• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை

Status
Not open for further replies.
தனித்துறை குருவாய்த் தரிசனம் தருவார்
. தமிழகத் தொன்றென இதுவாம்
சனந்தனர் சனகர் புலத்தியர் மற்றும்
. தமிழ்முனி விசுவமித் திரரும்
அனலனை வணங்க வெளிவரும் சுற்றில்
. அவரது லிங்கமும் பலவே
புனலணிச் சடையர் புதிர்களை விளக்கப்
. புறம்பயம் தலம்தொழு வோமே. ... 3

கருவறைச் சுற்றுச் சுவர்களில் சிற்பம்
. கவினுற விளங்குதல் காண்போம்
உருவினில் அவைதான் சிதைந்துள காட்சி
. உளந்தனில் வேதனை தருமே
’கரும்பொடு படுஞ்சொல் மடந்தை’யின் கோவிற்
. கருவரைச் சுற்றினி ரண்டில்
பெரும்பிணி பிறப்பும் இறப்புமாம் சுழலைப்
. புறம்பயம் போக்குவ தாமே. ... 4

[’கரும்பொடு படுஞ்சொல் மடந்தை’ -- சம்பந்தர் பிரயோகம்]
 
தட்சிணா மூர்த்தி குளக்கரை மேவச்
. சட்டைநா தர்துறை மேலே
வெட்டிய விறகை ஆயலம் கொணர்ந்த
. வேழையின் காட்சியாய் நின்றார்
சட்டையப் பன்கொள் சாட்சியாய் வன்னி,
. தலமரம் புன்னையாம் நெற்றிப்
பொட்டினில் பொறியைக் கொண்டவன் மேவும்
. புறம்பயம் தலம்தொழு வோமே. ... 5

திருமண வரமும் கல்வியிற் சிறப்பும்
. செல்வமாய்க் குழந்தையும் கேட்பர்
திருவிளை யாடல் தொல்கதை மற்றும்
. திருத்தல புராணமும் பேசும்
திருமண சாட்சி சொல்லம துரையில்
. திருக்கிண றுடன்மரம் வன்னி
பொருத்திய ஈசன் பொடியணி கொண்டே
. புறம்பயம் மேவிடப் புகழே. ... 6
 
விரித்தவன் அவனே குவிந்தவன் அவனே
. வினையறப் பிரித்தவன் அவனே
சிரித்தவன் உலகாய் உருத்தவன் அவனே
. சினமுற எரித்தவன் அவனே
எருத்தினில் உதைத்தே பாலனைக் காத்தே
. எமனவன் பணிந்திட அருளைப்
புரிந்தவன் புரியாப் புதிரெனப் புணரும்
. புறம்பயம் தலம்தொழு வோமே. ... 7

இராவணன் மலையைத் தூக்கிட முயல
. இவரவன் தலைகளும் தோளும்
ஒரேவிரல் காலால் அழுத்தியே அவனை
. ஒறுத்தவன் கதறிடச் செய்தார்
சராசரம் அண்டம் யாவையும் காத்தே
. சகலமும் அழித்துயர் வுதரும்
புராதனன் புனிதன் புகலெனக் கொண்டே
. புறம்பயம் தலம்தொழு வோமே. ... 8
 
(இறுதிப் பகுதி)

மாலவன் தாளும் மலரவன் தலையும்
. மாய்ந்தனர் தேடிய லைந்தே
ஆலமர் செல்வன் தன்னிலை விளக்கி
. ஆறுதல் தந்தருள் செய்தார்
நீலமி டற்றர் நிலவணிச் சடையர்
. நிலமிசை காணுதற் கென்றே
போலியாம் மாயை நீக்கவே மேவும்
. புறம்பயம் தலம்தொழு வோமே. ... 9

ஆரணம் தள்ளும் அயல்நெறி எதுவும்
. அறமெனக் கொளுவார் இன்றி
வேரென வேதம் விளங்கிடும் சைவ
. விழுநெறி கொளுவார் உள்ளக்
காரிருள் நீக்கிக் கேள்வியின் ஞானம்
. கனியெனக் கைவரச் செய்வார்
பூரணன் பூந்தாள் பற்றியே வாழ்வோம்
. புறம்பயம் தலம்தொழு வோமே. ... 10

