• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

East meets West.

Status
Not open for further replies.
521 (a). உடைமையும், வறுமையும் ஒரு வழி நில்லா.
521 (b). Fortune is fickle minded; poverty is not permanent.

522 (a). ஈர நாவுக்கு எலும்பு இல்லை.
522 (b). A tongue can bend in any direction.

523 (a). ஈட்டி எட்டு முழம் பாயும்; பணம் பாதளம் மட்டும் பாயும்.
523 (b). Weapons have limited range; wealth has unlimited range.

524 (a). ஈக்கு விடம் தலையில்; தேளுக்கு விடம் கொடுக்கில்.
524 (b). Different features for different creatures.

525 (a). ஏழை என்றால் எல்லோருக்கும் எளிது.
525 (b). A poor man is at everybody's mercy.
 
526 (a) ஏவுகின்றவனுக்கு வாய்ச்சொல். செய்கின்றவனுக்குத் தலைச்சுமை.
526 (b). Saying is one thing; doing it is quite another.

527 (a). ஒரு நன்றி செய்தவரை உள்ளளவும் நினை.
527 (b). To be ungrateful is to be disgraceful.

528 (a). ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
528 (b). No permanent deeds, for temporary needs.

529 (a). வீட்டைக் கட்டிப்பார்; கல்யாணம் பண்ணிப்பார்!
529 (b). Maintain a white elephant.

530 (a). அணில் கொம்பிலும்; ஆமை கிணற்றிலும்.
530 (b). Home sweet home.
 
531 (a). எட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது!
531 (b). Reality is different from theory.

532 (a). விதியை மதியால் வெல்லலாம்.
532 (b). Efforts defeat fate.

533 (a) இறுகினால் களி; இளகினால் கூழ்.
533 (b). Call it by any name, as long as you eat the game.

534 (a).இல்லாதது பிறவாது; அள்ளாதது குறையாது!
534 (b). Nothing comes out of nothing; nothing goes to nothing.

535 (a). உடல் உள்ளவரையில் கடல் கொள்ளாத கவலை.
535 (b). Body is the cause of boundless worry.
 
536 (a). உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
536 (b). Fear none; threaten none.

537 (a). உறவு போகாமல் கேட்டது. கடன் கேளாமல் கேட்டது.
537 (b). Lose un-demanded loans and un-visited friends.

538 (a). உளவு இல்லாமல் களவு இல்லை.
538 (b). No stealing without spying.

539 (a). உள்ளம் தீ எரிய உதடு பழம் சொரிய.
539 (b). With fire in the heart and honey in the lips.

540 (a). ஊனுக்கு முந்துவான்; வேலைக்குப் பிந்துவான்.
540 (b). First man to feast and the last man to fight.
 
541 (a). எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருவாய்?
உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு தருவாய்?
541 (b). Heads i win, tails you lose!

542 (a). எடுக்கிறது பிச்சை; ஏறுகிறது பல்லக்கு!
542 (b). Men of show and of straw.

543 (a). எண்ணிச் செய்பவன் செட்டி; எண்ணாமல் செய்பவன் மட்டி.
543 (b). The smart man contemplates, the foolish man just acts.

544 (a). எத்தால் வாழலாம்? ஒத்தால் வாழலாம்!
544 (b). Agreeable persons are those who agree with you.

545 (a). கண் குருடு ஆனாலும் நித்திரை குறையுமா?
545 (b). A blind person may dream in smells and sounds.
 
546 (a). கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
546 (b). All truths are not to be revealed.

547 (a). கனவில் கண்ட பணம் செலவுக்கு உதவுமா?
547 (b). You may win a jackpot in your dream.
You will still be a pauper when you wake up!

548 (a). கப்பல்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி;
கப்பல் கவிழ்ந்தால் அவளே பிச்சைக்காரி.
548 (b). Fortune is easy to make but hard to keep.

549 (a). கரையான் புற்று பாம்புக்கு உதவும்.
549 (b). The unscrupulous man enjoys the honest man's earnings.

550 (a). கள் விற்று கலப்பணம் சம்பாதிப்பதைவிட,
கற்பூரம் விற்று கால் பணம் சம்பாதிப்பதே மேல்.
550 (b). Honest poverty is better than dishonest prosperity.
 
551 (a). கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால்,
விடியும் மட்டும் திருடலாம்
551 (b). When the dishonest men join hands, they form a brigand.

552 (a).கள்ளைக் குடித்தல் உள்ளதைச் சொல்லுவான்.
552 (b). Drunkenness reveals what soberness conceals.

553 (a). காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் ;
அது காற்றைப்போல பறக்கவும் வேண்டும்.
553 (b). Cheap things are not the best ; best things are not cheap.

554 (a).காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்.
554 (b). Tinted glasses color your vision.

555 (a). காரியம் ஆகும்வரையில் கழுதை காலைப்பிடி.
555 (b). Stoop to conquer.
 
556 (a). காலம் போம் வார்த்தை நிற்கும்.
கப்பல் போம் துறை நிற்கும்.

