• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மயக்கி மருட்டும் சில சொற்கள்.

Status
Not open for further replies.

# 76.
ஒழுகை = வண்டி வரிசை.
ஒழுங்கை = இடுக்கு வழி, சந்து.

# 77.
ஒழுகு = நிலக் கணக்கு.
ஒழுங்கு = முறை, விதி, வரிசை.

# 78.
ஓகை = மகிழ்ச்சி
ஓகோ = வியப்புக் குறி.

# 79.
ஓது = சொல்லு.
ஓதை = ஒலி

# 80.
ஓமை = மா மரம்.
ஓதை = ஆரவாரம்.
 
#81.
ஓரி = நரி.
ஓரை = மாதர் கூட்டம்.

#82.
கச்சு = அரைப்பட்டிகை.
கச்சி = காஞ்சிபுரம்.

#83.
கச்சை = நாடா.
கச்சம் = ஆடை விளிம்பை மடித்துச் சொருகுதல்.

#84.
கசகச = வியர்த்தல்.
கசகசா = அபின் செடி விதை.

#85.
கஞ்சகம் = கறிவேப்பிலை மரம்.
கஞ்சுகம் = சட்டை, கோரைப்புல்.
 
#86.
கட்டூண் = களவு செய்து வாழ்வது.
கட்டூர் = பாசறை.

#87.
கடிகை = நாழிகை.
கடிஞை = பிச்சைப் பாத்திரம்.

#88.
கடுப்பு = நோவு.
கடும்பு = சுற்றத்தார்.

# 89.
கடைச்சி = மருதநிலப் பெண்.
இடைச்சி = முல்லைநிலப் பெண்.

#90.
கடைக்கணி = கடைக்கண்ணால் பார்.
கண்காணி = மேற்பார்வை செய்.
 
#91.
கண்டகம் = முள்.
கண்டகன் = கொடியவன்.

#92.
கண்ணாடி = முகம் பார்க்கும் ஆடி.
கண்ணாட்டி = காதலி.

#93.
கண்ணுறு = பார்.
கண்ணூறு = திருஷ்டி தோசம்.

#94.
கண்பாடு = திருஷ்டி .
கண்படை = உறக்கம்.

#95.
கணவன் = கொழுநன்.
கணிவன் = சோதிடன்.

 
#96.
கத்தரி = ஒரு செடி.
கத்திரி = ஒரு வகைப்பறை.

#97.
கந்தரம் = கழுத்து.
சுந்தரம் = அழகு.

#98.
கந்து = தூண்.
கந்தி = வாசனைப் பொருள்.

#99.
கப்படம் = ஆடை.
கப்பணம் = கை வேல்.

#100.
கபடம் = வஞ்சனை.
கபாடம் = கதவு .
 
In Hindi the word "KAL" means both 'yesterday' and 'tomorrow'!

In Italian "Ciao" means both 'Hello' and 'Good bye'!

Why do languages have one word to mean two opposite things!? :noidea:
 
Last edited:
1. 'kal' ... May be, the work which we are supposed to finish 'yesterday' could be done only 'tomorrow'!

2. If we say 'Hello' to a person by mistake (!?), we can run away, making the person think that we said 'Good bye'!
:peace:
 
# 101.
கம்பளம் = பிராணிகளின் ரோமத்தால் செய்தது.
கம்பளர் =மருத நில மக்கள்.

# 102.
கமகம் = இசைக்கு இனிமை கூட்டும் ஸ்வர மாறுபாடு.
கமகன் = தான் கற்காத நூலுக்கும் பொருள் கூற வல்லவன்.

# 103.
கமடம் = ஆமை.
கமலம் = தாமரை.

# 104.
கமுக்கம் = ரகசியம்.
கயக்கம் = கலக்கம்.

# 105.
கரடம் = காகம்.
கரடகம் = கபடம்.
 
# 106.
கரண்டம் = நீர்க்காக்கை.
கரண்டகம் = பூக் குடலை.

# 107.
கைக் கரண்டி = உலோக அகப்பை.
கரண்டிகை = பூக் கூடை.

# 108.
கரணம் = கையால் செய்யப்பும் தொழில்.
கரணன் = கணக்கன்.

# 109.
கரா = முதலை.
கரி = யானை.


#110.
கரிசனை = அன்பு.
கரிசனம் = யானைக் கொம்பு.

 
.................
#110.
கரிசனை = அன்பு.
கரிசனம் = யானைக் கொம்பு.
இனிமேல் தப்பித் தவறிக்கூட 'என்னிடம் கரிசனம் காட்டினார்', என்று சொல்ல மாட்டேன்! :tape:
 
#111.
கரிசு = குற்றம்.
கரிசை = 400 மரக்கால் அளவு.

#112.
கல்லு = தொண்டு.
கல்லை = தையல் இலை.

#113.
கலதி = கேடு.
கலாதி = கலகம்.

#114.
கலம் = பாத்திரம்.
கலாம் = போட்டி.

#115.
கலிழ் = கலங்கிய நீர்.
கவிழ் = தலை கீழாக்கு.
 
இடைவேளை வந்தது!

மயக்கி மருட்ட, அந்தக் கணினி தீர்மானம் செய்தது!
மயக்கி மருட்டும் பக்கங்களில். இடைவேளை வந்தது! :couch2:
 
#116.
கலிழ் = கலங்கிய நீர்.
கவிழ் = தலை கீழாக்கு.

#117.
கவ்வு = வாயினால் பற்று.
கவ்வை = ஒலி, இரைச்சல்.

#118.
கலிழி நீர் = கலங்கிய நீர்.
கலுழி நீர் = கண்ணீர்.