அத்தனைப் போற்றி ஆளுடைப் பிள்ளை
. அடியார்க் கருள்வது சொன்னார்
புத்தகம் ஏந்திப் புறம்பயம் போனார்
. பூரணன் என்றனர் அப்பர்
சித்தமஞ் ஞானம் போகவே நாடு
. சிவனருள் சுந்தரர் சொன்னார்
பொத்திடும் இமையாய் அடியவர் காப்பார்
. புறம்பயம் தலம்தொழு வோமே. ... 11

--ரமணி, 20-23/05/2015

*****
 
திருவின்னம்பூர் (இன்று இன்னம்பூர்)
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம்: 2.43.1: கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்)

கோவில்
Ezhuthari Nathar Temple : Ezhuthari Nathar Ezhuthari Nathar Temple Details | Ezhuthari Nathar- Innambur | Tamilnadu Temple | ?????????????
????????????? ??????, ?????????????? - Ezhutharinathar Temple, Thiruinnambar

பதிகம்
சம்பந்தர்: 3.095: எண்டிசைக் கும்புகழ்
??????? ???????? ???????? ????????
அப்பர்: 4.072: விண்ணவர் மகுட கோடி
??????? ???????? ???????? ????????
4.101: மன்னு மலைமகள்
??????? ???????? ???????? ????????
5.021: என்னி லாரு மெனக்கினி
??????? ???????? ???????? ????????
6.089: அல்லிமலர் நாற்றத் துள்ளார்
??????? ???????? ???????? ????????

காப்பு
எழுத்தினில் எண்ணம் எழுந்தே இறைவன்
எழுத்தறி நாதரின்னம் பூரில் - எழுந்த
விழுமத்தைப் பாட விநாயகனே உன்னைத்
தொழுதேன் அருளால் தொடு.

பதிகம்
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

கடமையெனப் பெற்றோர்கள் கல்வியருள் மழலையர்க்கே
உடைமையென நாடவருள் உமையீசன் செய்தலமாம்
சுடரோனுக் கருள்செய்த சூலமேந்தி யெழுந்தருளும்
இடிபோலும் முழவொலிக்கும் இன்னம்பூர்த் தலமாமே. ... 1

எழுத்தறிவித் தானிறைவன் எனும்வெற்றி வேட்கைநூல்
எழுத்துறுநா எண்ணுமனம் எழுதும்கை எல்லாமே
வழுத்திநிற்க வானிறைவன் வாலிறைவன் வரமருள
எழுந்தருளும் நாதெனென இன்னம்பூர்த் தலமாமே. ... 2
 
நித்தியகல் யாணியென்று நிதம்திரும ணக்கோலம்
சத்தியவள் கன்னியர்க்குத் தாமதமில் மணமருள்வாள்
கொத்துமலர்க் குழலன்னை கோலமதோ தவக்கோலம்
இத்தலமாம் இன்னம்பூர் இறைவியவள் இருவுருவே. ... 3

அகத்தியர்க்குத் தமிழ்சொன்னான் அரசனுக்குக் கணக்குரைத்தான்
பகலவனின் ஒளியோங்கப் பனிமதியன் அருள்செய்தான்
அகமலரும் முகமலராள் ஆதிசிவன் இடமுறவே
இகவாழ்வில் வினைதீர்க்க இன்னம்பூர் மேவினனே. ... 4
 
Mere words could not express your efforts Mr Saidevo. AYYARAPPAN MAY BLESS YOU WITH LONG LIFE. I hope your good work will continue.
 
