• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை

Status
Not open for further replies.
அம்பிகையின் கருவறையில் அன்றுநேர்ந்த வரலாறாய்
தும்பையணித் தூயனுடன் சுவேதவாகன் தனதுவில்லில்
அம்பூன்றிச் சமர்செய்த அழகுசிற்பத் தூண்களுற
அம்பலத்தான் அமர்ந்தருளும் அருட்டலமாம் வேட்களமே. ... 3

[சுவேதவாகன் = வெண்புரவியை வாகனமாகக் கொண்ட அருச்சுனன்]

கருவறையின் வெளிச்சுவரில் கணபதியும் துளக்கிலியும்
இரவியுடன் சந்திரனும் இலங்கியருள் செய்திடவே
முருகனும்தன் சன்னிதியில் முன்னின்றே மனையருடன்
அருணகிரித் துதிபெற்ற அருந்தலமாம் வேட்களமே. ... 4

[துளக்கிலி = அசைவற்ற சிவன், இங்கு தட்சிணாமூர்த்தி]
 
வேணுவனம் நிகழ்கதையால் வேய்மரமே தலவிருட்சம்
கேணியெனத் திகழ்குளத்தைக் கிருபாதீர்த் தம்மென்பர்
காணவரும் கோவிலிலே கலையழகும் சாத்திரமும்
தாணுமேவி யருள்செய்யும் தலமெனவே வேட்களமே. ... 5

அந்தமாதி யாகுமண்ணல் ஆரழலைக் கையேந்தி
சொந்தமென நகுதலையும் சோமனுடன் வானதியும்
சந்தமொலிக் கழற்பாதம் தந்தசூகம் அரையிலங்க
வெந்தபொடி மெய்பூசி விடையவனாய் வேட்களமே. ... 6

[சோமன் = சந்திரன்; தந்தசூகம் = பாம்பு]
 
கறிவளரும் மலையெடுத்தான் கண்வளர்சேய் கண்ணெரித்தான்
வெறிவளர முனியெரிந்த வேழத்தைத் தோலுரித்தான்
எறிவளரும் பதந்தூக்கி எமன்நெஞ்சில் உதைத்தானே
நெறிவளர நின்றருளும் நிலைகொண்டான் வேட்களமே. ... 7

[கறிவளரும் மலையெடுத்தான் = மிளகுக் கொடிகள் நிறைந்த
கோவர்த்தனகிரியை எடுத்த கண்ணன்--இது சம்பந்தர் பாடலில் வரும் பிரயோகம்;
கண்வளர்சேய் = அந்தத் திருமாலின் மகனாகிய மன்மதன்; எறி = வீச்சு, உதை]

வல்லரக்கன் பனியார்ந்த வரைபேர்க்க யத்தனிக்கக்
கல்லால நிழலான்தன் கால்விரலால் அழுத்திடவே
அல்லலுற்ற அரக்கனவன் ஆர்த்தழுதே துதிபாட
மல்லனவன் வாள்தந்தே வந்தமர்ந்தான் வேட்களமே. ... 8

[மல்லன் = பெருமையிற் சிறந்தோன்]
 
(இறுதிப் பகுதி)

மாலயன்தாள் தலைதேடி மயல்சூழத் தழலானான்
மாலமுடன் எரிவனத்தில் மகிழ்ந்தாடிப் பறையொலிப்பான்
மாலையெனக் கொன்றையுடன் மத்தமலர் சூடிடுவான்
ஆலயத்தில் அருள்பெறவே ஆகிவரும் வேட்களமே. ... 9

[மாலம் = பேய்]

எத்தனையோ நெறியெனவே இறைவழியைக் காட்டுமின்று
அத்தனென இறைநிற்கும் அறவாழ்வே சிவநெறியே!
சித்தத்தில் இவ்வுண்மை திடமாகக் கொள்ளுவோர்க்கே
இத்தருணம் வினைகொள்ளும் ஈசனென வேட்களமே. ... 10

[அத்தன் = தகப்பன், தலைவன், மூத்தோன், குரு, கடவுள்]

திருநாவுக் கரசருடன் திருஞான சம்பந்தர்
அருளாளன் புகழ்பாடும் அருட்பதிகம் ஓதுவார்க்கு
மருள்நீங்கும் மயல்நீங்கும் மறியேந்தி மனம்நிற்கும்
திருவருளால் வினைநீங்கும் திரும்பவரும் பிறப்பிலையே! ... 11