#119.
கவர்ச்சி = மனதைப் பற்றி இழுத்தல்.
கவற்சி = விருப்பம்.

#120.
கவிதை = பாடல்.
கவிகை = வளைவு.
 
# 121.
கவுள் = கன்னம்.
கவுளி = ஒரு கட்டு.

# 122.
கழங்கு = கழற்சிக்காய்.
கழஞ்சு = ஒரு எடை அளவு.

# 123.
கழுது = பேய்.
கழுந்து = உலக்கையின் மழுங்கிய முனை.

# 124.
கழுமம் = குற்றம்.
கழுமல் = குழப்பம்.

# 125.
களபம் = சந்தனம்.
களமம் = நெல்.
 
# 126.
கற்கை = படித்தல்.
கற்கி = கோவில்.

# 127.
கனகம் = பொன்.
கனகன் = இரணியன்.

# 128.
காடி = புளித்த காஞ்சி.
காடை = ஒரு பறவை.

# 129.
காந்தள் = கார்த்திகைப்பூ.
காந்தல் = எரிதல்.

# 130.
காய்ச்சு = சூடாக்கு.
காய்ப்பு = வெறுப்பு.
 
இரட்டைவேடச் சொற்கள்.

அச்சில் வார்த்தது போல இருவர் இருப்பார்.
மச்சம் ஒருவேளை சற்றே மாறுபடலாம்!

ஒருவர் நல்லவர் என்றால் மற்றவர் தீயவர்!
ஒருவர் வீரர் என்றால் மற்றவர் கோழை!

ஒருவர் அரசன் என்றல் மற்றவர் ஆண்டி!
ஒருவர் அழகன் என்றால் மற்றவர் குரூபி!

எத்தனைத் திரைப்படங்களில் பார்த்திருப்போம்!
தித்திக்கும் தமிழிலும் உள்ளன இது போன்றவை!

ஒருபோலவே காட்சி அளித்து
இருவேறு பொருளை அளித்து
மயக்கி மருட்டுகின்றன நம்மை!
மயங்காமல் அவற்றைக் காண்போம்.

பெயர்ச்சொல்லாக வரும் பொருள் முதலிலும்
வினைச் சொல்லாக வரும் பொருள் பிறகும்
அளிக்கப்பட்டுள்ளன வரிசையாக இங்கு!
 
இரட்டைவேடச் சொற்கள்.

#1.
அடி = பாதம்
அடி = நையப்புடை.
#2.
அண்ணா = தமையன்.
அண்ணா = தலையை நிமிர்த்தி மேலே நோக்கு.
#3.
அணங்கு = தெய்வமகள்.
அணங்கு = வருத்து.
#4.
அணி = நகைகள்.
அணி = போட்டுக்கொள்.
#5.
அணை = அணைக்கட்டு.
அணை = அணைத்துக்கொள்.
 
இரட்டைவேடச் சொற்கள்.

#6.அப்பு =தந்தை.
அப்பு = பூசு.
#7.
அமர் = போர்.
அமர் = உட்கார்.
#8.
அமை = மூங்கில்.
அமை = பொருத்து.
#9.
அயிர் = நுண்மை.
அயிர் = சந்தேகப்படு.
#10.
அயில் = இரும்பு.
அயில் = உண்ணு.
 
சொற்கள் மயக்கி மருட்டுகின்றன!

படித்த பின், நினைவில் வைப்பது எப்படி எனப் புரியவில்லை!! :noidea:
 
அகராதிபோன்ற வரிசையிலேயே
அமைந்து உள்ள இச்சொற்களை;

அழகாக 'save' செய்துவிட்டால்,
பழகாத சொற்கள் மருட்டினால்

தேவைப்படும்போது நொடியில்
தேடிக் கண்டுவிடலாமே இங்கே!
:typing:
 
#11.
அரக்கு = சிவப்பு மெழுகு.
அரக்கு = உள்ளங்கையால் தேய்.

#12.
அரங்கு = மேடை.
அரங்கு = அழுந்து.

#13.
அரவு = பாம்பு.
அரவு = ஒலிஎழுப்பு.

#14.
அரி = விஷ்ணு.
அரி = அறுத்து எடு.

#15.
அருகு = சமீபம்.
அருகு = குறைந்து போ.
 
#16.
அருள் = கருணை.
அருள் = மனம் மகிழ்ந்து கொடு.

#17.
அல்கு = பிற்பகல்.
அல்கு = அழிந்து போ.

#18.
அலக்கு = துரட்டுக்கம்பு.
அலக்கு = அசையச் செய்.

#19.
அலை = கடல் அலை.
அலை = இங்கும் அங்கும் திரி.

#20.
அவி = உணவு.
அவி = புழுங்கு.
 
# 131.
காலடி = உள்ளங்கால்.
காலாடி = முயற்சியாளன்.

# 132.
காழியன் = சலவைத் தொழிலாளி.
ஊழியன் = வேலைக்காரன்.

# 133.
கறை = குற்றம், மாசு.
காறை = கழுத்தணி.

# 134.
கடைச்சரக்கு = கடைச் சாமான்.
கிடைச்சரக்கு = பழைய சாமான்.

# 135.
கிலம் = அழிந்த.
கிலி = அச்சம்.
 
# 136.
கிறுக்கு = படிக்க முடியாத எழுத்துக்கள்.
கிறுக்கன் = பைத்தியக்காரன்.

# 137.
கின்னரம் = இனிய இசைப் பறவை.
கிண்ணாரம் = ஜால்ரா.

# 138.
கீரம் = கிளி.
கீறல் = கோடு

# 139.
கீரம் = கிளி.
கீதம் = பாடல்.

# 140.
குச்சம் = கொத்து.
குஞ்சம் = குள்ளமானது.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top