• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

215. தியானம்

சென்றது மேள, தாளங்களுடன் மண ஊர்வலம்;
சென்றனர் பலர் ஊர்வலத்தில் கலந்து கொண்டு.

கவனம் சிதறாமல் கருத்தாக இருந்த ஒரே ஒருவன்
கவண் கல்லால் பறவையைக் குறிபார்த்த வேடன்.

வணங்கினார் வேடனை அவதூதர்," நீரே என் குரு!
பிணங்காமல் நிற்கட்டும் என் கவனம் இதே போன்று!"

தூண்டில் இட்டுக் காத்திருந்தான் குளக்கரையில்;
வேண்டினார் ஒரு வழிப்போக்கர் வழி கூறும்படி.

கூறவில்லை அவன் மறுமொழி கேட்டவுடனேயே;
கூறினான் மறுமொழி மீன் சிக்கிய பின்னரே!

வணங்கினார் அவதூதர் மீன் பிடிப்பவனையும்,
"கணமும் சிதறாமல் இருக்கட்டும் என் கவனமும்!"

கொக்கு சென்றது மீன் பிடிக்கக் குளத்துக்கு;
பக்கத்தில் இருந்து குறி வைத்தான் வேடன்.

கவனம் சிதறாமல் நடந்து சென்றது கொக்கு;
கவனித்த அவதூதர் அதையும் வணங்கினார்.

"பதறாமல் செல்கின்றாய் நீ உன் குளத்துக்கு;
சிதறாமல் இருக்கட்டும் என் கவனம் இதுபோல"

தியானம் சித்தித்தால் முத்தி வெகு சுலபம்!
தியானம் சித்தித்தால் உமது தேஜசு வளரும்!

இறைவனுடன் கலந்துவிடும் ஆன்மா தியானத்தில் ;
பொருந்துவதில்லை புலன், பொறிகளுடன் ஆன்மா .

எதுவுமே தெரியாது; எதுவுமே தோன்றாது;
அது போன்ற சமாதியே தியானத்தின் பலன்.

மனம் யோகியின் வசப்பட்டு நிற்கும் - அன்றி
மனம் போனபடிப் போகான் முதிர்ந்த யோகி.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
215. DhyAnam

A wedding procession went by playing very loud music. Many people joined the procession. But one hunter was not distracted by any of these. He was taking aim at a bird. An Avadhootha who saw this paid his respects to the hunter and said,"You are my Guru! May my concentration be as staunch and unwavering as yours!"

Another man was fishing in a pond. A wayfarer asked him for directions. The fisherman did not reply immediately. He replied only after he caught the fish successfully. The Avadhootha paid his respects to this man an said "May my concentration be as firm as yours!"

A stork went to a pond to eat fish. A hunter was taking aim at it from a close range. But the stork walked on and started looking for fish. The avadhootha paid his respect to the stork and said, "May I remain as focused on my actions as you are in yours"

If one can master DhyAnam then Self Realisation and Liberation are within his reach. DhyAnam makes a person's aura grow and glow. In DhyAnam the Athma gets detached from the indriyas and the world and get attached to the Supreme.
 
216. குண்டலினி சக்தி

குண்டலினி அடையும் மூலாதாரத்தில் இருந்து
தொண்டை, மூளையைக் கடந்து சஹஸ்ராரத்தை.

ஒரே சீராக நிகழ்வதில்லை இந்த எழுச்சி
ஒரே ரீதியாக நிகழ்வதில்லை இந்த எழுச்சி

உள்ளன ஐந்து வேறு வேறு கதிகள்
உடலில் குண்டலினி சக்தி எழுவதற்கு

எறும்பின் கதி எனப்படும் முதல் கதி
எறும்பு ஊர்வது போலச் சீராக எழும்

சஹஸ்ராரத்தை குண்டலினி அடைந்ததும்
சமாதியில் ஆழ்ந்து விடுவான் சாதகன்

இரண்டாவது ஆகும் தவளையின் கதி
இரண்டு முறை குதிக்கும் பின் நிற்கும்

சென்று அடையும் சஹஸ்ராரத்தை
செல்லாது ஒரே சீரான வேகத்தில்

பாம்பின் கதி எனப்படும் முன்றாவது
பாம்பாக வளைந்து எழும் வினாடியில்

பறவையின் கதி என்பது நான்காவது
பறக்கும் இது உயர்ந்தும் தாழ்ந்தும்

ஐந்தாவது ஆகும் குரங்கின் கதி - இது
ஐந்தே தாவல்களில் அடையும் இலக்கை

எந்த விதமாக இலக்கை அடைந்தாலும்
எந்த வேறுபாடுமில்லை சமாதி நிலையில்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
216. kuNdalini shakti

kuNdalini shakti lies coiled like a snake in the moolAdhAra chakra. When it reaches the SahasraRa chakra in the head, samAdhi state occurs. But this journey of Kundalini through the sushumna nAdi is neither smooth nor uniform.

