• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சின்னஞ்சிறு வயதினிலே Child hood Reminiscences

  • Thread starter Thread starter sankara_sharmah
  • Start date Start date
Status
Not open for further replies.

The small pox vaccine circular injection :fear:

_38317445_jab_300.jpg



 

மலரும் நினைவுகள் - 2.


அம்மை ஊசி போட வருடா வருடம் எங்கள் பள்ளிக்கு, சுகாதார அதிகாரி, ஒரு மருத்துவரை அழைத்து வருவார்!

ஆரம்பப்பள்ளி அருகில் ஒரு அரிசி 'மில்' உண்டு. அதில் நெல் கொட்டி வைக்க, சில தொட்டிகளைக் கட்டி இருப்பார்கள்.

நான் சென்று ஒரு தொட்டிக்குள் ஒளிந்துகொள்வேன்! ஏன் தெரியுமா? அவர்கள் கொண்டுவருவது ஒரு 'நிலைவெள்ளி
'

(ever silver) ஊசி; ஆறு அங்குல நீளக் குச்சியில் ஒரு முனையில் மருந்து வைக்க ஏதுவாக, ஒரு சின்ன வளைவு இருக்கும்;

மறு முனையின் நடுவில் ஒரு குட்டி ஊசி - அதைச் சுற்றி நான்கு குட்டி ஊசிகள் இருக்கும்! மருந்தை
டுக் கையில் இட்டு,

அந்த ஊசியால் தயிர் கடைவதுபோலத் திருப்புவார்கள். இதே போல இரண்டு வட்டங்கள்! பார்த்தாலே குலை நடுங்கும்!

அப்பா இதற்கென்று தானே ஒரு உபகரணம் தயாரிப்பார். 'பென்சிலின்' மருந்து வரும் குட்டி பாட்டில் மூடியில், இரண்டு

'இன்ஜெக்ஷன்' ஊசிகளைச் செருகிவிடுவார். மருந்தைக் கையில் தேய்த்துவிட்டு, அந்த ஊசிகளால் லேசாகக் கீறி விடுவார்.

வலியே தெரியாது! இத்துடன், ஊசி போட்டதற்கான சான்றிதழும் தந்துவிடுவார். இது, அதிகாரி பள்ளிக்கு வரும் முன்பே சில

ஆண்டுகள் நடக்கும். அப்படி இல்லாவிடில், தொட்டிக்குள் ஒளிந்துகொள்வதுதான் தப்பிக்கும் வழி! அந்த வார விடுமுறையில்

அப்பாவிடம் ஊசி 'கீறிக் கொள்வோம்'!! :dance:

 
Dear Sri. TBS, Greetings.



I just love to see my wife in 'Madisar'. In my opinion, it is 'the most attractive' dress.... and very convenient too! You have a great taste!

Cheers!
hi
thanks...i like sirdevi on madisaar dress in MEENDUM KOKILA....
 
Now I do remember that. They used to heat it up in a spirit lamp after every injection. Now I think for sterilizing it.


மலரும் நினைவுகள் - 2.


அம்மை ஊசி போட வருடா வருடம் எங்கள் பள்ளிக்கு, சுகாதார அதிகாரி, ஒரு மருத்துவரை அழைத்து வருவார்!

ஆரம்பப்பள்ளி அருகில் ஒரு அரிசி 'மில்' உண்டு. அதில் நெல் கொட்டி வைக்க, சில தொட்டிகளைக் கட்டி இருப்பார்கள்.

நான் சென்று ஒரு தொட்டிக்குள் ஒளிந்துகொள்வேன்! ஏன் தெரியுமா? அவர்கள் கொண்டுவருவது ஒரு 'நிலைவெள்ளி
'

(ever silver) ஊசி; ஆறு அங்குல நீளக் குச்சியில் ஒரு முனையில் மருந்து வைக்க ஏதுவாக, ஒரு சின்ன வளைவு இருக்கும்;

மறு முனையின் நடுவில் ஒரு குட்டி ஊசி - அதைச் சுற்றி நான்கு குட்டி ஊசிகள் இருக்கும்! மருந்தை
டுக் கையில் இட்டு,

அந்த ஊசியால் தயிர் கடைவதுபோலத் திருப்புவார்கள். இதே போல இரண்டு வட்டங்கள்! பார்த்தாலே குலை நடுங்கும்!

