கண்கள் பேசினால் காதல்
கண்ணீர் பேசினால் நட்பு
பணம் பேசினால் சொந்தம்
எல்லோரும் பேசினால் உலகம்
நீமட்டும் பேசினால் ’லூஸு’.
ஒரு திருடன்: அந்த வக்கீல நம்ம கேச நடத்தவிடவேண்டாம்னு ஏன் சொல்ற?
அவன் சகா: வீட்டு வாசல்ல வாய்மையே வெல்லும்னு போர்டு போட்டிருக்காரே! பிறகு இவர் எதுக்கு?
அந்தாளு குடிச்சிட்டு நிதானம் இல்லாம இருக்கார்னு எப்படி சொல்றே?
என்னப் பார்த்து நீங்க ரெண்டுபேரும் டுவின்ஸான்னு கேக்கறார்.
மேனேஜர்: எங்க பேங்க்ல இண்டரஸ்ட் இல்லாம லோன் கொடுக்கிறோம்.
கஸ்டமர், எடக்காக: கொடுக்கறதக் கொஞ்சம் சந்தோஷமா கொடுக்கலாம்ல, ஏன் இண்டரஸ்ட் இல்லாம கொடுக்கிறீங்க?
ஒருவர்: ஜாக்கிரதையா இல்லைனா வேற எவனாவது நம்ம செக்ல கையெழுத்து போட்டு பணத்தை எடுத்திருவான்.
மற்றவர்: வேற யாரும் கையெழுத்து போட்டுடக்கூடாதுன்னுதான் நானே எல்ல செக்லயும் கையெழுத்து போட்டு வெச்சுட்டேன், பணம் எடுக்க வசதியா!
ஏங்க அடிக்கடி சமயல்கட்டு பக்கம் போறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு செக் பண்ணிக்கச்சொன்னார்.
ஓட்டப்பந்தயத்துல கலந்துக்கப் போறேன், ஆசீவாதம் பண்ணு பாட்டி!
பாத்து மெதுவா ஓடு, வேகமா ஒடிக் கையைக்கால ஒடிச்சுக்கப்போறே!
அப்பா: டேய் ஏண்டா இன்டர்வியூக்கு போகல?
மகன்: நீங்கதானப்பா நாலுபேர் கேள்வி கேட்கிறமாதிரி நடந்துக்கக் கூடாதுன்னு சொன்னீங்க?
பையன்: அப்பா நாம நாளயிலேர்ந்து பணக்காரராயிடலாம்!
எப்படிடா?
எங்க கணக்கு வாத்தியார் பைசாவை ரூபாயா மாத்தறது எப்படின்னு நாளைக்கு சொல்லித்தரப்போறார்.
டைம் இஸ் கோல்டுன்னா ஏன் நீ ஒத்துக்கமாட்டேங்கற?
அதை அடமானம் வெக்கமுடியாதே!
*****