• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...


Model of rail engine.

IMG_5179.JPG

dear raji, this looks a real one. not a model. maybe it was functioning once upon a time, and now retired?
 

சிந்தை கவர்ந்த வட இந்தியப் பயணம் - 21


இன்பமும் துன்பமும் கலந்ததுதானே வாழ்க்கை! வாயிலில்,
துன்பமே பெரும் பகுதியென்று வாழும் சேரிச் சிறுவர் சிலர்!

கலைந்த கேசம்; ஏங்கும் விழிகள்; ஏதோ அளவில் உடைகள்;
நிலைத்த ஒரு சோகப் பார்வை; இதுவே அவர்களின் கோலம்!

எமது வழிகாட்டி அவர்களை எப்போதும் சந்திப்பாரோ? அவர்
தமது பர்ஸிலிருந்து பத்து ரூபாய்த் தாள்கள் சில எடுத்த பின்,

ஒவ்வொருவருக்கும் ஒரு நோட்டு எனப் பகிர்ந்து கொடுத்திட,
ஒவ்வொருவரும் ஓடினர் பக்கத்தில் இருந்த பெட்டிக் கடைக்கு!

பசியை அகற்றும் பண்டங்கள் வாங்குவாரென நான் நினைக்க,
ருசியான சாக்லேட்களை வாங்கித் தின்று மகிழ்ந்தனர் சிறுவர்!

சாக்லேட் உறையை நக்கி மெய் மறக்கும் விளம்பரம் போலச்
சாக்லேட் உறையை நக்கி மெய் மறந்தான், ஒரே ஒரு சிறுவன்!

ரப்பரால் அமைந்த சறுக்குப் பலகையில் பணக்காரச் சிறுவன்
அப்போது விளையாடி மகிழ்ந்ததை முரண்பாடாய்க் கண்டேன்!

முற்பிறவியில் செய்த புண்ணியங்கள், முரண்பாடாக உலகில்
இப் பிறவியில் பிறந்த பிள்ளைகளைப் பார்த்தாலே தெரியும்!

'அது இல்லை; இது இல்லை' என்று புலம்பும் மக்கள், இவ்வாறு
எதுவும் இல்லாத பிள்ளைகளைக் கண்டால், மனம் மாறலாம்!

கனத்த மனத்தோடு பேருந்தில் அமர்ந்து பயணித்தேன்; மனித
இனத்தில் ஏன் இத்தனை வேறுபாடுகள் என்றும் கலங்கினேன்!

நல்ல வாழ்வு தந்த இறைவனை ஒரு நொடியும் மறக்கலாகாது!
அல்லவை பல நிறைந்த உலகிலே, இறைவனே காத்திடுவான்!

கொஞ்சம் எண்ண ஓட்டங்களை இவ்வாறு ஓடவிட்ட பின்னர்,
கொஞ்சம் கண் அயர்ந்தேன், ஒரு பூச்சி மேலே விழும் வரை!!

தொடரும் ......................

 

சாக்லேட் உறையை நக்கி, மெய் மறக்கும் விளம்பரம் போலச்

சாக்லேட் உறையை நக்கி, மெய் மறந்தான் ஒரே ஒரு சிறுவன்!



IMG_5182.JPG
 

ரப்பரால் அமைந்த சறுக்குப் பலகையில் பணக்காரச் சிறுவன்.

IMG_5183.JPG
 
pix in posts 1431, 1432 -

what a contrast dear raji. did you mean to say something? ..........
There is a hint in the first two lines Sir!

ன்பமும் துன்பமும் கலந்ததுதானே வாழ்க்கை! வாயிலில்,
துன்பமே பெரும் பகுதியென்று வாழும் சேரிச் சிறுவர் சிலர்!

Some kids live with more percentage of sadness where as others with more percentage of happiness!

The contrast was very prominent since the two kinds of kids were near one another. Hence:

ரப்பரால் அமைந்த சறுக்குப் பலகையில் பணக்காரச் சிறுவன்
அப்போது விளையாடி மகிழ்ந்ததை முரண்பாடாய்க் கண்டேன்!

The conclusion is:

'அது இல்லை; இது இல்லை' என்று புலம்பும் மக்கள், இவ்வாறு

எதுவும் இல்லாத பிள்ளைகளைக் கண்டால், மனம் மாறலாம்!
 

I took both the 'photos of contrast', sitting in the bus! When I was ready to click the second one,

the bus started moving. Hence the rubber slide is not fully visible.

P.S: I set the mode to "kid's action" while clicking from the moving bus. :D
 

சிந்தை கவர்ந்த வட இந்தியப் பயணம் - 22


அரை மயக்க உறக்கத்தைக் கலைத்தது சிறிய பூச்சி ஒன்று!
சிறைப் பிடித்தேன் அதை என்னுடைய காமாரவில் அன்று!

செங்கல் சூளைகள் பல வழியில் இருந்தன. செம்மண் நிலம்
செங்க
ல் உற்பத்தியால் நாளடைவில் பள்ளமாகி விடுமோ?

ஆற்று மணல் திருட்டு நடப்பதால், நீர் வரவு குறைந்த ஆறு
ஊற்று இல்லாமல் வறண்டு போவதைப் பார்க்கின்றோமே!

நீரை நிறைத்துப் பயிர் செய்யும் சில நிலங்களும் இருந்தன.
நீரே இல்லா
து காய்ந்த, 'ஒரு காலத்து ஆறுகளும்' இருந்தன!

ஒரு பெரிய கட்டடத்தைப் பார்த்ததும் என்னவென வியந்து,
ஒரு கோழிப் பண்ணைதான் அது என அறிந்துகொண்டேன்!

