கோத்ரத்தவர்களிடையுலுள்ள சில வேறுபாடுகள்-காரணங்கள்.
உதாரணமாக ஸ்ரீ வத்ஸ கோத்ரத்தில் வந்த இனத்தவர்கள் இந்தியா முழுவதும் இருக்கிறார்கள். ராமானுஜர், சங்கரர், மத்வர் இவர்களை பின்பற்றுகிறவர்களாக இருக்கிறார்கள். வேறு வேறு பாஷை பேசுகிறார்கள். ஆசாரங்களில் சிறிது வேற்றுமைகளும் உள்ளது. ருக்,யஜுர், ஸாமவேதிகளாகவும் இருக்கிறார்கள்.
ஸ்ரீ வத்ஸ மகரிஷிக்கு எது வேதமோ அதுவே தானே எல்லா ஸ்ரீ வத்ஸ கோத்திர காரர்களுக்கும் இருக்க வேண்டும்.
ஒரே மஹரிஷி வம்சத்தில் வந்தவர்கள் பிற் காலத்தில் பல்வேறு ஆசாரியர்களை பின்பற்றி அதன் காரணமாக வந்த சில கொள்கைகளாலும், ஆசார வேஷ பூஷாலங்காராதிகளாலும் மாறு பட்டு இருக்கிறார்கள்.
ஒருவர் நான்கு வேதங்களையும் அத்யயனம் செய்ய வேண்டும் என்ற விதி இருக்கிறது. நான்கு வேதங்களையும் ஒரே சமயத்தில் கற்க இயலாது. எனவே ஸ்ரீ வத்ஸ மகரிஷி குமாரர்களில் சிலரை யஜுர் வேதமும், சிலரை ருக் வேதம், சிலரை ஸாம வேதமும், சிலரை அதர்வண வேதமும் அத்யயயனம் செய்யும் படி உத்திரவு இட்டார். யார் எந்த வேதத்தை முதலில் அத்யயனம் செய்தார்களோ அந்த வேதம் அவர்களுக்கு ஸ்வ ஶாகையாக அமைந்தது.
சில சிஷ்யர்கள் முதலில் அத்யயனம் செய்து முடித்தார்கள். ஆதலால் சிஷ்ய பரம்பரையும் உண்டு. புத்ர பரம்பரையும் உண்டு.
எனவே யஜுர் வேதத்தை முதலில் அத்யயனம் பயின்றவர்களுக்கு , யஜுர் வேதம் முதல் ஶாகை. ஸ்வ ஶாகையை அத்யயனம் செய்த பிறகு தான் அவர்கள் மற்ற மூன்று வேதங்களையும் அத்யயனம் செய்ய வேண்டும்.
அந்தத ஸ்வ ஶாகை பரம்பரையில் வந்தவர்களுக்கு அந்தந்த வேதம் மாறுபடுகிறது.
தம் பூர்வ புருஷர் யார் என்பதை அறிவிப்பதற்கு கோத்ரம் என்று பெயர்.
தற்போது நடப்பது வைவஸ்வத மன்வன்திரம். இந்த மன்வந்திரத்திற்கு உரிய முதல் கோத்திர காரர்கள் ஜமதக்னி, பரத்வாஜர், விசிவாமித்ரர்,அத்ரி, கெளதமர், வசிஷ்டர், காசியபர், அகஸ்தியர் என்ற எண்மர் ஆவர்.---( பாரதம்-பருவம்-1-அத்தியாயம் 43.)
ஏதேஷாம் யான்யபத்யானி தானி கோத்ரானி மன்யதே என்றார். மனு. அதாவது இவர்கள் கோத்திர காரகள் ஆனார்கள் என்றார் மனு. பாணினி சொன்னார் அபத்யம் பெளத்ர ப்ரப்ருதி கோத்ரம். என. ஆதலால் இவர்களது பேரர் களும் சில சந்ததிகளுக்கு கோத்திர காரர்கள் ஆயினர்.
