• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தமிழனின் அடையாளங்களை தேடும் முயற்சியில&#

Status
Not open for further replies.
RRji: வண்ண வண்ண மனிதர்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு எண்ண அலைகள்......
உண்மை நண்பரே! விரைவில் நலம் அடைந்து கவிதைகள் படியுங்கள்; படையுங்கள்!! :ranger: . . . :typing:
 
Sabaash sariayana potti!!

நண்பர் கொடுத்த ஊக்கத்தால் இன்னும் ஒரே ஒரு வாதம்!

வெண்மையும் நிறம்தான் எனினும், வெண்மை வெளுக்காது!

அழுக்கு வெண்மை, தூய வெண்மை ஆவது நிகழலாம்!


Funny Indian ad for Tide - Stilts - YouTube
 
அம்ம்மா !!!

நான் முற்றிலும் உங்கள் கருத்தில் ஒத்துக்கொள்கிறேன்...!!! எதோ ஒரு உவமையில் சொன்னது....

விசாலாட்சி அம்மாவுக்கும் சேர்த்துதான் ...!!!

ஊக்கமளியுங்கள்... உங்களது ஆறுதல்களில் அடுத்த கவிதைக்கு அடித்தளம் போடவேண்டும்...!!!!

திரு. ஹரிதாஸ சிவா : விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்...!!!


நன்றிகளுடன்
அசோக் குமார்
 
...............
ஊக்கமளியுங்கள்... உங்களது ஆறுதல்களில் அடுத்த கவிதைக்கு அடித்தளம் போடவேண்டும்...!!!! ........
நாங்கள் ரெடி! நீங்கள் ரெடியா?? :)
 
இனக் கவர்ச்சி (infatuation)

இனக் கவர்ச்சி (Infatuation)
அந்தி சாயும் பொழுது... அவசரகதியில் இயங்கும்
மானிடர்களின் மத்தியில் அவளைப் பார்த்தேன்...!!!
அவள் கொவ்வைப் பழ உதடுகளின் விளிம்பில் வார்த்தைப்
பரிமாற்றம்... யாரோ ஒரு யுவதியிடம்....!!!
அவளங்கலாவண்யன்களைக் கண்டு
மருதலித்தெழுமுன் ... அவளின் பார்வைக்
கணைகளால் என்னைத் துளைத்தெடுத்தாள்..!!!


செவ்விழியாளின் இந்த எதிர்பாரா தாக்கத்தில்
அடியில்லா மரம்போல துவண்டு விழ நேர்ந்தேன்...!!!
காற்றில் பறக்கும் காகிதமானேன் ..
அவள் விழிஈர்ப்புக்கு அடிமையாய் ..!!
செண்பகமலர்ச்சர நறுமணம் வீசுமபொழுது
வண்டுகளின் பாடுதான், என்பாடும்....!!!

மனதின் அமைதிக்காக கடலின் அமைதியின்மையை ரசிக்கும்
இந்த முரண்பாடான மனிதர்களுக்கு நடுவில்....
இந்த வானவில்லாளை காணும் நோக்கோடு இடம்பெயன்றேன் ..!!!
கடல் கன்னியின் அலைக்கரங்கள் அவள் இளம்பாதங்களையும்..
தளிர்விரல்களையும் தழுவித் தழுவிச் சென்றாள்....!!!
இதுகாறும், இயற்கையும் அவளொடு சேர்ந்து என்னைப்
பழிவாங்க .. அவளருகில் கூப்பிடு தூரத்திலமர்ந்தேன் ..!!

அருகில் இருக்கும் அவள்,
அமரலோகத்து அப்சர மகள் அவனியில் தரித்த கோலம் ..!!
எழில்ப் பதுமைபோல் அவள் தோழியோடு அளவளாவியவள்.. !!
ஆடவன் ஒருவன் காண்கிறான் என நினைப்பில் ..!!
நாணமும் கோபமும் ஒருசேர அவள் அழகிய
வதனத்தில் படர்ந்த ரேகைகள் என்னை வேட்கையில் தள்ளியது...!!!