--ரமணி, 06/02/2015

*****
 
திருவாரூர் தியாகேசர்

கோவில்
Thiagarajar Temple : Thiagarajar Thiagarajar Temple Details | Thiagarajar - Tiruvarur | Tamilnadu Temple | ??????????
??????????? ??????, ?????????? - Vanmeekanathar Temple, Thiruvarur

பதிகம்
சம்பந்தர் (5), அப்பர் (21), சுந்தரர் (8)
மூவர் தேவாரம் - அடங்கன்முறை aDanganmurai Moovar tEvAram from First upto Seventh Tirumurais (in tamil script, unicode format)

காப்பு
(அளவியல் இன்னிசை வெண்பா)

நாற்பெருவி நாயகரும் நானெழுதும் பாக்களுக்கு
ஆற்பதமாய்ச் சொல்லொலியும் ஆர்ப்பரித்தே ஆண்டுவர
தாற்பரியம் ஆவதெல்லாம் தங்கிநிற்கும் ஏறுதரக்
காற்பதத்தில் வேண்டுவனே காப்பு.

[நாற்பெரு விநாயகர் = திருவாரூக் கோவிலில் 84
விநாயகர்கள் உள்ளனர். இவர்களில் நால்வருக்குத் தனிச்சிறப்பு உண்டு.
--தினமலர் கோயில் பக்கம்
ஆற்பதம் = பற்றுக்கோடு]

பதிகம்
(எண்சீர் விருத்தம்: புளிமா தேமா விளம் மா
. புளிமா தேமா விளம் மா)


பிறந்தால் இல்லை பிறப்பெனச் சொல்லும்
. பெருமை கொண்ட சிவத்தல மாகச்
சிறந்த ஊரில் தென்றிசைக் கிழவன்
. சிவனை வேண்டி இறைப்பணி செய்ய
அறையில் சண்டி கேஸ்வர ராக
. அமரக் காணும் சன்னிதி இங்கே!
சிறவே செய்யும் அடியவர் வாழும்
. திருவா ரூரே தியாகரி னூரே. ... 1

[தென்றிசைக் கிழவன் = எமனின் பெயர்களில் ஒன்று;
சிறவு = சிறந்த செயல்:
’சிறவே செய்து வழுவாதே சிவனே நின்தாள் சேர்ந்தாரே--திருவாசகம் 5.86’]

அரவப் புற்றில் நிலைக்களம் கொண்ட
. அணியன் இங்கே மூலவ ராவார்
உருவில் லிங்க வடிவுறத் தானே
. உதித்த மூர்த்தி யென்றிவர் சிறப்பே
உருவில் மூச்சாய் செய்திடும் அஜபம்
. உததித் தூங்கல் தியான மாகும்
திருமால் மார்பில் தாங்கிடும் ஈசர்
. திருவா ரூரின் தியாகரே யலரோ? ... 2

[உததி = கடல்; அஜபம் = சொல்லற்று மூச்சின் ஏற்ற இறக்கங்களால் செய்யும் ஹம்ஸஜபம்]
 
கமலாம் பாளோ டல்லியங் கோதை
. கவினார் பேரில் உமையவள் நின்றே
அமையும் கைகள் இரண்டெனக் கொண்டே
. அருள்செய் ஆதி சக்தியின் உருவாம்
கமறும் தொல்லைக் கடன்களைத் தீர்த்தே
. கவறும் நோயும் தீருண வீசர்
திமிலம் வேதம் நான்கொலி சேரும்
. திருவா ரூரே தியாகரி னூரே. ... 3

[திமிலம் = பேரொலி; ’திமிலநான் மறைசேர் திருப்பெருந் துறையில்’--திருவாசகம்]

விசையை யெட்டு சன்னிதி மேவி
. விவாகத் தடையும் குறைகளும் தீர்ப்பாள்
இசைவில் கோள்கள் ஒன்பதோர் கோட்டில்
. இணையக் கூர்ந்தே கணபதி காண்பார்
பசையார் லிங்கம் மரகத மாகப்
. பரந்தா மன்றன் நெஞ்சினிற் கொள்வார்
திசைகள் எட்டும் புகழுறும் தலமாம்
. திருவா ரூரே தியாகரி னூரே. ... 4

[விசையை = துர்க்கை;]
 