கோத்ரம் என்றால் மூல புருஷர் என்று ஒரு பொருள். பாரத்வாஜ கோத்ரம் என்றால் பாரத்வாஜரை மூல புருஷராக கொண்டது. இது பஹுவ்ரீஹி ( அன்மொழித்தொகை)
ஸமாஸத்தால் ஏற்படும் பொருள்.
கோத்ரம் என்பதற்கு தன் ஸந்ததியில் வந்த புத்ர பெளத்ராதி பரம்பரையில் வந்தவர் என்பது ஒரு பொருள். பரத் வாஜ கோத்ரம் என்றால் பரத்வாஜ ரிஷியின் ஸந்ததியை சேர்ந்தவர் என்பது தத்புருஷ ( ஆறாம் வேற்றுமை தொகை) ஸமாஸத்தால் பெறப்படும் பொருள்.
பாணினி மஹரிஷி ஸூத்ரத்தை அனுசரித்து ஏகார்ஷேய ப்ரவரம் ஸித்தமாகிறது.
மித்ரயுவ கோத்ரத்திற்கு வாத்ர்யஸ்வம் என்பது ஏகார்ஷேய ப்ரவரம். இவர் புத்ரர் தான் பேரர் அல்லர். ஆதலால் இந்த இடத்தில் பெளத்ர ப்ரப்ருதி அபத்யம் கோத்ரம் என்பது பொருந்தாது. மேலும் இந்த ஸூத்ர விதிப்படி மந்த்ர த்ரஷ்டாக்கள் (ம்ந்திரங்களை கண்டறிந்தவர்கள்) அல்லாத ஸாமான்ய ஜனங்களும் கோத்ர ப்ரவர்த்தர்கள் ஆதலும் கூடும்.
நதி என்பது மேற்கிலிருந்து கிழக்கே நோக்கி செல்லும் ஆற்றிற்கு பெயர். ஆனால் எத்திசை நோக்கி செல்லும் ஆற்றிற்கும் அப்பெயர் அமைந்தது போல பாணினி கூறிய கோத்ர லக்ஷணம் புத்ராதிகளுக்கும் உப லக்ஷணமாக கொள்ள வேண்டும். (மேலெழுந்த வாரியான எடுத்துக்காட்டு)
தந்தை, குமாரர் ஆகிய இருவரும் எவ்வாறு கோத்ர ப்ரவர்த்தகர்கள் ஆக கூடும் எனில் தந்தையிடமிருந்து தோன்றிய வெறொரு ஸந்ததிக்கு தந்தை கோத்ர ப்ரவர்த்தகர் ஆகவும், புத்ர ஸந்ததியினின்று தோன்றிய பிரிவினருக்கு புத்ர கோத்ர ப்ரவர்த்தகர்களாகவும் இருத்தல் கூடும்.
ப்ரவர ரிஷிகள் வம்ஶ பரம்பரையினராகவே இருத்தல் வேண்டுமே அன்றி புத்ரரோ வேறு ஒரு மனிதரோ ப்ரவர ரிஷிகள் வரிசையில் வரக்கூடாது என்பது பொருளன்று. அதனாலேயே கெளண்டின்ய கோத்ரத்திற்கும் மைத்ராவருண கோத்ரத்திற்கும் ஒரே த்ரயார்ஷேய ப்ரவரம் உள்ளது.
சிஷ்ய பரம்பரையினரில் இப்போது ப்ருகு, ஆங்கீரஸர் ஆகிய இருவரும் கோத்ர காரர்கள் ஆயினர்.
ப்ருஹ்ம தேவன் அஶ்வமேத யாகம் செய்கையில் தன் தேஜஸை ஹோமம் செய்து அக்னியை வளர்த்த போது அந்த தேஜஸிலிருந்து அவருக்கு புத்திரராக ப்ருகு தோன்றினார். அங்காரதிலிருந்து ( நெருப்பு) அங்கீரஸும், அர்ச்சிஸ்ஸிலிருந்து (ஒளி)
அத்திரியும், மரீசியிலிருந்து ( கிரணம்) மரீசியும், கபிச(சாம்பல்) நிறமுள்ள கேசத்திலிருந்து புலஸ்தியரும், நீண்ட கேசத்திலிருந்து புலஹரும், வஸு (ஹவிஸ்)
ம்த்தியிலுருந்து வஸிஷ்டரும் தோன்றினர்.
