• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

ஒரு கோலாகலக் கல்யாணம் - பகுதி 5

நல்ல அலங்காரத்துடன் கஜராஜி; ஒரு குதிரை;
செல்லக் கன்றுடன் அமைதியாகத் தாய்ப் பசு!

இன்று இவற்றுக்குப் பூஜை செய்வதைத்தான்,
நேற்று இரவு சிறப்புப் பூஜைகளெனக் கூறினர்!

கஜராஜி துதிக்கையை மெதுவாக ஆட்டி நிற்க,
கன்று தாயை ஒட்டிக்கொண்டு பயந்தபடி நிற்க,

குதிரை மட்டும் ஏதோ ஜதிக்கு ஆடுவது போல
குதித்து ஆனந்தித்தது; காரணம் புரியவில்லை!

ஆவலுடன் பூஜைகளைப் பார்க்க எல்லோரும்
ஆஜர்! பெண்ணின் பெற்றோர் கஜ பூஜையைத்

துவங்கினர். நீண்ட மாலை, இரட்டை வேஷ்டி,
துண்டு அணிவித்து, அதன் பரந்த நெற்றியில்

சந்தனம் குங்குமம் இட்டு, ராஜ வாத்தியத்தின்
சங்கீதம் மெல்லிய பின்னணி இசை ஆகிவிட,

வினாயகப் பெருமானாக ஆவஹனம் செய்த
கஜராஜிக்குப் புஷ்ப அர்ச்சனை நடந்தேறியது!

அசுவ பூஜை, கோ பூஜை இவற்றையும் செய்து
அனைவரும் வலம் வந்து வணங்க, அன்புடன்

அழைப்பு வந்தது எமக்குச் சிற்றுண்டி உண்ண.
அழைப்பு இல்லை மாப்பிள்ளை, பெண்ணுக்கு!

தொடரும் ..............
 
ஒரு கோலாகலக் கல்யாணம் - பகுதி 6

மணமக்கள் திரவ ஆகாரத்தை மட்டும் உண்ண,
மணம், குணம் நிறைந்த சிற்றுண்டிகளுடன், இரு

வகை இனிப்புகளையும், மற்றவர் அனைவருமே
ஒரு கை பார்த்தனர்! எல்லாமே நல்ல சுவைகள்!

திருமண வைபவங்கள் முதல் மாடியில் நடக்க,
அறு சுவை விருந்து, தரை மட்ட ஹாலில்தான்.

காபிக் கடை முதல் மாடியின் ஓரத்திலே -அதில்
காபி கிடைக்கும், நாம் வேண்டுகிற விதத்திலே!

மிகச் சூடாக, மிதமான சூடாக, அதிக டிக்காஷன்,
மிகக் குறைவான சர்க்கரை எனப் பல விதங்கள்!

ஜூஸ் கடையும் அருகில் இருந்தது; ஆனாலும்
ஜூஸ் மெஷினில் ஷுகர்லஸ் செய்ய முடியாது!

குருதிச் சர்க்கரை உள்ள இனியவர்கள், டயட்டில்
உறுதியாக இருந்தால், அருகில் செல்வதில்லை!

தேனாகப் பாய்ந்தது நாகஸ்வர இசை; மிக மிக
சுனாதமாக அத்தனை ராகங்களும் மிளிர்ந்தன!

விரதம் துவங்கியதும், நான்கு கோவில்களைத்
துரிதமாகச் சுற்றி வரலாமென்று நான் சொல்ல,

விடுதி மானேஜர் அழைத்த தானி ஓட்டுனரோ
சடுதியில் ஆறு கோவில்கள் காணலாமென்றார்!

தொடரும் ................. :pray:

 
Dear J J ji,

Sorry to say this. When I am writing about a grand gala wedding in my extended family,

the story you have posted appears as 'abaswaram'!!! :sad:
 
ஒரு கோலாகலக் கல்யாணம் - பகுதி 7

ஆறு கோவில்களில் தரிசனம்; தர வேண்டும்
ஆறு நூறு ரூபாய் அந்தத் தானி ஓட்டுனருக்கு.

