அத்தியாயம் - 8
***************
"கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்......."
என்று கௌஷிக் சின்ன வயதில் அவர்கள் பள்ளிக்கூட பிரேயரில் தினமும் பாடியது இப்போது ஸ்ரீராம் காதுகளில் ஒலித்தது. அப்படிப்பட்ட கௌஷிக்குக்கு இப்படி ஒரு மனைவியா ? ஸ்ரீராம் அதிர்ந்தான் என்று தான் சொல்ல வேண்டும்; அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை.
சுமி தன் நண்பர்களோடு வெளியேறும் வரை பொறுத்திருந்தவன், அதற்கு மேலும் தாங்க இயலாமல் வெடித்து விட்டான்.
"கௌஷிக், என்னடா இதெல்லாம்? நிஜமாவே அவங்க தான் உன் வொய்ஃபா? நம்பவே முடியலையேடா! என்னடா நடக்குது இங்கே?"
ஒரு பெருமூச்சுடன் கௌஷிக் ஆரம்பித்தான் :
" ஸ்ரீராம், என்னிக்கோ ஒரு நாள் உன்னைப் பார்க்கிறேன், இதுல எதுக்கு என் சோகமெல்லாம்னு தான் நான் சொல்லலை. நெஜமாவே சுமி தான் என் வொய்ஃப். கல்யாணம் பண்றதா நினைச்சு நான் எனக்கே ஒரு குழி வெட்டிக்கிட்டேன், ஸ்ரீராம்; இப்ப வெளியில வர முடியாம மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்."
"கேட்கவே ரொம்ப மனசு கஷ்டமா இருக்குடா. உங்கப்பா, அம்மாக்கு இதெல்லாம் தெரியுமா, கௌஷிக்?"
"எனக்கு கல்யாணமாயிடுச்சுன்னு தெரியும். ஆனா மாட்டுப்பொண் இப்படினு சொன்னா அவங்களால தாங்க முடியாது. ஏற்கனவே மனசு வேதனையோட முதியோர் இல்லத்துல இருக்கிறவங்க இன்னும் நொந்து போயிடுவாங்க ."
"என்னடா நீ இன்னும் மேலே மேலே குண்டைத் தூக்கிப் போடறே? அவங்க எப்ப முதியோர் இல்லத்துல சேர்ந்தாங்க?"
"எங்கப்பாவைப் பத்தி தான் உனக்குத் தெரியுமே ஸ்ரீராம். அவர் ஒரு man of principles. என்னையும், என் தங்கைகளையும் ரொம்பக் கட்டுப்பாடா, மிலிடரி டிசிப்ளினோட வளர்த்தார். தீவிரமான தேசபக்தி உடையவர். ஐ.ஐ.டி- யில எனக்கு அட்மிஷன் கிடைச்சதுமே அவர் என் கிட்ட சொன்னார்:
' நீ படிக்கிறதுக்கான செலவு நம்ம நாட்டு மக்களோடது; அதனால உன் அறிவு, திறமை, உழைப்பு எல்லாமே அவங்களுக்கு தான் சேரணும்'னார். அந்த வயசுல எனக்கு அதெல்லாம் பெரிசா தோணலை; சரின்னுட்டேன். அப்புறம், படிப்பு முடிஞ்சு எல்லாரையும் போல நானும் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி பண்ணேன். எங்கப்பா அதை விடாப்பிடியா எதிர்த்தார். சரி, பரவாயில்லைனு நான் இங்க வேலைக்கு வந்துட்டேன்.
ஆனா அவர் தன் பிடிவாதத்தை விடவேயில்லை. எப்ப நான் இந்தியா திரும்பி அங்க வேலை செய்யறேனோ, அந்த பணம் தான் வாங்கிப்பேன்னு உறுதியா இருக்கார். என் தங்கைகள்லாம் கல்யாணம் முடிஞ்சு அவங்கவங்க வீட்டுல இருக்காங்க. நல்லபடியா செட்டிலாயிட்டாங்க. அப்பா அவர் கிட்ட இருந்த பணத்தை ஒரு முதியோர் இல்லத்துல கட்டிட்டு, அம்மா கூட அங்கேயே தங்கிட்டாரு."
"கௌஷிக், எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. நம்ம ஸ்கூல் நாள்லேர்ந்தே உங்கப்பாவோட rules and regulations நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் தெரியும். அவர் தனக்குன்னு ஒரு காரணம் வைச்சிருக்கார். நீ அதை ஃபாலோ பண்ணுவேன்னு சொன்ன அப்புறம் தான் உன்னை படிக்க வைச்சிருக்கார். நீ அதை ம்றுத்தப்புறம் அவர் எடுத்த முடிவுலயும் ஒரு நியாயம் இருக்குன்னு தான் எனக்குத் தோணுது. சரி, இவ்வுளவு வருஷம் தான் நீ இங்க இருந்துட்டியே, போதும்னு அவங்களோட போய் 'செட்டில்' ஆயிடலாமே?"