உடலை மூடி முகத்தினை மட்டும்
. உறுவோர் காண தரிசனம் தருவார்
நடனப் பாதம் இடமது காணும்
. நலநாள் ஆமே மார்கழிச் செங்கை
திடமாய் ஊன்றும் வலப்புறப் பாதத்
. திணமே காணப் பங்குனிக் கதிர்நாள்
திடுமென் றேசொல் ஒலிநடம் செய்யும்
. திருவா ரூரே தியாகரி னூரே. ... 5

[செங்கை = ஆதிரை நாள்; திணம் = திண்ணம்; கதிர்நாள் = உத்திரம்;
சொல் = பறை]

திரும கள்தன் கணவனை அடையச்
. சிவனை வேண்டி அருள்பெற இவ்வூர்
திருவா ரூரென் றேபெயர் கொண்டே
. திருமண் நீறின் ஒருமையைச் சொலுமே!
திருவா ரூரே முந்துறும் கோயில்
. சிதம்ப ரம்பின் எனும்கருத் தாலே
திருச்சிற் றம்ப லம்பதம் இங்கே
. திருமு றைப்பண் ணோதலில் இல்லை! ... 6
 
மதியம் மத்தம் கூவிளம் சூடி
. மழுவும் தீயும் கரத்தினில் தாங்கி
வதியும் மங்கை இடப்புறம் அருள
. வனத்தில் கூளிக் கணத்துடன் ஆடிச்
சிதைவீழ் மேனிச் சாம்பரை யணிந்தே
. சிதலை கொண்டே சிறப்பருள் வாரைத்
திதிகா லத்துள் ஒருமுறை காணத்
. திருவா ரூரே தியாகரி னூரே. ... 7

[கூளி = பேய்; சிதலை = நோய்; திதிகாலம் = ஆயுள்]

இலங்கை வேந்தன் மலைதொட முயல
. இவர்தன் பாதத் தொருவிரல் கொண்டே
நலியச் செய்யவ் விராக்கதன் வேண்ட
. நலமும் வாளும் தந்தருள் செய்தார்
பொலியும் ஞானப் பொசிவினைத் தரவே
. புண்ணியன் பாதம் புகலுறும் அடியார்
சிலிர்த்தே காணும் செஞ்சடைக் கடவுள்
. திருவா ரூரின் தியாகரே அலரோ? ... 8

[மலைதொட முயல = (கயிலை) மலையைத் தோண்ட முயல]
 
(இறுதிப் பகுதி)

வலவன் வேதா அடிமுடி தேட
. வளரும் தீயாய் வானுற நின்றே
நிலவும் மூலம் முழுமுதல் தாமே
. நினைவிற் கொள்வீர் என்றுரைத் தாரே!
புலரும் காலை பின்னுறும் மாலைப்
. பொழுதில் உள்ளம் உள்வரக் காணத்
திலகம் நெற்றிக் கண்ணெனத் தெரியும்
. திருவா ரூரின் தியாகரே அலரோ? ... 9

[வலவன் = திருமால்; வேதா = பிரம்மன்]

மறையைத் தள்ளல் மாண்பெனச் சொல்லும்
. வழிகள் இந்நாள் இருப்பது விலக்கி
இறைவன் தந்த நெறிமுறை யொன்றே
. இகத்தில் வாழச் சிறந்ததா மென்னும்
உறுதியில் வாழும் அடியவர்க் கெல்லாம்
. உமைகோன் என்றும் உய்வினைத் தருவார்
சிறையாய் இம்மை தொடருதல் நீங்கத்
. திருவா ரூரே தியாகரி னூரே. ... 10

திருநா வேந்தர் இருபதின் ஒன்றும்
. திருஞா னத்தர் இரண்டொடு மூன்றும்
திருத்தன் நண்பர் சுந்தரர் எட்டும்
. திருக்கை லாயப் பரமனின் மீது
திருப்பண் செய்தே பாடிய பதிகம்
. திருநாள் என்றே தினம்சொல வருமே
திருவும் தீர்வும் திருவடிக் காப்பும்
. திருவா ரூரர் தியாகரி னருளால். ... 11

--ரமணி, 24/02/2015

*****
 
திருக்குடவாயில் (இன்று குடவாசல்)
(எழுசீர்ச் சந்தவிருத்தம்)

’தனதான தான தனதான தான தனதான தான தனனா’
என்ற சந்தம்: சில இடங்களில் முதற்சீர் ’தானான’ என்றும் வரும்.
சம்பந்தர் தேவாரம்: 2.88.1
’துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன் நடமன்னு துன்னு சுடரோன்’
??????? ???????? ???????? ????????

