• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வண்ண வண்ண மனிதர்கள்!

hi

உலகம் பலவிதம்.....அதில் நாமும் ஒரு ரகம் .......if you want to see true color of ppl.....when we are in need and distress....
 
Last edited:
One retired Lt Col. and his wife drowned inside their residence and were constantly talking to their daughter living far away!

They did not have access to the terrace from inside the house and lost the front door key. Fate decides the death of people! :sad:

Here is the news:
drowned inside residence
 
இனி, சிங்காரச் சென்னை வாழ்வுக்குத் தேவை வீட்டுக்கு வீடு படகும் கூட. :fish2:

மேலும் வீட்டை விட்டு வெளியே
ஏதுவாக உட்புறம் தாளிடும் பூட்டு இல்லாத கதவு. :bolt:
 
உயிர் காத்த மரத்தச்சர். :angel:

எங்களுக்கு மர வேலைகள் செய்யும் தச்சர் சொன்ன சம்பவம்:

அவரது மொபைல் போனுக்கு வந்ததாம் ஒரு அழைப்பு; அழைத்தவர் ஒரு எண்பதை எட்டும் முதியவரின் ஐந்து வயது

குறைவான மனைவி! தம் வீட்டில் வெள்ளம் ஏறி வருவதாகவும், கணவர் வாசற் கதவுச் சாவியைத் தண்ணீரில்

போட்டுவிட்டுத்
தவிப்பதாகவும் செய்தி! இவர் உடனே தன் நண்பரின் வண்டியில் ஏறி அங்கு விரைந்தார். பின்புறம்

உள்ள சமையற்கட்டு ஜன்னலை
உடைத்து, தம்பதியர் மெதுவாக வெளியேற உதவினார். பின், சாதாரண மரத் தடுப்பால்

ஜன்னலை மூடி, தாழ்ப்பாள் அடித்துப் பூட்டிவிட்டார்.
முதியோருக்குத் தம் உறவினர் வீடு செல்லவும் உதவினாராம்.

''காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது'' என்பது வள்ளுவம்.

ஆனால் இது மிகப் பெரிய, உயிர் காத்த உதவியல்லவா? :clap2:
 
உழைப்பே உயர்வு!

மெல்லிய உருவம்; எளிய தோற்றம்; அமைதியான பார்வை; தாழ்ந்த குரலில் பேச்சு!

அறுபதுகளின் இரண்டாம் பகுதியில் இருக்கும் பெண்மணி அவள். சித்தாள் வேலைக்கு

தினம் செல்கின்றாள். அவளின் நெற்றி விபூதி காட்டியது அவள் கைம்பெண் என்பதை.

ஒரு வேளை பிள்ளைகள் இல்லாதவளோ? ஏன் உடலை வருத்தி வேலை செய்கிறாள்?

என் சந்தேகத்தை அவள் தோழியிடம் கேட்டேன். நான்கு மகன்கள் உள்ளனராம் அவளுக்கு.

அனைவரும் நல்ல நிலையில் உள்ளனராம். தன் உடலில் தெம்பு உள்ளவரை, அவர்களை

அண்டியிராது வாழவே இவள் உழைக்கிறாளாம்! உழைப்பே உயர்வு அல்லவா?

வெள்ளையம்மா என்ற அவளின் உள்ளமும் வெள்ளைதான்!
 
அந்த மாமாவுக்கு ரஷ்யாவில் நல்ல வேலை. தன் முதல் மகனை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு, இளைய மகனை

ரஷ்யாவில் படிக்க வைத்தார். அதனால் முதல் மகனுக்குத் தந்தை மீது
கடுப்பும், வெறுப்பும்!


முதல் மகனுக்குப் பார்த்துப் பார்த்துப் பெண் தேடி மணம் முடித்துவைத்தார். மருமகளுக்கு
அவரை அறவே

பிடிக்காது - சுய பெருமை பேசித் திரிவதால். இர
ண்டாம் மகன் காதலித்த பெண்ணை மணந்தான். அவளும்

முதல் மருமகளைப் போலவேதான்!