அப்பா இதற்கென்று தானே ஒரு உபகரணம் தயாரிப்பார். 'பென்சிலின்' மருந்து வரும் குட்டி பாட்டில் மூடியில், இரண்டு

'இன்ஜெக்ஷன்' ஊசிகளைச் செருகிவிடுவார். மருந்தைக் கையில் தேய்த்துவிட்டு, அந்த ஊசிகளால் லேசாகக் கீறி விடுவார்.

வலியே தெரியாது! இத்துடன், ஊசி போட்டதற்கான சான்றிதழும் தந்துவிடுவார். இது, அதிகாரி பள்ளிக்கு வரும் முன்பே சில

ஆண்டுகள் நடக்கும். அப்படி இல்லாவிடில், தொட்டிக்குள் ஒளிந்துகொள்வதுதான் தப்பிக்கும் வழி! அந்த வார விடுமுறையில்

அப்பாவிடம் ஊசி 'கீறிக் கொள்வோம்'!! :dance:

 

மலரும் நினைவுகள் - 3.

எங்கள் தெருவில் முதலில் சின்ன முதலியார் வீடு; இரண்டாவது எங்களுடையது; மூன்றாவது பட்டு மாமி வீடு; நான்காவது

கிருஷ்ணன் கோவில்; எதிர்ப்புறம் முதலில் சின்ன முதலியாரின் காலி மைதானம்; இரண்டாவது ஓர் ஆசிரியர் - ஆசிரியை

ஜோடி, தங்கள் மகனுடன்; மூன்றாவது ஒரு தங்கத் தட்டான்; நான்காவது ஒரு மணியகாரர் குடும்பம். அவ்வளவே! அந்தச்

சிறு வயதில் அந்தத் தெருவே அண்ணாசாலை போலத் தோன்றும்! எங்கள் 'ரன்னிங் ரேஸ்' நடக்கும் இடமே அதுதானே.

வீட்டின் பின்புறத் தெருவில் வீடுகளே கிடையாது. எங்கள் தெருவும், பின்புறத் தெருவும் கோவிலைத் தாண்டியதும் சேரும்.

முக்கோண வடிவில் அமைந்த மூன்று தெருக்களின் இடையில்தான் மேலே சொன்ன வீடுகள் மற்றும் கோவில் எல்லாம்.

முதலியார் வீட்டின் இடப்புறம் அமைந்த தெருவில் 'பட்டணத்து ஐயர்' வீடு! அவர் எந்தப் பட்டணத்திலிருந்து வந்தாரோ?

யாம் அறியோம் பராபரமே! பல படிகள் ஏறித்தான் வீட்டுக்குள் செல்ல முடியும்! எல்லா வீட்டின் வாசலிலும் திண்ணை

உண்டு. காற்றாட அமர்ந்து வீட்டுப் பாடம் எழுதவும், தீபாவளியன்று தெருவில் இறங்காமல் மத்தாப்பு ஏற்றவும், தங்கத்

தட்டான் தன் பட்டறை போடவும் ஏற்ற இடம்! சிவப்பு வண்ண 'சிமென்ட்' தரையே பெரும்பாலும் இருக்கும்.



முதலியாரின் மைதானம்தான் எங்கள் விளையாட்டு அரங்கம். கிரிகெட், நொண்டி விளையாட்டு இன்ன பிற நடக்கும். ஓர்

ஓரத்தில் பெரிய வைக்கோல் போர்; யானை உயரத்தில் இருக்கும். அதை, வைக்கோலால் திரித்த கயிற்றால் கட்டி

வைப்பார்கள். எங்கள் தாத்தா அதில் எங்களை ஏறவே விடமாட்டார். இரவு உடலெங்கும் வயலின் வாசிக்க வைக்கும்

(சொறியினால்​​) என்று பயமுறுத்துவார். அதனால், அவருக்குத் தெரியாமல் அந்தப் போரில் ஏறி விளையாடுவோம்; அதன்

பின் வயலின் வாசிப்பது வேறு கதை!



இந்தக் காலத்தில் பட்டணம் மட்டுமே பார்த்த பிள்ளைகளுக்கு இந்த அனுபவமெல்லாம் நம்ப முடியாத வினோதங்களாக இருக்கும்!

தொடரும்............ :)
 
Kindergarten experience

My younger brother was born when I was about 3. So I was in the village. Then the local Girl's school started a Kindergarten section. My father thought it would be a good thing for me to attend the Kindergarten. I think they also found me a big nuisance in the house.

I was very reluctant to attend the school. Pavu Mami (our cook) had to take me on her hips and leave me in the school. I cried and tried all kinds of tricks. They were insisting.

I attended school for a week or so.