இவ்வாறு வெவ்வேறு இடத்திலிருந்து இவர்கள் தோன்றினமையால் ஒரே இடத்தில் தோன்றிய ஸமான கோத்ரம் இவர்களுக்கு இல்லை. அக்னியே காரணம் என்று விவாதித்தால் உலகில் தோன்றிய அனைவருக்கும் ப்ரக்ருதியே காரணம் என்ற விடை கிடைக்கும். கோத்ர ப்ரவர்த்தகர்களான இவர்களை வெவ்வேறு கோத்ரமுடையவர்களாக வே கருத வேண்டும்.
ப்ரவரம் என்ற சொல்லுக்கு மிகுதியாக ப்ரார்த்தித்தல் என்று பொருள்.எவரை? ஸந்தர்பத்தை கொண்டு அக்னியை என்று அத்யாஹாரம் ( வருவித்தல்) செய்து பொருள் கொள்ள வேண்டும். ப்ரவரங்களில் ரிஷிகள் பெயர் தான் உள்ளது.அக்னியை குறிக்கும் சொல் இல்லையே . ரிஷிகளின் ஸம்பந்தம் அக்னிக்கு இருப்பதால் அக்னியை ப்ரார்த்தனை செய்ய படுகிறது .
ஸ்மார்த்த கர்மாகளில் அபிவாதனம் செய்யும் போதும், கன்யா தானம் செய்யும் போதும் கோத்ரம், ப்ரவரம் ஆகிய இரண்டும் சொல்ல வேண்டும்.மற்ற இடங்களில் கோத்ரம் மட்டும் சொன்னால் போதும்.
ஶ்ரெளத கர்மாக்களில் அதிக மாக ப்ரவரங்களே கூறப்படும். கோத்திரத்திற்கு தக்கபடி மந்திரங்களையும் ப்ரவரங்களையும் கூற வேண்டும். யாகம் முதலிய வற்றில் அத்வர்யு இன்ன தேவதைக்கு நான் ஹவிஸ்ஸை அளிக்கிறேன் என்று சொல்ல , ஹோதா, ஹோத்ரு ப்ரவரங்களை சொல்லி அக்னியை அழைக்கிறார்.ஹோதாவின் செயல் ஹவிஸ்ஸை தேவதைகளுக்கு கொண்டு சேர்ப்பது. ஹோதா யக்ஞயத்தை
செய்த முன்னோர்களின் பெயரை சொல்லி அக்னியை மந்திரங்களால் வரிக்கிறார்.
யஜமானனின் ப்ரவரத்திற்க்கும் அக்னிக்கும் என்ன சம்பந்தம்.யஜமாதோ வா அக்நேர்
யோ நி: என்று வேதம் கூறுகிறது. =யஜமானன் ஆவனீயாக்னிக்கு தந்தை போன்றவன். தந்தையின் கோத்ர ப்ரவரங்கள் எப்படி புத்ரனுக்கு பொருந்துகிறதோ அது போல் அக்னிக்கும் யஜமானனுக்கும் பொருந்துகிறது.
அத்வர்யுவினால் தூண்டபெற்ற ஹோதாவும், ருத்விக்குகளும் இந்த அக்னிக்கும் ஹோதாவிற்கும் உள்ள சம்பந்தத்தை கூறி ஹவிஸ்ஸை ஸ்வீகரித்து கொள்ளும்படி கோறும் போது தேவதைகள் தாமே அங்கு வந்து சேருகின்றனர். இந்த யஜமானன் இத்தகைய மகரிஷிகளுடைய ஸம்பந்தமுடையவன் நமக்கு ஹவிஸ்ஸை அ ளி க்கிறான்அக்னியின் மூலமாக என்று கருதி அது கிரஹிக்க தக்கது என்று கொள்வார்கள் என்று அப்பிரார்த்தனையின் கருத்து என்று நாம் உணர வேண்டும்.