கோவில்
Koneswarar Temple : Koneswarar Koneswarar Temple Details | Koneswarar - Kudavasal | Tamilnadu Temple | ??????????
?????????? ??????, ??????????????? (????????) - Koneswarar Temple, Thirukudavasal

பதிகம்
சம்பந்தர்:2.022 திகழுந் திருமா லொடுநான் முகனும்
??????? ???????? ???????? ????????
2.058 கலைவாழு மங்கையீர் கொங்கையாருங் கருங்கூந்தல்
??????? ???????? ???????? ????????

காப்பு
அனுமதிவி நாயக ஆதிமுக் கண்ண
இனுமிரட்டை சித்தி இறைமகனே சொல்தந்து
கோணேஸ் வரரின் குடவாயிற் கோவிலை
வாணாளில் பாட வருள்.

[அனுமதி விநாயகர், ஆதிகஜானனர், இரட்டை விநாயகர்,
சித்தி விநாயகர், மாலை வழிபாட்டு விநாயகர் என்று
பல உருவங்களில் கணபதி குடவாயிற் கோவிலில் அருள்செய்கிறார்.]

பதிகம்
திருக்குடவாயில் (இன்று குடவாசல்)
(எழுசீர் சந்த விருத்தம்: தனதான/தானான தான தனதான தான தனதான தான தனனா)

அழிகால நாளில் உயிரீட்ட மார அமுதீந்து கும்பம் இடுவார்
குழிதூங்கு கூளி யுருலிங்க மாகி குடவாயில் காவல் புரிவார்
சுழியாக வேறோர் பவமேறு போழ்து சுசிவேட னாக வகிர்வார்
விழுமூன்று பங்கு குடவுச்சி வீழ்ந்த குடவாயில் மேவு சிவனே. ... 1

[ஈட்டம் = கூளி = கூட்டம், திரள்; சுழி = விதி;
சுசிவேடன் = சந்திரனைச் சூடிய வேடன்]

கருடாழ்வர் மூக்கு வடுமேனி கொண்டு கனலேந்தி காட்சி தருவார்
அருள்செய்த வர்தாய் அடிமைத்த ளையை அறவேய கற்ற வருவார்
இருள்தன்னை நீக்கி யொளிசெய்யும் ஈசர் இகவாழ்வில் நன்று செயவே
உருவான லிங்க வடிவாயி ருப்பர் குடவாயில் மேவு சிவனே. ... 2
 
கோணேஸ்வ ரன்பேர் கொளுமீச ரோடு குழலன்னை துர்க்கை யுருவம்
வாணாளில் ஏறு வினையாவு மேக வளம்சேரு மன்னை துதியால்
நாணாளு மேத்த நலிவேக வாழ்வில் நலமாக வைக்கு மரனார்
கோணார்பி றையர் குளிர்மங்கை பாகர் குடவாயில் மேவு சிவனே. ... 3

[நாணாளும் = நாள் + நாளும் = தினந்தோறும்;
கோணார் பிறையர் = வளைவுள்ள பிறையை அணிபவர்]

அவிர்செஞ்ச டையர் நடராச வேடம் அகமார வின்னல் குறையும்
சிவகாமி யன்னை உடனிற்க நம்முள் தினவேறு பாவ மழியும்
நிவர்லிங்க மேனி ஒருசன்னி தான நிறமாகும் செம்மை விழுமம்
குவடன்ன கோவில் தனதென்று வாழ்வர் குடவாயில் மேவு சிவனே. ... 4

[நிவர்லிங்கம் = ஓங்கி உயர்ந்த லிங்கம்; குவடு = மலை, குன்று]
 
ஏரம்பர் காட்சி பலவாக நின்று எதுவென்று நல்ல னசெய்வார்
ஆரம்ப ஓசை எதுவென்று சொல்லி அரனாரை யாண்ட முருகன்
சீராரும் வண்ணம் சிவநேசர் சொன்ன திருவண்ண மேவி யருள்வன்
கூரம்பு போன்று வதைசெய்வி னைகொள் குடவாயில் மேவு சிவனே. ... 5