Thank you for your appreciation, shrI yesmohan. With guruvaruL and tiruvaruL, I shall continue this thread as long as they sustain me.
ramaNi (saidevo)
 
தூங்கானை விமானத்தில் துலங்கிநிற்கும் கலசமைந்தும் ... ... [தூங்கானை = கஜப்ப்ருஷ்ட அமைப்பு]
ஓங்காரன் ஐந்தொழிலும் ஓச்சுதலைக் குறிப்பதுவாம்
நீங்காத ஆனந்தம் நிலைநிற்க விழைவோர்க்கே
ஈங்கோரூர் நிலைகொண்டான் இன்னம்பூர்த் தலமெனவே. ... 5

நீண்டுயர்ந்த பாணமென நீறணிந்த சிவலிங்கம்
வேண்டுதலின் மூலவராய் வீற்றிருக்கும் கருவறையில்;
தாண்டவனும் நான்முகனும் தக்கணனும் துர்க்கையுடன்
ஈண்டெழுந்த கோட்டமென இன்னம்பூர்த் தலமாமே. ... 6

தலமரமாய்ச் செண்பகமாம் தலக்குளம்-ஐ ராவதமாம்
நிலம்தன்னில் மழலையரை நெல்பரப்பி எழுதவைப்பர்
கலைமானைக் கையேந்தும் கண்ணுதலான் அருள்நாடி
இலக்கமுடன் எழுத்தறிய இன்னம்பூர்ப் பெருமானே. ... 7

இலங்கைவேந்தன் மலைதூக்க இளமதியன் கால்விரலில்
தலைபத்தும் கீழுறவே தானவனும் சாமப்பண்
கலையுடனே இசைத்திடவே கறைக்கண்டன் அருள்செய்தே
இலிங்கவுரு வில்லெழுந்தான் இன்னம்பூர்த் தலமதிலே. ... 8
 
(இறுதிப் பகுதி)
தாள்தேடும் மாலுடனே தலைதேடும் நான்முகனும்
கோள்தன்னை எட்டாத கூத்தழலாய் வானுயர்ந்தே
தாள்பணியும் இருவர்க்கும் தன்னியல்பைக் காட்டிநின்றான்
ஏழ்பிறப்பில் லாமுத்தி இன்னம்பூர்த் தலம்தொழவே. ... 9

வேதநெறித் தள்ளுநெறி மேதினியில் ஆழ்த்துநெறி
பேதமிதை நன்குணராப் பேதையர்க்கும் வழிகாட்டித்
தாதையென ஆட்கொண்டே தன்னொளியைத் தருவிப்பான்
ஏதெனப்பின் இருப்பவனே இன்னம்பூர்ப் பெருமானே. ... 10 ... [ஏது = காரணம்]

இதுபோலும் அதுபோலும் என்றப்பர் போற்றிப்பின்
இதுபோதும் என்றீசன் இணையடியைத் தலைக்கொண்டார்
சதிராட்டன் புகழெல்லாம் சம்பந்தர் விண்டுரைத்தார்
எதுவென்னும் உளைச்சலற இன்னம்பூர்ப் பெருமானே. ... 11

--ரமணி, 01-02/06/2015

*****
 
அவளிவநல்லூர்
(அறுசீர் விருத்தம்: மா மா மா மா விளம் காய்)
(சம்பந்தர் தேவாரம்: 1.63.1.: எரியார் மழுவொன் றேந்தி யங்கை யிடுதலை யேகனா)

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=293
http://www.shivatemples.com/sofct/sct100.php
http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=12

பதிகம்
சம்பந்தர்: 3.82: கொம்பிரிய வண்டுலவு கொன்றைபுரி நூலொடு குலாவித்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=3&Song_idField=30820
அப்பர்: 4.59: தோற்றினா னெயிறு கவ்வித் தொழிலுடை யரக்கன் றன்னைத்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=40590

காப்பு
அவளிவள் என்றதுபோல் ஆனை முகன்நீர்
உவந்த இரட்டை உருவில் - சிவபெருமான்
அந்தணச் செல்வனை ஆற்றுப் படுத்திய
விந்தையச் சொல்லவருள் வீர்.