556 (b). Time moves on but words stay back.
Ship moves on but ports stay back.

557 (a). கீர்த்தியால் பசி தீருமா?
557 (b). Can fame fill your belly?

558 (a). கொடுங்கோல் அரசு நெடுநாள் நில்லாது.
558 (b). Tyranny shall be soon overthrown.

559 (a). கொடுத்தைக் கேட்டால் அடுத்ததாம் பகை.
559 (b). Neither a lender nor a borrower be.

560 (a). கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.

560 (b). A king is respected only by his citizens.
Learned man is respected by everyman.
 
561 (a). கொல்லைக் காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
561 (b). Rogues are not ruffled by trifles.

562 (a). கோள் சொல்பவனைக் கொடுந்தேள் என நினை.
562 (b). A gossiper is deadlier than an asp.

563 (a). கோள் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
563 (b). The lips spread gossip like a fire assisted by air.

564 (a). கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு;
பாத்திரம் அறிந்து பிச்சை இடு.

564 (b). Help only the deserving persons.

565 (a). கோபம் சண்டாளம்.
565 (b). Anger destroys.
 
566 (a). சுட்ட சட்டி சுவை அறியுமா?
566 (b). Does the pot know the taste of the porridge?

567 (a). தண்ணீரில் விளைந்த உப்பு தண்ணீரிலேயே கரைய வேண்டும்.
567 (b). Everything must return to its source.

568 (a). நாய்க்கு வேலையும் இல்லை; நிற்க நேரமும் இல்லை!
568 (b). The idle folks have no free time at all.

569 (a). பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு.
பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.

569 (b).Fortune favors very few.

570 (a). பெண் பிறந்தபோதே புருஷன் பிறந்திருப்பான்.
570 (b). Marriages are made in heaven.
 
Quotes 221 to 230 are ready for your viewing

with real cool illustrations by Mrs. R.R ! :cool:

This R.R. is NOT Mrs. Raji Ram as you are sure to think! :)

It is Mrs. Rupa Raman-the other Mrs.R.R.

who also helps me with my blogs!

Raji Ram does the hard job of Editing :moony: and

Rupa Raman does the illustrations and publishing! :typing:
 
571 (a). மட்டான போஜனம் மனதுக்கு மகிழ்ச்சி.
571 (b). Eat light and feel bright.

572 (a). மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
572 (b). There is danger everywhere for one who fears it.

573 (a). மன்னவன் எப்படி மன்னுயிர் அப்படி.
573 (b). As the king is, so his citizens are.

574 (a). மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
574 (b). Confused mind is conquered easily.

575 (a). மந்திரிக்கும் உண்டு மதிகேடு.
575 (b). The wisest of the wise may err.
 
576 (a). மனதில் இருக்கும் ரகசியம் மதிகேடனுக்கு வாக்கினிலே .
576 (b). Fools spread secrets which wise men bury deep within.

577 (a). மாமியார்
மெச்சின மருமகள் இல்லை; மருமகள் மெச்சின மாமியார் இல்லை.
577 (b). Two women under a roof, can make life very rough.

578 (a). சுத்தம் சோறு போடும்; எச்சில் இரக்க வைக்கும்.
578 (b). Cleanliness is next to Godliness.

579(a). குதிரை ஏறாமல் கேட்டது; கடன் கேளாமல் கெட்டது.
579 (b). You will lose the horse you don't ride and the loan you don't demand.

580 (a). கதிரவன் சிலரைக் காயேன் என்குமா?
580 (b). The Sun and moon shine on everyone.
 
581 (a). கருமத்தை முடிக்கின்றவன் கட்டத்தைப் பாரான்.
581 (b). A determined person doesn't mind the difficulties.

582 (a). கல்வி இல்லாத செல்வம், கற்பில்லாத அழகு.
582 (b). Wealth without wisdom is like beauty without virtue.

583 (a). கல்விக்கு இருவர், களவுக்கு ஒருவர்.
583 (b). Two for learning and one for looting.

584 (a). குந்தி இருந்து தின்னால் குன்றும் மாளும்.
584 (b). Spending without earning cannot go on for ever.

585 (a). கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.
585 (b). Victory and defeat are not permanent.
 
586 (a). கையிலே காசு, வாயிலே தோசை.
586 (b). No money, no food.

587 (a). சத்தியம் வெல்லும், அசத்தியம் கொல்லும்.
587 (b). Truth conquers; falsehood crushes.

588 (a). சோம்பல் சோறின்மைக்குப் பிதா.
588 (b). Sloth leads to poverty.

589 (a). பல மனிதர்கள், பல ருசிகள்.
589 (b). Tastes differ.

590 (a). கொள்ளை அழகும், கள்ள மனமும்.
590 (b). A fair face may hide a foul heart.
 

591 (a). நல்ல சேவைக்கு நல்ல பரிசு.
591 (b). A good dog deserves a good bone.

592 (a). நேர்மையான முகமே உண்மையான சிபாரிசு.
592 (b). A fair face a letter of recommendation.