"இது எனக்குத் தோணாமே இருக்குமா, ஸ்ரீராம்? பணம், பணம், மேலும் பணம் அப்படின்னு அமெரிக்கா வந்த கௌஷிக்காக நான் இப்ப இல்லை. பணத்தைத் தாண்டிய சில மதிப்பீடுகளும் வாழ்க்கையில இருக்குன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். எனக்கு இருந்த மயக்கம் தெளிஞ்சுடுச்சு.அதனால இந்தியா போய் செட்டிலாக நான் எப்பவோ ரெடியாய்ட்டேன். ஆனா, சுமி? நீ தான் அவளை பார்த்தியே? அவ இன்னும் மாறவேயில்லை. கண்டிப்பா அவ இதுக்கு சம்மதிக்கவே மாட்டா" என்ற கௌஷிக், நினைவலைகளில் மூழ்கினான்.
*************************
இந்தியாவில் இருந்து யு.எஸ் செல்லும் எண்ணற்ற இந்தியர்களைப் போல் தான் கௌஷிக்கும் கிளம்பினான். அந்த நாட்டின் பணமும், நவீன வசதிகளும், கட்டுப்பாடுகள் அற்ற தனிமனித சுதந்திரமும், எண்ணம் போல் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வாய்ப்பும் - எல்லாம் ஒன்று சேர்ந்து அவனுக்கு அது சொர்க்கபூமியாகத் தோன்றியது. அதுவும் கௌஷிக்கிற்கு தன் அப்பாவின் அதீத கட்டுப்பாடுகள் தளர்ந்து,
விடுதலை கிடைத்ததாகவே நினைத்துக் கொண்டான்; சுதந்திரப் பறவையாக இன்ப வானில் பறந்தான்.
அவன் அமெரிக்கா வந்து ஓரிரு வருடங்கள் கழித்து, அவன் அம்மா கல்யாணப் பேச்சை ஆரம்பித்து கடிதம் எழுதினார். தமிழ்நாட்டில் பெண் பார்க்க உத்தேசம் இருப்பதாகவும், கௌஷிக் தன் வேலையை மாற்றிக் கொண்டு இந்தியா வந்து 'குடியும் குடித்தனமும்' ஆக வாழ வேண்டும் என்று கேட்டிருந்தார்.அப்போது அந்தக் கடிதத்தைப் பார்த்த கௌஷிக்கிற்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.
"இத்தனை வசதிகளையும், இவ்வுளவு பெரிய சம்பளத்தையும் விட்டுட்டு யார் இந்தியா போவாங்க? இவங்க பார்க்கிற பொண்ணுக்கு இட்லி, தோசை தான் தெரியும்; இ-மெயில், இண்டர்நெட் தெரியுமா? 'கோபுரங்கள் சாய்வதில்லை' அருக்காணி போல இங்க வந்து திருதிருன்னு அது முழிச்சு என் மானத்தை வாங்கறதுக்கா?"
என்றெல்லாம் அந்தக் கடிதத்தை தன் நண்பர்களிடம் காட்டி கேலி பேசி சிரித்தான்.
அப்போது தான் அவர்கள் கம்பெனியில் சுமி வேலைக்கு சேர்ந்தாள். அவளுடைய பெற்றோர் ஆப்பிரிக்காவில் இருந்தனர். அவர்கள் குடும்பம் பல தலைமுறைகளுக்கு முன் இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து சென்றவர்கள். சுமி அவள் பெற்றோருக்கு ஒரே பெண்; அறிவு + அழகு + நாகரிகம் + வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் வேகம்- அனைத்தும் சேர்ந்து அவளை அமெரிக்கா அழைத்து வந்தது. அவளும் கௌஷிக் போலவே 'ஃப்ரீ பேர்ட்' - சுதந்திரப் பறவை போல இருக்கவே ஆசைப்பட்டாள். கல்யாணம், குழந்தை, குடும்பம் - இதெல்லாம் வாழ்க்கையில் வேண்டாத பொன் விலங்குகள் என்பதில் இருவர் மனங்களும் ஒத்துப் போயின ; பேச்சு வார்த்தை வளர்ந்து கருத்துப் பரிமாற்றமாய் மாறியது; நட்பாய் தோன்றிய அரும்பு விரைவில் காதலாய் மலர்ந்தது.
திருமணம் இன்றி சேர்ந்து வாழும் முறைக்கு சுமியின் பெற்றோருக்கும் விருப்பம் இல்லை. ஆனால், சுமியைப் பொறுத்த வரை தன் பெற்றோரின் அறிவுரையைக் கூட தன் தனிமனித சுதந்திரத்தில் குறுக்கீடு என்று நினைத்துக் கொண்டாள். அவர்களிடம் கடுமையாக பதில் பேசி விட, அவர்கள் நாகரிகமாக ஒதுங்கிக் கொண்டு விட்டனர்.