தன்னிச்சையாக வெளி நாடுகள் சென்று காசினோவில் விளையாடித் தோற்று, தன் தாயையும் கவனிக்காது ...

இப்படியே அவர் வாழ்வு ஓடிவிட்டது.
ஒரு சீனியர் ரிஸார்ட்டில் ஆனந்தமாகக் காலம் கழித்தவரின் 96ம் வயதில்

உடல் நலம் குன்ற,
மகன்கள் பணம் தருவதோடு கடமை முடிந்ததாக நினைக்க, ஆவி பிரியும் அவ்வேளையில்,

அன்போடு அகலாதிருக்க ஒரு ஜீவனும் இல்லாமல், இவ்வுலகை நீத்தார்!


மூத்த மகன் ஐரோப்பாவிற்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளதால் அவனைத் தொந்தரவு
செய்யக் கூடாதாம்! நல்ல

வேளை; இளையவனுக்குக் கொஞ்சம் மனிதம் மிஞ்சியுள்ளது!
அவன் ரஷ்யாவிலிருந்து வந்து ஈமக் கிரியைகளைச்

செய்தான்.



இதுதான் கல்வியில் மேம்பட்ட மனிதரின் உலகம்!! :(
 
Nandri

அந்த மாமாவுக்கு ரஷ்யாவில் நல்ல வேலை. தன் முதல் மகனை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு, இளைய மகனை

ரஷ்யாவில் படிக்க வைத்தார். அதனால் முதல் மகனுக்குத் தந்தை மீது
கடுப்பும், வெறுப்பும்!


முதல் மகனுக்குப் பார்த்துப் பார்த்துப் பெண் தேடி மணம் முடித்துவைத்தார். மருமகளுக்கு
அவரை அறவே

பிடிக்காது - சுய பெருமை பேசித் திரிவதால். இர
ண்டாம் மகன் காதலித்த பெண்ணை மணந்தான். அவளும்

முதல் மருமகளைப் போலவேதான்!


தன்னிச்சையாக வெளி நாடுகள் சென்று காசினோவில் விளையாடித் தோற்று, தன் தாயையும் கவனிக்காது ...

இப்படியே அவர் வாழ்வு ஓடிவிட்டது.
ஒரு சீனியர் ரிஸார்ட்டில் ஆனந்தமாகக் காலம் கழித்தவரின் 96ம் வயதில்

உடல் நலம் குன்ற,
மகன்கள் பணம் தருவதோடு கடமை முடிந்ததாக நினைக்க, ஆவி பிரியும் அவ்வேளையில்,

அன்போடு அகலாதிருக்க ஒரு ஜீவனும் இல்லாமல், இவ்வுலகை நீத்தார்!


மூத்த மகன் ஐரோப்பாவிற்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளதால் அவனைத் தொந்தரவு
செய்யக் கூடாதாம்! நல்ல

வேளை; இளையவனுக்குக் கொஞ்சம் மனிதம் மிஞ்சியுள்ளது!
அவன் ரஷ்யாவிலிருந்து வந்து ஈமக் கிரியைகளைச்

செய்தான்.



இதுதான் கல்வியில் மேம்பட்ட மனிதரின் உலகம்!! :(

Irupathu aandukalukku munbey naan paartha sambavam ondru . Oor per maatri tharukiraen. Antha Dr ku nalla manaivi nalla pillai. So that ooru Madurai pakam ulla ...naadu maavattam. 30 aandukaluku munbu velinaadu sendravar vellai maathai remarry...kadaisyil sontha manaivi, magna vittu piriya Ivar manantha "white" tum sendru vittaal...uthavikku aalindri maranam adainthu rendu naal veetilaiye kidanthathu ...kaetkum pothu kalmananum karaium....
 
Time flies which I hardly realize now a days! :becky:

Shall continue to write about some more colours that I come across, soon! :typing:
 
காரியம் ஆகணும்னா ........... !!

