கூர்ம ஜெயந்தி
ஜீலை 2 2024 அன்று கூர்ம ஜெயந்தி: விஷ்ணுவின் ஆசீர்வாதங்களை பெறுவதற்கு உகந்த நாள்
தமிழ் மாதம் ஆனி 18 அன்று கூர்ம ஜெயந்தி விஷ்ணுவின் கூர்ம அவதாரத்தின் கொண்டாட்டம் அனுசரிக்கப்படுகிறது , இது மங்களகரமான தொடக்கங்கள் மற்றும் ஆன்மீக வளர்ச்சியைக் குறிக்கிறது
அனைத்து இந்து பண்டிகைகளிலும், கூர்ம ஜெயந்தி என்பது மகாவிஷ்ணுவின் அவதாரமான ஆமை அவதாரமான கூர்மாவைக் கொண்டாடும் மிகவும் புனிதமான மற்றும் மங்களகரமான பண்டிகைகளில் ஒன்றாகும்.
2024 ஆம் ஆண்டில், கூர்ம ஜெயந்தி ஜூலை 2 செவ்வாய் கிழமை அன்று வருகிறது,
கூர்ம ஜெயந்தி என்பது இந்து மதத்தில் ஆழமான மத மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்ட ஒரு பண்டிகையாகும்.
இந்து புராணங்களின்படி, இந்த நாளில், விஷ்ணு தனது 'கூர்மா' அவதாரத்தில் 'க்ஷீர சாகர மந்தனின்' போது பிரம்மாண்டமான மந்தாரஞ்சல் பர்வத்தை தனது முதுகில் தூக்கியதாக நம்பப்படுகிறது. அன்றிலிருந்து கூர்ம ஜெயந்தி இறைவனின் (ஆமை) பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது
கூர்ம ஜெயந்தி :
மகா விஷ்ணுவின் கூர்ம அவதாரம் உணர்த்தும் உண்மைகள் - புராண கதை
ஆனி மாத கிருஷ்ண பட்சத்தில், அதாவது தேய்பிறை துவாதசி திதியில் திருமால் கூர்ம அவதாரம் எடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. கூர்ம அவதாரம் யாரையும் அழிக்காமல் பல அரிய பொருட்களை தேவர்களுக்கும் மக்களுக்கும் வழங்கத் துணை நின்ற அரிய அவதாரம்
உருவு கண்டு இகழாமல், அதன் பெருமை கண்டு போற்ற வேண்டும் என்பதே கூர்ம அவதாரத்தின் நோக்கம். பணிவுகொண்டு மலை சுமந்த கூர்ம மூர்த்தி பாற்கடலில் இருந்து அனைத்தையும் மீட்டு கொடுத்தார். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணு அரக்கர்களை அழிக்க பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளார். ஆனால் அவர் எடுத்த கூர்ம அவதாரம் யாரையும் அழிப்பதற்காக அல்ல. மேருமலையை மத்தாக கடையும் போது அதை தாங்கி நிற்பதற்காக எடுத்த அவதாரம் ஆகும். ஆனி மாத கிருஷ்ண பட்சத்தில், அதாவது தேய்பிறை துவாதசி திதியில் திருமால் கூர்ம அவதாரம் எடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
அன்றைய தினம் கூர்ம ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
பகவான் மகாவிஷ்ணு பத்து அவதாரங்களை எடுத்துள்ளார். அதில் முதலாவதாக அவர் எடுத்த அவதாரம். மச்ச அவதாரம் . நீரில் வாழும் மீனாக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, இரண்டாவதாக நீரிலும் நிலத்திலும் வாழும் ஆமையாக அதாவது கூர்மமாக அவதாரம் எடுத்தார்.
பாற்கடலில் அமிர்தம் பெறுவதற்காக தேவ அசுரர்களுக்கு உதவி செய்தார். அதே மகாவிஷ்ணுதான் அமிர்தம் கிடைத்த உடன் அதை பகிர்ந்து கொடுப்பதற்காக மோகினியாக அவதரித்தார். ஆமை அற்புதமான உயிரினம் என்பதை அவர் ஆமையாக அவதரித்தார் என்கின்றன புராணங்கள்.
