• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 34


நடு இரவில் எங்களை வரவேற்ற அவனோ, காரில்
படு சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டே வந்தான்.

பறக்கும் வேகம் போல ஹைவேயில் செல்லுவதால்
உறக்கம் வராமல் வண்டி ஓட்டப் பேச்சுத் தேவையே!

இரண்டு மணி நேரப் பயணத்தின் பின் அடைந்தோம்
திறந்து இருந்த தங்கையின் வீட்டை; பூட்டுவதேயில்லை!

அந்த அகால வேளையிலும் எங்களை வரவேற்று, உபசரித்து,
நல்ல உணவளித்து, நாங்கள் தங்கும் அறை காண்பித்தார்கள்.

பளபளப்பாக வீடு புதிதுபோல் பரிமளிக்க, மரத் தரையில்
கரகரப்பாக எழும் ஓசை காட்டியது வீட்டின் நூறு வயதை!

மறுநாள் சின்ன ஷாப்பிங் செய்து வந்து, விசேஷத்
திருநாளுக்கு வேண்டிய ஏற்பாடுகள் ஆரம்பித்தோம்.

சாக்கலேட் சின்னச் சின்னதாய் வீட்டிலேயே செய்ய,
சாக்கலேட் அச்சுக்கள் வாத்து வடிவத்தில் இருக்க,

மஞ்சள் நிற வட்ட சாக்கலேட்டுகளைக் குழம்பாக்கி,
மஞ்சள் நிற வாத்துகள் நாலு டஜன் செய்யணும்!

ஆரஞ்சு நிற சாக்கலேட் குழம்பு செய்து, வாத்துக்கு
ஆரஞ்சு நிற மூக்கு, சிறு தூரிகையால் வரைந்து,

துணுக்குக் கறுப்புச் சாக்கலேட்டைக் கண்ணாக வைத்து,
நுணுக்கமாக அதன் மேல் மஞ்சள் குழம்பு ஊற்றிவிட்டு,

Freezer - ரினுள்ளே வைத்தால், பத்து நிமிடத்தில் இறுகிவிடும்;
Freezer - ரிலிருந்து எடுத்த பின்னும் கெட்டியாகவே இருக்கும்!

புதிய வேலைகள் கற்றுக்கொண்டால், என்றும், எப்போதும்
புதிய உற்சாகம் நம்முள் தொடந்துகொண்டே இருக்கும்!

 
Last edited:
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 35


பூக்கள் வாங்க ஒரு மணி நேரம் காரில் பயணம் செய்து,
பூக்கடை ஒன்றை அடைந்து, ஆர்டர் செய்த பூக்களுடன்

அலங்காரம் செய்யப் பொருட்களும் தேடி - நல்ல
ரீங்காரத்துடன் ஒலிக்கும் தாலாட்டு டியூன் உள்ள

ஏழு செராமிக் பெட்டிகள் தேர்வு செய்தோம். அந்த
ஏழு பெட்டிகளிலும் பூக்கள் அலங்கரிக்க வேண்டும்.

Baby shower பற்றி இப்போது சொல்ல வேண்டும் - இது
Baby - யின் வருகைக்கு முன் செய்யும் கொண்டாட்டம்.

முன் நாளில் பணிப் பெண்கள், தன் கர்ப்ப காலத்தில்,
தன் எஜமானர் ஊர்ப் பெரியோருடன் ஒரு நாள் கூடி, தன்

பிள்ளைக்கு வேண்டிய பல்வேறு பொருட்களைத் தமக்கு
அள்ளிக் கொடுத்ததும், மிகவும் அகமகிழ்ந்து போவாராம்!

மெதுவாக அதுவே வசதி படைத்தோரும் செய்யும்
பொதுவான கொண்டாட்டமாக மாறி விட்டதாம்!

மேசைகளில், பூக்கள் மற்றும் குழந்தை உபயோகிக்க
ஆசையாய் வாங்கும் பொருட்களின் மாதிரிகள் வைத்து,

ஒவ்வொரு மேசையையும் சுற்றிச் சிலர் அமர்ந்து,
வெவ்வேறு வேடிக்கை விளையாட்டுக்கள் விளையாடி,

விதவிதமான சிற்றுண்டிகள் உண்டு, பானங்கள் அருந்தி,
பலவிதமான பரிசுகள் அம்மாவாகும் மங்கைக்கு அளித்து,

அவளை அப்போதே அவைகளைப் பிரித்துப் பார்க்க வைத்து,
அவளின் சந்தோஷ முகம் காண்பதோடு விழா முடிகிறது.

நம்ம ஊரில் 'மொய்' எழுதி, அதை ஒருவர் படிப்பதைச்
சும்மா மனது ஒப்பிட்டு பார்த்தது மறுக்க முடியாத நிஜம்!

சனிக்கிழமை மாலை நடக்கப்போகும் நம்ம வீட்டு
இனிமையான baby shower - ஐ எதிர்பார்த்திருந்தேன்.

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 36


ஒவ்வொரு குடும்பமாய் வெள்ளி மாலை முதல்
வெவ்வேறு திசையிலிருந்து வந்து சேர, எங்களுக்கு

Holiday Inn - இல் அறைகள் ஏற்பாடு ஆகியிருக்க - நல்ல
Holiday அனுபவிக்க அங்கு செக் - இன் செய்தோம்.

வட இந்தியத் தம்பதிகள் அன்று இரவு மிக அருமையான
வட இந்திய உணவு வகைகள் தயார் செய்து தர, அதில்

மிஞ்சிய உணவுகளால் வாடகை Fridge கூட நிறைந்தது;
மிஞ்சிய உணவுகளை நண்பர்கள் வரவேற்கிறார்களே இங்கு!

ஜிப்-லாக் பைகளில் நிறைத்து வைத்தால், அதை
'கப்'பென்று நண்பர்கள் அள்ளிச் செல்லுகிறார்கள்!

சமைக்க சோம்பேறித்தனம் எந்த ஊரில்தான் இல்லை?
சமைத்து யாரேனும் கொடுத்தால் நமக்கென்ன தொல்லை?

மறுநாள் காலையில் உதய சாந்தி ஹோமங்கள் ஏற்பாடு; அத்
திருநாள் காண விரைவில் தங்கை வீடு அடைந்தோம்!

மனமார ஆண்டவனை வேண்டி, கண்ணார ஹோமங்கள் கண்டு,
வயிறார நளபாக உணவு உண்டு மகிழ, எல்லோரும் கூடினோம்.