பதிகம்
(அறுசீர் விருத்தம்: மா மா மா மா விளம் காய்)

மூத்த மகளை வதுவை மூலம் கைத்தலம் பற்றியவன்
கூத்தன் தலங்கள் காணக் கூடும் யாத்திரை மேற்கொண்டான்
காத்தே இருந்த மனையாள் கண்கள் போயின அம்மையிலே
ஆத்தி சூடி அபலைக் கருள்செய் அவளிவ ணல்லூரே. ... 1

கணவன் திரும்ப வந்த காலம் மனைவியை ஏற்கவில்லை
மணமாய்த் தந்தீர் இரண்டாம் மகளை என்றவன் வாதிட்டான்
குணவான் கோவில் பார்ப்பான் கூத்தன் சபையினில் முறையிட்டான்
அணங்கன் பார்ப்பான் காத்தே அருள்செய் அவளிவ ணல்லூரே. ... 2

சிவனார் தோன்றிச் சொன்னார் செல்வ அவளிவள் உன்மனையாள்
கவலை கொண்ட மனையாள் கணவன் குளத்தினில் நீராட
பவனின் அருளால் மனைவி பழைய உருவினைப் பெற்றாளே
தவத்தில் உறைவோர் சொன்னார் சாட்சி அவளிவ ணல்லூரே. ... 3
 
மூலத் தான லிங்கம் பின்னே முக்கணன் விடையூர்வார்
கோலம் உருவில் பாதம் எட்டாக் குறளனுக் கருள்செய்தார்
காலம் கடந்தார் அழகம் மையுடன் காத்தருள் செய்தலமே
ஆலின் அடியில் அமர்ந்தார் ஆளும் அவளிவ ணல்லூரே. ... 4

[கோலம் = பன்றி, குறளன் = வாமன அவதாரம் எடுத்த திருமால்]

கோட்ட மூர்த்தம் பிரமன் துர்க்கை கும்பமு னிவரென்றே
பாட்டின் நால்வர் கந்தன் கமலை பார்வதி மூத்தமகன்
வேட்டே அறைகள் தனியாய்ச் சுற்றில் வீற்றிருந் தருள்செய்ய
ஆட்டும் வினைகள் அறவே நீங்க அவளிவ ணல்லூரே. ... 5

பஞ்சா ரண்யத் தலத்தில் இவ்வூர் பாதிரி வனமாகும்
அஞ்சும் ஒருநாள் பொழுதில் காணும் அறநெறி வழக்குண்டாம்
நஞ்சை யுண்ட நாதன் மேவி நன்மைகள் தந்தருளி
அஞ்சேல் என்றே ஆற்றுப் படுத்தும் அவளிவ ணல்லூரே. ... 6
 
கணையை எய்த கருப்பு வில்லன் காமனை எரித்தாண்டார்
கணையை விடுத்தே முப்பு ரத்தில் கனலெழக் கொண்டாண்டார்
கணைத்தாள் நாசி கொண்டாள் இடமே காதலில் நின்றாண்டார்
அணைவார்க் கினிமேல் அல்லல் இல்லை அவளிவ ணல்லூரே. ... 7

[கணை = முறையே அம்பு, அம்பு, மூங்கில்;
கணைத்தாள் நாசி = மூங்கில் தண்டு போன்ற நாசி--சௌந்தர்ய லஹரீ, ஸ்லோகம் 61]

இலங்கை வேந்தன் மலையை அசைக்க இறைவனின் கால்விரலில்
தலைகள் நசுங்கித் தோளும் துவளத் தானவன் போற்றிடவே
வலம்-ஆ யுள்வாள் வரமாய்த் தந்தே வாலிறை யாட்கொண்டார்
அலையும் உள்ளம் அமைதி பெறவே அவளிவ ணல்லூரே. ... 8

அயனும் மாலும் தலைதாள் தேடி அயர்ந்திடும் அழலானார்
தலையில் ஆறும் கலையும் ஏற்றித் தாண்டவம் ஆடுவரே
நிலையா உலகில் நிலைகொள் உண்மை நிலவிட நிற்பவரே
அலங்கா ரம்கொள் அரையன் என்றே அவளிவ ணல்லூரே. ... 9

வேதம் தவிர்க்கும் நெறிகள் யாவும் வினைகொளும் நெறியாகா
பேதம் இதனை உணர்ந்தே பேணிப் பித்தனை அடைவோரைக்
காதும் காதும் வைத்தாற் போலக் காத்தருள் செய்பவனே
ஆதி என்றே நிலைகொண் டானே அவளிவ ணல்லூரே. ... 10