ஒரு பணக்காரப் பெண்மணி; கல்லூரிப் படிப்புக் கிடையாது; மூத்த மருமகள்; அவள் வைப்பதுதான் சட்டம்!

தன் கணவனின் உடன் பிறப்புக்களை ஏசிப் பேசி வீட்டினுள் அனுமதிக்காது, பல ஆண்டுகளாக
இருந்தவள்.

இருபது ஆண்டுகளுக்கு மேல் 'போக்குவரத்து' நின்றுபோன நிலையில், முதியவரான தன் கணவனை

இழந்துவிட்டாள். பிறந்தகத்திலிருந்து அதிகம் ஆதரவு இருக்காதோ என எண்ணினாளோ என்னவோ,

இத்தனை
ஆண்டுகளாக 'ஓரம் கட்டி வைத்த' தன் ஓரகத்திகள் துக்கம் கேட்க வந்தவுடன், அன்புடன் பேசி,

தினமும்
'காரியம்' செய்ய வரவேற்றாள்! பழைய கசப்பான நிகழ்வுகளை மறந்து, அவர்களும் உதவினார்கள்.

எனக்கு நினைவு வந்த பழமொழி: 'காரியம் ஆகணும்னா, க * * ,,,,,,,,,,,,,,,,,,,,' !

வினோதப் பிறவிகள் சிலர்!!
 
ஏழை எளியோருக்கு உதவும் மனப்பான்மை கொண்ட பெண்மணி அவள். மீனவர் குடும்பங்கள்

சிலவற்றைத் தேர்வு செய்து, அந்தக் குழந்தைகளுக்குக் கல்வி அறிவைத் தந்தாள். கைவினைப்

பொருட்கள் செய்ய அந்தப் பெண்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் கொடுத்தாள். அவர்கள் செய்த

பொருட்களை விற்று, அவர்களுக்கு வாழ்வாதாரம் அளித்தாள். தான் இறந்த பின், தன் உடலை

ஏதேனும் ஒரு மருத்துவக் கல்லூரிக்கு உபயம் செய்யுமாறு உயில் எழுதினாள்! தான் வாழும்

பொழுதும், வாழ்ந்த பின்னும் உலகிற்கு உபயோகமாக இருந்த அந்த உயர்ந்த பெண்மணி, நேற்று

இயற்கை எய்தினாள்.

அவளின் ஆத்மா சாந்தி அடைய, நாங்கள் அனைவரும் இறையைப் பிரார்த்திக்கின்றோம்! :pray2:
 
நான் படித்த பள்ளியிலா இப்படி ஒரு நிகழ்வு?! :shocked:

இன்று வந்த ஒரு செய்தி, என்னை அதிர வைத்தது! கொய்யா
ப் பழத்தினை வகுப்பறையில் வைத்துத்

தின்ன முயன்ற பள்ளி மாணவன் மரணம்! எப்படி இது சாத்தியம்? செய்தி சொல்லுவது இதுதான்:

வகுப்பறையில் பத்தே கால் மணிக்கு, கொய்யாப் பழத்தினைச் சிறு கத்தியால் அறுக்க முயன்ற அந்த

மாணவனின் கத்தி நழுவி, அவன் தொடையில் ஆழ்ந்த காயம் ஏற்பட்டதாம். இரத்தப் போக்கு மிகவும்

அதிக
ம்; போலீஸ் அவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதும், 'வரும்போதே இறந்தான்'

என்று மருத்துவர்கள் கூறிவிட்டனராம்.

மனித வாழ்வின் முடிவு, இப்படியும் வருமா? கொடுமையடா சாமி! :sad:
 

மனிதாபிமானம் எங்கே?


