• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மயக்கி மருட்டும் சில சொற்கள்.

Status
Not open for further replies.
# 16.
அபிராமம் = அழகு.
அபிராமி = பார்வதி.
# 17.
அபூதம் = முன்பு இல்லாதது.
அபேதம் = வேறுபாடு இல்லாதது.
#18.
அம்மை = அம்மா.
அம்பை = அம்பா.
# 19 .
அம்மனை = அம்மா

அம்மானை = பெண்கள் ஆடும் ஒரு விளையாட்டு.
# 20.
அமணம் = சமண மதம்.
அம்மணம் = நிர்வாணம்.
 
# 21.
அடுகளம் = போர்க்களம்.
அமர்க்களம் = போர்க்களம்.
# 22.
அமரர் = தேவர்.
அமரார் = பகைவர்.
# 23.
அயர் = சோர்வடை.
அயன் = பிரமன்.
#24.
அயிர் = சந்தேகப்பட்டு.
அயர் = சோர்வடை.
#25.
அரணி = தீக்கடைக்கோல்.
அரணை = ஒருவகைப் பல்லி.
 
#26.
அரவு = பாம்பு.
அரவு = ஒலி எழுப்பு.
#27.
அரளி = ஒரு மலர்.
அலரி =அரளி.
# 28.
அரிசயம் = எலுமிச்சை.
அரிசனம் = மஞ்சள்.
# 29.
அரிசி = நெல்லின் மணி.
அரிசு = மிளகு.
# 30.
அரிம
ணை = அரிவாள் மணை.
அரியணை = சிங்காதனம்.
 
என்னைக் கவர்ந்த சிலேடைகள் சில.

1. பேரன்புடையீர் => பேரன் + புடையீர் = பேரனை அடிக்கவேண்டாம்.

2. தலைவிதிவசம் => தலை விதி வசம் / தலைவி திவசம்.

3. பிராமணர்கள் சாப்பிடும் இடம் => பிராமணர் கள் சாப்பிடும் இடம்.

(ஒரு Hotel Notice board இல் பார்த்தது)

4. சாவடி=> (ஆளைச்) சாவடி.

5. அரிசிவசம்போ=> அரி சிவ சம்போ/ அரிசி வசம் போ!

6. கஞ்சிவரதப்பா =>கஞ்சி வரதப்பா(பெருமாள்) / (குடிக்கும்) கஞ்சி வரதப்பா!

7. பழங்கள்=> (குடிக்கும்) பழம் + கள் / (உண்ணும்) பழங்கள்.

8. பல்துறை வித்தகர்=> பல்துறை வித்தகர் (திறமைசாலி) / பல்

துறை வித்தகர்(பல் மருத்துவர்)

9. பாரதி சின்னப்பயல் => பார் அதி சின்னப் பயல்.

10. பாடகரின் காதிலும் கம்மல், குரலிலும் கம்மல்.
icon14.png
 
என்னைக் கவர்ந்த சிலேடைகள் சில.

1. பேரன்புடையீர் => பேரன் + புடையீர் = பேரனை அடிக்கவேண்டாம்.

..........[/IMG]

இன்னொரு பொருளும் எனக்குத் தோன்றியது!

பேரன்புடையீர் = பேரன்பு + உடையீர்

பேரன்பை உடைக்காதீர்கள்! :thumb:

ஒருவேளை, பத்திரிகைகளில் அதைத்தான் உணர்த்துகிறாரோ? :noidea:
 
என்னைக் கவர்ந்த சிலேடை!
புத்தியில்லாதவன் = புத்தியில் + ஆதவன் (சூரியன்) :cheer2:
 
என்னைக் கவர்ந்த சிலேடை!
புத்தியில்லாதவன் = புத்தியில் + ஆதவன் (சூரியன்
)

or,

புத்தியில்லாதவன் = புத்தி + இல் + ஆதவன் (சூரியன்), with due respects, this makes more sense given sun is an inanimate object.

