வெங்கட்ராமன் சிதம்பரத்தில் பிறந்த சுத்தமான தமிழ் பிராமணன்.கண்டிப்பாய் பிராமணர்கள் எல்லோரும் பெருமைப்பட வேண்டிய விஷயம்.முதலில் இந்தியனாக, பிறகு ஹிந்துவாக , பிறகு பிராமணனாக, பிறகு தமிழனாகப் பெருமை சேர்த்த விதத்தை நாம் பாராட்டித் தான் ஆக வேண்டும்.இந்தியா 125 கோடி ஜனத்தொகை கொண்ட நாடு.அவரின் இளமைக் காலத்தில் 60 கோடி இருந்திருக்கலாம்.ஜாதி, மத துவேஷத்தைத் தாண்டி,இந்தப் பிராமணன் பெருமை சேர்த்திருக்கிறார்.
நோபல் பரிசு பெற்றவுடனேயே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்குத் தான் நன்றி சொல்லி இருக்கிறார்.புரிகிறது.இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த விமர்சனங்களில், ஒரு சிலர் இந்தியாவிற்கு அதனால் என்ன பெருமை என்று கேட்டிருக்கின்றனர்!
அவர் இந்தியாவில் படிப்பினைத் தொடர்ந்திருந்தால் அவ்வளவு சீக்கிரம் இந்தப் பெருமையை அடைந்திருப்பாரா என்பது கேள்விக் குறி தான்!
மொழிகளில் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தால் அது ஒரு கௌரவம்.திரைப்படங்கள் ஆஸ்கார் வென்றால் அது கௌரவம்.அது போல் இவரைப் போன்ற அறிவு ஜீவிகள் நோபல் பரிசு வென்றால் அது கௌரவம்.இந்தியாவில் அடிப்படைக் கல்வி படித்து முடித்தவுடன் அடுத்த இலக்கு அமெரிக்கா என்று ஆகி விட்டது.
அதனாலேயே மற்றவர்களெல்லாம் அறிவு ஜீவிகள் இல்லை என்று கணக்கிட முடியாது தான்.அவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை.அல்லது, மேலை நாடுகள் ஒருவனைக் கௌரவிப்பதனாலேயே அது கௌரவமும் கிடையாது.
இது காலத்தால், எல்லோருடைய தலையிலும் திணிக்கப்பட்ட அடையாளமும் கூட.
இசையமைப்பாளர்,ரகுமான் ஆஸ்கார் விருது பெற்றதும், அதனை இந்தியாவிற்கு அர்ப்பணிக்கிறேன் என்று சொன்னதாக நினைவு.(அல்லது அதற்கு முன் பெற்ற விருதோ?)
அதே போல், இந்த வெங்கட்ராமன் எடுத்தவுடனேயே அமெரிக்காவில் நுழைந்து விடவில்லை.இந்தியாவில் அடித்தளம் அமைத்துக் கொண்டு பின் அங்கிருந்து தான் இந்த அங்கீகாரம் பெற்றிட முயன்று அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.
வாழ்த்துக்கள்.அதே சமயம், இவர் இந்தியாவையும் நன்றியுடன் நினைத்துக் கொள்வார் என்று நம்பி வைக்கிறேன்.
Being a Chidhambaram born Bramin, let me congratulate him thorugh this forum first.First, he is of Indian origin,then a hindu, then a bramin and then a tamilan. Let us remember this.
On attaining this feat, he immediately thanked cambridge university.Understood. But let us hope he does recognise and acknowledge his mother country , India, for laying foundation to achieve this.
India's current population is 125 crores and in his student days, may be 60 crores. Still crossing over all the hurdles and discrimination , be it caste, religion or anything, he has achieved elsewhere.
People feel proud to attain proficiency and expertise in English, film makers to win Oscar, and the learned this Nobel Prize. They vie to rush to America, once they finish their basic education in India.All the products of west.