துறு துறுக் குழந்தையாக வெள்ளித் திரையில் நுழைந்து, பின்னர் கனவுக் கன்னியாக வலம் வந்து,

பெண்களில் 'ஸூப்பர் ஸ்டார்' என்னும் நிலைக்கு உயர்ந்த பெண்ணின் துர் மரணத்தை இப்படியா

கேவலப்படுத்துவர் 'மீடியா'வில்? தான் ஒரு பெரிய துப்பறியும் நிபுணர் என்று ஒவ்வொரு டி வி

சானல்காரர்களுக்கும் பெருமை! இறந்தவரின் எல்லா அந்தரங்கங்களையும் அவமதித்தனர். முன்பு

நிகழ்ந்த கொலைகளுடன் இதையும் இணைத்துப் பேசினர். 'க்ராஃபிக்ஸை' உபயோகித்து, குளியல்

தொட்டியில் அவர் கிடப்பதை அவர் கணவர் பார்ப்பது போலக் காட்சிகளை 'செட்டப்' செய்தனர்.

ஒரு தெலுங்குச் சானலில், குளியல் தொட்டியில் நிரூபர் படுத்துக் காட்டினார்! என்ன கொடுமையடா

சாமி? பிரேதப் பரிசோதனையிலே எத்தனை கண்கள் வக்ரப் பார்வை பார்த்தனவோ, யாரறிவார்?


ஒன்று மட்டும் புரிகிறது. துபாயில் திரை நட்சத்திரங்களின் மரணம் நிகழ்வே கூடாது! :Cry:
 
நான் திருமணமாகி விசாகை சென்ற பொழுது, அந்தப் பெண்மணியின் வீட்டில்தான் முதல் விருந்து!

மெத்தப் படித்தவர்; முனைவர் பட்டம் பெற்றவர்; எளிய, இனிய தோற்றம்; புன்சிரிப்பு மாறாத முகம்!

முதல் சந்திப்பிலேயே நெருக்கமானோம். ஆறு ஆண்டுகளில், பற்பல இனிய தருணங்கள். பின், சிங்காரச்

சென்னைக்கு இடம் பெயர்ந்தேன்; சில ஆண்டுகளில், அவர் ஸ்ரீரங்கத்தில் குடியேறினார்! அவரின் மகனின்

திருமணத்திற்காக, திருச்சி சென்று வந்தோம். பின் சந்திக்கவில்லை; சில முறை தொலைபேசினோம்;

அவ்வளவே!

சமீபத்தில், அவர் கணவரிடம் (அவரும், என்னவரும் ஷெட்டில்-காக் விளையாட்டு எதிரிகள்!) பேசும்போது,

மார்ச் மாதம் தம் மனைவி சென்னையில் ஓர் உரையாற்ற வருவதாகச் சொன்னதும், படபடத்தேன்! ஆஹா!

மாமியைக் கட்டாயம் சந்தித்துப் பேசிவிட வேண்டும்!

அந்த நாளின் விடியலில், அதே படபடப்புத் திரும்பியது. விரைவாக வேலைகளை முடித்து, அந்த் இடத்தை

அடைந்தோம்! கூட்டம் இன்னும் அதிகம் கூடவில்லை; நாங்கள்தான் மிக முன்னதாகச் சென்றுவிட்டோமே!

அலுவ்லக அறையில் அவர் இருப்பதை அறிந்து, உள்ளே செல்ல விழைந்தோம்! சாமி வரம் கொடுத்தாலும்

பூசாரி கொடுக்கமாட்டார், அல்லவா? எம்மைத் தடுத்தனர் இரு பெரிய உருவ மாமிகள்! பின் என்ன? இருவரும்

உரை நிகழ்த்தும் அறையில், இரண்டாவது வரிசையில் அமர்ந்தோம். முதல் வரிசையில் அமர்ந்தால், மீண்டும்

அதே இரு மாமிகளும் விரட்டுவாரோ என்னவோ!

உரை நிகழ்த்தும் சமயம் எங்களை மாமி பார்க்கவேயில்லை. அப்போதுதான் நான் நினைவு கூர்ந்தேன்

அவருக்குப் பார்வை மங்கிவிட்ட விஷயத்தை! பரவாயில்லை; உரை முடிந்ததும் 'ஸர்ப்ரைஸ்' கொடுப்போம்!