Cheers!
 
புத்தியில்லாதவனைக் கொஞ்சம் புகழ விடுங்கள் Prof. Sir!

ஆதவனுக்குப் புத்தி இல்லாவிட்டால், வம்பு ஆகிவிடும்!

ஆதவன் உதிக்கும், மறையும் நேரங்களைக் குழப்புவான்! :madgrin:

Regards............
 
To the best of my knowledge, Sun is compared with superior

Intelligence and Moon with love, mercy and kindness.

Ever heard of the word, Gnaana Sooriyan?

அறிவும் அன்பும் இரண்டுமே அவசியம்,
அவனியில் நாம் பயன் தர வாழ்ந்திடவே;

அறிவு என்பது ஒளிரும் சூரியன் என்றால்,
அன்பு என்பது குளிர்ந்த வெண்ணிலவாகும்.
 
.......
Ever heard of the word, Gnaana Sooriyan?
...........
அறிவு என்பது ஒளிரும் சூரியன் என்றால்,
அன்பு என்பது குளிர்ந்த வெண்ணிலவாகும்.

ஆதவனும், வெண்ணிலவும் சேர்ந்தால் அமாவாசை; இருட்டு!

ஆதலால், ஞான சூரியர்கள் ஒளிர்ந்து, மிகவும் சுடுகின்றாரோ?

குறிப்பு:

ஸ்ரீ கோடீஸ்வர ஐயரின் மேளகர்த்தா 'க்ருதி'களில் கடைசியான,

ரசிகப்ரியா ராகக் 'க்ருதி'யின் அனுபல்லவி:

'மருள் உறவே என்னை மயக்கிடும் மாய வல்-

இருள் அறவே ஞான சூரியன் என வந்தோர் சொல்'

[அருள் செய்ய வேண்டும் ஐயா (நீ)! அரசே முருகையா (நீ)! ]:pray:
 
Last edited:
ஆதவனும், வெண்ணிலவும் சேர்ந்தால் அமாவசை; இருட்டு!

ஆதலால், ஞான சூரியர்கள் ஒளிர்ந்து, மிகவும் சுடுகின்றாரோ?

அமாவசை இருட்டில் நிலவு கூட இருக்காது !
அந்த நேரத்தில் ஞான சூரியன் ஒளிர்ந்து சுடுவது எப்படி ?
:noidea:
 
ஆதவன் எத்தனை ஆதவனடி!

1. புத்தியில்லாதவன்= புத்தியில் + ஆதவன்.

2. சக்தியில்லாதவன் = சக்தியில் + ஆதவன்.

3. பொறுப்பில்லாதவன் = பொறுப்பில் + ஆதவன்.

4. சகிப்பில்லாதவன் = சகிப்பில் + ஆதவன்.

5. அறிவில்லாதவன் = அறிவில் +ஆதவன்.

6. செறிவில்லாதவன் = செறிவில் + ஆதவன்.

7. நிறைவில்லாதவன் = நிறைவில் + ஆதவன்.

8. போக்கில்லாதவன் = போக்கில் + ஆதவன்.

9. தெளிவில்லாதவன் = தெளிவில் + ஆதவன்.

10. வலிவில்லாதவன் = வலிவில் + ஆதவன்.

11. குறைவில்லாதவன் = குறைவு + இல் + ஆதவன்.

12. அழிவில்லாதவன் = அழிவு + இல் + ஆதவன்.


த்வாதச ஆதித்யர்கள் என்பவர் இவர்கள் தானோ ? :flame:
 
Last edited:
ஒளிரும் ஞான சூரியர்கள் நிலவுடன் சேரமாட்டார்; சேர்ந்தால் இரவு இருட்டு ஆகுமே!
 