அவதாரத்தின் மகிமை
தசாவதாரத்தில் இரண்டாவது அவதாரம் கூர்ம அவதாரம். மகாவிஷ்ணுவின் பிற அவதாரங்கள் யாவும் தீயவர்களை அழிப்பதற்காக எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். ஆனால் கூர்ம அவதாரம் யாரையும் அழிக்காமல், பாற்கடலில் இருந்த பல அரிய பொருட்களை தேவர்களுக்கும் மக்களுக்கும் வழங்குவதற்காக எடுக்கப்பட்ட அவதாரமாகும்.
தேவேந்திரனின் கர்வம்
தேவலோகத்துப் பெண் ஒருத்தி, மகாலட்சுமி கொடுத்த மலர் மாலையைத் தனது வீணையில் சுற்றிக் கொண்டு பிரம்ம லோகம் வழியாக சென்றாள். அப்போது வழியில் துர்வாச முனிவரைச் சந்தித்தாள். அவரை வணங்கியவள், தன்னிடமுள்ள மாலையை அவரிடம் கொடுத்தாள். அதைப் பெற்றுக்கொண்ட முனிவர், அந்த மாலையுடன் தேவலோகம் நோக்கிச் சென்றார். எதிரே தேவேந்திரன் யானை மீது அமர்ந்து வந்து கொண்டிருந்தான். அவனிடம் அந்த மலர் மாலையைக் கொடுத்தார் முனிவர். தேவேந்திரனோ அந்த மாலையை அலட்சியமாக வாங்கி, யானையின் தலையில் வைத்தான். யானையோ தன் துதிக்கையால் அந்த மாலையை எடுத்துக் கீழே போட்டு காலால் மிதித்தது.
தேவர்கள் கோட்டையில்
துர்வாசருக்கு கடும் ஆத்திரம் வரவே, லட்சுமி தேவியின் பிரசாதத்தை அவமதித்ததால், மூன்று உலகங்களிலும் லட்சுமி கடாட்சம் அழியட்டும் என சாபமிட்டார். இந்திரன் பதறிப் போய் முனிவரின் காலில் விழுந்தான்; ஆனால், துர்வாசர் கண்டுகொள்ளவில்லை. லட்சுமி கடாட்சம் இல்லாததால், உலகமே வறுமையில் ஆழ்ந்தது. இதனை அறிந்த அசுரர்கள் தேவேந்திரனின் கோட்டைக்குள் புகுந்து போரிட்டனர்.
அமிர்தம் பருக ஆசை
போரில் அசுரர்கள் வீழ்ந்தாலும், அசுர குருவான சுக்ராச்சாரியாரின் சஞ்சீவி மந்திரத்தால், அவர்கள் மீண்டும் மீண்டும் உயிர் பெற்று எழுந்தார்கள். ஆனால் தேவர்களில் இறந்தவர்களை உயிர்ப்பிக்க வழியில்லை. இதனால் தேவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இதனைக் கண்ட தேவேந்திரன், பிரம்மன் தயவை நாடினான். பிரம்மன், மகா விஷ்ணுவிடம் தேவேந்திரனை அழைத்துச் சென்றார். அதற்கு விஷ்ணுவோ அமிர்தம் பருகினால் மட்டுமே சாகா வரம் பெற முடியும் என்றார். அதற்கு பாற்கடலை கடைய வேண்டும் என்றும் ஆலோசனை சொன்னார்.
மலையை தாங்கி கூர்மம்
அசுரர்களை உதவிக்கு அழைத்த தேவர்கள் அவர்களுக்கும் அமிர்தம் தருவதாக கூறினர். வாசுகி பாம்பை கயிறாக்கி மேரு மலையை மத்தாக்கி கடைந்தனர். அசுரர்கள் தலை பகுதியிலும் தேவர்கள் வால் பகுதியிலும் பிடித்துக்கொண்டனர் மலை அசையவில்லை. உடனே மகாவிஷ்ணு ஆமையாக உருமாறி கடலுக்கு அடியில் சென்று மலையை தன் முதுகில் சுமந்தார்.