உரை முடிந்து மாமி மேடையை விட்டு இறங்க, அவரின் மகள் கைத்தாங்கலாகப் பிடித்து, நாங்கள் வந்துள்ள

விஷயத்தை உரைக்க, முகத்தில் சிறு சலனமும் இல்லாமல், ''நீங்கள் எல்லாம் வந்ததுல எனக்கு ரொம்ப

சந்தோஷம். திருச்சிக்கு அவசரமாப் போகணும், வரேன்!'' என்றார்! நான் ஒரு காற்று இறங்கின பலூன்!! :sad:

இதற்காகவா இத்தனை நாள் எதிர்பார்ப்பும், படபடப்பும்??

ஹும் ..... இதுவும் வாழ்க்கையில் ஒரு புதிய பாடம்; அவ்வளவே!
amen.gif
 
இன்று அன்னையர் தினம், அமெரிக்கர்களுக்கு! மற்ற 'தினங்களை'ப் போல, இத் தினமும் இந்தியாவில்
நுழைந்துவிட்டது! :peep:

இன்று என் அன்னை மறைந்த திதியாகவும் அமைந்துவிட்டதால், அம்மாவின் நினைவுடன், எங்களது

ஆனைமலை கிராமமும், அங்கு வாழ்ந்த சிறு வயது வாழ்க்கையும், மனதில் அலைகளாக எழுகின்றன!

முன்னமே பகிர்ந்தேனோ என்று நினைவில்லை! இன்றைய வாழ்வில் இல்லாதவர்களின் தேடல், இது!

வேளை தவறாது அன்புடன் உணவளித்த அம்மா எங்கே?

சிரித்த முகத்துடன் உலவும், கோபமே வராத அப்பா எங்கே?

கூட்டமாகச் சேர்ந்து விளையாட, சித்தப்பாக்களின், மாமாக்களின், சித்தியின் பிள்ளைகள் எங்கே?

எண்ணை தேய்த்துத் தலை குளித்துவிட்ட பின், அன்புடன் கோதிவிட்ட தாயம்மா எங்கே?


வேளை தவறாமல், 'மியாவ்' என்ற இனிய அழைப்புடன் உணவு கேட்டு வந்த பூனைக் குட்டி எங்கே?


அழகுத் தமிழில் பாடம் நடத்திய, 'ராமசாமி' என்ற தனது பெயரை 'அமுதன்' என மாற்றிய ஆசான் எங்கே?


தூய வெள்ளை வேட்டி, சட்டையுடன், நீண்ட அங்கவஸ்த்திரம் தொங்க நடந்த, தலைமை ஆசிரியர் எங்கே?


குறும்பு செய்யும் மாணவர்களை, பெஞ்ச் மேல் ஏறி அடித்த, 'நாலடியார்' என்ற செல்லப் பெயர் பெற்ற அந்த

ஆசிரியர் எங்கே?


பண்டிகைகளில் வாழ்த்துச் சொல்ல வந்த வஹாப் மாமா எங்கே?


பட்டாசுகளை வாங்கி வர உதவிய கம்பவுண்டர் மாமா எங்கே?


அனாயாசமாக ஜிலேபி சுற்றி, ஆசையோடு தந்த, 'ஹோட்டல்' பாரு மாமி எங்கே?


கரும்பு விளைந்தவுடன், அதை வெல்லமாகச் செய்யும் சமயம், முதலில் வரும் தேம்பாகைச் சுடச் சுட

அனுப்பிய
அப்பாவின் நண்பர்கள் எங்கே?

கூடை நிறைய மாம்பழங்களை, 'டாக்டர் வீட்டுக்கு' என எடுத்து வைத்து
அனுப்பிய கவுண்டர்கள் எங்கே?

தேவி டாக்கீஸுக்குச் சென்றால், ஓடி வந்து, டிக்கட் வாங்க விடாது, உள்ளே அமர வை
த்த மாமா எங்கே?