சாஸ்திரிகள் தம் காரில் வந்து, அன்றைய ஹோமங்கள்
சாஸ்திரப்படி செய்து, டாலரில் நன்றாக சம்பாதித்தார்.

ஸ்ரீ சத்ய நாராயண பூஜையும் தன் லிஸ்ட்டில் சேர்த்துக்கொண்டு,
ஸ்ரீ 'ஜெய ஜகதீச ஹரே' ஆரத்தியில் மேலும் காசு பண்ணினார்!

 
Last edited:
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 37


விமரிசையாக ஹோமங்கள் முடிந்ததும், எல்லோரும்
வரிசையாகச் சென்று 'நம்ம ஊரு சாப்பாடு' ருசித்தோம்.

மாலை நிகழ்ச்சிக்கு இன்னும் சில மணி இருந்தது - வேறு
வேலை இல்லாததால் ஊர் சுற்ற மனம் சென்றது.

GPS மூலம் எந்த விலாசத்திற்கும் வழி 'சாட்லைட்' தருவதால்,
GPS ஒன்று எடுத்துக்கொண்டு, நாங்கள் ஐவர் புறப்பட்டோம்!

PIPE STEM PARK என்பதை அது காண்பிக்காததால்,
PIPE STEM, வெஸ்ட் வெர்ஜினியா என்று கேட்டோம்.

ரொம்ப வழி தெரிந்ததுபோல அது எங்களைக் கூட்டிச் சென்றது,
திரும்ப முடியாத, கல் நிறைந்த ஒற்றையடிப் பாதையில்!

கார் டயர் கடகடக்க, பெண்கள் மூவரும் வெடவெடக்க,
நேர் வழியில் செல்வதுபோல் ஆண்கள் இருவரும் இருக்க,

'அந்நியர்கள் நுழையக்கூடாது' என்ற அறிவிப்புகளும் தெரிய,
அந்நியரான எங்களை எவரும் சுடுவாரோ எனப் பயம் நிறைய,

காட்டெருமை ஏதும் முன் வந்து நின்றாலும் - என்னவெனக்
கேட்டுவர ஒரு ஜீவனும் இல்லாத கானகத்தில் மாட்டிக்கொண்டு,

மலைப்பாதையில் உச்சிவரை சென்றபின், 'இந்த
மலை உச்சியைத்தான் உங்கள் DESTINATION எனக்

கூறுமோ இந்த GPS?' என்று சந்தேகப்பட, மறு வினாடியே
கூறியது அந்தப் பொல்லாத GPS அதே வார்த்தைகளை!

mail


வீட்டு விலாசத்தை மீண்டும் போட்டு வழி கேட்க,
வீட்டுக்கு வழியைச் சொல்ல அது ஆரம்பித்தது!

தொடர்ந்து ஒற்றையடிப் பாதையில் உழன்று சென்று,
அடர்ந்த காட்டு வழிகள் கடந்தபின் கண்ணில் பட்டது

நல்ல ரோடுகளில் செல்லும் கார்கள்! ஒலிம்பிக் ரேசில்
நல்ல தங்கப் பதக்கம் கிடைத்ததுபோல் மகிழ்ச்சி மனசில்!

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 38


திரைப்படம் ஹிட்ச்காக்கின் இயக்கத்தில் கண்டதுபோல்
நிறைந்திடும் நடுக்கம் நீங்க வேண்டி, நல்லதாய் ஒரு கப்

காபி அருந்திவிட்டு, பளபளக்கும் உடை மாற்றி,
பேபி ஷவருக்கு புதிய நண்பிகளுடன் சென்றோம்!

அழகாக மேசைகளை நன்கு அலங்கரித்து வைத்திருக்க,
அழகான மேல்நாட்டு உடைகளை நிறையப்பேர் அணிந்திருக்க,

விதவிதமாய்ப் பானங்கள் ஒருபுறம் நிறைந்திருக்க,
விதவிதமாய்ச் சிற்றுண்டிகள் மறுபுறம் வைத்திருக்க,

'சிக்' உடையில் அழகிய பெண் ஒருத்தி - உங்கள்
'லக்' என்னவென்று சோதியுங்கள் என்ற பீடிகையுடன்,

கேள்விகள் அச்சடித்த பேப்பர்களைக் கொடுத்தாள்;
கேள்விகளின் விடைகளை எழுதச் சொன்னாள்.

என்ன குழந்தை பிறக்குமெனப் பாட்டிகள் கண்டுபிடிக்கும்
சின்னச் சின்ன விஷயங்கள் அந்தக் கேள்வித் தொகுப்பாகும்!

நம்ம ஊர் பாட்டி ஜோசியத்தை மனதில் கொண்டு
அந்த கேள்விகளுக்கு நான் பதில்கள் நிரப்பி வர,

முதல் ரவுண்டில் பதினைந்துக்குப் பன்னிரண்டு சரியாக,
முதல் பரிசு எனக்கும் என்னைக் காப்பியடித்தவருக்கும்!

குட்டியாய் இரு பீங்கான் யானை பொம்மைகள் உள்ள
குட்டிப் பெட்டி வந்தது; உப்பும், மிளகும் நிரப்பிக்கொள்ள!

எந்த ஊராயிருந்தாலும் பெண்களின் மனதில்
வந்த கற்பனைகள் ஒரே மாதிரி இருக்குமோ?

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 39


குழந்தையின் அங்கங்கள் யாரைப்போல இருக்குமெனக்
குழந்தைத்தனமான கேள்வித் தொகுப்புதான் அடுத்தது.

குழந்தை 'நாப்பி'கள் பத்து; நம்பர் போட்டு, அவற்றுள்ளே
குழைத்த நிலையில் சாக்கலேட்கள் ஒவ்வொன்று வைத்து,

என்ன வகை என்று கண்டுபிடிக்கச் சொல்ல, சிலர் அதைத்
தின்ன முயன்றதைக் கண்டு சிரிப்பால் அரங்கமே அதிர்ந்தது!

பல நாட்டு மொழிகளில் 'பேபி' என்ற சொல்லை எழுதி,
பல மொழிகள் கண்டுபிடிப்பது நல்ல தொகுப்பாகும்.

பல்வேறு மிருகங்களின் குட்டிகளின் பெயர்கள்
வெவ்வேறாய் இருப்பதை எழுதச் சொன்னார்கள்.

