Raji Ram
Active member
சிந்தை கவர்ந்த வட இந்தியப் பயணம் - 20
இரு வித சவாரிகள் Pinjore Garden நுழைவாயிலின் அருகே!
இரு அலங்கரித்த ஒட்டகங்களில் ஒன்றுதான் மிகவும் அழகு!
சின்ன ஏணி அதன் மீது ஏற அமைந்திருந்தது; மூவரடங்கிய
சின்னக் குடும்பம் ஆவலுடன் அந்தச் சவாரியால் மகிழ்ந்தது!
குதிரைச் சவாரியும் சிறுவருக்காக இருந்தது; ஆனாலும் அக்
குதிரையில் ஏறிச் செல்ல எவரும் முன்வரவில்லை; பாவம்!
சிறுவர் அமர்ந்து போக ஒரு சின்னத் தொடர் வண்டி உள்ளது.
சிறுவர் கண்டு ரசிக்க ஒரு ரயில் எஞ்சினின் மாதிரி உள்ளது!
எங்கள் வழிகாட்டி, பேருந்திலே நுழைவுக் கட்டணம் வாங்கி,
நாங்கள் க்யூவில் நிற்காது, விரைவாகச் செல்ல உதவினார்.
பிருந்தாவனம் போல அமைக்க விழைந்த அழகிய தோட்டம்.
விரும்பிய வண்ணம் புகைப்படங்களை எடுத்தோம் நாங்கள்.
நீண்டு உயர்ந்த மரங்கள் வேலியாக இருக்க, ஆவலுடன் பல
வண்டுகள் தேன் குடித்து அமர்ந்த வண்ணப் பூக்கள் அசைய,
ஒரு மரம் உடைந்து, ராட்சதனின் கை விரல்கள் போலிக்க,
ஒரு நாய் வெய்யிலின் வெப்பம் தாளமல் தண்ணீர் அருந்த,
நடைபாதைகளின் இரு மருங்கிலும், வண்ணப் பூக்கள் திகழ,
நடை தளர்ந்தவருக்குப் படிகளருகே சாய்வுப் பாதை இருக்க,
தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் சில நீரூற்றுக்கள் குளிர் தர,
கண்கள் கண்ட காட்சிகள் அனைத்தும் அக மகிழ்வு தந்தன!
திரும்பும் சமயம்தான் அது கண்களில் பட்டது! அது மனம்
விரும்பும் அழகிய பளிங்கில் செதுக்கிய பல வண்ணங்கள்!
நல்ல நடைதான் அத் தோட்டத்தைச் சுற்றி வர; ஆனாலும்,
நல்ல மன நிறைவு கிடைத்ததே, எம் கடைசி நிறுத்ததிலும்!
தொடரும் .................