வட்டக் குடிசை வடிவில் வைக்கோல் மூடிகள்; அவற்றுள்
வட்ட வட்ட வறட்டிகளை வைத்துள்ளார்! என்ன காரணம்?

உரமாகப் பயன் படுத்தவோ என்னவோ அறியேன்! வீடுகள்
அருகில் ஏதும் காணவில்லை; அதனால் இப்படி எண்ணம்!

சிங்காரச் சென்னையின் கூவத்தைப் பற்றியே பேசுகிறார்!
அங்கேயும் தலை நகரின் அருகில், சாலைக்கு இணையாக

ஓடுகிறது அதேபோல மணக்கும் கழிவு நீர் ஆறு! அங்கங்கே
சேருகிறது பெரிய குழாய்கள் சேர்க்கும் வற்றாத கழிவு நீர்!

பேருந்தின் வேகம் குறைந்தது அடர்ந்த போக்குவரத்தால்;
பொறுமை காத்தோம் எங்கள் நிறுத்தம் வரும் வரையில்.

பொறுமையாக எம்மை அழைத்துச் சென்ற வழிகாட்டிக்கு,
அருமையாக வாழ்த்துக் கூறி நாங்கள் விடை பெற்றோம்.

கண்கள் கண்ட அழகான காட்சிகளின் நினைவுகளோடு, எம்

எண்ணம் நிறைந்திட, இனிய அந்தப் பயணம் முடித்தோம்.


உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம் :pray2:

 
துள்ளுந்துப் பயணம்!

நடுத்தர வர்க்கம் பயணிக்க அதிகம்
நாடும் வாகனமே துள்ளுந்து ஆகும்!

மீட்டர் என ஒன்றைப் பொருத்தாது
கேட்பர் தாம் நினைத்த வாடகையை!

அராஜகம் செய்து வந்த இவர்களுக்கு
அரசாங்கம் கிடுக்கிப் பிடி போட்டுவிட,

கொண்டு வந்தது புதிய மீட்டர்களை;
கொண்டு வந்தும் மாற்றம் குறைவே!

சிங்காரச் சென்னையில், மருத்துவம்
பாங்காகச் செய்து கொள்ள வேண்டி,

வடக்கிலிருந்து வந்த குடும்பம் ஒன்று,
இடக்குப் பேசும் துள்ளுந்துக்காரரிடம்

மாட்டிக்கொண்டு, ஆறு கிலோ மீட்டர்
மட்டும் பயணம் செய்து, விடுதி தேட,

வாடகையாக ஆயிரங்களில் பிடுங்க,
வாடகை தந்த பின்பு புகார் தந்தாராம்

அந்த அஸ்ஸாம்காரர்! கொடுமைதான்!
இந்த அவலம் என்று தீருமோ அறியேன்!

:tsk:
 
தேவி தரிசனம்.

புத்தாண்டு தினம்; எம் இனிய இல்லம் வந்து
புத்தாண்டு வாழ்த்துரைத்தார் நண்பர் ஒருவர்.

திருவடி சூலம் எனும் இடத்தில் அமைந்த ஒரு

திருக்கோவில் செல்
தாகவும், தரிசனம் பெற

எங்களையும் அழைக்க வந்ததாகவும் உரைக்க,

பொங்கும் மகிழ்வுடன், உடனே புறப்பட்டோம்!

செங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது, இந்த

செம்மையான கருமாரி அம்மனின் ஆலயம்.

ஆலயத் திருப்பணிகள் ஒரு புறம்; மறு புறமோ

அன்ன தானம் மிகவும் சிறப்பாக நடக்கின்றது!

உள்ளே நுழைந்ததும் கண்களில் நிறைகின்றது,

உயர்ந்து ஓங்கிய அம்மன் திருவுருவச் சிலை!

அம்மனின் சிலையே இருபத்தொன்பது அடிகள்;

அடியிலுள்ள பீடத்துடன் ஐம்பத்தொரு அடிகள்!

அன்னை அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி;

அன்னையின் திருவுருவமும் பிரமாண்டமே!

சிலிர்க்க வைக்கும் அழகினைக் கண்டால், மெய்

சிலிர்க்கும்; ஆனந்தக் கண்ணீரும் பெருகிவிடும்!

புத்தாண்டு தினம் அம்மன் அருள் கிடைத்ததும்,

புத்தம் புதிய சக்தி அடைந்ததாய் உணர்ந்தோம்!


:pray:

 

அன்னை அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி;

அன்னையின் திருவுருவமும் பிரமாண்டமே!


Devi+001.jpg
 

செவ்வாய் கிரஹப் பயணம்!


'ஏழை நாட்டுக்கு 450 கோடிச் செலவில்
ஏன்
இந்த ஆராய்ச்சி தேவை?', என்று

பலரும் வியந்தாலும், விஞ்ஞானிகள்
சிலரின் தீவிர ஆராய்ச்சியின் பலனே

மங்கள்யான் செயற்கைக் கோளாகும்.
திங்களை அடைந்து வென்றது போல்,

செவ்வாய்க் கிரஹத்தைச் வட்டமிட,
செவ்வனே செய்த செயற்கைக் கோள்.

முன்னூறு நாட்கள் பயணத்தின் பின்,
தன் பணியினை அக்கோள் துவங்கும்!

இந்தியாவின் சிறப்பை நிலை நாட்ட,
சிந்தை கவரும் பயணமாக உயரும்!

:thumb: . . . :high5:
 

Latest posts

Latest ads

Back
Top