திறந்த பெட்டியொன்றில் குழந்தை 'சாக்ஸ்'களை நிரப்பி,
குறைந்த நேரத்தில் ஜோடி சேர்த்தவருக்குப் பரிசு என்றனர்.

அடுத்தடுத்துக் கலகலப்பாய் போட்டிகள் சென்றதால்,
எடுத்து வந்த காமராவைக் 'கிளிக்' செய்ய மறந்தேன்!

வாத்து மிட்டாய்களை நான் செய்ததால், மேசையில்
பார்த்து, அந்தத் தட்டை மறவாமல் 'க்ளிக்'கினேன்!

mail


குழந்தை உபயோகிக்கும் பொருட்களின் சிறு மாதிரிகள்
குழந்தையின் உற்சாகத்துடன் எடுத்துக் கொண்டேன்.

பூக்கடையில் வாங்கிய தாலாட்டுட் டியூன் உள்ள
பூக்கள் நிறைந்த குட்டிப் பெட்டியும் பரிசாய் எடுத்தேன்.

என்னதான் சிற்றுண்டிகள் உண்டாலும், தயிர் சாதம்
உண்ணத்தான் மனது விரும்பும், எங்கு சென்றாலும்!

வீட்டிற்குச் சென்று அந்த வேலையையும் முடித்து,
வீட்டிலிருந்து வந்தோம் மீண்டும் ஹோட்டல் அறைக்கு.

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 40


அமெரிக்க நாட்டில் வளைகாப்பு, சீமந்த வைபவம்
அமர்க்களமாக நடத்தத் தங்கை வீட்டில் ஏற்பாடு.

வந்த விருந்தினரை நல்லபடி உபசரித்து, வெளியூர்
சொந்த பந்தங்களையும் கவனிக்க முனைந்தோம்.

வளைகாப்பு வைபவம் முதலாவதாக ஆரம்பிக்க,
வளையல்களை மேல்நாட்டு மருமகளுக்கு அடுக்க,

மசக்கைக் கருப்புச் சேலை அழகாய் உடுத்தியவள்,
வலக்கை, இடக்கைகளை ஆசையுடன் காட்டினாள்.

வளையல் பெட்டிகளிலிருந்து, எங்களில் இருவர் கூடி,
வளையல்கள் நாற்பத்தைந்து தேர்வு செய்து வைக்க,

அத்தனையும் அணிந்துகொண்டு, அழகுப் புன்சிரிப்புடன்
அத்தனை காமராவுக்கும் நன்கு 'போஸ்' கொடுத்தாள்.

கொடுத்துச் சிவந்த கரம் எனக் கூறுவதுபோல், வளை
அடுக்கச் சிவந்த கரமாய் அவள் கைகள் ஆனதால்,

கைவளை இரண்டிரண்டாகப் பாங்காக அடுக்கி - அவள்
கைகளைக் காத்தோம் குளிர வைக்கும் 'கிரீம்' தடவி.

வந்திருந்த எல்லா மங்கையர்க்கும், சென்னையில் வாங்கி
வந்திருந்த வண்ண வளைகளை அன்புடன் அளித்தோம்.

அனுமனை வேண்டினால் எல்லாம் நல்லபடி நிகழும் என
அனுமனை எப்போதும் வேண்டும் என் அக்கா சொல்ல,

மனமார வேண்டினேன் அனுமனுக்கு வெண்ணைக் காப்பு;
இனிதாக முடிந்தது தங்கையின் மருமகளின் வளைகாப்பு!

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 41


சின்னதாய் அக்னி மூட்டுவதே இங்கு மிக அழகு!
சின்னத் துணி நாடாக்களை உருண்டையாகச் சுற்றி,

சின்னப் பந்தளவு ஆனதும், அதை நெய்யில் நனைத்து,
சின்னக் கற்பூரக் கட்டி ஏற்றி, அதன் மீது வைக்க,

அழகாக உதிக்கிறது அக்னி, ஹோமத்தின் தொடக்கமாக;
அழகாக அது தொடர்கிறது, நீண்ட நேரம் அடக்கமாக.

நம் குல வழக்கப்படி பஞ்சகச்சமும், மடிசாரும் உடுத்தி,
நம் பிள்ளைகள் தயாராக சீமந்த பூஜைகள் தொடங்கின.

பாட்டுப் பிரியர்கள் நிறையப்பேர் இருந்ததால்.
பாட்டு மாமிகள் அனைவரும் கூடி அமர்ந்தோம்.

'அகிலாண்டேஸ்வரி ரக்ஷமாம்' - க்ருதி பாடினோம்.
அகிலாண்டேஸ்வரியின் கருணையை நாடினோம்.

பெண் குழந்தைகள் இரண்டு 'ஆம்பளை, பொம்பளை' என்று
தன் மழலையால் கூறத் தெரியாமல் விழிக்க, சாஸ்திரிகள்

'ஆங்கிலத்தில் Boy - Girl என்று கூறி இடியுங்கள்', என்று
ஆங்கிலத்தில் தம் புலமையைப் பறை சாற்றிக்கொண்டார்.

Boy - Boy என்றே கூறலாமே! Scan செய்ததில்
Boy தான் என்று தெரியுமே என நான் உரைத்தேன்.

குறித்த முகூர்த்தத்தில் 'மூக்குப் பிழிவது' நடந்தேற,
அடுத்த ஆரத்திக்கு முன்பு 'சிறப்புப் பாடல்' பாடினேன்.

ஆசுகவியாக என்னைச் சுற்றமும் நட்பும் நினைப்பதால்,
'ராசுகவி', 'நக்கீரி' என உடன்பிறப்புகள் அழைப்பதால்,

எழுந்ததும் காலையில் என் முதல் வேலையாக
எழுதியிருந்தேன், உதித்த அந்தப் பாடலை வேகமாக.

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 42


பாட்டு நான் ஒவ்வொரு வரியாய்ப் பாட, பின்-
பாட்டு, பாட்டு அறிந்தோர் அனைவரும் சேர்ந்து பாட,

ஆங்கிலம் மட்டுமே சில நண்பர்கள் அறிந்ததால், பாட்டின்
ஆங்கில மொழி பெயர்ப்பும் வரிக்கு வரி செய்யப்பட்டது!

சந்தோஷமாய்க் கரவொலி எழுப்பி, ஆனந்தித்து,
சந்தோஷமாய் நண்பர்கள் முந்தினர் பந்திக்கு!