[ஆரம்ப ஓசை = ஓம் என்னும் பிரணவவொலி; சிவநேசர் = இங்கு அருணகிரிநாதர்]

கோச்செங்க ணிங்கு குடநாடர் வென்று குடவாயில் இட்டர் சிறையில்
ஏச்சங்கு தீர குடநாடர் நீரை இசையாது நீத்தர் உயிரை
பாச்சங்க காலம் இதுநேர்ந்த வாறு படமாகு பாடல் உளதே
கூச்சல்கள் தீர குழைதோட ணிந்த குடவாயில் ஈசன் உளனே. ... 6

[குடநாடர் = சேரன், இங்கு மன்னன் கணைக்கால் இரும்பொறை;
ஏச்சு = பழிச்சொல்]
 
அலையாறு கங்கை தணியாரும் இந்து அவிர்செஞ்ச டையர் அணியாய்
கலைமான்க ரத்தில் பெருமான்வ னத்தில் களைமானி டத்தில் கொளுவார்
தொலையாத பாவம் இலையாக வென்று தொழுதீசர் கொள்ளு மனதில்
குலையாத ஞானம் அழியாத மைதி குடவாயில் ஈசர் அருளே. ... 7

[களைமான் = அழகிய மானாகிய உமையன்னை]

மலைகொள்ள வந்த நனிவல்ல ரக்கர் மயல்கொள்ள வைத்த சிவனார்
அலைமுப்பு ரங்கள் நகைசெய்து மாய அனலாக நோக்கி யருள்வார்
உலையாகும் ஊனில் தினம்வேகும் ஆவி யொளியேற வைக்கும் இறைவன்
குலதெய்வ மூலம் அரனென்ற காட்சி குடவாயில் மேவு சிவனே. ... 8
 
அலைதூங்கு மாலன் அலர்தூங்கு வேதன் அடியுச்சி தேட அழலாய்
நிலைகொண்டு நிற்க அவர்நீல கண்டர் நிலைகண்டு போற்ற மகிழ்வார்
நிலவொன்று சூடி நதியொன்று பாய நிறமின்றி நிற்கும் இறைவன்
குலைவாழை யீனும் வயல்சூழ்ந்த கோவில் குடவாயில் மேவு சிவனே. ... 9

மறையின்று நீங்கும் அறமாக இன்று மலிவாக உள்ள உலகில்
சிறையின்று மீள வழிசொல்வ தென்று சிவஞானம் உள்ளம் விழைவார்
கருநீல கண்டர் நெறிதன்னில் வாழ்வர் கலியாட்சி ஓங்கும் இதுநாள்
குறையொன்று மின்றி அவர்வாழ வைப்பர் குடவாயில் மேவு சிவனே. ... 10
 
(இறுதிப் பகுதி)

அரவார்ந்த மேனி உடையாகு போர்வை அணியாகு பூதி யெனவே
இரவார்ந்து பெய்ய இருவேளை சுற்றி எலும்போடு கொள்ளும் இறைவன்
கருவார்ந்த பாவம் புரையாகு முன்னர் கனல்கொள்ள வைப்பர் எனவே
குரவார்ந்த கோவில் அடைவோர்க்க ருள்வர் குடவாயில் மேவு சிவனே. ... 11

[குரவார்ந்த = குராமரங்கள் நிறைந்த]

சம்பந்தர் பாடல் இருபத்தி ரண்டு தழலேந்தும் ஈசர் புகழும்
நம்பந்தம் என்றே ஒளிகாணு வோர்க்கு நலமென்றும் சூழ வருமே
அம்பாரியாக வினைகொள்ளும் உள்ளம் அமலன்க ழல்பற்று தினமே
கும்பம்வி டுத்து வெளிசேர்த்த ருள்வர் குடவாயில் மேவு சிவனே. ... 12

[பந்தம் = தீப்பந்தம்]

--ரமணி, 17-23/03/2015, கலி.08/12/5115

*****
 
திருவேதிகுடி
வண்ணப்பாடல் (தானதனத் தனதான)
திருப்புகழ்: திருச்செந்கோடு: காலனிடத் தணுகாதே

கோவில்
Vedapureeswarar Temple : Vedapureeswarar Vedapureeswarar Temple Details | Vedapureeswarar - Thiruvedhikudi | Tamilnadu Temple | ?????????????
????????????? ??????, ???????????? - Vedhapureesar Temple, Thiruvedhikudi

பதிகம்
சம்பந்தர்: 3.78: நீறுவரி ஆடவரொ டமைமன வென்புநிரை
??????? ???????? ???????? ????????
அப்பர்: 4.90: கையெது காலெரி நாகங் கனல்விடு சூலமது
??????? ???????? ???????? ????????