ஏதோவொரு இனம்புரியாத ...!!! ம்ஹூம் ..!!!
அவள் பெண்ணினம் ; நான் ஆணினம் ;
ஆக இது ஒரு இனம் புரிந்த மயக்கந்தான்...!!!
என் புத்தி லவலேசமும் என்னிடமில்லை என
நினைந்து வெட்கித் தலை குனிந்தேன்...!!!

ஆவலுடன் பேச வாயெடுத்தவன் முயற்சியை
கைவிட்டுவிட்டேன்....காரணம்...
"கண்ணோடு கண்நோக்கின் வாய்ச்சொல் பயனிலவேன்பதலோ ?"

சீரியிடைவெளியில் அவள் என்னை பார்க்க மறக்கவில்லை ...
ஒரு நாழிகைக்கப்பால் ஏதோவொன்றை நினைத்தவளாய் ..!!
எனை நோக்கி பயணித்தாள்... !! அருகில் பொற்சிலையென நின்றாள்..!!!

ஆணின் பலமெல்லாம் அவன் பிரியமானவள்
அருகில் அண்டும் வரையில்தான் ...!!!!
பேசா மடந்தை யென எம்மிருவர் விழிகள் கலவ...!!
முற்பட்டவள் ...பின்வாங்கி ஏதோ பேசினாள்...!!!
அவள் குரல்... வீணையின் தந்தியில் அடித்தெழும்
சங்கீதத்துக்கு மட்டம்தான்....!!!
அவளின் மழலைப் பேச்சுக்கள் என்
மனதடிவாரம் வரைச் செல்ல ...!!
புளகாங்கிதமடைந்து அவளுள் புதைந்து கொண்டிருந்தேன்..!!!

சற்று தொலைவில் ....
கடல்க் கன்னிக்கு ஏற்பட்ட காதல் தோல்வியின் பொருட்டு
தற்கொலை முயற்சியாக, பாறைகளில் அவள் மோதிக்கொண்டு
எழுப்பும் மரணத் தூறல்கள்...!!!
அந்த உயிர்த் தூறல்கள்..எங்களிருவரையும் சட்டென நனைக்க...!!

திடுக்கிட்டு சாய்ந்தாள் என் மேலே ...!!!

எதிர்பாரா இக்கணம் !! அவள் கைத்தலம் பற்றிய நேரம்...!!!
வாழ்வின் சகல இன்பங்களும் கிட்டியவுகையில் நான்
திளைத்திருக்க...!!
அவள் சங்குக் கழுத்து என் கன்னங்களை நலம்
விசாரிக்க .... வெட்டில்லா மின்சாரம் தடையில்லாமல்
இருவுடலகளையும் நனைத்துக் கொண்டிருக்க ...!!
அவள் ஸ்பரிசத்தின்பால்... நடந்த வேதியியல் மாற்றத்தில்...
பிளந்த அணுக்கள் ஒட்டிக்கொள்ள மறுக்க....
இரத்தங்கள் காயத் தொடங்கியது...!!!!


உணர்ச்சிக்கடலெனவொன்றிருந்தால் அதில் சத்தியமாக
மூழ்கிக் கொண்டிருந்தேன் நான் ..!!!
அக்கணம், பொறாமையில் கதிரவன்
கூடத் தன் வேட்கையைத் தணிக்க கடற்க் கன்னியை
கற்பழிக்கும் முயற்சியில் இறங்கிக்கொண்டிருந்தான்..!!!
செம்பருத்தி இதழாள் எதோ சொல்ல வாயெடுத்த தருணம் ..???

..
..
..
..


"தம்பி என்ன இவ்வளோ நேரம் தூங்கறே ... எந்திரி....
வேலைக்கு போகணும் நேரம் ஆய்டுச்சு " அம்மா தேநீர்க் கோப்பையுடன்..!!!



ச்சே !!! ச்சே !!!

கண்டதெல்லாம் கனவா....!!!

:lalala:


மன்னித்துவிடுங்கள்...

:)

நன்றிகளுடன்
அசோக் குமார்
 
Thank you all for your wishes.

I had severe back pain and was on leave for 2 weeks. I underwent a modulation procedure and am better now. I am at work. My internet access is limited due to various reasons.

All the best.
 
எழுத்துப் பிழைகளைப் பரவாயில்லை எனலாம்!