சாப்பாடு முடித்துவிட்டுச் சில பேர் புறப்பட - எங்களுக்கு
ஏற்பாடு செய்த ஹோட்டலிலிருந்து செக்-அவுட் செய்தோம்.

'கட்டுச் சாதக் கூடை' கலியாணம் முடிந்து கட்டுவதுபோல,
'பெட்டிச் சாதம்' கொடுத்தோம் ஊருக்குச் செல்வோர்க்கு.

ஹைவேக்கள் மிகவும் நன்றாக இருப்பதால் - இங்கு
ஹைவேப் பயணங்களுக்கு யாரும் அஞ்சுவதில்லை.

நாலு மைல்கள் இந்தியாவில் செல்லத் தயங்கும் நம்மவர்கள்
நானூறு மைல்கள் காரில் சென்று நண்பனைப் பார்க்கின்றார்.

பல இடங்களில் rest area -க்கள் நேர்த்தியாக இருப்பதால்,
பல மைல்கள் சுற்றினாலும் சிரமமே தெரிவதில்லை.

நெடுஞ்சாலைகள் சீரமைப்பு இந்தியாவிலும் பரவுகிறது.
நெடும் பயணங்கள் இனிதாகும் எதிர்காலம் தெரிகிறது!

விருந்தினர் எல்லோரும் அவரவர் ஊர் திரும்பிவிட,
விருந்தினராய் அங்கு நானும் என்னவருமே இருந்தோம்.

இரண்டு நாள் சென்றபின் தங்கை மகனை விமான நிலையம்
கொண்டுபோய் விடுவதற்கு அவனுடன் காரில் பயணித்தோம்.

வளைந்த மலைப் பாதைகளிலிருந்து தெரிந்த பள்ளத்தாக்குகளில்
விளைந்து கிடக்கும் காடுகளின் அழகு கண்களை நிறைத்தது!

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 43


ஒளிரும் தங்க நிற வட்ட நிலா, ஜன்னல் வழியே
ஒளிதனை அதிகாலை பரப்ப, அதை ரசித்தபடி,

விழித்துக்கொண்டு, அதனழகைக் 'கிளிக்' செய்து, நீராடி,
வழிக்குக் கொண்டு செல்ல உணவு எடுத்துக்கொண்டு,

தயாராக, கடிகாரம் ஏழு முறை ஒலித்தது. தங்கையும்
தயாராக வைத்திருந்த காரின் சாரதியானாள், எமக்கு.

அன்று வேறு வழியே பயணம், வேறு விமான நிலையம்.
என்றும் மங்கா அழகுடன் இயற்கையன்னை பரிமளித்தாள்.

வளைந்து செல்லும் மலைப்பாதை; வழி நெடுகிலும்
வளர்ந்து நிற்கும் மரங்கள், பல வகை நீல மலைகள் என

எத்தனை வண்ணக் கலவைகள்! 'எல்லாம் கண்டு ரசிக்க, நமக்கு
எத்தனை கண் இருந்தாலும் போதாதோ?', என மனம் நினைக்கும்.

சரியாக கவனிக்காமல், செல்லும் பாதையில் ஒரு Exit
தவறாக எடுத்ததால், தங்கைக்குக் கொஞ்சம் தடுமாற்றம்.

வழியில் கண்ட ஒரு வண்டியின் ஓட்டுனர், சரியான
வழியைக் காட்ட, விமான நிலையம் அடைந்தோம்.

முதல் விமானம் குறித்த நேரத்தில் புறப்பட, பயணத்தின்
முதல் பகுதி முடிய, அடுத்த விமானம் ஏற இன்னும்

இருபத்தைந்து நிமிடங்களே இருக்க, சென்னை, தி.நகர் நெரிசலின்
இருபத்தேழு வருடப் பழக்கத்தால், முட்டி மோதிக்கொண்டு,

கடைசி இரு பயணிகளாய் 'ஷட்டில்' பஸ்ஸில் புகுந்து,
கடைசி இரு பயணிகளாய் விமானத்திலும் அமர்ந்தோம்!

ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்து என்ன பயன்? - விமான
ஓட்டுனர் அறிவித்தார், விமானம் புறப்படத் தாமதம் ஆகுமென!

 
வாழ்க்கை பயணம்

ஒரு நதியில்லாத ஓடம்
சாலையில்லாத வாகனம்
இறக்கையில்லாத பறவை
தண்டவாலமில்லாத ரயில்

அறுபதை அடைய போகிறேன்
சாதித்தது நினைவில்லை
சாதிக்கும் எண்ணமில்லை
சாதிக்கபோவது எதுவுமில்லை

தாய் தந்தைக்கு எதுவும் செய்தேனா
தாரத்திற்கு தக்க மரியாதை தந்தேனா
உடன் பிறந்தோர் உள்ளம் மகிழ்விதேனா
குழந்தைகளுக்கு குறை ஏதும் வைத்தேனா

சுற்றத்தாருக்கு ஏதும் பயன் செய்தேனா
சமூகத்திற்கு சேவை செய்தேனா
தாய்நாட்டிற்கு எண்ண செய்தேன்
தமிழ் மொழிக்கு எண்ண செய்தேன்

திரும்பி பார்கிறேன்
எதுவும் நினைவிற்கு வரவில்லை
வீண் வம்பு விதண்டா வாதம் மட்டுமே
நினைவில் நிற்கின்றன

இனிவரும் நாளில்
இனிய ஒரு சபதம் எடுப்போம்
நல்லதை நினைப்போம்
நல்லதை செய்வோம்

நாடு நலம் பெறட்டும்
சுற்றம் சுகம் பெறட்டும்
சமூகம் செழிக்கட்டும்
தாய் மொழி வளரட்டும்
 
ஒரு புதிய கணக்கு!

ஒருவர் நலம் செய்தால் அவர் இல்லம் ஏற்றம் பெறும்.
ஒரு இல்லம் நலம் செய்தால் சுற்றம் ஏற்றம் பெறும்.

சுற்றம் நலம் செய்தால், உலகமே ஏற்றம் பெறும்.
கற்றறிந்த எல்லோரும் நலமே செய்ய விழைவோம்!

அன்பை மட்டுமே நாம் பெருக்கிட வேண்டும்.
துன்பம் ஏதும் செய்தல் கழித்திட வேண்டும்.