இலங்கை வேந்தன் வரலா றுரைத்தே இலங்கிடும் பதிகமென
நலஞ்சொல் நாவின் அரசர் அப்பர் நலம்படும் நெறிசொல்வார்
கலையார் சொற்கள் ஒலியார் பொருளில் காழியர் கோன்சொல்வார்
அலைநீர் நஞ்சைக் கொண்டான் உறையும் அவளிவ ணல்லூரே. ... 11

[காழியர்கோன் = சம்பந்தர்]

--ரமணி, 08-12/06/2015, கலி.29/02/5116

*****
 
திருவிடைமருதூர் (மத்யார்ஜுனம்): இரட்டைப் பதிகம்
(வஞ்சி விருத்தம்: விளம் விளம் விளங்காய்)
(சம்பந்தர் தேவாரம்: 1.112.1.: இன்குர லிசைகெழும் யாழ்முரலத்)

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=396
http://www.shivatemples.com/sofct/sct030.php

பதிகம்
சம்பந்தர்: 5, அப்பர்: 5, சுந்தரர்: 1
http://www.shaivam.org/tamil/thiru_adangal.htm
சிவசிவாவின் வலைப்பூ: http://madhisudi.blogspot.in/2015/06/0101.html

காப்பு
ஆண்டவி நாயகநீ அப்பன் வழிபட்டே
தூண்டுதல் செய்திடும் சூசகனாய் - ஈண்டுநான்
மாலிங்க சாமி மகிமை தனைப்பாட
ஆலிங்க னம்செய் தருள். ... 1

[கோவிலில் உள்ள பிள்ளையார் பெயர்: ஆண்ட விநாயகர்]

தேரோடும் மூலைகளைத் தேடி அமர்ந்தருள்
ஏரம்ப நாயக! எம்பெருமான் - சீர்பாடச்
சொல்லும் பொருளுமுன் தொந்தியாய் ஏறிநிற்கும்
வல்லமை தந்தருள் வாய். ... 2

இரட்டைப் பதிகம்
(வஞ்சி விருத்தம்: விளம் விளம் விளங்காய்)

படங்கொளும் அரவணிப் பரம்பொருளே
அடியவர்க் கருள்செயும் அனல்விழியன்
நடமிடும் நாதனாய் நடுவிளங்கும்
இடைமரு தூருறை இறையெனவே. ... 1

தானெழு லிங்கமாய்த் தளிர்மதியன்
தானதை வழிபடத் தருபொருளாய்
கானுறை துறவியர் களித்திடவே
கானிடை மருதடிக் கவிந்தனனே. ... 2
 
அடியவர் துறவியர் அகத்தியரும்
பிடியவள் இடமுறும் பெருமுலையாள்
திடந்தரும் உமையவள் தெரிசனத்தை
இடைமரு தூரினில் இறைஞ்சினரே. ... 3

அன்னையும் தரிசன அழகருளித்
தன்னள வில்சிவ தவமிருக்க
தன்னையே தான்துதி தலமெனவே
இன்னருள் செய்தனன் இடைமருதே. ... 4

வடமரு தூரென வரும்சயிலம்
புடைமரு தூரெனப் புகலொருவூர்
விடையவன் நடுவனாய் வீற்றிருக்க
இடமளிக் கும்தலம் இடைமருதே. ... 5

வீதியின் நாற்றிசை வீற்றருளும்
மேதகு லிங்கமாய் மெருகிடவே
பாதியில் நின்றருள் பரமனென
ஈதையை நீக்குவன் இடைமருதே. ... 6 ... [ஈதை = துன்பம்]
 
மூவகைச் சுற்றினில் முடிவுறவே
தேவதை பலவெனத் திருவுருவே
சாவினை நிறுத்திடும் சடைமுடியன்
ஈவதே அறமென இடைமருதே. ... 7

மூகனை வதைத்தவள் முழுமுதலாள்
ஏகமாய் நின்றருள் இருதலத்தில்
ஊகமாய் உடுப்பிகொல் லூரினிலே ... ... [ஊகம் = நினைவு, தியானம்]
ஏகமாய் அருள்செயும் இடைமருதே. ... 8

முப்பதின் இரண்டென முழுகிடவே
ஒப்பிலாத் தீர்த்தமாய் உறைதலமாம்
கப்பிடும் வினைகளின் கதியறவே
எப்பொழு தும்மருள் இடைமருதே. ... 9

