P.J.
0
மறைந்து வரும் கோலி சோடா
மறைந்து வரும் கோலி சோடா
இப்படி பழம்பெருமை வாய்ந்த சோடாவை 1872ல் லண்டனை சேர்ந்த குளிர்பான நிறுவனம் ஒன்று தான் அறிமுகப்படுத்தியது. வெகு விரைவில் நம் நாட்டிலும் கோலி சோடா தயாரிப்பு குடிசை தொழிலாக அறிமுகமாகி பரவலான வரவேற்பை பெற்றது. கார்பன்டை ஆக்சைடை தண்ணீரில் கரைத்து அதை பாட்டிலில் அடைத்து விற்கும் எளிய வழி முறைகளை கொண்ட சோடா தயாரிப்பு மின்சார பயன்பாடு இல்லாத தொழிலாகும். கோலிசோடா, பன்னீர் சோடா, ஆரஞ்சு சோடா, கோலா சோடா, ஜிஞ்சர் சோடா, கலர் என்று பல விதங்களில், ஒரு சோடா கலர் முப்பது பைசாவுக்கு விற்கப்பட்டது. இந்த தொழில் பல ஆயிரம் குடும்பங்களை வாழ வைத்தது.
இப்படி கொடி கட்டி பறந்த சோடா விற்பனை இன்று ஒரு நாளைக்கு பத்து பாட்டில் விற்றாலே அதிசயம் தான் என்ற நிலையில் உள்ளது. தற்போது வெளிநாட்டு குளிர்பானங்கள் வாங்கி குடிப்பதை பெருமையாகவும், நாகரிகமாகவும் கருதும் மக்கள், உள்ளூரில் தயாரிக்கப்படும் பக்க விளைவுகளற்ற சோடா பானங்களை குடிப்பதை கவுரவ குறைச்சலாக எண்ணி தவிர்த்து வருகின்றனர்.
லாபம் கிடைக்கிறதோ, இல்லையோ நம் முன்னோர் கற்றுத் தந்த கைத்தொழிலை விடக்கூடாது என்று நடத்தி வருவதாக கூறுகின்றனர் அதன் உரிமையாளர்கள்.
Source:??????? ????? ???? ???? | Kulasai - ?????