ப்ரவரம் இரு வகையாக உள்ளது. ஹோத்ரு ப்ரவரம்; அத்வர்யு ப்ரவரம்.
முதலில் மிக பழமையானவரையும், அடுத்து பழமையானவரும், அடுத்தது இப்போதுள்ள ப்ரவரங்களை கூறி அழைப்பது. ஹோத்ரு ப்ரவரம்.
அத்வர்யு ப்ரவரம்:- யஜமானனுடைய நெருங்கிய ஸம்ப்ந்தமுடைய ரிஷி, அடுத்து முந்திய இருவரையும் அழைப்பது.
ஹோத்ரு ப்ரவரம்;- ஆங்கீரஸ, பார்ஹஸ்பத்ய பாரத்வாஜ என்பது.
அத்வர்யு ப்ரவரம்:- பரத்வாஜவத், ப்ருஹஸ்பதிவத், அங்க்கீரோவத் என்பது.
ஏக்ஷ வா அக்னிர் வைஸ்வானர: /யத் ப்ராஹ்மண; என்ற ஸுருதி வாக்கியப்படி அந்தணர்கள் வைஸுவான ராக்னி ரூபமானவர்கள். உண்பதற்கு பயன்படாத கட்டை முதலிய எரிபொருட்களை அக்னி எரித்து நமக்கு நல்லுணர்வை ஆக்கி தருவது போல் , நம் பூர்வர்களான கோத்ர ப்ரவர ரிஷிகளும் தம் க்ரந்தங்க்களின் மூலமாகவும் , அனுஷ்டானங்களின் மூலமாகவும் தீயவற்றை விலக்கி நல்ல வற்றை காட்டிஉளனர்
சாஸ்திரங்களில் வத்ச கோத்ரம் என்று ஒன்று சொல்லபட்டிருக்கிறது. உல்கிலிது ஸ்ரீ வஹ்ஸ கோத்ரம் என்று வழக்கில் உள்ளது.கோத்ர ப்ரவர்த்தக சாஸ்திர கர்த்தாக்கள் யாவரும் முதலில் வத்ச கோத்ரம் என்று கூறிஉள்ளனர். ப்ருகு கணத்தைன் சேர்ந்தது. வத்ச கோத்ரம். பகவத் கீதையில் ப்ருகு நாராயண ஸ்வரூபம் என்று கூறியுள்ளதால் அவருக்கு ஸ்ரீ என்ற அடைமொழி பொருந்தும்.
மஹர்ஷாணாம் ப்ருஹு அஹம்--கீதை-10-25.
அபி நவ மாதவீயர் என்பவர் தம் கோத்ர ப்ரவர நிர்பந்தம் என்ற நூலில் வத்சா ஸ்ரீ வத்ச ஸம்ஞகா என கூறிஉள்ளார். ஸ்ரீ வத்ஸம் என்பது ஸ்ரீ நாராயணின் மறு அடையாளம் ஒன்றுள்ளது. ருக் ,யஜுஸ், சாம வேதங்களுக்கு ஸ்ரீ என்று ஒரு பெயர் உண்டு.இந்த வேதங்ககளை பொருளுடன் அத்யயனம் செய்தவர்கட்கு ஸ்ரீ என்பதே தகுதி வாய்ந்த பட்ட பெயர் ஆகும்.அதனால் இவருக்கு ஸ்ரீ வத்ஸ என்ற பெயர் கொடுக்க பட்டிருக்கலாம். அவருக்கு மட்டும் இந்த அடை மொழி என்றால் மற்றவர்கட்கு ?.