Whether, it is true recognition or not, just because other under privileged could not get this western product, it does not mean they are less Intelligent; for they may be deprived of their due opportunities.
Still, given that, being a bramin I feel proud of him.
Like A R Rahman, I just wish Venkatraman dedicates this Nobel Prize to India, his origin, where he did his primaries!
Congrats!
நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் சமீபத்தில் தனக்கு வரும்பாராட்டு மின் அஞ்சல்களைக் கண்டு அலுத்துக் கொண்டது, வேதனை தருகிறது.அதை அநாகரீகமாக வெளிப்படுத்தியது எனக்கு எரிச்சலைத் தான் தந்தது.
லட்சக்கணக்கான இந்தியர்கள் காலம் காலமாக கடல் கடந்து போய்க் கொண்டு தானிருக்கிறார்கள்.சிலர் இது போல், கௌரவம் பெறுகிறார்கள்.இதனை ஒட்டி, பாராட்டு மழை குவியத்தான் செய்யும்.கொஞ்ச நாளைக்கு அப்படித் தான் இருக்கும்.
ஆனால், வெங்கட்ராமன் என்னமோ இவரை வைத்து இந்தியா விளம்பரம் செய்வது போல் நடந்து கொண்ட விதம் அல்பமாக இருக்கிறது.அப்படி மின் அஞ்சல் அனுப்பியவர்களில் சிலர் தவறான நோக்கத்துடன் நடந்து கொண்டிருந்தாலும், பொய் உரைத்தாலும், அதை நாகரீகமாக, பதவிசாக சுட்டிக் காட்டி குறிப்பால் உணர வைத்திருக்கலாம்.
ஆனால், நாமெல்லாம் இந்தியர்கள்.நமது வேர் இந்தியாவில் தான் இருக்கிறது.இவர் விஞ்ஞானியாக வளர்ந்ததற்கான அடித்தளம் அங்கே தான் போடப்பட்டது.
நானும் பிராமண குலத்தைச் சேர்ந்தவள் தான்.அதற்காகப் பிராமண குலத்திற்கு அடையாளாமான கர்நாடக இசை, சம்ஸ்கிருதம், நுனி நாக்கில் ஆங்கிலம்,தமிழ்நாடு என்றால் இளக்காரம், அல்லது இந்தியா என்றால் ஏதோ குப்பையும், அடிவயிற்றைக் குமட்டிக் கொண்டு வரும் ஊழலும், மதவாதமும், சாதிச் சண்டையும், அரசியலும் மட்டுமல்ல.அப்படிப் பார்த்தால், இந்த வெங்கி சிலாகிக்கும் அமெரிக்கா அப்படி ஒன்றும் புத்தனல்ல.எந்த விதத்திலும்!
என்ன படித்து என்ன?என்ன விருது வாங்கி சாமானிய இந்தியர்களான எங்களைப் போன்றவர்களுக்கு என்ன?யாருக்குக் குறை இல்லை?இருந்தாலும், தாய் நாட்டை விட்டுக் கொடுத்து அன்னிய மண்ணில் தன்னுடையப் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்திய விதம் அருவருப்பாய்த் தான் இருக்கிறது.
என்ன தான் தில்லிக்கு ராஜாவானாலும் தல்லிக்குப் பிள்ளை தானே!
மகா கேவலமாக நடந்து கொண்டிருக்கிறார்,.
ஒரு இந்தியனாக, சக பிராமணனாகா நான் பார்க்கும் போது, வெங்கட்ராமனை நினைத்து அவமானப்படுகிறேன்!
முதலில் இந்தியன்..பிறகு தான் ஹிந்து, பிராமணன் எல்லாம்!
Gist:
The way in which Venkatraman, has reacted to the email episode , has belittled his feat!
He may be a king but still he is a child to his mother!
His degrading of India, or his failure to dedicate his feat to his mother land, shows how cheap his mentality is.
He could have pointed out or otherwise dealt with this diplomatically commensurate to his stature.Failure to do so,constrains me to feel ashamed of this fellow bramin.