வரகுண பாண்டியன் வாழ்வினிலே
வருவினை அந்தண வதையெனவே
வரகுணன் ஈசனை வழிபடவே
இருந்தருள் செய்தது இடைமருதே. ... 10
 
மனத்துயர் நீங்கிடும் வரன்குதிரும்
வனமிகு குழந்தைகள் வரம்கிடைக்கும்
தனம்வரும் வளம்வரும் தானகலும்
இனியவன் போற்றிட இடைமருதே. ... 11

கருத்தரிக் கச்செயும் கருணையினாள்
கருச்சிதை மனப்பிணி கழித்திடுவாள்
உருத்திரன் சக்தியாய் உமையவளை
இருத்திடும் தலமென இடைமருதே. ... 12

மாலினைக் கணையாய் மாட்டியவர்
காலற முப்புரம் கரித்தழித்தார்
மோலியில் சந்திரன் சூடியவர் ... [மோலி = மௌலி = சடைமுடி]
ஏலுவர் முக்தியை இடைமருதே. ... 13

கரத்தலும் தொழிலெனக் களிப்பவரே
புரத்தலும் அழித்தலும் பூணுவராம்
பிரமனின் தலையினைப் பிதிர்த்தவராய்
இரந்தருள் செய்குவர் இடமருதே. ... 14
 
நந்தியைக் குரங்கென நகையரக்கன்
மந்தியால் அழிந்திடும் வாக்குணவே
அந்தகன் மலையடி அலறவைத்த
எந்தையின் தரிசனம் இடமருதே. ... 15

[குறிப்பு: கயிலை மலைமேல் செல்லலாகாது என்று நந்திதேவர் தடுத்தபோது இராவணன்
அவரைக் குரங்கென நகைக்க குரங்கால் அவன் அழிவான் என்று அவர் சாபமிட்டார்.]

தந்திறம் காட்டிய தானவனை
முந்துறு கால்விரல் மொத்தியபின்
அந்தகன் அரற்றிட அருள்செய்தே
எந்தையாய் மேவினர் இடைமருதே. ... 16

பெரியவர் தானெனும் பேச்சினிலே
மாதவன் மலரவன் வாதமுற
எரியழற் றூணென எம்பெருமான்
இருந்தனர் எழுந்தனர் இடைமருதே. ... 17

அடிமுடி தேடியே அயனரியும்
உடல்மனம் சோரவே உள்ளுணர்ந்தார்
உடையவர் என்றுமே உமைபாகன்
எடுபதம் காணுவோம் இடைமருதே. ... 18
 
அமணமும் புத்தமும் ஆரணம்தள்
சமயமாய் நால்வரும் சாற்றினரே
இமயவன் நெறியதே ஏற்றதென
இமையெனக் காப்பவன் இடைமருதே. ... 19

ஆரணம் தவிர்த்திடும் அயல்நெறிகள்
தேர்வழி பிழையெனும் சிந்தைவர
நேர்வழி செல்லவே நீறணியான்
ஏர்வழிப் படுத்துவர் இடைமருதே. ... 20

பறையதன் ஓசையும் பண்ணுடனே
மறையுடன் சேர்ந்திடும் மாண்பினிலே
அறைந்திடும் உண்மையை அப்பரவர்
இறையெனக் கண்டனர் இடைமருதே. ... 21

இலைமலி பொழிலிடை மருதிறையைக்* ... [சம்பந்தர் பதிகப் பாடலடி]
கலந்தருள் பெற்றவர் காழியர்கோன்
பலன்மிகு பதிகமாய்ப் பாடிநின்றார்
இலையினி துன்பமே இடைமருதே. ... 22

--ரமணி, 04-06/07/2015

*****
 
திருச்சிராப்பள்ளி
(நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா)

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=313
http://www.shivatemples.com/sofct/sct006.php

பதிகம்
சம்பந்தர்: 1.098: நன்றுடையானைத் தீயதிலானை
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=10980
அப்பர்: 5.085: மட்டு வார்குழ லாளொடு மால்விடை
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idField=50850
சிவசிவாவின் வலைப்பூ: http://madhisudi.blogspot.in/2015/06/01.html

காப்பு
மண்ணிலே மாணிக்கம் மாடியில் செவ்வந்தி
விண்தொடும் உச்சி விநாயக - பண்படும்
சொற்களில் தாயான சொக்கனைப் பாடுதற்(கு)
உற்றருள் செய்வாயென் னுள்.