Last edited:
நிலவுடன் சேர்ந்த கதிரவன் இருளுமா?:flame:

கதிரவனுடன் சேர்ந்த நிலவு ஒளிருமா?:flame:
 
எனக்குப் பிடித்த சொற்றொடர்கள் # 2 .
( நானே உருவாக்கியவை )


1. முத்தின பீன்சும் மொண்ணைக் கத்தியும்
(விபரீதக் கூட்டணி அமைத்தவர்கள் )

2. தொட்டாச் சிணிங்கியும் கொட்டாப் புளியும்.

(வியத்தகு மனிதர்கள் இவர்கள்)

3. இறால் மீனும் சுறாமீனும் .

(வலையில் மாட்டும் மற்றும் மாட்டாத இருவர்)

4. எட்டாத கனியும் கிட்டாத ஏணியும்.

( தோல்வியில் துபள்பவர்)

5. ஊசிக்காதும் ஒட்டகமும்.

(கல்லின் உரிக்க வல்லவர்)

6. வடவாக்னியும் கடல் நீரும்

( மனத்தை அடக்கிய மகான் )
 
எனக்குப் பிடித்த சொற்றொடர்கள் # 3 .
( நானே உருவாக்கியவை )



7. வெத்து வேட்டுகளும் வாய்ச் சொல் வீரர்களும்

(உலகில் நிறைந்துள்ள மனிதர்கள்)

8. சபலர்களும் சுலபர்களும்.

(பிழைக்கத் தெரிந்த மனிதர்கள்)

9. குள்ள நரியும் பன்னீர் திராட்சையும்

(பிறர் சாதனைகளைச் சோதனை செய்பவர்.)

10 . ஒழுகும் பேனாவும் அழுமுஞ்சியும்

(தானும் கெட்டு அடுத்தவனையும் கெடுப்பவர்) .

11. குட்டிச் சாத்தானும் கெட்டிக்காரனும்

(பழுதையும் படம் எடுக்க வைக்க வல்லவர்கள்)


12. அரைவேக்காடும் அவசரக் குடுக்கைகளும்
( அவையில் எப்போதும் முந்துபவர்கள்)
 
எனக்குப் பிடித்த சொற்றொடர்கள். #1

1. அமாவாசைக்கும் ______________ என்ன சம்பந்தம் என்பார்கள்!
( இரண்டும் அகரத்தில் தொடங்குவது தான் ஒற்றுமை )

2. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் என்ன சம்பந்தம்?
( இரண்டுமே மொழு மொழு என்று இருக்கும் )

3. வெண்டைக்காயும் விளக்கெண்ணையும்.
(இதன் வழவழப்புடன் எது தான் போட்டி போட முடியும்?)

4. விடாக்கண்டனும் கொடாக்கண்டனும்.
(உடும்புப் பிடியில் என்ன ஒற்றுமை அப்பப்பா!)

5. குட்டிச் சுவரும் முட்டிக்கால் கழுதையும்.
( நட்பால் ஒன்றியவர்கள் இவர்கள்!)
 

# 31.
அருகல் = குறைதல்.
அருகில் = சமீபத்தில்.
# 32.
அருட்டு = மயங்கச்செய்.
மருட்டு = மிரளச்செய்.
# 33.
அருணம் = சிவப்பு.
அருணன் = சூரியனின் சாரதி.
# 34.
அருத்தி = மிகுந்த ஆசை.
அருந்தி = உட்கொண்டு.
# 35.
அவலி = அழ, அழு.
அவனி = பூமி.
 
எனக்குப் பிடித்த பழமொழிகள் சில...

1. ஒரு கண்ணில் வெண்ணை,
ஒரு கண்ணில் சுண்ணாம்பு.

2. இங்கே தலை காட்டுகிறான்.
அங்கே வாலைக் கட்டுகிறான்

3. அடி நாக்கில் நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.

4. அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

5. பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்.

6. பன்றியின் பின்னால் செல்லும்
கன்றும் மலம் தின்னும்.