கௌஷிக் - சுமி இருவரும் தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். ஆரம்பத்தில் எல்லாமே நன்றாக தான் இருந்தது.காலங்கள் செல்லச் செல்ல, கௌஷிக் மனத்தில் மெல்ல மெல்ல மாறுதல் ஏற்பட ஆரம்பித்தது. அவனையும் அறியாமல் அவன் மனதில் மழலை ஆசை முளை விடத் தொடங்கியது. ஆஃபிஸ், ஃப்ரென்ட்ஸ் உடன் பார்ட்டி, மறுபடி ஆஃபிஸ், ஊர்சுற்றுதல் - இது அவனுக்கு அலுக்க ஆரம்பித்து விட்டது. திகட்டத் திகட்ட அனுபவித்த காரணமோ என்னவோ, அவனுக்கு இதில் வெறுப்பு வர ஆரம்பித்தது.
மனித மனத்தின் விசித்திரங்களை யாரால் புரிந்து கொள்ள முடிகிறது ?
இப்போது கௌஷிக் மாறி விட்டான். ஓய்வு நேரங்களில் சின்மயா மிஷன் போன்ற வேதாந்த அமைப்புகளுக்கும் அருகில் ஏதேனும் கோவில் இருந்தால் அங்குமாக சென்றும் அவன் பொழுது கழிகிறது. அவன் வர மறுத்தாலும், சுமி பார்ட்டிகளுக்கு தவறாமல் செல்கிறாள்.
கௌஷிக்கின் குழந்தை ஏக்கம் பெரிதாகி ஒருநாள் சுமியிடமே பேசினான்:
"சுமி, நமக்குன்னு ஒரு குழந்தை பெத்துக்கலாமே, ப்ளீஸ்! ஐ லவ் டு ஹேவ் எ சைல்ட், சுமி!"
சுமி ஆரவாரமாய் சிரித்தாள்.
"வாட் கௌஷிக் ? ஹௌ யூ கேன் சேஞ்ச் லைக் திஸ்? கல்யாணம் , குழந்தை - இதெல்லாம் வேண்டாம்னு தான் நாம் இப்படி வாழ்க்கையை அனுபவிக்கிறோம். இதை விட்டுட்டு, என் அழகு, இளமை, டைம், - இதெல்லாம் வேஸ்ட் பண்ணிட்டு குழந்தை பெத்துக்க சொல்றே ! ஹக் - ஐ கான்ட் இமாஜின் ! ஜஸ்ட் என்ஜாய் லைஃப் மேன்!!"
என்று பதில் சொல்லி விட்டுப் போய் விட்டாள். கௌஷிக் இன்றி சுமி பார்ட்டிகளுக்குப் போவதும் அவள் பிற ஆண் நண்பர்களோடு பழகுவதும் அவனுக்கே இப்போது பிடிக்கவில்லை. ஆனால், அதை தைரியமாய் சுமியிடம் சொல்லவும் அவனுக்கு மனம் வரவில்லை, சொன்னால் எங்கே தன்னை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து விடுவாளோ என்று மனசுக்குள் ஒரு பயம் வேறு அவ்வப்போது எழுந்தது. மொத்தத்தில் கௌஷிக்
வாழ்வில் நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
******************
கௌஷிக் நிஜவுலகுக்கு வந்தவனாய் ஸ்ரீராமிடம் பேச ஆரம்பித்தான் :
" நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் - இதெல்லாம் அவசியம்; கல்யாணங்கிறது ஆயிரம் காலத்துப் பயிர்னு நம்ம பெரியவங்க சொன்னப்போ, எனக்கு அதனோட அர்த்தம் விளங்கலை. ஆனா, இப்போ நல்லா புரியுது , ஒரு ஆணும் பெண்ணும் ஒரு குடும்பமா சேர்ந்து வாழ, அந்த பண்பாடும் கலாச்சாரமும் தான் அடிப்படையா இருக்கு; ஒருவனுக்கு ஒருத்திங்கிற தனிமனித ஒழுக்கம் தான் உண்மையான நாகரிகம்ங்கிறதை
நான் என் வாழ்க்கை மூலமா தெரிஞ்சுக்கிட்டேன்."
கௌஷிக் மேலும் தொடர்ந்தான் :
"இன்ஸ்டண்டா பார்த்தேன்; இன்ஸ்டண்டா காதலிச்சேன்; இன்ஸ்டண்டா கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்ப இன்ஸ்டண்டா கஷ்டமும் படறேன்; கூடவே, சுமி எந்த இன்ஸ்டன்ட் என்னை விட்டுட்டு போயிடுவாளோனு பயமும் பட்டுக்கிட்டு இருக்கேன். பிகாஸ், ஸ்டில் ஐ லவ் ஹர்!"
உணர்ச்சிகளின் குவியலில் சிக்கிய கௌஷிக் கண்கலங்கினான்; தலை குனிந்தான். குலுங்கும் முதுகு அவன் அழுவதை உணரத்தியது.
தொடரும்.......