பதிகம்
(நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா)

ஈச்சுரன் தாயான இத்தலந்தான் தோன்றிலிங்கம்
ஆச்சரி யம்தரும் ஆகிருதி பூச்சொரிந்து
பாச்சொரிந் தீரடியார் பண்ணிசைத்தே போற்றிவைத்த
தீச்சொரி கண்ணுதலான் திருச்சிராப் பள்ளியிலே. ... 1

மட்டுவார் குழலம்மை மாதவத்தாள் அடியவருக்(கு)
இட்டமாய் அருள்செய்தே இறைப்பற்றை வளர்ப்பதிலே
கட்டுகள் நீங்கிடவே கறைமிடற்றன் காட்சிவரத்
திட்டமாய் மேவினனே திருச்சிராப் பள்ளியிலே. ... 2

அப்பனின் கோவிலிலே அதிபதியாய்ப் பிள்ளையாராம்
சுப்பனைப் பாடினரே சொல்வேந்தர் அருணகிரி
ஒப்பிலா வில்வமரம் ஓங்கிநிற்கும் தலமரமாய்த்
தெப்பமண் டபக்குளமாம் திருச்சிராப் பள்ளியிலே. ... 3
 
கோவிலில் ஈசனவன் கொடிமரமே பின்னுறுமாம்
காவிரி யில்வெள்ளம் கரைமீறத் தாய்தவிக்கச்
சேய்விரித் தருள்செய்தே சிறுமகளைக் காத்தவனாய்த்
தீவிரித் தாடுபவன் திருச்சிராப் பள்ளியிலே. ... 4

தட்சிணா மூர்த்தியென தருப்பைப்புல் மீதமர்ந்தே
எட்டுமு னிவர்சூழ இருந்தருள் செய்பவனாம்
விட்டக லாவாழை வீற்றிருக்கும் தார்வைத்தே
சிட்டனை வழிபடுவர் திருச்சிராப் பள்ளியிலே. ... 5

மன்னனின் நந்தவன மலர்திருட்டால் முனிசெய்த
முன்னவன் வழிபாட்டு முறைபிறழ முறையிட்டார் ... ... [முன்னவன் = சிவன்]
அன்னவர்க் கருள்செய்தான் அரசவைமேல் மண்மழையால்
சின்னமாய் வீற்றிருப்பன் திருச்சிராப் பள்ளியிலே. ... 6

முப்புரம் எரிசெய்தே மூவர்க்கும் அருள்செய்தான்
அப்பரின் சூலநோயை அகற்றியே ஆட்கொண்டான்
சப்பரம் ஊர்பவனாய்ச் சகலர்க்கும் காட்சிதந்தே
தெப்பமும் ஊர்ந்திடுவான் திருச்சிராப் பள்ளியிலே. ... 7
 
(இறுதிப் பகுதி)

வல்லரக் கன்மலையை வலிகரத்தால் அசைத்திடவே
கல்லடி யில்தலைகள் கால்விரலால் வீழ்த்தினனே
வில்லடி வாங்கியவன் விசயனுக்குக் கணைதந்தான்
தில்லையில் ஆடுவபன் திருச்சிராப் பள்ளியிலே. ... 8

புகழ்ந்தனர் அயனரியும் புண்ணியன்தாள் தலைதேடி
மகிழ்ந்தனர் அவனடியார் மழுவாளி பதம்நாடி
அகழ்ந்தனர் மெய்ப்பொருளை ஆலமர்ந்தான் குருவாகித்
திகழ்ந்தனர் பேறுபெற்றுத் திருச்சிராப் பள்ளியிலே. ... 9

