• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

East meets West.

Status
Not open for further replies.
281 (a). கங்கையில் முழுகினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
281 (b). Can a leopard change its spots?

282 (a). எறும்பும் தன் கையால் எண் ஜாண்.
282 (b). Nothing is insignificant in creation.

283 (a). கடலைத் தாண்ட ஆசை உண்டு;
கால்வாயைத் தாண்டக் கால்கள் இல்லை.
283 (b). First deserve. Then desire!

284 (a). முதல் கோணல் முற்றும் கோணல்.
284 (b). A bad beginning makes a bad ending!

285 (a). சூடு கண்ட பூனை அடுப்பங்கரை சேராது.
285 (b). A burnt child dreads fire.
 
Last edited:
286 (a). குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவான்.
286 (b). A cock is valiant in his own dung hill.

287 (a). ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தான்.
287 (b). A cursed cow has short horns.

288(a). குடம் பாலில் துளி நஞ்சு.
288 (b). A drop in a bucket.

289 (a). நாற்பது வயதில் நாய் குணம்.
289 (b). A fool at forty is a fool indeed.

290 (a). ஈயார் தேட்டைத் தீயார் பறிப்பார்.
290 (b). A fool and his money are soon parted.
 
291 (a). விரை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?
291 (b). We grow what we sow.

292 (a). பானகத் துரும்பு.
292 (b). A fly in ointment.

293 (a). வேலைக்குத் தகுந்த வேஷம் போடு.
293 (b). A cat in gloves catches no mice.

294 (a). காராம் பசுவின் பால் வெள்ளை.
294 (b). A black hen lays white eggs.

295 (a). தணிந்த வில் தான் தைக்கும்.
295 (b). A friend's frown is better than a foe's smile.
 
296 (a). தருமம் தலை காக்கும்.
296 (b). A good deed never goes in waste.

297 (a). யானைக்கும் அடி சறுக்கும்.
297 (b). A good marksman may miss.

298 (a). குயவனக்கு ஆறு மாதம்; தடிக்காரனுக்கு அரை நாழி.
298 (b). A good name is sooner lost than won.

299 (a). பூனைக்குத் திண்டாட்டம் எலிக்குக் கொண்டாட்டம்.
299 (b). A shy cat makes a proud mouse.

300 (a). கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்தி விடும்.
300 (b). A small leak can sink a giant ship.
 
301 (a). பசுத் தோல் போர்த்திய புலி.
301 (b). A wolf in a sheep's clothing.

302 (a). கணக்குப் பார்த்தல் பிணக்கு வரும்.
302 (b). Ask no questions and you will be told no lies.

303 (a). கேள்விப் பேச்சில் பாதி நிஜம்.
303 (b). Believe not all you see and not half of what you hear.

304 (a). புலிக்கு வாலாவதைவிட எலிக்குத் தலையாவது மேல்.
304 (b). Better to be the head of a dog than the tail of a lion.

305 (a). கடன் இல்லாத கஞ்சி கால் வயிறு.
305 (b). Better go to bed without supper than rise in debt!
 
306 (a). பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளிய மரம் ஏற வேண்டும்.
306 (b). If you befriend wolves, you must learn to hunt and howl.

307 (a). ஆழமான நீரும் அமைதியான நாயும் ஆபத்தானவை.
307 (b). Beware of still waters and a silent dog.

308 (a). எலிக்குப் பயந்து வீட்டிக் கொளுத்துவதா?
308 (b). Burn not your house to get rid of mice.

309 (a). குரைக்கும் நாய் கடிக்காது.
309 (b). A threatened blow is seldom given.

310 (a). சோழியன் குடுமி சும்மா ஆடாது.
310 (b). All are not friends that speak us fair.
 
311 (a). வில்லேந்தியவன் எல்லாம் வீரன் அல்ல.
311 (b). All are not hunters that blow the horn.

312 (a). பேராசை பெரு நஷ்டம்.
312 (b). Covet all, lose all!

