங் குழியுமாகச் சாலைகள் இருப்பதால்,
மண்டை உடையும் அபாயமும் இருக்கிறது!!

நேர்த்தியான சாலைகள்; விதி மீறாதிருத்தல்;
நேருமோ விபத்துக்கள்? கவச
மும் தேவையோ?

:decision:

 

வரவேற்போம் ஹேவிளம்பியை!


ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும்;
ஆண்டவன் மேல் கொள்ளும் பக்தியும் கூடும்!

எதிர்காலம் நன்கு இருக்க எதிர்பார்க்கும் மனம்;
எதிர்பார்ப்பு இருப்பதாலே, பக்தி கூடும் தினம்!

நல்ல நினைவுகளை மனதில் நன்றாக நிறுத்தி,
அல்லவை ஏதும் மனத்துள் செல்லாது நிறுத்தி,

ஆனந்தம் வருமெனக் கொள்வோம் நம்பிக்கை!
ஆனந்தமாய் வரவேற்போம் ஹேவிளம்பியை!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! :cheer2:
 
'காபி பேஸ்ட்' அன்பர்கள்!

WhatsApp நண்பர்கள் ஒரே பதிப்பை,
ஆவலுடன் பகிருவார், பல முறை!

காபி பேஸ்ட் செய்திடும் அன்பர்கள்,
காபி பேஸ்ட் செய்வார் சில முறை!

எனினும் பரவாயில்லை! கணினியின்
'எலி' செய்யுமே 'கீழே உருட்டும்' பணி!

நாமே எழுதினால், பகிர்வது நினைவில்

நன்கு பதிந்திடும், பசுமரத்தாணி போல்!

குறிப்பு: கீழே உருட்டுதல் = Scroll down !
 
கடைசி ஆசை!

அந்த மூதாட்டி எண்பது வயதைக் கடந்து,
சொந்த பந்தங்களை விட்டுச் செல்லுகிற

மரணப் படுக்கையில்! மகனோ, தாயின்
மரணம், தான் நினைத்த நேரத்தில் நிகழ,

ஐ ஸி யு வில் விட்டு, தன் குடும்பத்துடன்,
ஐஸ் பிரதேசமான காஷ்மீர் டூர் சென்றான்!

அவன் இல்லாத சமயம் மரணம் நிகழ்ந்தால்,
அவன் பெறுவானே மிகவும் அவப் பெயரை!

பிள்ளைப் பாசத்தால், அவள் தன் உயிரைப்
பிடித்து வைத்தாள்,
மருத்துவர்கள் வியக்க!

பயணம் முடித்த மகன், அன்னையைத் தன்
இனிய இல்லத்தில் வைத்து, கவனித்தான்.

தன் குடும்பத்தாரின் பெயர்களை, மூதாட்டி,
தன் ஜபம் போல முனகத் துவங்கிவிட்டாள்!

ஆவி பிரியும் நாளில், 'ஈனோ' வேண்டுமென
ஆசைப்பட்டுக் கேட்டாதாக மகன் நினைத்து,

அவள் கைகளில் 'அந்த'ப் பாக்கெட்டைத் தந்து,
அவள் ஆசையை நிறைவேற்றியதாகக் கூறி,

அவளின் கடைசிப் பயணத்திலும், கைகளிலே
அவளுக்குத் தந்தான், ஓர் ஈனோ பாக்கெட்டை!

என்றுமே கேட்காத ஒரு வஸ்துவை, அன்னை
இன்று மட்டும் கேட்டாளே, என்றும் வியந்தான்!

மூதாட்டி ஈனோ கேட்கவில்லை, நானறிவேன்;
மூத்த பேரன் வினோத்தை அழைத்திருப்பாள்!

அவளுடைய ஆத்மா சாந்தி பெறட்டும்! :pray:

 
ஐயகோ, தமிழ்த் தாயே!

அமிழ்து, அமிழ்து என வேகமாகச் சொன்னால்,
'தமிழ்' என்ற சொல்லே செவிகளில் கேட்கும்!

பன்னிரண்டு உயிர் எழுத்துக்களுடன், அழகிய
பதினெட்டு மெய்யெழுத்துக்கள் சேர்வதால்,

பிறக்கும் இரு நூற்றிப் பதினாறு எழுத்துக்கள்
உயிர் மெய்யெழுத்துக்கள் எனப்படும். இன்னும்

ஒரு ஆயுத எழுத்தும் புள்ளி வடிவிலே உள்ளது.
ஒரு தவறுமின்றித் தமிழ் எழுத, பயிற்சி தேவை!

இன்றோ, தமிழ் மொழி கொலையாகிறது! பாடல்
ஒன்றை நான் தேடச் சொடுக்கிய பொழுது, வந்த

ஒரு பக்கத்தை நான் பார்த்து, மிரண்டு போனேன்!
ஒருவரால் எப்படி இப்படித் தட்டெழுத முடியும்,

நகர, னகர, ணகர வேறுபாடுகளையும் அறியாமல்,
லகர, ளகர, ழகர வேறுபாடுகளையும் அறியாமல்?

தமிழ் மொழி, சிதைந்து சின்னாபின்னமாகியுள்ளது!
தமிழ்த் தாயே! ஐயகோ! உனை நீயே காத்துக்கொள்!

:pray:


இதோ நான் பார்த்து மிரண்ட பக்கம்:
Maname Kanamum (மனமே கனமும்)
 
மிரட்டும் தமிழ்!

Source: Maname Kanamum (மனமே கனமும்)

பல்லவி
மனமெ கனமும் மரவாதெய்
ஜகதீஸன் மலர் பதமெய்


அனுபல்லவி

மொஹம் மூழ்கி பாழாகாதெய்
மய வாழ்வு ஸதம…


கரநம் 1

னாதன் னாமம் னீ பஜி இன்ட்ரெய்
னாலை என்பார் யாரை கன்டார்
ஆதலால் பவ ரொஹம் ஒழின்டிட வெய்…


கரநம் 2

னடயும் தலர டேஹம் ஒடுன்க
னாவது குழர கன்கல் மன்க
என்ன ஸெஇவார் துனை யார் வருவார் உனக்கு..
:boom: ............... :faint:
 
''வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ? – என்றும்
ஆரமுது உண்ண ஆசை கொண்டார் கள்ளில்
அறிவைச் செலுத்துவாரோ?'' - என

தேசியக் கவியாம் பாரதி பாடிட
தேசப் பற்று வளர்ந்ததே! - ஆனால்
வெள்ளையர் தந்த சுதந்திரம் இன்று
கொள்ளையர் கைகளிலே!

வாழ்க சுதந்திரம்!!!! :hail:
 
வெ, மா, சூ, சொ!!!!

என் வட்டம்தான் உயர்வு என்று பேசுவார்;
உன் தலைவன் துரோகி என்றும் ஏசுவார்!

நாற்காலியைப் பிடிக்க தினம் முயலுவார்;
அற்பமாகச் சண்டை தினமும் போடுவார்!

அண்ணன் தம்பிச் சண்டை என்று கூறுவார்;
அண்ணே! என்று சென்று காலில் விழுவார்!

பேரங்களை முடித்த பின்னர் இணைவார்;
பேனர் வைத்துக் கொண்டாடி மகிழ்வார்!

அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பார்;
அரசியலைச் சாக்கடையாக்க விழைவார்!

வெ, மா, சூ, சொ யாருக்கும் இல்லை; இது
வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டால், தொல்லை!!

:doh:
 

Latest ads

Back
Top