ஒப்புக்கொண்டு புறப்பட்டோம் பேராவலுடன்;
ஒப்பில்லாத தரிசனங்களின் எதிர்பார்ப்புடன்!

காசி விஸ்வநாதர் ஆலயம் முதலில்; அருகில்
மாசி மகம் கொண்டாட அமைத்துள்ள குளம்.

பாவங்கள் தீர்க்கும் ஒன்பது நதிகள், தங்களின்
பாவம் அனைத்தும் தீர, இந்தக் குளத்தில் நீராடி,

சிவனைச் சேவிக்க, அப் பாபங்கள் நீங்கியதாக,
சிறந்த செய்தி தருவது நவ கன்னியர் கோவில்.

அன்று மாலையில் மாசி மக விழா துவங்கும்
என்று அறிவிப்பு வழி நெடுகிலும் திகழ்ந்தது.

கோவிலில் கூட்டமே இல்லாது வெறிச்சோட,
கோவில் தரிசனம் நிமிடங்களிலே முடிந்தது!

நாகேஸ்வரர் கோவில் தரிசனம் அடுத்ததாக.
நடராஜரின் சன்னதி ரத வடிவு; மிக அருமை!

பெரியநாயகி அம்மன் அழகுப் பெட்டகம்தான்!
அரிய அந்தக் கோவில் தரிசனமும் முடிந்தது.

ராமசுவாமி கோவிலில், ஒரே பீடத்திலமர்ந்து,
ராம - சீதையர் அருள, இன்னும் அதிசயங்கள்!

தொடரும் .................. :pray:

 
ஒரு கோலாகலக் கல்யாணம் - பகுதி 8

இன்னும் சிறப்பு அம்சங்கள் அந்தக் கோவிலில்
இருக்கின்றன! இளவல்கள் சேவைகள் செய்திட,

ராம பக்த ஹனுமானின் வலக்கையில் வீணை;
ராமாயண காவியத்தின் சுவடிகள் இடக்கையில்!

பிரஹாரத்தில் ராமாயணக் காவியம் முழுதும்,
பிரமாதமாக ஓவிய வடிவில், மூன்று அடுக்கில்!

மூன்று முறை வலம் வந்தால், ஒவ்வொன்றாக
மூன்று அடுக்குகளையும் படித்து முடிக்கலாம்!

ஒரே ஒரு படம் நெருடலாக இருக்கிறது! தசரதர்
இறந்த பின், தைலத்தில் இடுகின்ற காட்சிதான்!

நெருப்பின் மீது சூடாகும் பெரிய பானை ஒன்று;
இருவர் தசரதரை அதனுள்ளே இறக்குகின்றார்!

கும்பகோணம் என்கிற பெயருக்குக் காரணமான
கும்பேஸ்வரரின் கோவில்தான் அடுத்த விஜயம்.

தந்தை தாயைச் சுற்றி, ஒரு மாம்பழத்தை வென்ற
விந்தையான கதை நினைவில் வரும் விதமாக,

ஒரே பிரதக்ஷிணத்தில், அந்த இறைவன், இறைவி
இருவரின் சன்னதிகளைச் சுற்றி வந்துவிடலாம்!

மற்ற கோவில்களில், தனித் தனியாகத்தான், நாம்
சுற்றி வர வேண்டும், இருவரின் சன்னதிகளையும்!

தொடரும் .................. :pray2:

 
ஒரு கோலாகலக் கல்யாணம் - பகுதி 9

கும்பேஸ்வர லிங்கம் அதிசய வடிவில் உள்ளது!
குமிழ் போல மேற்புறம் இல்லாது, கூர்மையாக!

இந்த ஆலய வரலாறு சித்திரங்களாக விளங்கிட,
விந்தையான ஒரு தமிழ்ப் பாடல், தேர் வடிவிலே!