ஒரே தகுதி உடையவர் பலர் ஓரிடத்தில் சேர்ந்து இருக்கும் போது அவர்களுள் முதல்வரான ஒருவருக்கு கூறப்படும் ப்ருது , மிகுந்துள்ள அனைவருக்கும் அளிக்க பட்டதாகவே கருத வேண்டும். முதல் கோத்ர கர்த்தாவான வத்சருக்கு அளிக்க பட்ட ஸ்ரீ எல்லோருக்கும் அளிக்க பட்ட தாக எனும் கருத்தோடு ஸ்ரீ வத்ஸ என்று வழங்கினர் என்று அறிக.
மத்ஸ்ய புராணம் ஸகாரேண து வக்தவ்யம் கோத்ரம் ஸர்வத்ர தீ மதா ஸகார: குதபோ க்ஞேய : தஸ்மாத் யத்னேன தம் வதேத் என் கிறது. வேதங்களிலும் ஸாங்கியாயன ஸ கோத்ரம் என்றும் லாகவ்ய ஸ கோத்ர என்றும் வருகிறது.
கோத்திரத்திற்கு ஸ கோத்ரம் என்று சொல்ல வேண்டும் என்று சிலரும் ஸ காரம் சேர்க்க வேண்டாம் என சிலரும் கூறுகின்றனர். சிஷ்டாசாரத்தில் பரத்வாஜ கோத்ரம் என்ற வழக்கமே உள்ளது. பரத்வாஜ கோத்ரம் என்றாலே பரத்வாஜருக்கு சமானமான
கோத்ரத்தில் பிறந்தவன் என்றே பொருள் படும்.
பித்ருத: ஸப்தமாத் ஊர்த்வம் என்பது சாஸ்திரம். குறைந்தது தந்தையினின்று ஏழு தலைமுறையிலாவது ஸமான கோத்ரமும் ஸ மான ப்ரவரமும் இல்லையா என்று பார்த்துதான் விவாஹம் செய்ய பட வேண்டும் என்பது சாஸ்த்ர ஸித்தாந்தம்.
கோத்ர எண் விஷயமாக ப்ரவர அத்யாயத்தின் உரைகாரர்கள் மூன்று கோடி கோத்ர திற்கு மேல் உள்ளன என்று வரையறுத்துள்ளனர். இதற்கு ப்ரமாணம் கோத்ராணாம் நு
ஸஹஸ்ராணி ப்ரயுதான்ய புதானி ச என்று போதாயணர் குறிப்பிட்டிருபதே ஆகும்.
உரைகாரர்கள் இங்கு , ஶ்லோகோக்த கோத்ர ஸங்க்யானாம் கோடி ஸங்க்யா த்ரயம் ஶ்ருதம் என்று தெளிவாக மூன்று கோடி என்றே குறிப்பிட்டுள்ளார்.
ப்ருகு, அங்கீரஸ் கணங்களில் மட்டும் சிஷ்ய பரம்பரை கலந்துள்ளது. இவ்விரண்டில் மட்டும் ரிஷிகள் கலந்து இருந்தாலோ பெயர் ஒன்றாக இருந்தாலும் விவாஹம் செய்து கொள்ளலாம். இருவர் பெயரும் ப்ரவரத்தில் வந்த கோத்ரகாரர்கள் தம்முள் விவாஹம் செய்ய க்கூடாது. இவர்கள் இந்த மன்வந்திரத்தின் ஸப்த ரிஷி பரம்பரை யினர் இல்லை.
வாஸிஷ்ட மைத்ராவருண கெளண்டின்ய என்ற கோத்ரத்திற்கு வாஸிஷ்ட ஸாகித்ய பராஶர்ய என்ற த்ரயார்ஷேய ப்ரவரம் இவ்விரண்டிலும் வஸிஷ்டர் கலந்துள்ளார். இது புத்ர பரம்பரையுள்ள கோத்ரம் . ஆதலால் இந்த இரு கோத்ரங்க்களுக்குள் விவாஹம் கூடாது.
இரண்டு ரிஷிகள் ஸமானமாயுள்ள பஞ்சார்ஷேய ப்ரவரம் காணப்படவில்லை.
பஞ்சார்ஷேய ப்ரவரத்தில் மூன்று ரிஷிகள் ஸமானமாயுள்ள இடத்திற்கு உதாரணம்.