சிரிப்பலைகளை எப்போதும் கூட்டிட வேண்டும்.
நெறி தவறாத வாழ்வினை வகுத்திட வேண்டும்!

புதிய கணக்கை இன்றே தொடங்கினால்,
இனிய வாழ்வும் தானே மலர்ந்திடுமே!

 
Last edited:
பயணம் தொடர்கிறது....

கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 44


தாமதமாகும் விமானமென எங்களுக்கு அறிவித்தாலும்,
தாமதமாகவே இது பற்றி அறிவித்தனர் 'இன்டர்நெட்டில்'!

இரண்டு மணி வீணானது இத் தாமத அறிவிப்பால் மகனுக்கு;
இரண்டு மணி தாமதமானது விமானம் தரை இறங்குவதற்கு!

பயணத்தின் தாமதம் பற்றி முதலிலேயே அறிவித்தால்
பயணிகள் விவாதம் செய்து refund கேட்பாராம்! எனவே

புறப்பட ஆயத்தம் செய்வதுபோல் பாவனை காட்டிய பின்,
புறப்படத் தாமதம் மோசமான வானிலையால் என்பாராம்!

புதிய இந்த யுக்திகள் அறியாத நாங்கள் இருவரும்
புதிய ஒரு அனுபவமாகவே இவற்றை உணர்ந்தோம்.

இந்த முறை ஒரே ஒரு காபி மட்டும் பரிமாறியதால்,
வந்த பசி வாட்டியது. முகம் வாட்டம் காட்டியது.

இனி வரும் பயணங்களில் தவறாமல் எடுக்கணும்
தனியாகச் சோற்று மூட்டை, பழைய காலம் போல.

அதிகச் செலவுகளைக் குறைப்பதாகக் கூறி, இப்போது
அதிகச் சிரமங்களைப் பயணிகளுக்குத் தருகின்றார்.

கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கிடைப்பதற்குக் கூட
கெஞ்ச வேண்டியிருக்கிறது! இது இன்றைய நிலை.

மாலை நாலு மணியானது வீட்டிற்கு வந்து சேர - முதல்
வேலையாகச் சிற்றுண்டி தயார் செய்து பசியாறினோம்.

பத்து நாட்களுக்குப் பின், பிள்ளைகளுடன் சேர்ந்து உண்டோம்.
பத்து மணிக்குப் படுக்கையில் உடல் சோர்ந்து விழுந்தோம்.

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 45


வார விடுமுறையில் AQUARIUM காண, பிள்ளைகள்
நேரம் ஒதுக்கி, ஆவலுடன் அழைத்துச் சென்றனர்.

சாலையெல்லாம் நிரம்பி வழியக் கார்கள் ஓட்டம்;
வேலையெல்லாம் மறந்து பறந்தது மக்கள் கூட்டம்.

வளைந்து நீண்ட க்யூவில் நின்று, 'டிக்கெட்' எடுத்து,
நுழைந்து சென்றோம், நீர்வாழ் உயிரினங்கள் காண.

சோகமான சீல்கள் சில கண்ணாடிப் பெட்டிகளில்
வேகமான வாழ்வு மறந்து, எங்களை வரவேற்க,

நீச்சல் வீரர் போல, குளிரும் குட்டை நீரில்
நீச்சல் அடித்துப் 'பெங்குவின்'கள் விளையாட,

சில பாம்பு வகைகள், அடைத்த பெட்டிகளில் நெளிய,
பல குட்டி மீன்கள் துள்ளி விளையாடித் திரிய,

புள்ளி மான் போல புள்ளியுள்ள மீன்களும்,
தள்ளி நின்றாலும் பயமூட்டும் சுறா மீன்களும்,

அசையாமல் கிடக்கும் சோம்பேறி ஈல் வகைகளும்,
அசைபோட்டு வாயசைக்கும் மிகப் பெரிய மீன்களும்,

வண்ண வண்ணமாகப் பல விதப் பவளச் செடிகளும்,
எண்ண எண்ண இனிக்கும் பல நிற ஜெல்லி மீன்களும்,

பல டன்கள் எடையுள்ள திமிங்கலத்தின் எலும்புக் கூடும்,
பல ஆண்டுகள் உயிர் வாழும் பெரிய கடல் ஆமையும்,

மூன்று மாடிக்கு உயரும் பெரிய கண்ணாடித் தொட்டியில்
மூன்று வேறு உயரங்களில் நீந்திச் சுற்றும் மீன்களும்,

கண்டு களித்தாலும், அவை பற்றிய விவரங்கள் திரட்டாமல்,
கொண்டு வந்த காமராவை, கூட்டத்தில் புகுந்து 'க்ளிக்'கினேன்!

mail


mail


பெயர் தெரியாவிடாலென்ன? அந்த உயிரினங்களின்
உயர்வான புகைப்படங்கள் கிடைக்கப் பெற்றேனே?

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 46


நான்கு நிறங்களில் இங்கு மெட்ரோத் தடங்கள் உண்டு;
நன்கு விளங்கும் வரைபடங்கள் ஸ்டேஷன்களில் உண்டு.

பல நிலையங்களில் எஸ்கலேட்டர்களில் இறங்கி, ஏறலாம்.
சில நிலையங்களில் வேறு நிற ரயிலில் போக மாறலாம்.

வெவ்வேறு உயரங்களில் பாதைகள் அமைந்திருக்கும்;
வெவ்வேறு நிறங்களில் ரயில்கள் அமைந்திருக்கும்.

நிறங்களில் சிவப்பு, பச்சை, ஆரஞ்சு, நீலம் என நான்கு
நிறங்களில் நான்கு தடங்கள் குறிக்கப்பட்டு இருக்கும்.

மெட்ரோ ரயில் நிலையம் Alewife - லிருந்து Aqurium அடைய
மெட்ரோ ரயிலில் மூன்று நிறத் தடங்களில் பயணித்தோம்.

திரும்பும் வழியிலும் அதேபோலப் பயணித்து, காரில்
திரும்பினோம் இல்லத்திற்கு ஒரு பார்க் வழியாக.

ஒருவர் அமரும் ஊஞ்சல் பலகையில் அமர்ந்த நான்,
ஒருவரும் போட்டிக்கு இல்லாமல் ஆடினேன் அன்று!

இரவு எட்டு மணிக்கும் சூரிய ஒளி இருப்பதால்
இரவு நேரம் வருவதே நமக்குத் தெரிவதில்லை!