பக்கத்திலிருக்கும் க்ருஷ்ணன் கோவிலில், சனிக் கிழமைதோறும் பாட அழைத்த, ராம ராவ் மாமா எங்கே?


பள்ளியின் கேட் அருகே, எலந்தை வடாம் விற்று ஜீவனம் செய்த பாட்டி (அவள் பெயர் என்ன?) எங்கே?


ஜவ்வு மிட்டாயைப் பல வண்ணங்களில் தயாரித்து, பிள்ளைகளின் கையில் வாட்ச் போலக் கட்டிய

மிட்டாய்க்காரர் எங்கே?


ஐஸ் கட்டியைத் துருவி, அதில் எஸ்ன்ஸை ஊற்றி, தண்ணீர் விட்டு, சர்பத் விற்று, தாகம் தணித்த அந்த

ஏழை வியாபாரி எங்கே?


தினமும் மாலை, பூக்குடலையில் பூப் பந்துகளை வைத்து, வீடு வீடாக விற்ற பூப் பண்டாரம் எங்கே?

'நல்ல காலம் பிறக்குது', என்று உடுக்கை அடித்து, பழைய துணிகளைக் கேட்ட நாடோடிகள் எங்கே?


ஆடிப் பெருக்கன்று, சின்ன மூங்கில் துண்டில் பனை ஓலையை ஒலி பெருக்கிபோல் சுற்றி, அதனுள்

சின்னக் காய் ஒன்றை
வைத்துப் பிஸ்டனால் தள்ள, வெடிக்கும் 'பாப்டாங் குழல்' விற்றவர் எங்கே?

நவராத்திரியில், தினம் ஒரு வேஷம் இட்டு, சுண்டல் வாங்கிச் சென்ற சிறுவர், சிறுமியர் எங்கே?

மார்கழி மாதத்தில், 'நாராயண மூர்த்திக்கு அரோஹரா (?!)' என்று கூவி, நாமம் இட்ட குட்டிச் செம்பின்

வாயில் துணியைக் கட்டி, அதில்
ஓட்டை செய்து, நாணயங்கள் சேர்த்த குட்டிப் பையன்கள் எங்கே?

ஆருத்ரா தரிசனத்தன்று, வாண வேடிக்கைகளுடன் அரச மரப் பிள்ளையாரைச் சுற்றும் நடராஜ மூர்த்தி

எங்கே?

வளையல்களை வெள்ளைத் துணி மூட்டையில் கட்டி, சிறுமிகளுக்குக் கை நிறையப் போட்ட, வயதான

வளைச் செட்டி எங்கே?

சின்ன மண் சட்டியில் வண்ணம் தீட்டி, அதனுள் சர்க்கரையில் செய்த சின்ன பொம்மையுடன், ஒரு குட்டிக்

கரும்புத் துண்டும் வைத்துக் கொடுத்த கன்னட மாமி எங்கே?


சிரித்த முகத்துடன், பிரசவ ஆஸ்பத்திரியில் பணி புரிந்த, 'மலையாளத் தமிழ்' பேசும், மேட்ரன் அம்மா

எங்கே?


ஏசு நாதர் படத்தில் விபூதி விழுந்தது கண்டு பயந்து மிரண்ட, கிரிஸ்துவ நர்ஸ் பிரகாசம் எங்கே?


இன்னும் எத்தனை எத்தனை பேர்களின் நினைவுகள் அலைகளாக மோதுகின்றன! :decision:

 
உலகில் ஏழு பேர்கள் ஒரே போல இருப்பார்களாம்! குரலிலும் இப்படி இருக்குமோ?
இந்த Xerox of திருமதி. சுதா ரகுனாதனைக் கேட்ட பின், இப்படித் தோன்றுகிறதே!!! :lalala:

[video=youtube_share;2Ve2Hax-F8s]https://youtu.be/2Ve2Hax-F8s[/video]
 

Latest posts

Latest ads

Back
Top