• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கிரிஜாவின் கவிதை துளிகள்

  • Thread starter Thread starter ramachandran girija
  • Start date Start date
Status
Not open for further replies.
.......... அழுதுக் கொண்டே இந்த கவிதை அரங்கேறுகிறது !!!!
:Cry: ... :nono:

உள்ளதை நல்லதை உரைத்திட
உள்ளம் கலங்கக் கூடாது தோழி!

உன் அறிமுகம் கண்டதுமே - நான்
உனை அழைத்தேன் இங்கு எழுத.

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர்
நன்
று இங்கு எழுத விழைந்தது.

தொடரட்டும் கவிதைகள் - இங்கு
தொடரும் பெண்கள் மிகக் குறைவு!

----------------------------------------------------------------

P.S: Here is the welcome post by me dated 6 - 10 - 2013:


Nice to see your profile, Ms. Girija.
Can we expect you to create a new thread and post your poems, in the literature forum? :ranger:
 
யாருமில்லாத் தனியறையில்
-=============================

யாருமில்லாத தனியறையில் எனக்கும்
யோசிக்கவே சிந்தை இன்றி
யாதவனே !! மாதவனே !!! மதுசூதனனே !!!
யாசிக்கவே ஆசை !! அழுதழுது .....

பக்தி மார்கத்தில் செல்லவே விருப்பம்
பக்தி பண்ணி பார்க்கலாமே -கொஞ்சம்
பக்தி பண்ணினால் பொழுது போகும்
பக்தி பண்ணி நடிக்கலாம் என்று அல்ல ;

பக்தி ஒன்று தான் செய்ய இயலும்
பக்தி அன்றி யாகமோ, எதுவுமோ
பரமனிடம் நம்மை சேர்க்காது
பக்தியே சேர்க்கும் இக்கலியுகத்தில் !

புல்மபுதல் பரமன் காதுகளில் என்றால்
புலம்புவதற்கும் பொருள் இருக்கும்
புலம்புதல் மனிதன் காதுகளில் என்றால்
புலம்பியதற்கும் ஊர் சிரிக்கும் ;

கண்களில் நீர் வற்றிவிட்டதே வயது
கணிசமான ஆகி விட்டதோ என பயந்தேன்
கண்களில் நீர் இன்று தாரை தாரையாய்
கண்ணனே !! நீயும் காண்கின்றாயா??

பதிவுகளில் என்னை நிலைநாட்டிட வரவில்லை
பதிவுகளின் மூலம் பக்தியை சொல்லிட வந்தேன்
பதிவுகளின் மூலம் வாழ்வின் நிலையாமை மட்டுமே
பதிக்க வந்தேன்; மற்றவரை பாதிக்க வரவில்லை....



*** ஆக்கம் ரா. கிரிஜா (கிரிஜா சந்துரு)
 
:Cry: ... :nono:

உள்ளதை நல்லதை உரைத்திட
உள்ளம் கலங்கக் கூடாது தோழி!

உன் அறிமுகம் கண்டதுமே - நான்
உனை அழைத்தேன் இங்கு எழுத.

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர்
நன்
று இங்கு எழுத விழைந்தது.

தொடரட்டும் கவிதைகள் - இங்கு
தொடரும் பெண்கள் மிகக் குறைவு!

----------------------------------------------------------------

P.S: Here is the welcome post by me dated 6 - 10 - 2013:



thank you raji ji
 
Hello Girijaji,

......... அழுதுக் கொண்டே இந்த கவிதை அரங்கேறுகிறது !!!!

This line troubles me no end.

Please gather yourself and look forward. God will be with you.

I look forward to more of good kavithai from you.

God Bless you.
 
Last edited:
hi


சில நேரங்களில் ...


வழி துணை வாழ்க்கை துணை ஆவது உண்டு.

.
சில நேரங்களில் ....


வாழ்க்கை துணை வழி துணை ஆவது உண்டு...

எல்லாம் அவன் சித்தம் .....

அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது .....
 
hi

.......... அழுதுக் கொண்டே இந்த கவிதை அரங்கேறுகிறது !!!!


https://www.youtube.com/watch?v=4qoZ6BFcU7E


i like this song......this is situation song....very nice meaning and nice voice tooo...

தெய்வம் ஒன்றை நம்புங்கள்.......
 
Last edited:
hi

.......... அழுதுக் கொண்டே இந்த கவிதை அரங்கேறுகிறது !!!!


https://www.youtube.com/watch?v=4qoZ6BFcU7E


i like this song......this is situation song....very nice meaning and nice voice tooo...

தெய்வம் ஒன்றை நம்புங்கள்.......

thank you ji... for your comforting words... yes... i knew this song.... i admire...
 
Hello Girijaji,



This line troubles me no end.

Please gather yourself and look forward. God will be with you.

I look forward to more of good kavithai from you.

God Bless you.

thank you very much Vaagmi ji.... Thanks a lot for your comforting words...
 
வசந்தம் எந்தன் வாசலில்
=================

வசந்தம் எந்தன் வாசலில்
வந்து நிற்கும் வேளையில்
சுகந்தம் எங்கும் பரவுமே !!!
சுகங்கள் வாழ்வில் நிறையுமே !!!!

வாழ்த்த நன்கு தெரிந்த மனதுகள்
வழி காட்டத தோன்றும் உறவுகள்
சில்லென்று வீசும் தென்றலாய் ......
சொர்க்கத்தில் பூத்த பூக்களாய் ......

வருத்தங்கள் மாற்றத் தெரிந்தே
வழிவகை காட்டத தெரிந்தே
சொற்களும் சுகங்களாய் மனதில் ....
சில்லென்று சிகப்பு ரோஜாக்களாய்.....