சைனா டவுன் ஞாயிறன்று சுற்றியபோது, கண்ணில் பட்டவை
சைனா, தாய்லாந்து உணவகங்களும், நடைபாதைக் கடைகளும்.

டாலர் ஷாப்பை விட விலை அதிகம் சொன்னதால், ஒரு
டாலர் கூடச் செலவில்லாத Window shopping செய்தோம்.

எத்தையும் தின்பார்கள் சீனர்கள் என்பதை மாற்றி
சுத்தமான சீனச் சைவ உணவகங்களும் கண்டோம்!

தாய்லாந்து உணவுகளில் தேங்காய்ப்பாலே அதிகம்.
தாய்லாந்து தேநீரிலும் தேங்காய்ப்பாலே இருக்கும்.

பாலை அடிப்படையாகக் கொண்ட எதுவும் உண்ணாமல்.
பாலை விடுத்த vegan களுக்கு இது மிகவும் ருசிக்கும்.

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 47


ஆறு ஆண்டுகளுக்கு முன் கண்ட அமெரிக்காவில், பல்-
வேறு மாற்றங்களை இப்போது காண முடிகிறது!

பேசுவதற்கு செல் போனின் உபயோகம் குறைந்து,
பேசுவதற்கு Black berry பலரிடம் இருக்கிறது.

நினைவாற்றல் அதிகமுள்ள Black berry இன்று
பல மாற்றங்களில் முதன்மை வகிக்கிறது இங்கு.

இன்டர்நெட் வசதியுடன் இது விளங்குவதால்,
இன்டர்நெட் உபயோகிக்க Lap top தேவையில்லை!

மெட்ரோ ரயில் நுழை வாயிலில், சுற்றும் கம்பித் தடைகள்
இப்போது மாறி, திறந்து மூடும் கதவுகளாக உள்ளன.

Touch screen காணுமிடமெல்லாம் அமைக்கப்பட்டு,
Touch screen உபயோகம் மிக அதிகமாகிவிட்டது.

கார்களில் எல்லோரும் G P S ஒன்றை வைத்துக்கொண்டு,
ஊர்களில் சுற்றுகிறார், அதனிடம் வழி 'கேட்டுக்கொண்டு'.

அழகான ஆங்கிலத்தில் பேசி வரும் அது, தொடர்ந்து
அழகாக வழி கூறும், சரியான விலாசம் கொடுத்தால்!

பாட்டுக்கள் கேட்க சி.டிக்கள் உபயோகிப்பது குறைந்து,
பாட்டுக்கள் கேட்க I-pod -கள் இளைஞர்கள் வைத்துள்ளார்.

பாலின் விலையில் பாதியிருந்த பெட்ரோல் விலை
பாலின் விலையை நெருங்கி விட்டது இப்போது!

உணவகங்கள் இன்னும் அதிகரித்ததுபோல் தெரிகிறது.
உணவகங்களில் vegan வகைகளும் நன்கு கிடைக்கிறது.

எங்கும் மாற்றங்கள் பெருகி வந்தாலும், பெண்கள் தம்
அங்கம் தெரிய ஆடை அணிவது மட்டும் மாறவில்லை!

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 48


பன்முக ஈடுபாடு பற்றி முன்பே எழுதியுள்ளேன். அதை
இன்முகத்துடன் ஏற்றால் என்றும் 'சலிப்பு' இல்லை.

இன்பமும் துன்பமும் இணைந்த வாழ்வினில் - என்றும்
துன்பத்தின் சிகரமான சுய பச்சாதாபம் வரக்கூடாது!

வந்துவிட்டால் நீங்காத இத் துயரம், பன்முக ஈடுபாடு
வந்துவிட்டால் அறவே இல்லாது ஓடிப் போய்விடும்!

நல்ல பல விஷயங்களில் நாட்டம் இருந்துவிட்டால்,
நல்ல விதமாக தினமும் நேரம் பறந்துவிடும்.

இன்னொரு விஷயத்திலும் கவனம் தேவை! நாம்
இன்னொருவர் பாராட்டை எதிர்பார்க்காத மன நிலை.

நம் ஆத்ம திருப்தியை முதன்மையாகக் கொண்டால்,
நம் மனமும் சலனமின்றித் தூய்மையாய் இருக்கும்.

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம்
இந்த நாட்டில் அதிகம் போற்றப்படவில்லை.

கண்ணில் காணாத அந்த வானவெளி நிகழ்வை
எண்ணி என்ன பயன் என விட்டு விட்டாரோ?

கருப்புப் பகுதியை எக்ஸ்ரே பிலிமில் தேடி எடுத்து,
விருப்பத்துடன் சூரிய கிரகணத்தைக் காணும் நான்,

நாடினேன் இன்டர்நெட்டை; அதில் பல விதமாய்த்
தேடினேன். மாலையில் கண்டேன் N D T V படைப்பை!

ஒருவருக்கு எண்பதாயிரம் என்று டிக்கட் பணம்
செலவழித்து, நாற்பத்தி இரண்டுபேர் விமானத்தில்

விண்வெளியிலிருந்து படம் எடுத்ததற்கு இணையாக, காசி
மண்ணிலிருந்தும் எடுத்த 'வான வைர மோதிரம்' கண்டேன்!

mail


 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 49

எங்கள் முதல் அமெரிக்க விஜயத்தில், வீட்டிலேயே
எங்களின் விருப்பமான திரைப்படங்கள் கண்டோம்.

இம்முறை பெண்ணரசி துணை வந்துவிட்டதால்,
ஒருமுறை திரை அரங்கு சென்றுவர விழைந்தோம்.

புதிய வருகையாய் ஆறாவது harry potter வர,
புதிய அனுபவம் பெற, டிக்கட்கள் வாங்கினோம்.

ஒரு பெரிய மாடிக் கட்டிடத்தில் பல அரங்குகள் காணலாம்.
இரு அரங்குகளில் ஒரே திரைப்படம் ஓடக் காணலாம்.

எந்த இருக்கையானாலும் டிக்கட் பத்து டாலர் - உள்ளே
வந்தவர் அமரலாம் தனக்குப் பிடித்த இருக்கையில்.

சாப்பாட்டுக் கடைகள் இங்கும் நிரம்பியிருக்க, ரசிகர்
சாப்பிட பாப்கார்ன் முதல் பலவற்றை வாங்குகிறார்.