ஸ்ரீ வத்ஸ கோத்ரத்திற்கு பார்கவ,ஸ்யாவன,ஆப்லவான,ஒளர்வ, ஜாமதக்ன்ய.
ஆர்ஷ்டிஷேண கோத்ரதிற்கு பார்கவ ஸ்யாவன ஆப்லவான ஆர்ஷ்டிஷேண அனுப.
முதல் மூன்று ரிஷிகள் ஸமமாக வருவதால் இக்கோத்ரகாரர்கள் விவாஹம் கூடாது.
அயாஸ்ய கோத்ரதிற்கு ஆங்கீரஸ ஆயாஸ்ய கெளதம.
உசத்ய கோத்ரதிற்கு ------ஆங்கீரஸ ஒளசத்ய கெளதம.
முதலிலும், இருதியிலும் ஆங்கீரஸ, கெளதம ஒன்றி இருப்பதால் விவாஹம் கூடாது.
கக்ஷீவந்த கோத்ரம்;- ஆங்கீரஸ, ஒளஶத்ய காக்ஷீவந்த கெளதம காகந்த பஞ்சார்ஷேயம்..
அயாஸ்ய கோத்ரதிற்கு ஆங்கீரஸ, ஆயாஸ்ய கெளதம -த்ரயாரிஷேயம்
ஆங்கீரசர், கெளதமர் ஸமமாக உள்ளனர். விவாஹம் கூடாது.
கக்ஷீவந்த கோத்ரம்;- ஆங்கீரஸ, ஒளஶத்ய காக்ஷீவந்த கெளதம காகந்த பஞ்சார்ஷேயம்..
தைர்க்கதம கோத்ரம்- ஆங்கீரஸ, ஒளசத்ய காக்ஷீவந்த கெளதம தைர்கதம
விவாஹம் கூடாது.
ஒரு கோத்ரதிற்கு அனேக ப்ரவரங்கள் உள்ள ஒத்த கோத்ரமும், அநேக கோத்ரங்களுக்கு ஒரே ப்ரவரமுள்ள ஒத்த ப்ரவரமும் விவாஹம் கூடாது.
த்ரயார்ஷேய கோத்ரங்களில் ஒரு ரிஷி ஒத்திருந்தால் விவாஹம் செய்யலாம்.
ஹரித கோத்ரம் இரண்டு விதமான ப்ரவரம் உடையதாக இருக்கிறது.
குத்ஸ கோத்ரம்-மாந்தாத்ரு, அம்பரீஷ கெளத்ஸ.
ஹரித கோத்ரம்- மாந்தாத்ரு அம்பரீஷ யெளவனாஸ்வ விவாஹம் கூடாது.
ஹரித கோத்ரம்- ஆங்கீரஸ அம்பரீஷ யெளவனாஸ்வ
கண்வ கோத்ரம்-ஆங்கீரஸ அஜாமிட காண்வ விவாஹம் செய்யலாம்.
ப்ருஹ்ம கல்பத்தில் ( கல்பம் என்பது ப்ருஹ்மாவிற்கு ஒரு பகல்.) 14 மநுக்கள் உள்ளனர். ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் ஒவ்வோர் இந்திரனும், தேவதைகளும், ஸப்த ரிஷிகளும்,மாறு படுவர். இந்த ஶ்வேத வராஹ கல்பத்தில் ( ப்ருஹ்மாவின் 51ம் வருட முதல் நாள்) ஸ்வாயம்புவர், ஸ்வாரோசிஷர், உத்தமர், தாமசர், ரைவதர், சாக்ஷுஷர் ஆகிய ஆறு மனுக்கள் முன்பு இருந்தனர். இப்போது ஏழாமவராகிய வைவஸ்வத மனுவின் காலம் நடை பெறுகிறது. இவருடைய ஆட்சியில் உள்ள ஸப்த ரிஷிகளும், அகஸ்தியர், ப்ருகு, அங்கிரஸ் ஆகியவர்களும் கோத்ர காரர்கள் ஆயினர்.