313 (a). எல்லோரும் பல்லக்கு ஏறினால் சுமப்பவர் யார்?
313 (b). All men can't be masters.

314 (a). யதார்த்தவாதி வெகு ஜன விரோதி.
314 (b). All truths are not to be told.

315 (a). பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும் .
315 (b). An evil chance seldom comes alone.
 
316 (a). காலை எழுந்தவுடன் படிப்பு.
316 (b). An hour in the morning is worth two in the evening.

317 (a). மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.
317 (b). Little strokes cut down a mighty oak.

318 (a). திறந்த கதவு துறவியையும் திருடன் ஆக்கும்.
318 (b). An open door may tempt a saint.

319 (a). மாட்டுக்குக் கொம்பு; மனிதனுக்கு நாக்கு.
319 (b). An ox is taken by its horn and a man by his tongue.

320 (a). ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு .
320 (b). Anger and haste hinder good counsel.
 
321 (a). ஆபத்துக்குப் பாவம் இல்லை.
321 (b). Any port in a storm.

322 (a). சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை.
322 (b). As the call, so the echo.

323 (a). ஏழை சொல் அம்பலம் ஏறாது.
323 (b). As well be hanged for a sheep as for a lamb.

324 (a). கடலில் மூழ்குபவரைவிடக் கள்ளில் மூழ்குபவர் அதிகம்.
324 (b). Bacchus has drowned more people than Neptune.

325 (a). வாக்குக் கொடுக்காதே! கொடுத்தால் நிறைவேற்று!
325 (b ). Be slow to promise but quick to perform.
 

326 (a). நிறையக் கேள்; குறைவாகப் பேசு!
326 (b). Be swift to hear and slow to speak.

327 (a). கன்னியின் அழகு காண்பவர் கண்களில்.
327 (b). Beauty lies in the lover's eyes.

328 (a). அடிமை வாழ்வினும் வீர மரணமே மேல்.
328 (b). Better a glorious death than a shameful life.

329 (a). நெருப்பும் அரசனும் நெருங்காதவரை நண்பர்கள்!
329 (b). Better a little fire to warm us than a great fire to burn us.

330 (a). நாளைக்குக் கிடைக்கும் பலாக்காயைவிட
இன்றைக்குக் கிடைக்கும் களாக்காயே மேல்!
330 (b). Better an egg today than a hen tomorrow.
 
331 (a). தெரிந்த எதிரி தெரியாத நண்பனைவிட மேல்.
331 (b). Better an open enemy than a false friend.

332 (a). அரசன் மகனாகப் பிறப்பதைவிட
அதிருஷ்டக்காரனாகப் பிறப்பதே மேல்.
332 (b). Better to be born lucky than rich.

333 (a). கால் பிறழ்ந்தாலும் நாப் பிறழாதே!
333 (b). Better the foot slip than the tongue.

334 (a). துன்பமே மனிதனின் உரைகல்.
334 (b). Calamity is a man's true touchstone.

335 (a). துணிவே வெற்றியைத் தரும்.
335 (b). Success comes to cheeky men.
 
Last edited:
336 (a). மழலைச் செல்வமே ஏழைகளின் செல்வம்.
336 (b). Children are a poor man's riches.

337 (a). நல்ல நூல் நல்ல நண்பன்.
337 (b). Choose an author as you would choose a friend.

338 (a). அடக்குமுறை அல்ல அறிவுரை.
338 (b). Counseling is not commanding.

339 (a). கடன் வாங்கினவன் மறந்தாலும் கடன் கொடுத்தவன் மறக்க மாட்டான்.
339 (b). Creditors have better memory than debtors.

340 (a). ஆழம் குறைந்த இடத்தில் ஆற்றைக் கட.
340 (b). Cross the river where it is shallowest.
 
341 (a). பாம்பைப் பாம்பு கடிக்காது.
341 (b). Crows do not pick crows' eyes.