கோலா பெரிய அளவில் நாங்களும் குடித்திருக்க,
கோளாறு ஆகிவிட்டது; இடைவேளை கிடையாது!

நேரம் செல்லச் செல்ல அவஸ்த்தை பெருகிவிட,
நேரம் கடத்தாமல் கிளைமாக்ஸ் சமயம் எழுந்தேன்.

ஆறு பேரிடம் மன்னிக்கச் சொல்லி அவர்களைத் தாண்டி
ஆறு நொடியில் ஓடினேன் rest room ஐத் தேடி!

சாரிடம் கிராமத்துப் பள்ளிகளில், நம் பசங்கள், எழுந்து
"சார்! Interval வருது!" என ஓடுவது நினைவு வந்தது!

படம் முடியும் வரை ஓரமாகவே நின்றுகொண்டு,
படம் முழுதும் பார்த்து, இல்லம் திரும்பினோம்.

காமெடி படம் போலவே சென்ற படம் கடைசியில்
டிராஜடியாக முடிந்தது, முதியவர் மரணத்தால்!

மிகவும் நல்ல பண்பு பட ரசிகர்களிடம் இருக்கிறது;
மிகவும் அமைதி காக்கின்றார் விசில் சத்தமில்லாது.

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 49

எங்கள் முதல் அமெரிக்க விஜயத்தில், வீட்டிலேயே
எங்களின் விருப்பமான திரைப்படங்கள் கண்டோம்.

இம்முறை பெண்ணரசி துணை வந்துவிட்டதால்,
ஒருமுறை திரை அரங்கு சென்றுவர விழைந்தோம்.

புதிய வருகையாய் ஆறாவது Harry Potter வர,
புதிய அனுபவம் பெற, டிக்கட்கள் வாங்கினோம்.

ஒரு பெரிய மாடிக் கட்டிடத்தில் பல அரங்குகள் காணலாம்.
இரு அரங்குகளில் ஒரே திரைப்படம் ஓடக் காணலாம்.

எந்த இருக்கையானாலும் டிக்கட் பத்து டாலர் - உள்ளே
வந்தவர் அமரலாம் தனக்குப் பிடித்த இருக்கையில்.

சாப்பாட்டுக் கடைகள் இங்கும் நிரம்பியிருக்க, ரசிகர்
சாப்பிட பாப்கார்ன் முதல் பலவற்றை வாங்குகிறார்.

கோலா பெரிய அளவில் நாங்களும் குடித்திருக்க,
கோளாறு ஆகிவிட்டது; இடைவேளை கிடையாது!

நேரம் செல்லச் செல்ல அவஸ்த்தை பெருகிவிட,
நேரம் கடத்தாமல் கிளைமாக்ஸ் சமயம் எழுந்தேன்.

ஆறு பேரிடம் மன்னிக்கச் சொல்லி அவர்களைத் தாண்டி
ஆறு நொடியில் ஓடினேன் rest room ஐத் தேடி!

சாரிடம் கிராமத்துப் பள்ளிகளில், நம் பசங்கள், எழுந்து
"சார்! Interval வருது!" என ஓடுவது நினைவு வந்தது!

படம் முடியும் வரை ஓரமாகவே நின்றுகொண்டு,
படம் முழுதும் பார்த்து, இல்லம் திரும்பினோம்.

காமெடி படம் போலவே சென்ற படம் கடைசியில்
டிராஜடியாக முடிந்தது, முதியவர் மரணத்தால்!

மிகவும் நல்ல பண்பு பட ரசிகர்களிடம் இருக்கிறது;
மிகவும் அமைதி காக்கின்றார் விசில் சத்தமில்லாது.

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 50


அடுத்த பயணம் செல்ல ஆயத்தமானோம் - எங்கள்
அடுத்த தலைமுறைக் குழந்தைகள் காணும் ஆர்வத்துடன்.

அதிகாலை நாலு மணிக்கு எழுந்து நீராடி, ஒரு
மிதவேக TAXI யில் விமானம் ஏறப் புறப்பட்டோம்.

நாலு பெட்டிகளும் அழகாய் 'டிக்கி'யில் அமர - நாங்கள்
நாலு பேரும் வசதியாய் வண்டியில் அமர்ந்தோம்.

சரியான நேரத்தில் அந்த விமானம் புறப்பட,
சரியான நேரத்தில் ALBUQUERQUE சென்றோம்.

'அல்பகர்க்' என்று நம் நாட்டில் உச்சரிப்பதை
'அல்பகர்க்கி' என்று இங்கு இழுக்கின்றார்!

புதிய மெக்சிகோவின் இந்நகரத்தில் எங்கும் உள்ளன
புதிய வடிவத்தில் பற்பல பெரிய உலோகச் சிலைகள்.

உடைகளும் கொஞ்சம் மாறுதலாய்த் தெரிய, பல
கடைகளில் நிறைய மெக்சிகன் உணவுகள் நிறைய,

கார் வாடகைக்கு எடுக்க ஷட்டில் பஸ்ஸில் சென்று,
கார் எடுத்துப் புறப்பட்டோம் LAS ALAMOS செல்வதற்கு.

வழியில் SANTA FE என்ற நகரம் தாண்டிச் சென்றோம்;
வழி நெடுகப் பாறை மலைகள் பல நிறத்தில் கண்டோம்.

ஒட்டகம் போலப் பாறையொன்று ஓரிடத்தில் உள்ளது;
தட்டையான உச்சியுள்ள BLACK MESA மலை உள்ளது.

mail


பாவ புண்ணிய நம்பிக்கை இந்த மக்களுக்கும் உள்ளதாம்.
பாவம் கிடைக்கும் BLACK MESA மீது ஏறினால் என்பாராம்.

mail


எத்தனையோ காலமாய்ப் பெருகிய எரிமலைத் தீக்குழம்பு,
எத்தனையோ காலமாய் ஆறி, மலைகளாக மாறினவாம்.

எரிமலைகள் பல வருடமாய் அடங்கிவிட, LAS ALAMOS - ஸில்
அரிய அணு ஆராய்ச்சிக் கூடம் ஒன்றை அமைத்துள்ளார்.

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 51


அல்பகர்கி உணவகம் பற்றிச் சொல்லவில்லையே? - வெளியே
செல்பவர்க்கு அச்சம் தரும் வகையில் துப்பாக்கி EXIT அருகே!