முழுமையாக ரசித்துப் பார்க்க, நமக்குத் தேவை
முழுமையாக ஒரு நாள்; எமக்கு அது இல்லையே!

சாரங்கபாணி திருக் கோவில் விஜயம், அடுத்தாக.
தேரின் வடிவில் அழகிய சன்னதி அமைந்துள்ளது.

சாரங்கபாணி சுவாமி என்று அழைப்பது தவறாம்!
சார்ங்கபாணி என்பது சரியாம்! இது புதுத் தகவல்!

ஹேம ரிஷியின் வேண்டுகோளுக்கிணங்கி, அவர்
தாமரை மலரிலிருந்து எடுத்து வளர்த்த மகளான

கோமளவல்லியை மணக்க, வில்லை ஏந்தியவாறு,
கோலாகலமாகத் தேரிலமர்ந்து, திருமால் வந்தார்!

ஆராவமுதன் எனப் பெயர்; அனந்த சயனம் செய்து,
மஹாலக்ஷ்மி, கோமளவல்லி சகிதம் அருள்கிறார்!

சந்தான கிருஷ்ணன் உத்சவ மூர்த்திக்கு அருகிலே;
சந்தான பாக்யம் அருளும் அவர் வடிவு மிக அழகு!

சக்ரபாணி கோவிலும் விரைவில் தரிசித்து, காலச்
சக்கரம் நமக்கு நிற்காததால், மண்டபம் வந்தோம்!

தொடரும் ........... (திருமண நிகழ்வுகள்)

 
ஒரு கோலாகலக் கல்யாணம் - பகுதி 10

விரதம் முடிவதற்குள் திரும்பி வந்துவிட்டோம்.
விருந்துதான் மீண்டும், பல விதப் பதார்த்தங்கள்!

ஒவ்வொரு முறையும் மூன்று இனிப்புக்கள் வர,
ஒவ்வாது இப்படி உண்பது என்பதால், மறுத்தோம்!

Waste not; Want not என இள வயதில் கற்றதால்,
வீணாக உணவைக் கொட்டினால் வருத்தம்தான்!

மாலை நிகழ்ச்சிகள் ஐந்து மணிக்கு என்று அறிந்து,
மதிய நேர ஓய்வுக்கு, அறைக்குத் திரும்பினோம்.

ஐந்து மணிக்கு மண்டபம் நிறைந்து வழிந்தது. பல
பந்துக்களுடன், அலுவலக நண்பர்களும் சூழ்ந்தனர்!

சூடான காபி போதுமென நாங்கள் ஒதுங்க, பலரும்
சூடான பல வகைச் சிற்றுண்டிகளால் மகிழ்ந்தனர்!

எவர்சில்வர் டப்பாவில் முறுக்கு + லட்டு வைத்து,
எவரையும் விடாது அனைவருக்கும் கொடுத்தனர்.

காசைப் பற்றி எவரும் கவலைப்படுவதே இல்லை,

'காசேதான் கடவுளடா!' என்னும் இந்தக் காலத்தில்!

ஆண்களுக்கு அழகிய நீல நிறத்தில் ரெக்ஸின் பை;
பெண்களுக்கு அழகிய பிங்க் வண்ண ரெக்ஸின் பை.

ஆறு மணிக்கு பட்டாசு வெடிக்க, வெளியே வந்தால்,
நாலு பேர் அழகிய பல்லக்குடன் வாசலில் நின்றனர்!

தொடரும் ................ :dance:

 
ஒரு கோலாகலக் கல்யாணம் - பகுதி 11

ராஜ குமாரி போல, கற்கள் பதித்த பட்டு உடையில்
தேஜஸுடன் மணமகள் பல்லக்கிலே அமர - அந்த

நான்கு பலசாலிகள் தம் வலிய தோள்களில் ஏந்த,
நல்ல அலங்காரத்துடன் கஜராஜி முன்னே செல்ல,

இரு வெண் குதிரைகள் சிங்கார உருவில் தொடர,
இரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஆலயம் செல்ல
த்

திரண்டனர் அனைவரும், மிகுந்த எதிர்பார்ப்புடன்!
திருவிழா போல அங்கிருந்த சாலை விளங்கியது!