ஆனால் ரசத்துடன் 'வி' கலந்தால்? :twitch:

சூரிய அஸ்தமனத்திற்கு வேறு நல்ல உவமானம் கிடைக்கவே இல்லை
யோ?
 
எழுத்துப் பிழைகள் இருக்கா ???!!!

கோடிட்டு காட்டவும்....!! இருந்தால் திருத்திக் கொள்கிறேன்...!!!

அரை மணி நேரத்தில் உதித்த கவிதை இது....!!!

நிச்சயமாக இல்லை !! காரணம்...எழுதும்பொழுது ஜீ செய்திகளில் டெல்லியில் நடந்த சம்பவங்களைக் கூறிக் கொண்டிருந்தார்கள் !!! (உங்களுக்கே தெரியும் !!!! )

எனவே தான் !!! எழுத நேர்ந்தது...!!!

வேறெதுவும் தவறான நோக்கத்தில் அல்ல !!

நன்றிகளுடன்
அசோக் குமார்



எழுத்துப் பிழைகளைப் பரவாயில்லை எனலாம்!

ஆனால் ரசத்துடன் 'வி' கலந்தால்? :twitch:

சூரிய அஸ்தமனத்திற்கு வேறு நல்ல உவமானம் கிடைக்கவே இல்லை
யோ?
 
ம்ம்ம்ம் ....

என்ன பண்ணுவது !!! கனவிலே தான் இதெல்லாம் பார்க்க முடிகிறது...

:'(

நன்றிகளுடன்
அசோக் குமார்




:flock:????...... :decision:...... :music:????

of course :flock:
 
சீக்கிரமே நலம் பெற வாழ்த்துகிறோம்

Thank you all for your wishes.

I had severe back pain and was on leave for 2 weeks. I underwent a modulation procedure and am better now. I am at work. My internet access is limited due to various reasons.

All the best.
 
கடவுள் நம்பிக்கை !!!

கடவுள் நம்பிக்கை

மயிலுடன் முருகன்...!!
புலியுடன் ஐய்யப்பன்...!!
கிளியுடன் மீனாக்ஷி...!!!
பாம்புடன் பரமசிவன்..!!
நாயுடன் பைரவர்...!!!
எலியுடன் விநாயகர் !!!

...
...
...
...
...


இப்படி ....!!!

- கடைசி வரை மனுஷ பயல்களை நம்பாத கடவுள்கள்....!!!!
 
இந்தக் கவிதையில்: கடல்க் கன்னி; கடற்க் கன்னி.

கடற் கன்னி என்பதே சரி. :thumb:
 
........புலியுடன் ஐய்யப்பன்...!!..........
ஐய்யப்பனா! அட ஐயப்பா!!

கவிதையில் கற்பனை நன்று! வாழ்த்துக்கள் நண்பரே! :)

என் எண்ணம்:
புலியும், எலியும்,
இன்ன பிறவும் சவாரிக்குக் காசு கேட்காதே!
அதை ஆண்டவனும் அறிவானே!! :car:
 
கடவுள் நம்பிக்கை

மயிலுடன் முருகன்...!!
புலியுடன் ஐய்யப்பன்...!!
கிளியுடன் மீனாக்ஷி...!!!
பாம்புடன் பரமசிவன்..!!

நாயுடன் பைரவர்...!!!
எலியுடன் விநாயகர் !!!

...
...
...
...
...


இப்படி ....!!!

- கடைசி வரை மனுஷ பயல்களை நம்பாத கடவுள்கள்....!!!!

கிளி is NOT the vaahanam of மீனாக்ஷி...!!! :nono:

பாம்பு is NOT the vaahanam of பரமசிவன்..!!! :nono:

But it WILL NOT matter since people WILL go gaga

on whatever you are going to write and :blabla:

shower stars even before the thread is lunched

and the viewer-ship reaches a decent three figures.:thumb:
 
கிளி is NOT the vaahanam of மீனாக்ஷி...!!!
பாம்பு is NOT the vaahanam of பரமசிவன்..!!!........
கிளி and பாம்பு are not mentioned as vAhanams anywhere!!

I just wrote about '
புலி, எலி இன்னபிற' taking into account
only vAhanams!!
 
என்னப்பா இது? எல்லாக் கவிதைகளுக்கும் பஞ்சாயத்தா? :pound:
 
நான் யாருடைய வாகனத்தை பற்றியும் குறிப்பிடவில்லை ...