காப்பு
சுருதியைக் கேட்டவாறே சோத்திரம் சாய்த்தே
அருள்செயும் அத்திமுக னாரே! - ஒருமை
இருமையாகும் வேதபுரி ஈசர் இணைத்தாள்
அருமையைப் பாட அருள்.

பதிகம்
வண்ணப்பாடல் (தானதனத் தனதான)

வேதமொழிக் கருவாகி
. வேணிதனிற் பிறைசூடி
பேதமழித் தருளாதி
. பேரிளமைத் திருவாளர்
போதமளித் தகமாள்வர்
. பூதகணத் தினர்சூழும்
மேதினியிற் புகழாரும்
. வேதிகுடிப் பெருமானே. ... 1

வானதியைத் தலைநாட
. மாதுவுருத் துடலேற
வானவருக் கமுதீவார்
. மாயையறுப் பவராக
ஈனவனத் தினிலாடி
. ஏறுதனிற் றிரிவீசன்
மேனியதிற் பொடிபூசும்
. வேதிகுடிப் பெருமானே. ... 2
 
தோசமறக் கலியாணம்
. தோதுவரத் திகழ்பாடல்
பூசனையிற் றகையாக
. பூதபதிக் கடியாரும் ... ... [சம்பந்தர்]
காசினியிற் தரவேதான்
. காதலருக் கருள்சேர
வீசுமணத் தலர்சூடும்
. வேதிகுடிப் பெருமானே. ... 3

ஆரணமித் தலமோத
. ஆரணருக் கருளீசர்
காரிகையைத் தலைமீதும்
. காளியெனப் புகல்மீதும் ... ... [புகல் = உடல்]
ஈருருவத் தருவாக
. ஈனமழித் தருள்வாராய்
வேரமறுத் தருள்வாராய் ... ... [வேரம் = வெகுளி, சினம்]
. வேதிகுடிப் பெருமானே. ... 4
 
கோவிலிடைச் சிலையாகக்
. கோலமிகப் பலதேவம்
பாவமிடர்க் களைநேர்வில்
. பாசமறச் செயவேநாம்
காவலிதிற் களியாரக்
. காதலுறக் கொளுமீசர்
மேவுதலத் தினைநாட
. வேதிகுடிப் பெருமானே. ... 5

காலனுதைத் தருள்வாரே
. காவியுடைக் கருள்வாரே
வேலவனைப் பணிவாரே
. வேதமொழிப் பொருளாவார்
கோலமிகக் கொளுவாரே
. கோவிலிடைத் திருவாவார்
வேலியுடைத் தருள்வாரே
. வேதிகுடிப் பெருமானே. ... 6
 
பாசுபதத் தினையீவர்
. பாசமறச் செயுமீசர்
மாசுதனைக் கொளுமீசர்
. வானவருக் கிறையாவர்
நேசமுறச் செயுமீசர்
. நேதியெனச் சொலமேவும்
வீசுநடத் தினையாடும்
. வேதிகுடிப் பெருமானே. ... 7

மேருமலைச் சிலையாலே
. மேகமலைப் புரமோயும்
ஓர்விரலைத் தரையீடாய்
. ஊணவரக் கனுமோய்வன்
காரிருளைக் களையீசர்
. காவலெனக் கொளவேநம்
வேருருத்த வினைமாய
. வேதிகுடிப் பெருமானே. ... 8
 
(இறுதிப் பகுதி)

மாலயனைத் தழலாக
. மாறியலைத் தருளீசர்
காலமறுத் தருளீசர்
. காசினியர்க் கருள்சேர
ஆலமரத் தடிமேவி
. ஆசைகளைக் கொளுமீசர்
மேலவருக் கிறையாவர்
. வேதிகுடிப் பெருமானே. ... 9

வேதநெறிக் கிசையாத
. வேறுநெறிக் கிசையாதே
நாதனருட் கழல்நாட
. நாகரவைக் கொளுமீசர்
ஆதரவைத் தருவாராய்
. ஆருயிருக் கருள்சேர
வேதவொலிக் கருவாகும்
. வேதிகுடிப் பெருமானே. ... 10