மாப்பிள்ளை உபசரிப்பு ஆலயத்தில் முடிந்த பின்பு,
மாப்பிள்ளையும் மணமகளும் ரதத்தில் அமர்ந்திட,

வண்ண விளக்குகள் ரதத்தில் அழகாக ஒளிர்ந்திட,
வாண வேடிக்கைகள் அமர்க்களமாகத் துவங்கிட,

ஆகாயம் வண்ணத் தீப் பொறிகளாலே நிறைந்திட,
பாவாடை தாவணியிலே குமரிப் பெண்கள் சிலர்

பாரம்பரியக் கோலாட்டம் ஆடி வந்திட, ஆங்கில
பாண்டு வாத்தியங்கள் முழங்கிட, குதிரைகளின்

முன்னங்கால்களில் சலங்கை ஒலித்திட, நாங்கள்
இன்னும் வேண்டும் என்று விரும்புமாறு, பாண்டு

இசையின் தாளத்துக்கேற்ப அவை குதித்து ஆடிட,
இளமையான மணமக்களும் ரதத்திலே வந்தனர்!

தொடரும் ................
cheer2.gif
 
காெசு இல்லாத கும்பகாேணம்?

பருப்பில்லா கல்யாணம்!

எண்ண அலைகள் யானைக்கால்காெசு!

கும்பகோணத்து கொசு கடித்தால் தான் ஸார்வாளுக்குத் தூக்கமே வரும். அப்படி ஒரு பழக்கம்!
ஆனால் இந்த ரயில் கொசுக்கள் கும்பகோணத்து கொசுக்கள் போல இல்லாமல் கொஞ்சம் வித்யாசமாய் இருந்தன. ஆளை அலாக்காக அப்படியே தூக்கி கொண்டுபோய் ப்ளாட்ஃபாரத்தில் போட்டு விடும் போல இருந்தது!
ஆனால் அப்படி எதுவும் அசம்பாவிதம் நடக்க விடாமல் மூட்டைபூச்சிகள் அவரை படுக்கையுடன் இழுத்துப் பிடித்துக் கொண்டு அவரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தன அந்த இரவு முழுவதும்!
அப்பாடா..ஒரு வழியாய்...
கும்பகோணமும் வந்தது!


http://aaranyanivasrramamurthy.blogspot.in/2010/08/blog-post_21.html?m=1!
 
Nastalgic hotels like மங்களாம்பிகா., காளியாகுடி, ஆனந்தா லாட்ஜ் in Tajore dist are not there anymore Kumbakonam Vekatramana is still popular - You get டிகரி காபி in பித்தளை டபரா செட் if you insist! You can have a taste of the bite of legendary கும்பகாேணம் காெசு here !
 
Nastalgic hotels like மங்களாம்பிகா காளியாகுடி, ஆனந்தா லாட்ஜ் in Tajore dist are not there anymore Kumbakonam Vekatramana is still popular - You get டிகரி காபி in பித்தளை டபரா செட் if you insist! You can have a taste of the bite of legendary கும்பகாேணம் காெசு here !
hi

i had டிகரி காபி in பித்தளை டபரா செட் at மங்களாம்பிகா in my college days...
 
There is Rayas hotel near Mahamaham tank neighbouring Post office It has nothing to do with Rayars mess of kutcheri road This is NV hotel As a vegetarian TB my experience was nauseating - I realized That Raya is not Rayar after entering the dining hall! It is a nice place to stay well maintained rooms
 
Try staying at hotel right opposite uppilappan koil in kumbakonam.Nice AC rooms with lift

It is good with excellent brahmin meals nearby served om plantain leaves.