In fact the Kundalini can rise in five different manners.

The steady rise of Kundalini is compared to the Ant's mode of travel.

The Frog mode of travel involves a few leaps and gaps in between before the target is reached.

The third mode of rising is that of the snake. Just like a snake which can get ready to strike in a moment, the samdhi state is reached instantly.

The fourth mode is that of bird. Like a bird flying up and down before settling down on a branch, the kuNdalini will go higher and lower before it reaches its target.

The fifth mode of rising is that of a monkey. A monkey can reach the top of a tree in a few leaps and jumps. The kuNdalini does the same and reaches sahasrAra very fast.

Whatever be the mode of traveling of the kuNdalini the resulting samadhi state is the same for everyone.
 
சிந்தனை தந்த இந்திர ஜாலம்

I have just added 31 more poems and translation to my collection of poems,
They are yet to be posted in the above blog https://vannamaalai.wordpress.com/
The number poems as on today is just 185.
It will become 216 after I post the additional poems in that blog.
Poems 186 to 216 have already appeared in this thread @ one per week.
Will there be more poems???
Maybe when I find something inspiring enough to be written about.
Till then I will be posting the links to the existing blogs and keep this thread active.
Make the most of what is available! ?
 
Today's link to my blog with a brief introduction to it.


முன்னுரை

சமஸ்க்ருதம் என்றாலே பண்பட்ட (refined ) என்று பொருள்.
தென்மொழிகளில் இந்தத் தொன்மொழியும் கலந்துள்ளது.

ஒவ்வொரு சொல்லுக்கும் எத்தனையோ பொருட்கள் உள்ளன.
தெரிந்தும், தெரியாமலும் அவற்றைப் பயன்படுத்துகின்றோம்.
தவறாக உச்சரிக்கின்றோம், தவறாக உபயோகிக்கின்றோம்.

அன்றாடம் பயன்படுத்தும் சொற்களின் பொருளையும்
அவற்றின் சரியான உச்சரிப்பையும் தருவதே என் நோக்கம்.

சுமார் 4200 தொன்மொழி வார்த்தைகளைத் தேர்வு செய்து
நம் தென்மொழியில் எளிமையாக அளித்துள்ளேன்.

அகர வரிசைப்படி அமைத்திருப்பதால் எளிதாகத்
தேவையான வார்த்தையைக் கண்டு பிடிக்க முடியும்.
 
Today's link to my blog on
"The most confusing words in Tamil"
with a brief introduction in Tamil.
You will find 600 pairs / groups of words


மயக்கி மருட்டும் சில சொற்கள்.

சில சொற்கள் நம்மை மருட்டுகின்றன.
சில சொற்கள் நம்மை மயக்குகின்றன.

சிலவோ நம்மை பிழற வைக்கின்றன.
சிலவோ நம்மை மிரள வைக்கின்றன.

தமிழின் வளர்ச்சியை விழைவோரும்,
தமிழின் தளர்ச்சியை வெறுப்போரும்,

பயன்பெறும் வகையில் காண்போம்
மயக்கி மருட்டும் சில சொற்களை.
 
பிழைகள் இன்றி எழுதும் போதே தவறாகப் படிக்கின்றவர்களையும்
பிழையாகவே தமிழில் எழுதுபவர்களையும் என்ன செய்யலாம் ???