My elder sister who was in the same school was given the responsibility of bringing me home.

Then it happened. One day when my sister came to pick me up, she found me missing. She and her friends searched all over the school and could not locate me. She came home crying. Then she was shocked to see me sitting in the Thinnai eating something as usual. She would have bashed me up there but for the intervention of my grand mother.

The school was about 2 to 3 kilometers away. We had to cross the road at least twice. Nobody brought me. I just walked home. They could not understand how a 3 year old could walk all the way and find his way home.

That was my last day in school since it was considered too risky.

Then I went off with my father, mother and younger brother to Hazaribagh in Bihar. Then we moved a a dam site. I came back to the village when i was 7 years old and joined the third class.

My stay in the village was limited to 4 years. From third class to sixth class. Age 7 to 11. I never stayed in the village after that except for vacations/holidays.
 
hi
thanks...i like sirdevi on madisaar dress in MEENDUM KOKILA....

Sri. TBS, Sir, Greetings.

Actually I loved my wife in madisar. In fact, I started liking madisar dress only after our wedding, after few years only. We were living in an area called 'kaattuk Kollai' in a portion that did not have a door! Every Friday,s she would be conducting some sort of pooja.... Lakshmi or Santhoshi Maa... she would be in madisar.... No matter what pooja she conducted... later on I used to conduct only one pooja.. Manmadha Pooja! :)
Cheers!
 
hi raghy sir,


later on I used to conduct only one pooja.. Manmadha Pooja! :)

thanks...you have nice taste....keep the pooja continue...lol
 

மலரும் நினைவுகள் - 4.


ஆங்கிலப் புது வருடத்தை மிகவும் ஆவலுடன் எதிர் நோக்குவோம்! ஏன் தெரியுமா? புதிய படங்களுடன் காலண்டர்கள்

வீட்டை அலங்கரிக்கும்; 'மேட்டூர் கெமிகல்ஸ்' தரும் காலண்டரில்,
கொண்டைய ராஜு வரைந்த அழகியசுவாமி படம்

வண்ணமயமாக மிளிரும். புத்தாண்டு பிறந்து இரு வாரங்களில் பொங்கல் பண்டிகை வந்துவிடும். மூன்று நாட்களுக்கு

சூப்பர் சாப்பாடு கிடைக்குமே. 'காணும் பொங்கல்' நாளில், மாமா, சித்தப்பா வீடுகளுக்குச் செல்வதும் மிக்க மகிழ்ச்சிதானே!


மார்கழி மாதம் முழுவதும் வாசலில் இட்ட கோலங்களில் அமர்ந்த சாணி உருண்டைகள் (பரங்கிப் பூ அந்த உருண்டைகளை

அலங்கரிக்கும்!​​​) வீட்டின் கூரை மேலிருந்து இறக்கப்பட்டு, ஆளியாற்றில் கரைக்கப்படும். இது எங்கள் பணிப் பெண்

தாயம்மாவின் வேலை! அப்பொழுது, நாங்களும் ஆற்றங்கரைக்குப் போவோம்!



இது மட்டுமல்ல. அப்பாவை ஆஸ்தான மருத்துவராகக் கொண்ட சில 'பண்ணாடிகள்', ஒரு கூடையில் தேம்பாகு,

பறங்கிக்காய், மொச்சை என்று நிரப்பி, எங்களுக்கு அனுப்புவார்கள். 'தேம்பாகு' என்பது, வெல்லம் காய்ச்சும் பொழுது,

கரும்புச் சாற்றில் முதல் கொதி வந்தவுடன் எடுக்கும் இளம் பாகு. அதைப் பல வகைகளில் பயன்படுத்தலாம்! ஒரு டம்ளர்

தண்ணீரில் ஒரு சின்னக் க்ரண்டித் தேம்பாகைக் கலந்தால், 'இன்ஸ்டன்ட்' பானம் தயார்; சப்பாத்தி, பூரி, அடை, தோசை

எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொண்டால் ருசிக்கும்; அப்படியே சாப்பிட்டால், தேன் போலவே இனிக்கும்.