342 (a). கடும் வியாதிக்கு கடும் மருந்து.
342 (b). Desperate diseases must have desperate remedies.

343 (a). இன்பங்களே வியாதிகளின் பிறப்பிடம்.
343 (b). Diseases are the interests on pleasure.

344 (a). பிரிவே சரிவு.
344 (b). Divide and rule.

345 (a). சொல்லினும் செயல் உத்தமம்.
345 (b). Actions speak louder than words.
 
346 (a). அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும் .
346 (b). Don't keep a dog and bark yourself.

347 (a). செய்வன திருந்தச் செய்.
347 (b). Dot your 'i' s and cross your 't' s.

348 (a). குடிகாரன் ஏச்சு, நிஜமான பேச்சு.
348 (b). Drunkenness reveals what soberness conceals.

349 (a). கடிக்கும் நாய் குரைக்காது.
349 (b). Dumb dogs are dangerous.

350 (a). சொல்வது சுலபம். செய்வது கடினம்.
350 (b). Easier said than done.
 
351 (a). உழைக்காத செல்வம் நிலைக்காது.
351 (b). East come, easy go.

352 (a). அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
352 (b). Eat at pleasure and drink with measure.

353 (a). போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
353 (b). Enough is as good as a feast.

354 (a). பொறாமைத்தீ தன்னையே எரிக்கும்.
354 (b). Envy shoots at others and wounds herself.

355 (a). காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
355 (b). Every mother thinks that her own gosling is a swan.
 
356 (a). நிலவுக்கும் களங்கம் உண்டு.
356 (b). Every bean has its black.

357 (a). வீட்டிலே புலி; வெளியிலே எலி.
357 (b). Every dog is a lion at home.

358 (a). குறையே இல்லாதவன் பிறக்கவே இல்லை.
358 (b). Every man has his faults.

359 (a). கெட்ட காலத்திலும் நல்ல காலம்.
359 (b). Silver lining of a dark cloud.

360 (a). காலம் செய்கிறதை ஞாலம் செய்யாது.
360 (b). Everything comes to him who learns to wait.
 
361 (a). உண்மை சுடும்.
361 (b). Facts are stubborn.

362 (a). ஒய்யாரக் கொண்டையில் தாழம் பூவாம்;
உள்ளே இருப்பது ஈறும் பேனாம்.
362 (b). Fair without; foul within.

363 (a). கடிந்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
363 (b). Fair words break no bones.

364 (a). பொய்யான நண்பனைவிட மெய்யான எதிரி மேல்.
364 (b). False friends are worse than open enemies.

365 (a). பழகப் பழக்கப் பாலும் புளிக்கும்.
365 (b). Familiarity breeds contempt.
 
366 (a). லங்கணம் பரம ஔஷதம் .
366 (b). Fasting comes after feasting.

367 (a). வேண்டாத மனைவி கை பட்டால் குற்றம்; கால் பட்டால் குற்றம்.
367 (b). Where love is thin, faults are thick.

368 (a). எல்லா ஆறுகளும் சங்கமிக்கும் கடலில்.
368 (b). Follow the river and you will get to the sea.

369 (a). உண்மையே பேசுவார் உன்மத்தரும், மூடரும்.
369 (b). Fools and madmen speak the truth.

370 (a). நட்பு காலத்தைத் தேய்க்கும்.
370 (b). Friends are thieves of time.
 
371 (a). கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது.
371 (b). From bad to worse.

372 (a). எத்தைத் தின்றால் பித்தம் தீரும்?
372 (b). Run from pillar to post.

373 (a). புலி பதுங்குவது பாய்வதற்கே.
373 (b). Gifts from enemies are dangerous.

374 (a). இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
374 (b). Give him an inch and he will take an ell.

375 (a). ஆள் பாதி; ஆடை பாதி.
375 (b). Good clothes open all doors.
 