வேதனைகளைக் குறைத்து நிற்கையிலே
வந்து நிற்குமே மகிழ்ச்சி மனதிலே
சொல்லப் போகும் நேரங்களும்
சிலவானாலும் எல்லாம் சந்தோஷங்களே .....

வந்து நிற்கும் நல்லொரு வேளையிலே
வெந்த உணர்ச்சிகளும் குளிர்ந்தனவோ ?
சிலையாய், மணமாய், குணமாய்
சிறகடிக்குமா சின்ன சிறகுகளும்??

**** ஆக்கம் ரா. கிரிஜா



 
கற்பனையில் மிதந்த படி
=======================

கற்பனையில் மிதந்திடும் போது கவிதைகள்
கற்றவையினை ஆசை போட கவிதைகள்
கற்பதே நினைவில் ஆட கவிதைகள்
கற்றுளியாய் சிலை வடிக்கவா கவிதைகள்??

கவிதைகளுக்கு வார்த்தைகள் சேர்ப்பது கவிதையா?
கவிகளுக்கு ஜாலரா அடிப்பது கவிதையா?
கவிதைகளுக்கு வர்ணங்கள் அடிப்பது கவிதையா ?
கவிகளுக்கு பின்பாட்டு பாடுவது கவிதையா ?


கள்ளூறும் மனதினில் கவிதைகள்
கல்லாகும் நேரத்திலும் கவிதைகள்
கடுஞ்சொற்கள் மறந்திடவே கவிதைகள்
கற்பாரும் பாராட்ட கவிதைகள்


"கல்லுளி மங்கை" ஆன என்னை மாற்ற கவிதைகள்
"கல்லும் கவி பாடுமா?" என்னையே கேட்கும் கவிதைகள்
"கல்வி ஒன்றே நிலையா ?" எனக்கு சொல்லும் கவிதைகள்
"கல்வி அல்லாது பூஜ்யமா?" என்னையே கேட்கும் கவிதைகள்

கல்வி கையில் இருக்க நலமே கூறும் கவிதைகள்
கல்வி அலலது பணமா? சிந்திக்கும் என் கவிதைகள்
கற்றது போதாது மேலும் கற்க தூண்டும் என் கவிதைகள்
கற்றார் அவையினையே பெரிதும் நாடிடும் என் கவிதைகள்



**** ஆக்கம் ரா. கிரிஜா (கிரிஜா சந்துரு)

 
துள்ளி துள்ளி :-
===========

துள்ளி துள்ளி நான் ஆட
துகள்கள் ஆகும் பிரச்னைகள்
துக்கங்களையும் கால்களுக்கு அடியில்
தூக்கிப் போட்டு ஆடிடலாம்

துர்போதனை செய்யாது வாழ்ந்திடவே
துவக்கங்கள் சரியாய் ஆகிட வேண்டுமே
தூர போகும் சின்னப் பறவைகள்
தூவானம் பார்த்தா மலைக்கின்றன?

தூக்கணாங்குருவியின் கூடு கூட அழகு
தூவல் பனிமழையும் அழகே அழகு
துரத்தாத நல்ல கனவுகளும் அழகு
தூண்களாக காக்கும் நட்பும் அழகே !!


துப்பி பேசி மனம் காயப் படுத்தாமல்
தும்பிகளாய் வானிலே பறந்திடவே
துள்ளி தானே புறப்படுவோம்
துயரங்கள் பறந்திடச் செய்திடுவோம்


துன்பப பாடல்கள் கேட்டு நிற்க
துன்பங்கள் தொடர்ந்தே வந்திடுமே !!
துன்பங்கள் மறந்திடத் தான் நாமுமே
இன்பங்கள் பூத்திடச் செய்வோமே !!!


***** ஆக்கம் ரா. கிரிஜா

 
காலங்களில் அவள் வசந்தம் :-
=====================

"காலங்களில் அவள் வசந்தம் "
கருத்து உள்ள பாடல் என்று
கண்ணதாசன் பாடல்களை சொல்லுவேன்
கண்ணாய், கவிதையாய் பாட்லகள் !!!

"காலமகள் கண் திறப்பாள்"
கள்ளங்களை உடைக்கும் பாடலே !!
கவலைப்படுவதால் பயன் இல்லை
கதையாக சொல்லலாமே இதனை !!!

"கண்ணா கருமை நிறக் கண்ணா"
கண்களில் நீரோடு பெண்ணொருத்தியின்
கனல் காவியம் கூறிய பாடல்
காலங்கள் கடந்தாலும் மனதில் !!!!

"கண்ணும் கண்ணும் பேசியதும்"
காதலின் கவிச்சுவையை சொல்லும்
கண்ணான பாடல் இதுவேயன்றோ?
கடலுள் மூழ்கி எடுத்த முத்து!!!

" கண்களின் வார்த்தைகள் புரியாதோ"
காத்திருப்பின் வேதனையை கவிநயமாய்
காதலி பாடிட மனதை வருடும்
கனிவான இசைஅமுதக் கடல் !!!

***** ஆக்கம் ரா. கிரிஜா (கிரிஜா சந்துரு)
 
Kalvi poem (29/12/2016 post) - beautiful thought expressed beautifully. Thank you.
Touched a chord.
Personally, for a long long time, felt was born to learn to teach.
How to say it in Tamil?
"karpikka karkka pirandaen?"
 
Kalvi poem (29/12/2016 post) - beautiful thought expressed beautifully. Thank you.
Touched a chord.
Personally, for a long long time, felt was born to learn to teach.
How to say it in Tamil?
"karpikka karkka pirandaen?"

thank you ji.... karpikka, karkave pirandhen...
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top