ஒரு சமூகத்தினருக்கு வினோதமான வழக்கம் உண்டு. ஒரு சின்னச் சட்டியில் (அரை டம்ளர் நீர் கொள்ளும் அளவே​​)

சுண்ணாம்பினால் கோடுகள் வரைந்து, அதற்குள் சர்க்கரைப் பாகை அச்சில் ஊற்றிச் செய்த ஒரு பொம்மையை வைத்து,

குட்டி மூடியால் அதை மூடி, ஒரு சின்னக் கரும்புத் துண்டுடன் வீடு வீடாகக் கொடுப்பார்கள். இவை எல்லாமே புத்தாண்டு

பிறந்ததும் நடப்பதால்
தான் இந்த எதிர்பார்ப்பு. :)
 
சுப்ரமணி and his Son

சுப்ரமணி was our Dog. Our general attitude towards dogs reminds of the old saying

கல்லைக் கண்டா நாயைக் காணோம்


நாயைக் கண்டா கல்லைக் காணோம்

We always had a couple of stones in our pocket reserved for throwing at Dogs and getting Mangoes from trees.

This attitude is explained by our fear of injections. We heard that they put 23 injections around your navel if you get bitten by a dog. And that before you die you start barking like a dog. Since none of us were bitten by a dog it was all a heresy which we believed.

Then one day one of the boys came with a pup following him. He found the pup near the tank and gave it a bit of murukku and it followed him. After a long and heated discussion, we decided to adopt the pup and named him சுப்ரமணி. We thought he belonged to he Rajapalaiyam breed. Of course we did not know of any other breed.

Rajapalayam (dog) - Wikipedia, the free encyclopedia

With a steady diet of Murukku, seedai, ellurunadi, vadai etc. சுப்ரமணி grew in size. He used to follow us everywhere. He was not allowed into any house.

Our village was well served by Dog catchers. They used to come regularly and catch the street dogs. Once a dog catcher almost caught சுப்ரமணி. We fought with him and ensured that he is not caught by them. Then one of the older boys suggested that we should put a collar around his neck to show that he is owned by somebody. We got a old belt, cut it and put it around சுப்ரமணி's neck. There was some talk about dog License. But since it was in the elder's domain, nothing came out of it.

சுப்ரமணி was there when I left the village. When I came back on vacation a couple of years later, சுப்ரமணி was not there. Some one said that he has been killed by Madan, our scavenger. Some others said he has been taken by the dog catcher.

However there was another pup wagging his tail. My friend told me that he is சுப்ரமணி's son.

I had told my children about this episode. So they quoted this when they wanted a pup. We got a Golden Cocker spaniel with pedigree and named him charlie.
Charlie was like this.

GoldenCockerSpaniel.webp
 

In the movie 'MoondrAm piRai', Sridevi calls her dog 'Subramani'! :)

In our village, the most common name for dogs is 'MaNi'!!
 

எங்கள் முதல் Pet!


நானும், என் தங்கையும், எப்போதும் இரட்டைப் பிறவிகள் போலச் சேர்ந்தே இருப்போம். ஒரு லீவு நாளில் காலை வேளை,

எங்கள் திண்ணையின் ஓட்டுக் கூரையில் 'கீச் கீச்' என்று மிகச் சன்னமான சத்தம் கேட்க, உடனே ஓடிப் போய் அம்மாவிடம்

சொன்னோம்! அம்மா அடுப்படி வேலையில் மும்மரமாக இருந்ததால், எங்கள் பணிப் பெண் தாயம்மாவைச் சென்று

பார்க்கச் சொன்னார். தாயம்மா, அங்கிருந்த தேங்காய் நாரால் செய்த கூட்டில் கண்டாள், பிங்க் வண்ணத்தில் ஒரு சின்னக்

குட்டி; கண்களே திறக்கவில்லை! அது ஒரு அணில் முன் தினம் போட்ட குட்டிதான் என்றாள்; நம்பவே முடியவில்லை

மொழுக் மொழுக் என்ற அதன் உருவைப் பார்த்து! அதன் அம்மா அணில் எப்படியோ இறந்து போயிருக்க வேண்டும். அது

வராததால், பசியில் இந்தக் குட்டி கத்துகிறது. அந்தச் சின்ன வாயில் எதை ஊற்ற முடியும்? எங்கள் அப்பா ஒரு ஐடியா

கொடுத்தார். அதன்படி, ஒரு புதிய இங்க் ஃபில்லரில் பாலை எடுத்து, அதன் வாயில் வைத்துப் பிசுக்கியதும், குடிக்க

ஆரம்பித்தது. சில நாட்களில் கண்கள் திறக்க, எங்களைப் பார்க்கவும் ஆரம்பித்தது. நானும், தங்கையும், அதன் பராமரிப்பில்

முழு மூச்சாக இறங்கிவிட்டோம்! கொஞ்ச நாட்களில் அழகாக முடி வளர ஆரம்பித்து, அதன் முதுகில் கோடுகள் தோன்ற

ஆரம்பித்தன. அழகாக உருவம் மாறியது! தன் குட்டி வாலை ஆட்டிக் கொண்டு,
பால் கொடுக்கும் ஃபில்லரைத் தன்

முன்னங்கால்களால் பிடித்துக் குடிக்க அறிந்துகொண்டது! அது துள்ளி குதித்தபடி, எங்கள் பாவாடையைப் பற்றிக்கொண்டு

மேலே வந்து, தலை மீதும் கூட ஏறிவிடும்! (இப்போது நினைத்தால் நடுங்குகிறது!). பின், அது கொஞ்சம் பெரிதானதும், வீடு

முழுதும் ஓடி, அட்டகாசம் செய்ய ஆரம்பித்தது! இனி, அதை மரத்தில் ஏற்றி விடவேண்டும் என்று அப்பா கூற, அதன்படி

கொல்லைப் புறம் இருந்த வேப்ப மரத்தில் ஏற்றி விட்டோம். அது சில நிமிடங்களில் மீண்டும் வீட்டுக்குள் வந்துவிட்டது!

மீண்டும் சில முறை இதே போலச் செய்ததும், மரம்தான் தான் வாழ வேண்டிய இடம் என்று அறிந்துகொண்டது; தன்
இனத்துடன் சேர்ந்துவிட்டது; நாங்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்! :couch2:
 
Is that our squirrel? American squirrels are larger. The squirrels we are talking about have the three stripes on their back. We were told that they acquired it when they helped Rama build the bridge to Lanka. There used to be lots of squirrels all over the village. A number of them in our house. May be because there were a number of trees nearby. But 40 years on when we sold our ancestral house, there were hardly any squirrels. I was told that they have all disappeared when the trees were cut down. Hardly any trees now.

I was quite fond of rearing Butterflies. I used to think of them as Monarch butterflies. But later came to know that they are Common Tiger which are similar to Monarch. Their caterpillars look cute. They are found on எருக்கு plants. They eat only எருக்கு leaves. So I used to get them with the leaves, put then in a tray and feed them எருக்கு leaves. Then they become Pupa. It is a wonderful site to see the pupa opening and the Butterfly emerging. Then give them sugar solution. They drink it and fly away.

We used to catch தும்பிs or dragon flies and make them lift stones. They do.
 
A good thread for all elders to go back to their childhood days.
I am fond of eating.
I started eating on my own in my own plate when I was 10 months old.
My father used to take my elder brother to school while he was going to office. My brother is two and half years elder to me. What was bothering me siting at home was my brother was carrying the lunch box. I was just two and a half years old.
I started crying and was telling my parents that I will also go to school carrying lunch box like Anna.
My parents might not have thought of putting me in school so early but my daily weeping made them change their mind and they admitted me in a school.
Unlike other kids I left my house happily ofcourse carrying my lunch box and my father cycled me to school.
The moment my father dropped me and was about to leave I started crying to such an extent that my father had to drop me back at our house.
As a child, how will I know that my father left my brother in the school to be taken care by the teachers, and proceeded to office.
My schooling started from the next day without crying but with lunch box.
I am still fond of eating.
 

ஆருத்திரா தரிசன
ம்.


'திருவாய் திற; ஒரு வாக்களி' என்ற வாசகத்தை,

'திருவாதிரை; ஒரு வாய்க் களி' என்ற வாசகமாக

மாற்றி, ஆருத்திரா தரிசன நன் நாளில், சிவனைப்
போற்றிக் களிக்க நாம் 'களி'யைப் படைக்கிறோம்!

சிறு வயதில், எங்கள் கிராமத்தில், உற்சவ மூர்த்தி
ஒரு அழகிய அரச மரப் பிள்ளையாரைச் சுற்றி வர,

'பட்டி சுற்றுகின்றார் சுவாமி' என்று மகிழ்ச்சியாகக்
குட்டிகள் அனைவரும் அம்மாக்களுடனே ஓடுவர்!

சத்தமான வெடிகள் முழங்கிட, மங்கல நாதஸ்வர
வாத்தியம், மேளம் ஒலித்திட, பூ அலங்காரத்தில்

இறைவன் பவனி வருவது, அனைவர் மனத்திலும்
நிறைவான காட்சியாகப் படர்ந்து மகிழ்வித்திடும்!

இனிய இல்லம் திரும்பியவுடன், நைவேத்யமான
இனிப்புக் களியுடன், சுவையான கூட்டும் கிட்டும்!