376 (a). நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
376 (b). Good health is above all wealth.

377 (a). வாய்ச்சொல் வீரன்.
377 (b). All words and no deeds.

378 (a). குரைக்கும் நாய் கடிக்காது.
378 (b). Barking dogs seldom bite.

379 (a). ஊதாரியிடம் கிடைக்காது கைமாற்று.
379 (b). Great spenders are bad lenders.

380 (a). சேற்றில் புதைந்த யானையைக் காக்கையும் கொத்தும்.
380 (b). Hares may pull the dead lion by its beard.
 
381 (a). பதறிய காரியம் சிதறும்.
381 (b). Hasty climbers have sudden falls.

382 (a). காதலுக்குக் கண்ணில்லை.
ஆத்திரத்துக்கு அறிவில்லை.
382 (b). Love is blind. So is hatred.

383 (a). யாகாவாராயினும் நாகாக்க.
383 (b). He cannot speak well that cannot hold his tongue.

384 (a). பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்.
383 (b). He carries fire in one hand and water in the other.

385 (a). ஒருமுறை உடைந்த நட்பு உடைந்தது தான்!
385 (b). A broken friendship may be soldered but it will never be sound.
 
386 (a). குற்றமற்ற நெஞ்சு அர்த்தமற்ற பழியை எள்ளி நகையாடும்.
386 (b). A clear conscience laughs at false accusations.

387 (a). ரூபவதி பார்யா சத்ரு.
387 (b). A fair face may hide a foul heart.

388 (a). நாய் வேடம் போட்டால் குரைத்துத் தான் ஆகவேண்டும்.
388 (b). Change your habits to suit your pursuits.

389 (a). ஆறெல்லாம் பாலாக ஓடினாலும் நாய் நக்கித் தான் குடிக்கும்.
389 (b). Don't bite off more than you can chew.

390 (a ). மலையைக் கெல்லி எலியைப் பிடித்தானாம்.
390 (b). Launch a warship to catch a catfish.
 
Last edited:
391 (a ). விதியை மதியால் வெல்லலாம்.
391 (b). Defeat fate through effort.

392 (a). இளம் கன்று பயம் அறியாது.
392 (b). Calves dare while the cows scare.

393 (a). ஆதாயம் இல்லாமல் செட்டி ஆற்றோடு போவானா?
393 (b). There is a motive behind every movement.

394 (a). முழுவது நனைந்தபின் முக்காடு எதற்கு?
394 (b). Why need a veil after being branded vile?

395 (a). ஊரறிந்த பார்பானுக்கு பூணுல் எதற்கு?
395 (b). A king is a king even when he wears no crown.
 
396 (a). அறிவாளிகள் ஒருபோலவே! முட்டாள்கள் பலவிதம்!
396 (b). Great men think alike. Fools never!

397 (a). அறிவுக்கு எல்லை உண்டு.
பேதமைக்கு எல்லையே இல்லை.

397 (a ). Genius has its limitations.
Folly is not thus handicapped.

398 (a). களவும் கற்று மற.
398 (b). Learn everything you can.

399 (a). அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
399 (b). A nation without a ruler is a chariot without an axle.

400 (a). அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் உதவான்.
400 (b). He who is useless to his mother will be useless to everyone else.
 
401 (a). இன்பத்தைத் தொடரும் துன்பம்.
401 (b). Pleasure has a sting on its tail.

402 (a). துணிவால் சாதிக்க முடியாததைப்
பணிவால் சாதிக்கலாம்.
402 (b). Courtesy conquers where confrontation fails.

403 (a). வாக்கு என்னும் கடன்.
403 (b). Promise is a debt.

404 (a). தவறுக்கு வருந்து.
தவறே செய்யாமல் இருப்பது அருமருந்து.

404 (b). It is good to repent for your sins.
It is better to refrain from sins.

405 (a). சொல் வேறு; செயல் வேறு.
405 (b). Saying is different from doing.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top