தினசரி வாழ்க்கையை எத்தனை
நிதரிசனம் ஆக்குகின்றன இவை !
 
Last edited:
சொல்ல விரும்பியும் சொல்ல மறந்தது!

நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும்

நாணமில்லாத நம் தலைவர்களைப்

பொருத்திப்பாருங்கள் பழமொழிகளில்!
:evil:

வரும் முன்னேயே எச்சரித்தவை அவை!
:sad:

தீர்க்கதரிசிகளின் எச்சரிக்கை
யைத் துறந்து :loco:

ஏக்கம் அடைந்து புலம்புகின்றோமே! :blabla:
 
Last edited:
# 36.
அவிர்தல் = ஒளி வீசுதல்.
அவித்தல்= புழுக்குதல்.
# 37.
அழுகல் = அழுகிய பொருள்.
அழுங்கல் = இரக்கம்.
# 38
அழல் = நெருப்பு.
தழல் = தணல்.
#39
அழுத்து = அமுத்து.
அழுந்து = அமிழ்ந்து போ.
#40
அழுகுணி = எப்போதும் அழுபவன்/ அழுபவள்.
அழுமூஞ்சி = களை இல்லாத முகம் உடையவன்/ உடையவள்.
 
நவரசச் சொற்கள்.

மனிதனின் வாழ்வில் ஒன்பது சுவைகள் உலா வரும்.

இனிக்கும் சிருங்காரச் சுவையிலிருந்து தொடங்கி

அச்சம், வீரம், கோபம், அற்புதம் என்று பலவகைப்படும்!

இச்சுவைகளை இனிய தமிழில் வெளிப்படுத்த இயலும்

ஒற்றை எழுத்துச் சொல்லின் மூலம் அழகாக நம்மால்!

கற்றவரை இவை நிலவவில்லை வே
ற்று மொழிகளிலே!
 
Last edited:
நவரசச் சொற்கள்(#1).

1. அ ஆ => இரக்கக் குறிப்பு.

2. அக்காடா =>
களைப்பு.

3. அப்பாடா => களைப்பு, சோர்வு.

4. அச்சோ => பதற்றம், இரக்கம்.

5. அட => மகிழ்ச்சி கலந்த வியப்பு.

6. அடேயப்பா => மிக மிக வியப்பு.

7. அந்தோ => கழிவிரக்கம்.

8. அப்பப்பா => வியப்பு, இரக்கம்.

9. அம்மா => வலி, அதிர்ச்சி, பயம், வியப்பு.

10.அம்மம்மா => வியப்பு, களைப்பு, சலிப்பு.
 
Last edited:
சித்திர விசித்திரச் சொற்கள்.

சித்திரம் ஒன்று நமக்கு வெளிப்படுத்தும்
விசித்திரமான ஆயிரம் சொற்பொருளை!

கண் முன்னே படம் பிடித்துக் காட்டும் இவை!
காமிராவின் வேலையைச் செய்யும் இவை!

இணைச் சொற்களா அன்றி அடுக்குத்தொடரா?
இரட்டைக் கிளவியா? என அறியத் தேவை இல்லை.

அற்புதமான இவற்றைப் பயன்படுத்தி நம்முடைய
கற்பனை வளத்தைக் கூட்டலாமே எழுத்துக்களில் !
 
சித்திர விசித்திரச் சொற்கள்.

ஒலிக் குறிப்புச் சொற்கள் (#1)


1. கண கண = மணியோசை.

2. ஜண ஜண = பேரிகையின் ஒலி.

3. கர கர = முறுக்கு, சீடை.

4. மொறு மொறு = வடை, அடை.

5. சர சர = பாம்பு.

6. கொள கொள = குழாயில் நீர் கொட்டுவது.

7. சல சல = நீரோடை.

8. லொட லொட = ஓயாமல்.

9. கட கட = உருளும் ஓசை.

10. தட தட = ஓடும் ஓசை.
 
Last edited:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top