கூட்டில் இடும் காவத்தங்கிழங்கு, புது விதமாகவே
கூட்டும் அதன் சுவையை! மறவோம் அச்சுவையை!


:pray: . . . :hungry:
 
சின்னஞ்சிறு வயதினிலே


ஆருத்திரா தரிசன
ம்.


'திருவாய் திற; ஒரு வாக்களி' என்ற வாசகத்தை,

'திருவாதிரை; ஒரு வாய்க் களி' என்ற வாசகமாக

மாற்றி, ஆருத்திரா தரிசன நன் நாளில், சிவனைப்
போற்றிக் களிக்க நாம் 'களி'யைப் படைக்கிறோம்!

****************

:pray: . . . :hungry:

தங்கள் கவிதை எனது இளம் வயது நினைவுகளை கிளறியது அம்மணி .

இன்று திருவாதிரை நடராஜருக்குகந்த்த நன்னாள்

சிறுவயதில் திருவாதிரை என்றாலே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்போம் நாங்கள் . எனது தாயார் அன்று அதி காலையில் எழுந்து எங்களையும் எழுப்பி ஸ்நானம் செய்வித்து கோவை அருகே உள்ள பிரசித்தி பெற்ற சிவ ஸ்தலமாகிய பேரூர் என்றழைக்கப்படும் "பட்டிச்வரம்" சென்று வர ஆயத்தம் செய்வார்கள் . அதனுடன் அன்று செய்யப்படும் திருவாதிரை களி மற்றும் ஏழு கறி (காய்) கூட்டு சாப்பிட்டுவிட்டு முதல் நாளே ஏற்பாடு செய்யப்பட்ட "ஜட்கா" வண்டியில் குடும்பத்துடன் பேரூர் சென்று ஆனந்த நடராஜ நடனத்தை கண்டு கழித்து வருவோம். திருவாதிரை அன்று மட்டுமே இங்கு திரு நடராஜ பெருமான் தனது கனக சபையிலிருந்து வெளியே வந்து சப்பரத்தில் எழுந்து ஆடும் காட்சியைக்காண பல்லாயிரம் பக்தர்கள் கூடுவார்கள். அந்த அற்புதக்காட்சி இன்றும் என் கண் முன்னே இருக்கிறது. ஆட வல்லான் அருளும் இத்தலம் தில்லைக்கு அடுத்தபடியாக மேலை சிதம்பரம் என அழைக்கப்படுகிறது. திருவாதிரையன்று நடராஜப்பெருமான் ஆடும்போது மூன்று முறை வலம்வரும்போது சப்பரத்தை எடுத்து வரும் பச்சை மூங்கில் உடையும் காட்சியை காணலாம் . சிறுவயதில் திருவிழா காட்சிகள் எல்லாமே அற்புதமானதாக தோன்றும் . தவிர அங்கு விற்கப்படும் ஊதல், காத்தாடி மற்றும் எளிய விளையாட்டு சாமான்களை வாங்கிவரும் போது அடையும் ஆனந்தமான நாட்கள் எனது நினைவுகளில் உறைந்துவிட்டன.

இங்கு மூலவர் சிவபெருமான் பட்டீ ஸ்வரர் என்று அழைக்கப்படும் கோஷ்டீஸ்வரர், தாயார் பச்சை நாயகி என்றழைக்கப்படும் மரகதவல்லி. இத்திருக்கோயில் கோவையிலிருந்து 5 கி மீ தொலைவில் இருக்கிறது .. அற்புதமான சிற்பங்கள் உள்ள கனகசபை உலக பிரசித்திபெற்றது . திருக்கோயில் அருகில் இருபுறமும் தென்னந்தோப்புகளின் நடுவில் ஓடும் நொய்யல் நதி யில் நான் பல முறை ஸ்நானம் செய்திருக்கிறேன். இத்திருத்தலம் மலையாள தேசத்திலுள்ளோருக்கும் மிகவும் சிறப்பான முக்தித்தலம் .