வெளியே செல்லும்போது பணம் கொடுக்காமல் போவோரை,
தனியே கூட்டிச் சென்று, துப்பாக்கி காட்டி மிரட்டுவாரோ?

mail


காய்கறிகளை நம் போல நன்கு வேக வைப்பார் மெக்சிகர்கள்.
காய்கறிகளை அரை வேக்காட்டிலே எடுப்பார் மற்றவர்கள்.

எந்த சைனீஸ் உணவு, தாய்லாந்து உணவுகளிலும்,
வெந்த காய்கறிகளை நாம் காணவே முடியாது!

சிவப்பு பச்சை குடைமிளகாய்களை அரைத்த விழுதில்,
சிவப்பா பச்சையா வேண்டுமென கேட்கிறார் மெக்சிகர்.

கிறிஸ்மஸ் என்று கூறினால் இவர்கள் மகிழ்வார்களாம்;
கிறிஸ்மஸ் என்பது இரு வகைகளும் தருமாறு கேட்பதாம்!

ஒரு மனிதர் தனியே அமர்ந்து கிடாரில் ராகங்கள் தேட,
ஒரு வழியாக நானும் ராக ஆராய்ச்சியில் முழுகினேன்.

டாலர் நோட்டு கொடுத்தால் அவர் மகிழ்வுடன் ஏற்கிறார்.
டாலர் மதிப்பால் நாமோ கொடுக்கவே தயங்குகின்றோம்.

இங்கு வந்து ஆண்டுகள் பல ஆனதால், நம் பிள்ளைகள்
இங்கு உள்ள பழக்க வழக்கம் அறிந்து, கொடுக்கின்றார்.

பில் தொகையில் 15 சதமானம் இனாமாக சர்வருக்குச்
செல்லும்போது தருவதும் இங்கு பொதுவான வழக்கமாம்.

ஒரு முறை உணவகம் நால்வர் சென்று வந்தால்,
அறுபது டாலர் வரையில் செலவு ஆகிவிடுகிறது.

ஆனால் TACO BELL எனும் DRIVE-IN உணவகங்களுக்குப்
போனால், குறைந்த விலையிலே உணவு கிடைக்கிறது.

சப்பாத்திக்குள் பீன்ஸ் அரைத்து வைத்து மடித்த
சப்பாத்தி ரோல் போலக் கூட இங்கு கிடைக்கிறது.

 
Last edited:
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 52


அரிதான பழங்கால அமைப்புகளைக் காக்கும் இடம் பற்றி
அறிந்து கொண்டோம். அது BANDELIER NATIONAL MONUMENT.

பழங்கால குகை வாழ் மக்கள் இருந்த இடம்,
இக்கால அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகிறது.

mail


அவர்கள் மண்ணால் கட்டிய வீடுகள் சிதிலமடைந்ததால், அச்
சுவர்களைக் காக்க 1930 - ல் சிமென்ட் கலவை இட்டனராம்.

சிமென்ட் பூச்சு எரிமலை மண்ணை கெடுத்ததால், 2001 - ல்
சிமென்ட் பூச்சுக்கு பதிலாக மண் கலவை இட்டனராம்!

ஒரு மைலுக்கும் மேல் பாதை; சிதிலமடைந்த சுவர்கள்;
ஒரு சின்ன மலையில் அமைக்கப்பட்ட குறுகிய படிகள்.

மலைகளின் குட்டிக் குட்டி குகைகளில் பழங்குடியினர்
மலைவாசிகளாய் 1100 களில் வாழ்ந்தனராம். - அந்த

குகைகளில் சிலவற்றுக்கு ஏணிப்படிகள் உள்ளன.
குகைகளின் உள்ளே சென்று சிறியவர் பார்த்தனர்.

mail


குட்டி மிருகங்கள் பல அங்கு இருப்பதாகச் சொன்னாலும்,
குட்டி மான் ஒன்று மட்டும் நாங்கள் கண்டுபிடித்தோம்.

மரங்களில் PONDEROSA மரம் இளமையில் கருப்பு நிறம்;
மரங்கள் முதிர்ந்ததும் பட்டைகள் ஆகும் ஆரஞ்சு நிறம்.

VENILLA வாசனை அதன் பட்டைகளை முகர்ந்தால் வரும்;
VENILLIAN என்ற செயற்கை VENILLA ரசாயனம் அதிலிருக்கும்.

இனிய இந்த அனுபவங்கள் சில பெற்ற பின்,
இனிய இல்லம் திரும்பி வந்தோம் இரவில்.

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 53


பல சாலை ஓரங்களிலும், இல்லத் தோட்டங்களிலும்,
பல வண்ணக் கூழாங்கற்களால் அழகு செய்துள்ளார்.

SPANISH FESTIVAL ஒன்று SANTA FE யில் இருப்பதால்,
SPANISH நாகரிகம் அறிய எல்லோரும் அங்கு சென்றோம்.

ஸ்பானிஷ் விழா மிகக் கோலாகல விழாதான். அங்கு
ஸ்பானிஷ் மக்களுடன் வேறு பலரும் வருகின்றார்.

பெரிய ஒரு இசைக்குழு உச்ச ஸ்தாயியில் பாடிக்கொள்ள,
பெரியவர்களும், சிறுவர்களும் ஆடிக் கொண்டாடித் துள்ள,

வண்ணமயமான அந்த விழாவும், காண்போர்களின்
எண்ணங்களில் உற்சாகத்தை ஏற்றித்தான் விடுகிறது.

mail


விலைப் பட்டியலைப் பார்த்தால் ஒவ்வொன்றும்
மலையாகத் தெரிய, சும்மாவே சுற்றி வந்தோம்!

கடை வீதிகளிலும் அதே கதைதான்! சின்ன
உடை கூட பெரிய விலையில் விற்கப்படுகிறது.

mail


mail


வண்ணப் பானைகள், பீங்கான் பொம்மைகள், பலவித
வண்ண சாக்கலேட் பேப்பரில் செய்த அழகுப் பைகள்,

பல வண்ணக் கல் பதித்த அழகிய நகைகள் என
பல இருந்தாலும் வாங்குவது நமக்கு அரிதாகும்!

இங்குள்ள பெண்கள் பலர், வண்ணக் கற்கள் பதித்த
பாங்கான ஒட்டியாணங்களை ஆவலாய் அணிகின்றார்.

 

Latest posts

Latest ads

Back
Top