சமீபத்தில் பார்த்து படித்து வேதனைப்பட்ட சில சொற்கள்
ஷன்மதம் (ஷண்மதம்)
வனக்கம் (வணக்கம்)
காலணி (காலனி )
 
Bonus link to SankarAchArya's Bhaja gOvindham
 
Today's link to the blog on VishNu sahasra nAmam


Bonus link to Adhithya Hrudhayam

 
Today's link to Rudhra Sahasra nAma


Bonus link

ஸ்ரீ ஹனுமான் சாலீஸ்


ஸ்ரீ கு3ரு சரன் ஸரோஜ்ரஜ் நிஜ்மன் முகுர் ஸுதா4ர்|
ப3ரன உ ரகு4வர் விமல் ஜஸு (யச்)ஜோ தா3யக் ப2ல்சார்||


கண்ணாடி போன்ற என் மனத்தை ஸ்ரீ குருதேவரின் திருப்பாத தூசியால் தூய்மைப் படுத்திகொண்டு; அறம், பொருள், வீடு, இன்பம் என்னும் நான்கு பழங்களாகிய பலன்களைத் தரும் ஸ்ரீ ரகு குல திலகனின் குற்றமற்ற புகழைப் பாட விழைகின்றேன்.

பு3த்3தி4ஹீன் தனு ஜானி கே ஸுமிரௌ பவன் குமார் |
ப3ல் பு3த்3தி4 வித்3யா தே3ஹு மோஹிம் ஹரஹு கலேஸ்(ச’) விகார் ||


நானோ குறுகிய அறிவை உடையவன். வாயு புத்திரரான ஆஞ்சநேயரே! உம்மை வணங்குகின்றேன். எனக்கு அறிவு, வலிமை மற்றும் உண்மையான ஞானம் தந்தருளி என்னை எல்லாத் துன்பங்களில் இருந்தும் காத்து அருள்வீர்!

 
Today's link with an introduction to the blog

Siva Sahasra nAma
There are at least eight different variations of the S’iva Sahasra nAma. One appearing in the Book 13 (Anus’asana Parva) of MahA bhArata is considered as the main version.
One version is contained in Linga purANa while another version in MahAbhArata. Identical names of Siva and Vishnu occurring in the sahasra nAmas have led Adhi Sankara to conclude that both Siva and VishNu are identical and they both are monotheistic GOD.
This conclusion forms the basic concept of Advaitam.
Also other names of Siva were told by Sree Krishna himself to Yudhisthira in the MahA bhAratha. Again Krishna himself recited another version of the Shiva Sahasranama, the 1008 names of Siva in the 17th chapter of AnushAsanaparva of MahA bhAratha.
The list of the different versions:
Linga PurANa (version 1, LP 1.65.54-168)
Linga PurANa (version 2, LP 1.98.27-159)
Siva purANa (4.35.1-131.)
MahA bhAratha – S’Anthi parvan version (12.284.68-180.)
VAyu PurANa (1.30.179-284)
BrahmaNda PurANa (38.1.1-100) i
MahA bhAgavatha Upa purANa (67.1-125)


Bonus link:

 
ஆதி3த்ய ஹ்ருத3யம்

“நான் ஒரு சாதாரண மனிதன்” என்றே தன்னைப் பற்றிக் கூறிக்கொண்ட ஸ்ரீ ராமபிரானுக்கு; ராம ராவண யுத்தத்தைக் காண வந்த அகஸ்தியரால் உபதேசிக்கப் பட்டது இந்த ‘ஆதி3த்ய ஹ்ருத3யம்.’

“இது புண்ணியம் வாய்ந்தது. எல்லாப் பகைவர்களையும் அழிப்பது. வெற்றியை அளிப்பது. மங்களம் நிறைந்தது. பாவங்களை நீக்குவது. கவலையும், துன்பத்தையும் போக்குவது. ஆயுளை வளர்ப்பது. மூன்று முறை இதை நீ ஜபித்தால் ராவணனை வெற்றி கொள்வாய்” என்று அகஸ்திய முனிவரால் ஸ்ரீ ராமனுக்கு அருளப்பட்டது.

ஆபத்துக் காலங்களிலும், மிகுந்த கஷ்டங்களிலும், பயம் ஏற்படும் சமயங்களிலும் இதை பக்தியுடன் ஓதினால் துன்பங்கள் விலகும். உள்ளத்தில் தைரியம் உண்டாகும். உடலில் புதிய சக்தி பிறக்கும். பயங்களும், கிரஹ பீடைகளும் கஷ்டங்களும் விலகி விடும். சகல சௌபாக்யங்களும் கிடைக்கும். கண் பார்வை நன்றாகத் தெரியும்.

ஸ்ரீ ராம ஜெயம்.


 

Latest posts

Latest ads

Back
Top