Open kitchen

Clean and hygenic.

Near Rahu sthalam.

There are marriage halls nearby . Ideal for marriages.

One of my relatives got married there.

I think the marriage hall belong to ahobila madam

You could check online
 
ஒரு கோலாகலக் கல்யாணம் - பகுதி 12

குதிரைகள் ஆட்டத்தைத் தொடர்ந்தது, இளசுகள்
குதித்து ஆடும் ஆட்டம், டப்பாங்கூத்தைப் போல!

நடுத்தர வயதினர் சேர்ந்து கொண்டு, இளசுகளின்

நடுவில் புகுந்து ஆட்டம் போட்டு ஆனந்தித்தனர்!

'க கா க கா கா கா கா' என்று ஸ்வரம் இசைத்ததும்,
காது பிளக்கும் விசில்கள் பறந்தன! பின் என்ன!

'டண்டணக்கா' விரும்புகின்ற குட்டிக் குழந்தையும்
'டங்கமாரி ஊதாரி'- யின் ஸ்வரங்களை அறியுமே!

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில், அப்பொழுது
ஆட்டம் போட மணமக்களை அழைக்க, அவர்கள்

ஆனந்தமாக ஒப்புக்கொள்ள, உறவினர்கள் பலரும்
உன்மத்தர் போல மாறிக் கூச்சலிட்டனர்! இதுவே

எல்லாக் கலியாணங்களிலும் முக்கிய நிகழ்வாக
எப்படியோ நுழைந்துவிட்டது மிகவும் அதிசயமே!

ஊர்வலம் ஆரம்பிக்கும் முன், நல்ல வேளையாக,
உறவினர் கூடி, நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது!

மணமக்கள் இப்பொழுது மேடையிலே சோபாவில்;

மண மேடையை நோக்கிப் பறந்தனர் உறவினர்கள்!

புகைப்படக் கலைஞர் பரபரப்பாகி, குரூப் குரூப்பாக
புகைப்படங்கள், விடியோக்கள் எடுத்துத் தள்ளினர்!

தொடரும் .................... :photo:
 
ஒரு கோலாகலக் கல்யாணம் - பகுதி 13

பாணிக்ரஹணம் ஆன பிறகு, கொஞ்ச நேரத்திற்கு
மணமக்களின் கரம் குலுக்க அனுமதி கிடையாது!

இதை அறிந்த பலர், அப்பொழுதே தமது பரிசுகளை,
'இதைப் பெற்றுக் கொள்' என்று அளித்துவிட்டனர்!

இது ரெக்கார்ட் ஆகிவிடுமே ஒரு புகைப்படத்தில்;
இது பலர் கையாளுகின்ற புது யுக்தியாகிவிட்டது!

இளசுகள் க்ரூப் போட்டுக்கொண்டு, பல விதமாகப்
பளபளக்கும் வண்ண உடைகளில் போஸ் தந்தனர்!

மீண்டும் பல வகை உணவு வகைகள் பரிமாறப்பட,
மீண்டும் நான் வருந்தினேன், வீணாவதைக் கண்டு!

இரு ஐஸ் க்ரீம்கள் + ஜாமூன்கள் உணவுக்குப் பின்;
ஒருவரும் சளைக்கவில்லை, ருசித்து மகிழ்ந்திட!

நான்கு பேர் பல வகைப் பழங்களைத் துண்டாக்கி,
நன்கு பரிமாற, மறுபுறம் Dry Fruits கிண்ணங்கள்!

எத்தனை உணவுப் பிரியராய் ஒருவர் இருந்தாலும்,
அத்தனை விதங்களையும் ருசிக்கத்தான் இயலும்!

திருமண முகூர்த்த நேரம் காலை பத்து மணிதான்;
ஒருவரும் அதிகாலையே எழ வேண்டியதில்லை!

நல்லிரவு கூறி அனைவரிடம் விடை பெற்ற பின்,
நல்லுறக்கம் வேண்டி, அறைக்குத் திரும்பினோம்!