ஊனமுறுத் துளைவாழ்வில்
. ஊறுமகிழ்ச் சியைநாடும்
மானிடருக் களியாகும்
. மாறிலியைத் துணைநாட
தானழியத் திருவாரும்
. தாகமுடைத் தவர்யாரும்
மேனியழித் துயிர்வாழ
. வேதிகுடிப் பெருமானே. ... 11

--ரமணி, 19-26/04/2015

*****
 
எதிர்கொள்பாடி (இன்று மேலைத் திருமணஞ்சேரி)
(அறுசீர் விருத்தம்: ’மா மா கூவிளம்’, அரையடி)

(சம்பந்தர் தேவாரம் 2.100.1: படைகொள் கூற்றம் வந்துமெய்ப் பாசம் விட்ட போதின்கண்")

கோவில்
Iyravatheswarar Temple : Iyravatheswarar Iyravatheswarar Temple Details | Iyravatheswarar- MelaThirumanancheri | Tamilnadu Temple | ????????????
???????????? ??????, ????????????????? - Airavatheswarar Temple, Tiruedirkolpadi

பதிகம்
சுந்தரர்: 7.07: மத்த யானை யேறி மன்னர் சூழவரு வீர்காள்
??????? ???????? ???????? ????????

காப்பு:
கோட்டத்து பால கொடிமரவி நாயக!
பாட்டுள் எதிர்கொளப் பாடி-ஐ ராவதரைச்
சீட்டுக் குலுக்காதே சீர்வரும் சொற்களில்
வாட்டமின்றிப் பாட வருள்.

பதிகம்
ஈசன் இங்கே இந்திரன் ஈனம் மறையச் செய்துதுர்
வாசர் சாபம் நீக்கியே மாண்பை மீட்டுத் தந்தவன்
நேசக் கரியும் போற்றவே நேர்ந்த துயரம் நீக்கினார்
ஈசன் அன்னை இன்னருள் ஈட்ட எதிர்கொள் பாடியே. ... 1

பொருளோ நிலையோ போனவர் போற்றும் தலமென் றோர்புகழ்
திரும ணமாகச் சீர்ப்படத் திருந்த வேண்டிக் கொள்வரே
ஒருநோய் வயிற்றில் தோன்றியே உளைவோர் வணங்க நீங்குமே
உருதான் தோன்றி லிங்கமாய் உமையோ டெதிர்கொள் பாடியே. ... 2
 
பரத்வா ஜமுனி வேண்டவே பரம்சேர் உமையே புத்ரியின்
உருவாய்! அவளைச் சேர்மணம் உடையார் கொண்ட கோவிலாம்
திருவேள் விக்கு டித்தலம்! திருவார் மணம்பின் சீர்முனி
எருதூர் ஈசன் தம்பதி யெதிர்கொள் பாடி யாமிதே. ... 3

சுகந்த குந்த ளாம்பிகை சூலம் கொள்ளும் அன்னையாம்
அகந்தை நீக்கி இந்திரன் ஆனை ஆட்கொள் ஈசராம்
உகந்தோர் பதிகம் பாடிய உறவாய் அடியார் சுந்தரர்
சுகமாய்ச் சேர நீங்கிடும் துயரம் எதிர்கொள் பாடியே. ... 4
 
சுற்றில் அமர்வர் பைரவர் சூரி யதேவன் பிள்ளையார்
உற்ற துணைகொள் வேலவன் உவந்தே அருள்செய் லட்சுமி
கற்றார் போற்றும் நாமகள் கலியைக் கொடுக்கும் கோள்நவம்
மற்றும் நந்தி யென்றுநாம் மகிழ வெதிர்கொள் பாடியே. ... 5

கோட்டம் வாழும் தக்கணர் குமரி நடேசர் பிள்ளையார்
வாட்டம் தீர்பிட் சாடனர் மலரோன் ராகு என்றிவர்
நாட்டம் எல்லாம் நம்வினை நலியச் செய்தே காப்பதே
பாட்டன் பலரும் போற்றிய பழவூர் எதிர்கொள் பாடியே. ... 6
 
மத்தம் மதியம் மானுடன் மழுவும் சிகைவீழ் வானதி
நித்தம் தேயும் சந்திரன் நீண்டே நெளியும் பாம்பென
அத்தன் சூடி பார்வதி யாயோர் பாக மேனியன்
சித்தம் நடனம் செய்யவே சேர்வீர் எதிர்கொள் பாடியே. ... 7