593 (a). புலி வந்த கதை போலாகும்.
593 (b). A liar is not believed when he speaks the truth.


594 (a). கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்குமா?
594 (b). A little body often harbors a great soul.

595 (a). களையை முளையில் கிள்ளிவிடு.
595 (b). A little fire is quickly trodden out.
 
596 (a). கனியால் மரத்துக்குப் பெயர்.
மகனால் தந்தைக்குப் பெயர்.
596 (b). A tree is known by its fruit and a man by his son.

597 (a). கெட்டிக்காரன் புளுகு எட்டுநாள்.
597 (b). You can cheat all the people for a few days;
a few people for all the days; but not all the people for all the days.

598 (a). கன்றைச் சுமக்க சம்மதித்தால், பசுவைச் சுமக்க வைப்பார்கள்.
598 (b). All lay load on a willing horse.

599 (a). தங்கத்திலே புரண்டாலும் கழுதை கழுதையே!
599 (b). An ass is an ass though laden with gold.

600 (a). நேரம் சரியாக இல்லாவிட்டால், பருகும் நீரே யமனாகும்.
600 (b). An unfortunate man will be drowned in a tea cup.
 
601 (a). கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம்.
601 (b). As innocent as the babe unborn.

602 (a). இரட்டைப் பிறவிகள் போல.
602 (b). As like as two peas.

603 (a). இரண்டும் இரண்டும் நாலு.
603 (b). As plain as two and two make four.

604 (a). இல்லை என்ற உண்மை நாளை என்ற பொய்யைவிட மேல்.
604 (b). Better deny at once than promise for long.

605 (a). தாமதமானாலும் பரவாயில்லை, நாமாக அதைத் தவிர்க்காதவரை .
605 (b). Better late than never.
 
606 (a). உழைப்புக்குப் பின் களிப்பு.
606 (b). Business before pleasure.

607 (a). பிறப்பிலும் இறப்பிலும் அனைவரும் சமம்.
607 (b). Death is a great leveler.

608 (a). ஏழ்மையில் கொடுமை கடன் தொல்லை.
608 (b). Debt is a sorrow in poverty.

609 (a). ஊருக்கு ஊர் மாறும் பழக்கம்.
609 (b). Each country has its customs.

610(a). அனுபவமே அறிவை அளிக்கும்.
610 (b). Experience is the mother of wisdom.
 
611 (a). வாய்ச் சொல் வீரர்கள்.
611 (b). All words and no actions.

612 (a). மிகைப்பட பேசுபவர் மிகுந்த பொய்யர்கள்.
612 (b). Fluent talkers tell fluent lies.

613 (a). பழக்கம் வழக்கத்தை மாற்றும்.
613 (b). Habit cures habit.

614 (a). முழுப்பட்டினியைவிட அரை வயிற்றுக் கஞ்சியே மேல்.
614 (b). Half a loaf is better than no bread.

615 (a). ஏவா மக்கள் மூவா மருந்து.
615 (b). Happy is the man who is happy in his children.
 
616 (a). முதல் தவறை மன்னிப்போம்.
616 (b). Hate not at the first crime.

617 (a). நொடியில் தந்தவன், இருமுறை தந்தவன் ஆவான்.
617 (b). He gives twice, who gives in a trice.

618 (a). தன்னையே மறப்பவன் உண்மையில் முட்டாள்.
618 (b). He is a fool who forgets himself.

619(a). இன்பமும் துன்பமும் எண்ணங்களின் வண்ணங்கள்.
619 (b). He is happy who thinks himself so.

620 (a). இல்லாமை ஏழ்மை அல்ல; பேராசையே ஏழ்மை.
620 (b). He is not poor that has a little but he that desires much.
 
621 (a). வலியை உணர்ந்தவன் வலியை அறிவான்.
621 (b). He jests at scars that never felt a wound.

622 (a). நாவடக்கம் கற்றவன், நல்லதனைத்தும் கற்றவன்.
622 (b). He knows much who knows how to hold his tongue.

623 (a). குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
623 (b). He who has a crooked nose thinks everyone is talking about it.

624 (a). கண்டால் அச்சம், காணாவிட்டால் வெறுப்பு.
624 (b). He that fears you present will hate you absent.

625 (a). புகழ் இழந்தவன் பாதி இறந்தவன்.
625 (b). He that has an ill name is half hanged.
 
626 (a). பிள்ளை ஒன்று பெறாதவன் உள்ள அன்பை அறியான்.
626 (b). He that has no children knows not what love is.

627 (a). ஏதும் அறியாதவன் எதையும் ஐயுறான்.
627 (b). He who knows nothing doubts nothing.

628 (a). தீயோர் பொறை, நல்லோர் துயர்.
628 (b). He that spares the bad, injures the good.

629 (a). மடமைக்கு மருந்தில்லை.
629 (b). He who is born a fool is never cured.

630 (a). தயங்கி நிற்பவன் தோற்று நிற்பான்.
630 (b). He who hesitates, loses.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top