தொடரும் .....................

 
ஒரு கோலாகலக் கல்யாணம் - பகுதி 14

காலை பத்து மணிக்கு மேல் முஹூர்த்தம். அதி-
காலை எழ வேண்டிய அவசியம் இல்லை! எனவே

நாலு மணி டிகிரி காபியை எதிர்பார்க்காது, காலை
ஆறு மணி அலாரம் கேட்ட பின் துயிலெழுந்தோம்!

அப்போதும் இருந்தது காபி உபசாரம்; ருசித்தோம்!
எப்போதும் போல் சரியான நேரத்திற்கு சிற்றுண்டி!

காசி யாத்திரை ஆரம்பித்தது; பெண்ணின் தந்தை
ஆசையுடன் சென்று மாப்பிள்ளையைத் தடுத்தார்!

மணமகனைத் தடுக்காவிட்டாலும், திரும்பி வந்து
மணமகளை மணந்திடுவான் எனக் கலாய்த்தோம்!

மாலை மாற்றல் பாடலை நாகஸ்வரம் இசைத்திட,
மாலை மாற்றியதும், மணமக்கள் ஊஞ்சலின் மீது!

ஸ்பெஷல் ஊஞ்சல் பாட்டாக எழுதியதை நான் பாட,
ஸ்பெஷல் பாராட்டுகளைப் பலர் அள்ளி வழங்கினர்!

மேலும் பலர் தமது பாட்டுத் திறமையைக் காட்டிட,
பாலாலே காலலம்பிப் பட்டாலே துடைத்த பின்னர்,

பாலும், பழமும் கொடுத்து, ப்ளாஸ்டிக் பைகளிலே
பாக் செய்து வைத்திருந்த கலர் உருண்டைகளால்

திருஷ்டி கழித்து, மணமக்களை ஐவர் வலம் வந்து,
திருமண வைபவங்களை மிக அழகாக நடத்தினர்.

தொடரும் ................ :cheer2:

 
ஒரு கோலாகலக் கல்யாணம் - பகுதி 15

மணமக்களின் பின்னால் கஜராஜி நின்றுகொண்டு,
தனது நீண்ட துதிக்கையால் ஆசீர்வாதம் செய்தது.

மணமகள் கரத்தை முறைப்படிப் பற்றிக்கொண்டு,
மணமகன் சென்றிட, அனைவரும் தொடர்ந்தோம்!

முந்தைய தினமே அலுவலக நண்பர்கள் வந்ததால்,
அன்றைய தினம் உறவினர் கூட்டம் மட்டும்தான்!

நெருங்கிய உறவினர்கள் அனைவரும் மேடையில்
நெருக்கியடித்து, நிகழ்வுகள் கண்டு ஆனந்தித்தனர்!

C C T V வைக்காத காரணத்தால் மேடை நிகழ்வுகள்
Easy யாகத் தெரியவில்லை மற்ற அனைவருக்கும்!

சுகமான நாகஸ்வர இசையிலே கர்நாடக சங்கீதம்.
இதமாகக் காதிலே விழுந்து மகிழ்வித்த ராகங்கள்!

பூர்வார்த்தச் சடங்குகள் முடிந்து, மணமகன் தந்த
கூறைப் புடவையை வணங்கிப் பெற்றாள் நங்கை!

மடிசார் புடவை அணிந்து வர அனேகமாக இருபது
மணித் துளிகளேனும் ஆகும் என்பதனை உணர்ந்த

சாஸ்திரிகள், திருமணத்தின் முக்கியத்துவம் பற்றி,
சாஸ்திரங்கள் சொல்லுவதை விளக்க முயன்றார்!

ஆவலுடன் சிலர் மட்டும் கேட்க, மற்றவர் வம்புகள்
ஆவலுடன் கதைத்துத் தம் நேரத்தை வீணாக்கினர்!

தொடரும் ....................

 

Latest ads

Back
Top