ஆரூர் அத்தா ஐயாற் றமுதே அளப்பூர் அம்மானே
காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் கருகா வூரானே
பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் பிறவா நெறியானே
பாரூர் பலரும் பரவப் படுவாய் பாசூ ரம்மானே.
(சுந்தரமூர்த்தி சுவாமிகள்)




நலம்கோரும்
ப்ரஹ்மண்யன்
பெங்களுரு
 
Last edited:
hi brahmanyan sir,

அருகில் இருபுறமும் தென்னந்தோப்புகளின் நடுவில் ஓடும் நொய்யல் நதி யில் நான் பல முறை ஸ்நானம் செய்திருக்கிறேன். இத்திருத்தலம் மலையாள தேசத்திலுள்ளோருக்கும் மிகவும் சிறப்பான முக்தித்தலம்


i like to say something abt perur near coimbatore....my father's atheimber was post master in porur....my father died

in coimbatore medical college and cremated in porur....when i was 5 years old......the cremation did in the banks of river...

even some of my friends/ relatives live there....i visited patteeswaram temple 2 years back....i still remember perur very well...

when i was eating kali with koottu....my daughter was born in hospital....her birth day is arudra darsanam day...
 
The place, Tiruvarur, where I spent the first twelve years of my life has two main festivals (tiruvAthirai and panguni utharam)

ThiruvAthirai is a big festival/function in TiruvArur (abode of Lord thyAgarAja)
Thyagaraja Temple, Tiruvarur - Wikipedia, the free encyclopedia
- On this day right leg of Lord Thygaraja will be shown (and left leg will be seen on panguni Utaram day)- Rest of the time only his face will be seen.

Our family will walk (our father is very strict in not using car or any other mode of transportation)
Being the youngest, the distance to the temple seems to stretch to infinity (maps and other details are given in the link below - It is only one kilo meter one way). I, being the youngest of the family, will be carried (at least for part of the distance) either by my mother or my sister. We have to stand in a line to see the darshan of the leg. After our return we will be served with kali and koottu. They tasted like nectar after the walking and waiting.

My father worked as an electrical engineer (in charge of rural electrification in East Tanjore District) and we had a wonderful childhood in Tiruvarur. Of course the high light of our stay were the temple functions and our numerous cousins (living in larger towns) visiting us for summer and enjoying the village life.

Here is a map of our walk https://maps.google.com/maps/ms?msi...&ll=10.779032,79.625559&spn=0.010181,0.016844

We did go to the temple today navigating snow covered roads and in 30 degrees F weather.
 

ஆருத்திரா தரிசனம், நண்பர்களுக்குச் சிறு வயது நினைவுகளைத் தூண்டியதும், அவர்கள் அதை இங்கு பகிர்ந்துகொண்டதும்

மகிழ்ச்சி!


எங்கள் ஊர் ஆனைமலையில் உள்ள சிவன் கோவில் (ஈஸுவரங் கோயிலு​ என்று உச்சரிப்பார்கள் அந்த மக்கள்​) மிக

அழகியது. உள்ளே நுழைந்தவுடன் காணப்படுவது முருகன். வள்ளி - தெய்வயானை சகிதம் அருள் தரும் சன்னதிதான்.

அவருக்கு வலப்புறம் சிவன் சன்னதி; இடப்புறம் உமையம்மை சன்னதி. கோவிலைப் பிரதக்ஷிணம் செய்யும் வழியில்,

வினாயகர், லக்ஷ்மி, சரஸ்வதி, நவக்கிரஹ சன்னதிகள் அமைந்திருக்கும். அம்மா கிருத்திகை விரதம் மேற்கொண்டதால்,

ஒவ்வொரு கார்த்திகை நக்ஷத்திரத்தன்றும் கோவில் விஜயம் கட்டாயம் உண்டு. அதைத் தவிர, விசேஷ நாட்களிலும்

செல்லுவோம். ஆனால், பட்டி சுற்றும் வைபவம்தான் மிகவும் உற்சாகம் தரும். கோவிலில் வெடிச் சத்தம் துவங்கியதும்,

வீட்டிலிருந்து ஓட்டமாக ஓடுவோம். ஸ்வாமி அரச மரத்தை அடையும் முன், நாங்கள் செல்ல வேண்டும் என்ற

நினைப்புத்தான் அத்தனை உற்சாகத்துக்கும் காரணம். பட்டி சுற்றி முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் கிடைக்கும் சுவையான

களியும் கூட்டும். அந்தக் கூட்டில் இடும் காவத்தங்கிழங்கு ஒரு ஸ்பெஷல் சுவை! சில ஆண்டுகள் எங்கள் வீட்டுத்

தோட்டத்திலேயே கிடைக்கும். ( என் தங்கை, தன் வீட்டுத் தோட்டத்தில் இந்த வருடம் கூட காவத்தங்கிழங்கு கிடைத்ததாகச்

சொன்னாள்! ) இவை எல்லாமே இனிய நினைவுகள்.