விலங்குகள் பறவைகளுடன் உள்ள கடவுள்களைப் பற்றி சொன்னேன் ...!!!
 
மீனாக்ஷி கையில் ஒரு மனிதனும் :fear:

பரமசிவன் கழுத்தில் ஒரு மனிதனும் இருந்தால்...!!! :scared:

மனிதன் மீது விநாயகரும், முருகனும் சவாரி செய்தால்:whip:

மனித உரிமைக்குழு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதா???
:hand:
 
Nam meedhu kadavulgal savaari seyya naam kodutthu vaithirukka vendaama. Manidha urimaikuzu kandippaga edhirpu therivikkadhu.
 
ம்ம்ம்


கடற்க் கன்னி !!!


மாற்றி விடுவோம்...


இந்தக் கவிதையில்: கடல்க் கன்னி; கடற்க் கன்னி.

கடற் கன்னி என்பதே சரி. :thumb:
 
மனைவி அமைவதெல்லாம் ...!!!

மனைவி அமைவதெல்லாம் ...!!!

உனை மாலையிட்டு மனையாளாகக்
கண்ட நாள் முதல் துக்கமேதுமறியா
உந்தன் அன்பின் ஈரத்தில்...!!!

அலுவலக அவசரகதியில் ...
சட்டைப் பொத்தான் இல்லாமல்
அலறித் துடிக்க ...!!!
நளினமாய் ஓடி வந்து ஊசி நூல் கோர்த்து
தைத்துவிட்டு ..!
மிஞ்சிய நூலை என் மார்புக்கருகில்
நெருங்கிக் கடிக்கும் தருணத்தில் ...!!!

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்
எனச் சொல்லியிருக்க ...!!
அதன் இலக்கங்களை இன்றுவரை
திருத்திக் கொண்டிருக்கும் உந்தன்
பெண்மையின் இலக்கணத்தில் ....!!!

முன் கோபம் எனக்கு
முந்திக் கொள்ள, கை நீண்டு விட்டு...!!!
அலுவலகம் விட்டு மாலையில்
கவலையுடன் திரும்பும் எனக்கு....
குளித்து முடித்து, பூச்சூடி
ஏதும் நடவாதவளாய்ப் பாவித்து...
காலைச் சண்டையை கலவியில் முடிக்கும்
உந்தன் பெண்மையின் லாவகத்தில் ...!!!

ஆடிமாதப் பிரிவுகள் வருடமொருமுறை
வாட்டி எடுக்க
இருவர் அன்பும் பாலைவனமெனத்
தோன்ற...!!
ஒரு திங்களுக்கப்பால்,
உணர்ச்சிப் பிரவாகமாக திரும்பும்
அன்யோன்யத்தின் அடையாளத்தில் ...!!!

சாலை விபத்தில் சிக்கி
மருத்துவமனைத் தகவல் கிடைக்க...
அரக்கப் பறக்க ஓடிவந்து
"ஏங்க நான் சுமங்கலியாச் சாகணும்னு ஆசையில்லையா ?"
என எனைக் கட்டிக் கொண்டு
அழும் உந்தன் கண்ணீரில் ...!!!

தன்னிகரற்ற தாம்பத்யத் திளைப்பில்
என் உயிர் நீ ...!!
எனக்கொரு உயிரைப் பரிசளித்து
தாய்மையின் ஈரத்தை எனக்கும்
புகட்டி என் நெற்றி பரப்பில்
பதித்த முத்தச் சுவடுகளில் ...!!!

இவை அனைத்திலும்
ஆத்மார்த்தமான ஒரு ஜீவானாய், தோழியாய்
அன்னையாய், காதலியாய் இருக்கும்
மஞ்சள் மயில் உந்தன் தோளில்
சாய்ந்திருக்கும் போது
நாளெல்லாம் சொர்க்கமே...!!!

தெளியாதது என் எண்ணம் .....
கலையாதது உன் வண்ணம் ...
அழியாதது ....
அடங்காதது ...
அணை மீறிடும் ..!!
உன் நினைவுகளில் ..!!
நான் ...

நன்றிகளுடன்
அசோக் குமார்
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top