மகாலட்சுமி அவதாரம்
பாற்கடலில் இருந்து வரியாக பல பொக்கிஷங்கள் வந்தன. அதில் இருந்து பல நல்லவைகளை தேவர்கள் கைப்பற்றிக்கொண்டனர். மகாலட்சுமி மகாவிஷ்ணுவை மணந்தார். காமதேனு, ஐராவதம், கற்பகம் ஆகிய பல பொருட்கள் தேவர்களிடம் சென்றன. வருணி, சுராதேவி, அழகு மங்கையர்களை அசுரர்கள் கைப்பற்றினர். கடைசியாக அமிர்த கலசம் தாங்கி தன்வந்திரி பகவான் தோன்றினார். நான்கு கைகளுடன் அவதரித்த இவர் கைகளில் சீந்தில்கொடி, அட்டைப்பூச்சி, அமிர்த கலசம், கதாயுதம் தரித்திருந்தார். இவர் மருத்துவர்களின் தலைவர் ஆனார்.
மோகினி அவதாரம்
Lதன்வந்திரி பகவானின் கையிலிருந்த அமிர்தத்தை பெறுவதில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பலத்த போட்டி ஏற்பட்டது. அமிர்தத்தை அசுரர்கள் பருகினால் நீண்ட ஆயுள் பெற்று தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்துவார்கள் என்பதை உணர்ந்து, அதை அவர்களுக்கு கிடைக்க விடாமல் செய்ய மோகினி அவதாரம் எடுத்தார் திருமால்.
சனியின் அம்சம் கூர்ம அவதாரம்
பகவானின் தசாவதாரத்தில் கூட, நவக்கிரக அம்சங்கள் உண்டு! ராமன் சூரியனின் அம்சமாகவும், க்ருஷ்ணன் சந்திரனின் அம்சமாகவும், வீரம் நிறைந்த நரசிம்மர் அங்காரகனின் அம்சமாகவும், கல்கி புதனின் அம்சமாகவும் வாமனர் குருவின் அம்சமாகவும், பரசுராமர் சுக்கிரனின் அம்சமாகவும், கூர்மம் சனியின் அம்சமாகவும் வராகம் ராகுவின் அம்சமாகவும், மச்சம் கேதுவின் அம்சமாகவும் வேத சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் கூறப்படுகிறது. இந்த வரிசையில் சனிக்குரியவராகக் கருதப்படுபவர் இன்று ஜெயந்தி நாள் காணும் கூர்மாவதார மூர்த்தி. மற்ற அவதாரங்கள் எல்லாம் தீயவர்களை அழிக்க எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். ஆனால் கூர்ம அவதாரம் யாரையும் அழிக்காமல் பல அரிய பொருட்களை தேவர்களுக்கும் மக்களுக்கும் வழங்கத் துணை நின்ற அவதாரமாகும்.
கூர்ம அவதார ஆலயங்கள்
கூர்ம அவதார நிகழ்வுகள் அனைத்தும் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் ஆலயத்தில் கருங்கல் சிற்பமாகவும், பாங்காங்கின் விமான நிலையத்தில் வண்ணமிகு சுதைச் சிற்பமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் ஸ்ரீகாக்குளம் மாவட்டம், ஸ்ரீகூர்மம் என்ற ஊரில், கூர்ம அவதாரத்துக்கான கோவில் இருக்கிறது. கருவறையில், ஆமை வடிவில் அருள்பாலிக்கிறார் பெருமாள். சுவேத மன்னனால் கட்டப்பட்ட இவ்வாலயம் அதன் பின் வந்தவர்களால் திருப்பணி செய்யப்பட்டது. சுவேத மன்னனுக்கு அருளிய திருமால், இத்தலத்தில் ஸ்ரீகூர்ம நாயகி தாயாருடன் ஸ்ரீகூர்மநாதராக அருள்புரிகிறார். இறைவனின் திருமுகத்தில் உள்ள திருநாமம் வெள்ளித் தகட்டிலும், விழிகள் தங்கத்தாலும், வால்பகுதி சாளக்ராமத்தாலும் அமையப்பெற்றிருக்கிறது. அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட இந்த ஆலயத்தில் ஆமைகளும் வளர்க்கப்படுகிறது. கூர்மாவதாரத்திற்கு என உலகில் உள்ள ஒரே கோவில் இதுதான். சுவாமி தேசிகன் இயற்றிய தசாவதார துதியில் இந்த கூர்மமூர்த்தி, சனி தோஷம் தீர அருள்பவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கூர்ம ஜெயந்தி என்பது இந்து மதத்தில் ஆழமான மத மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்ட ஒரு பண்டிகையாகும். இது விஷ்ணுவின் தெய்வீக அவதாரத்தைக் கொண்டாடுகிறது,