மலையைத் தூக்க ராவணன் வலிமை காட்டும் யத்தனம்
குலையச் செய்தே கால்விரல் கூர்ந்தே வாட்டும் ஈசரே
அலையும் புரங்கள் தீக்குண வாக்கும் அஞ்செ ழுத்தராம்
தொலையும் பாவம் புண்ணியம் தொடரும் எதிர்கொள் பாடியே. ... 8

மாலும் அயனும் தேடியே மாயச் செய்தாட் கொண்டவர்
ஆலம் அடியில் நால்வருக் கரிய உண்மை விண்டவர்
ஆல கால நஞ்சினை அருந்திக் கழுத்தில் கொண்டவர்
கோலம் காண வாருமின் கோவில் எதிர்கொள் பாடியே. ... 9

வேதம் தள்ளும் பாதையை வீணர் மட்டும் நாடுவர்
பேதம் இல்லா ஈசரின் பேர்கொள் நெறியே வாழ்வினில்
போதம் கிட்டும் பாதையாய்ப் போவோர்க் கில்லை தோல்வியே
நாதன் நமச்சி வாயரை நாட வெதிர்கொள் பாடியே. ... 10

தோற்றம் மரணம் வஞ்சகம் துயரம் அலைக்கும் ஐம்புலன்
நீற்றை அணியும் ஈசராம் நீல கண்டர் நீக்குவர்
சாற்றும் பதிகம் சுந்தரர் சாறும் சொல்லும் மந்திரம்
ஏற்றே இன்றே நாடுவீர் ஈசர் எதிர்கொள் பாடியே. ... 11

--ரமணி, 11-12/05/2015, கலி.29/01/5116

*****
 
திருப்புறம்பியம்
(எழுசீர் விருத்தம்: விளம் மா விளம் மா விளம் விளம் மா)

சம்பந்தர் தேவாரம்: 3.120.1: மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை

கோவில்
Satchinadeswarar Temple : Satchinadeswarar Satchinadeswarar Temple Details | Satchinadeswarar - Tirupurambiam | Tamilnadu Temple | ????????????????
?????? ?????????? ??????, ???????????????? - Satchi Natheswarar Temple, Thirupurambiyam
http://www.kamakoti.org/tamil/7dk238.htm

பதிகம்
சம்பந்தர்: 2.030.1: மறம்பய மலைந்தவர் மதிற்பரி சறுத்தனை
??????? ???????? ???????? ????????
அப்பர்: 6.013.1: கொடிமாட நீள்தெருவு கூடல் கோட்டூர்
??????? ???????? ???????? ????????
சுந்தரர்: 7.035.1: அங்கம் ஓதியோர் ஆறை மேற்றளி
??????? ???????? ???????? ????????

காப்பு
ஊழியில் காத்த உமைமுதற் பிள்ளையே!
ஊழிப் புறம்பாகும் ஊர்த்தலத்தில் - வாழுகின்ற
சாட்சிநா தீசர் சகலமும் தந்தருளும்
ஆட்சியைப் பாட அருள்.

பதிகம்
(எழுசீர் விருத்தம்: விளம் மா விளம் மா விளம் விளம் மா)

பிரளயப் புறம்பாய் அமைந்தவூர்ப் பெயராம்
. பிறையணிப் பரமனித் தலத்தில்
கரும்பன மொழிசொல் சாம்பவி சேரக்
. கருவினில் வினைகளைக் கொண்டே
உருவினில் தானே யெழுந்தவி லிங்கம்
. ஒருமணச் சான்றென நின்றார்
புரந்தரும் மாயைப் புகைதெளி விக்கப்
. புறம்பயம் தலம்தொழு வோமே. ... 1

வருணனின் படைப்பாய்க் கடல்நுரை கிளிஞ்சல்
. வடிவினில் உட்பொரு ளாகிப்
பிரளயம் புகாதே ஊரினைக் காத்த
. பிள்ளையார் முன்னுறும் சிறப்பாய்
ஒருமுறை வருடம் தேனபி டேகம்
. உறிஞ்சுவார் முற்றிலும் உண்மை!
புரையுறும் மாயைப் புண்ணது மறையப்
. புறம்பயம் தலம்தொழு வோமே. ... 2
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top