குறிப்பு: இந்தச் சிவன் கோவிலிலிருந்துதான் ஐயர் வீட்டு மாப்பிள்ளை அழைப்பு துவங்கும்! இறைவன் சன்னதியில் வைத்து

எடுத்துத் தரும் 'ஸூட்' உடையை மாமனாரிடம் வாங்கி, அங்கேயே மாற்றிக்கொண்டு (!) திறந்த ஜீப்பில் பவனி வருவார்கள்! :cool:
 
The place, Tiruvarur, where I spent the first twelve years of my life has two main festivals (tiruvAthirai and panguni utharam)

ThiruvAthirai is a big festival/function in TiruvArur (abode of Lord thyAgarAja)
Thyagaraja Temple, Tiruvarur - Wikipedia, the free encyclopedia
- On this day right leg of Lord Thygaraja will be shown (and left leg will be seen on panguni Utaram day)- Rest of the time only his face will be seen.

Our family will walk (our father is very strict in not using car or any other mode of transportation)
Being the youngest, the distance to the temple seems to stretch to infinity (maps and other details are given in the link below - It is only one kilo meter one way). I, being the youngest of the family, will be carried (at least for part of the distance) either by my mother or my sister. We have to stand in a line to see the darshan of the leg. After our return we will be served with kali and koottu. They tasted like nectar after the walking and waiting.

My father worked as an electrical engineer (in charge of rural electrification in East Tanjore District) and we had a wonderful childhood in Tiruvarur. Of course the high light of our stay were the temple functions and our numerous cousins (living in larger towns) visiting us for summer and enjoying the village life.

Here is a map of our walk https://maps.google.com/maps/ms?msi...&ll=10.779032,79.625559&spn=0.010181,0.016844

We did go to the temple today navigating snow covered roads and in 30 degrees F weather.

Sir

I was told that Sri.V S Theagaraja Mudaliar was instrumental in repairing Temple Car and making it run.

He was the Chairman of Thiru Arooran Sugar Industries.
 
What was really wonderful when we were children in the village is the total freedom we had. Once we were back from school, we had our tiffen. Then we were free till dinner. On holidays the entire day was ours. No one really bothered about where we were and what we were doing. We roamed all over the place, climbed trees, plucked mangoes, puli and anything we thought was edible.

When out mothers/grandmothers wanted us, all that they had to do was to catch any small boy and tell him. The information will reach us wherever we were. உங்க அம்மா/பாட்டி கூப்பிடறா.

We had a lot of free time when compared to today's children though we did have a regimen of tuitions.

We were never told what should not be done nor were we told with whom we could speak or play. This freedom at times landed us in trouble.

Then about Girls. Girls were not usually a part of our gang. Basically because they were not interested. And frankly we were a bit scared of them. They may not have been physically as strong , but they could வாயாலே கிழிச்சுருவா. Some of them came with us for மாங்காய்/புளியங்காய் பறிச்சுfying. They wanted to climb trees also. Some of them did. But their பாவாடை was not suitable for climbing trees.

We took the girls help for getting things from the kitchen. The Kitchens were closed to us boys. They got the chillies and salt for preparing புளியம்பழம் மிட்டாய்.

புளியம்பழம் மிட்டாய் Recipe.

புளியம்பழம் in good quantities. Not very ripe. But tender when they taste sweet.

Red Chillies.

Salt

Add them together and அரைச்சுfy in an அம்மிக்கல். Make it into a ball and stick in a தென்ன்ங்குச்சி. You have a Lolly Pop. But the we did not know about Lolly Pop.
 
புளியம்பழம் மிட்டாய் .....
இலந்தைப் பழங்களை எடுத்து, கொட்டைகளை நீக்கி, சிவப்பு மிளகாய், உப்பு, கொஞ்சம் புளி சேர்த்து அரைத்து,

வடை போலத் தட்டி, இலந்தை வடாம் என்று எங்கள் பள்ளிக்கூட வாசலில் ஒரு பாட்டி விற்பார். உலகம் அழியும்

என்று ஒரு புரளி கிளம்பிய நன் நாளில், அந்தப் பாட்டி செய்து வைத்திருந்த அத்தனையும் காலி! நண்பர்களும்

நண்பிகளும் ஒருவருக்கு ஒருவர் வாங்கிக் கொடுத்தே காலி செய்துவிட்டார்கள். மறு நாள் வகுப்பில் எல்லொரும்

அசடு வழிந்தது இன்னும் பசுமையாக
நினைவில் இருக்கிறது!
:becky:


benefits-jujube-fruit-23-08-11.jpg


Picture courtesy: Google images.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top