ஆரணம் தள்ளிநிற்கும் அவலநெறி யாவையுமே
காரணன் நெறியல்ல காரிருளுள் வீழ்த்துவன
மாரணம் நேரவரும் மறுபிறப்பின் வினைகளெலாம்
சீரணம் செய்தருள்வான் திருச்சிராப் பள்ளியிலே. ... 10

தீநயம் போம்நாமம் திருச்சிராப் பள்ளியென்ற
நாநய வேந்தர்பா நாலுமட்டும் இன்றுளவே
ஞானசம் பந்தர்பண் ணால்வருமே நன்மையெலாம்
தேனயம் பாடுகின்ற திருச்சிராப் பள்ளியிலே. ... 11

[தீநயம் = தீயன நயத்தல்; நாநய வேந்தர் = திருநாவுக்கரசர்
தேனயம் பாடுகின்ற = சம்பந்தர் பாடல் சொற்றொடர்: தேன் = வண்டு;
நயம் = கனமும் தேசிகமும் கலந்து பாடும் வகை]

--ரமணி, 30/07/2015, கலி.15/04/5116

*****
 
திருச்சேறை
(எழுசீர் விருத்தம்: ’தான தானன தான தானன தான தானன தானனா’
ஒரோவழி ’தான’ என்பது ’தனன’ என்று வரும். இப்பாடல்களில்,
ஈற்றடிதோறும் மூன்றாம் சீரிலும் எதுகை அமைந்துள்ளது.)


(சுந்தரர் தேவாரம்: 7.48.1: மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப் பாத மேமனம் பாவித்தேன்
சம்பந்தர் தேவாரம்: 3.39.1: மானி னேர்விழி மாத ராய்வழு திக்கு மாபெருந் தேவிகேள்)

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=1002
http://www.shivatemples.com/sofct/sct095.php

பதிகம்
சம்பந்தர்: 3.086: முறியுறு நிறமல்கு
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=3&Song_idField=30860
அப்பர்:
4.073: பெருந்திரு விமவான் பெற்ற
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=40730
5.077: பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடும்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idField=50770

காப்பு
செந்நெறி யப்பரின் சீர்தனைப் பாடவே
இன்னருள் செய்தருள் ஏரம்ப - இன்னருஞ்
சேறைத் தலத்துறை தெய்வ உருவினர்
கூறையும் பாடக் கொடு.

பதிகம்
(எழுசீர் விருத்தம்: ’தான தானன தான தானன தான தானன தானனா’
ஒரோவழி ’தான’ என்பது ’தனன’ என்று வரும். இப்பாடல்களில்,
ஈற்றடிதோறும் மூன்றாம் சீரிலும் எதுகை அமைந்துள்ளது.)


பற்று மூவினைப் பங்கு சேர்ந்திடப்
. பாவ புண்ணியம் மேவினேன்
பற்று மூன்றினைத் தீர்க்கும் காரியம்
. பாசம் மேவிட ஆற்றினேன்
உற்ற வாழ்வினில் சுற்றி யேவினை
. ஊறு செய்வது குன்றவே
சிற்ச பைதனில் பொற்ப தம்தரும்
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 1

[மூவினை = சஞ்சித, பிராரப்த, ஆகாமி கர்மாக்கள்;
பற்று மூன்று = வாழ்வில் முனிவர், தேவர், முன்னோர் பொருட்டுள்ள மூன்று கடன்கள்]

அன்னை யின்னுரு ஞான வல்லியென்
. றாகி நேர்வழி காட்டுவாள்
இன்னும் மூவகை துர்க்கை யாயுரு
. யேற்று வல்வினை வீட்டுவாள்
மின்னும் வெஞ்சுடர் மாசி யிற்கரம்
. மீது பட்டொளி வீசுமே
சென்னி யிற்சடை பின்ன லோடுடைச்
. சேறைச் செந்நெறி யப்பனே. ... 2

[அன்னையின் பெயர் இத்தலத்தில் ஞானவல்லி; அவள் சிவ, விஷ்ணு, வைஷ்ணவி என்று
மூன்று துர்க்கை யுருவிலும் காட்சி தருகிறாள். வெஞ்சுடர் = சூரியன்; மாசியில்
மூன்று நாட்கள் சூரியன் ஒளி இறைவன், அன்னை பாதம் தொடும்]
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top