Vaagmi
0
Hindu Samskaram-Chowlam or குடுமி வைத்தல்.
After the குடுமிப்பிடி in the other thread, I thought I will write here about the hindu samskara Chowlam/குடுமி வைத்தல். I am doing it in Tamil for two reasons. One is that I am more comfortable with Tamil explaining such matters and I do not have to take too many liberties with the English language, thinking that it will all reach the reader in tact without any attenuation in intended meaning. Two is that I do not have to struggle with anglicizing the Samskrit words and lose the focus in the process because of misspelt phonetics of consonants.
Knowledgeable members may correct me wherever I may be wrong in presentation or interpretation. Thanks.
முதலில் குடுமிவைத்தல் என்னும் சடங்கின் செய்முறையை (process flow) பார்ப்போம்:
ஹிந்து ஸம்ஸ்காரங்களில் ஒன்பதாவது சௌளம் அல்லது குடுமி வைத்தல் என்பதாகும். இங்கு ஹிந்து ஸம்ஸ்காரம் என்று கூறப்பட்டிருப்பதை கவனத்தில் கொள்க. இது ஒரு பிராமண ஸம்ஸ்காரம் மட்டும் அல்ல. For those who are curious the samskaras starting with Jiva utpatti are these: 1.கர்ப்பாதானம், 2.பும்ஸவனம் 3.ஸீமந்தோந்நயனம் 4. ஜாதகர்மா 5. நாமகரணம் 6.ஸூர்யாவலோகனம் 7. அன்னப்பிராசனம் 8. கர்ணவேதனம் and 9. சௌளம் or குடுமிவைத்தல். There are several other samskaras extending upto death and after. I may write about each of them briefly but now is not the time for that. Let us continue with our chowlam or
குடுமி வைத்தல்.
குழந்தை பிறந்து 5 வது வயதில் ஜோதிடரைக்கேட்டு அறிந்து ஒரு நல்ல நாளில் இதனைச் செய்ய வேண்டும். அன்று காலை தம்பதிகளும் குழந்தையும் ஸ்நானம் செய்து ஆடையாபரணங்களணிந்து கொள்ள வேண்டும். கணவன் கிழக்கு முகமாக அமர்ந்து மனைவியையும் குழந்தையையும் வலது பக்கம் அமரச்செய்ய வேண்டும். பின் தேசம் காலம் இவற்றை நினைத்து குழந்தைக்கு ஞானாபிவிருத்தி உண்டாவதன் மூலம் இறைவனின் ப்ரீதியுண்டாகவேண்டுமென சங்கல்ப்பம் செய்து கொள்ள வேண்டும். பின் அவரவர் சம்ப்ரதாயப்படி கணபதி பூஜை அல்லது விஷ்வக்சேன ஆராதனம், புண்யாக வாசனம், நாந்திசிரார்த்தம், பயிர் வளர்த்தல் (பாலிகை) முதலியன செய்யவேண்டும்.
பாலிகை தெளித்தல் என்ற சடங்கு முடிந்தவுடன் அக்நியை வளர்த்து அதில் ஸப்யன் (ஸபைக்கு உரியவன்) என்ற பெயரால் அக்னியை த்யானித்து ஹோமம் செய்ய வேண்டும். பின்னர் இளஞ்சூடுள்ள வென்னீரை ஒரு பாத்திரத்தில் விட்டு ஏழு தர்ப்பங்களாலமைந்த ஒரு முடிப்பையும், தாமிரம், இரும்பு அல்லது கண்ணாடி இவற்றுள் எதாவதொன்றாலான தலை முடியை சிறைப்பதற்கென்றமைந்திருக்கும் கருவியையும் அவ்வக்னியின் முன் வைக்கவேண்டும்.
லௌஹபாணிஞ்ச நாபிதம் ஸ்தாபயேத்............
நாபிதனையும் அவ்வக்னியின் முன்னே கத்தியுடன் உட்காரச்செய்து, அவனை சூரியக்கடவுள் என தியானஞ்செய்து கொள்ளவேண்டும்.
க்ஷுரதபாணினம் நாபிதம் பச்யந்
தமேவ ஸவித்ரூபம் த்யாயந்ஜபதி
பின்னர் தர்ப்ப முடி கத்தி இவற்றைப்பார்த்து
ஔஷதியே (தர்ப்ப முடிப்பே) இவனைப் பாதுகாப்பாய். கத்தியே இவனை இம்சியாதே என்று ப்ரார்த்தனை செய்துகொண்டு, தானியங்களை விரித்து, அவற்றின் மீது போட்டுள்ளஆஸனத்தில் குழந்தையை இருக்கச்செய்து தர்ப்ப முடிப்பு கத்தி இவற்றை தகப்பனது கையில் வைத்துக்கொண்டு
யேநாவபத்ஸவிதா க்ஷுரேண ஸோமஸ்ய, ராஜ்ஞோ வருணச்ச வித்வாந்|
தேநப்ரஹ்மாணோ வபதேதமஸ்யா,
யுஷ்மாந் ஜரதஷ்டிர் யதாசத்| யேனபூஷா ப்ரஹஸ்பதேரக்நேரிந்த்ரஸ் யசாயுஷேவபத், தேன ஆயுஷேவ பாமிஸூச்லோக்யாயஸ்வஸ்தயே||........
மந்த்ரங்களை ச்சொல்லி, குழந்தையின் வலப்பக்கத்து செவியின் ஓரத்தில் தர்ப்ப முடிப்பை வைத்துக்கொண்டு அதன் ஏழு நுனிகளையும் கத்தியினால் நறுக்கி, கோமயமுள்ள தொன்னையில் போடவேண்டும். பின்னர் இடப்பக்கத்திலும் இவ்வாறே செய்ய வேண்டும். அப்பால் தர்ப்ப நுனிகளடங்கிய கோமயத்தொன்னையை சிறுவனின் நண்பர்கள் மூலமாய் வம்சமரத்தின் (மூங்கில்) அடியிற்கொண்டு ஸ்தாபிக்க வேண்டும். அப்பால் நாபிதனைக்கொண்டு நன்றாகக் குடுமி வைக்கும்படி செய்ய வேண்டும்.
அதன் பின் வெந்நீரில் ஸ்நானம் செய்வித்து, ஞான ஒழுக்கம் உடையோருக்கு இயன்றவாறு தானம் வழங்கி, குருவை நினைவு கூர்ந்து நமஸ்கரித்து, தக்ஷிணையளித்து பெரியோர்களையும் வணங்கி, நாபிதனுக்கு தக்ஷிணை, உணவளித்து உபசரிக்க வேண்டும். பின் வேண்டியவர்களுடன் உணவு உட்கொள்ளவேண்டும்.
(will continue in two more parts)

Last edited: