• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
Dear Mr. Raja, (refer # 416)

Toads themselves are considered poisonous and if they are put in a poisoned tank, they are likely to become much more poisonous.

Wild cats are wild by themselves but when placed on a red hot iron, you can imagine how much wilder they will become.

These are parts of famous poems. If you want I can start giving the names of the sources also in future.

You have not yet cleared my doubt about being the alter ego of another famous person known to all! :rolleyes:

I can not expect you to accept it even if it were true. I also think there are more alter egos in the Forum who retain part of their names or initials of their threads etc in their new avatars!

Reminds me on the olden days when Kings HAD to use disguise for various purposes!

with warm regards,
V.R. :pray2:
 
Last edited:
Madam R.R., (ref: post No.412-Life is like that)
...............Once upon a time, when I was a student of 6th class, I replied to my elder brother's question that I would get 86% in Maths paper but on checking the answers, it was found that I would get only 14%.........../QUOTE]

ஏன் மூன்று?

பக்கத்து வீட்டுப் பையன்

நன்றாகப் படிக்கிறான்

என்பதைச் சொல்லியே

வாட்டுவார் ஒருவர்

தன் மகனை;

ஒரு முறை

கணக்குப் பரீட்சையில்

மகன் வாங்கினது

மூன்று!

ஏன் மூன்றுதான்

என்று கேட்க,

பதில் வந்தது,

மொத்தம் நூறில்

மீதி தொண்ணுத்தியேழை

ஆசான் போட்டாரே

பக்கத்து வீட்டுப்

பையனுக்கு!

:peace:
 
Adding 97 and 3 to get 100 is easy.

But subtracting 14 from 100 to get 86 is more difficult!

Yet someone who 'claims' to be weak in Maths has done it! :clap2:
 
Dear Sis,

Post # 417 and # 418 .........

I think, the names of the persons need not be revealed, especially

when you write about their negative qualities!!

Raji Ram :ranger:
 
Madam Renu,(Post No.421 life is like that)
Your intelligent reply reveals that your basic interest is Science i.e. could have been science graduate/post graduate or read books on science out of academic interest. I am happy to receive such a reply because, I am a B.Sc.Physics graduate and the word mutation is prevalent in Nuclear/Atomic Physics. Good going. continue.
 
Madam Renu,(Post No.421 life is like that)
Your intelligent reply reveals that your basic interest is Science i.e. could have been science graduate/post graduate or read books on science out of academic interest. I am happy to receive such a reply because, I am a B.Sc.Physics graduate and the word mutation is prevalent in Nuclear/Atomic Physics. Good going. continue.

Dear GopainduJi,

I am a medical doctor by proffesion but I have varied interest and not science alone.
I have interest in arts too esp Sanskrit and Music(Formally trained in Western Music).

This is my opinion of Science and Arts:

Science is like a canvas where people can paint pictures on technical grounds and I view Art as beautifying the shades of the technicalities of science.
 
Last edited:
[FONT=comic sans ms,sans-serif]Quotes by Robert Browning.

The man's fantastic will is the man's law.

Truth never hurts the teller.

Where the haters meet,
In the crowded city's horrible street.
[/FONT]
 
ஸ்டண்ட் மாஸ்டர்.

திருமணமான புதிதில் வரவேண்டியிருந்தது
ஒருமுறை கோவைக்கு reservation இல்லாமல்!

எங்கள் ரயில் வந்ததும் இவர் unreserved கோச்
ஜன்னலைப் பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்தார்.

கண்ணைக் கூடச் சிமிட்டாமல் கவலையோடு
கணவனைப் பார்த்திருந்தாலும் காணவில்லை!

ஒரு நொடிப் பொழுதில் எங்குமே காணோம்!
ஒரு வேளை கால்வழுக்கி விழுந்துவிட்டாரோ?

கண்களில் ஜலம் கொட்டத் தொடங்கி விட்டது.
எண்ணங்கள் தறிகெட்டு ஓடத் தொடங்கி விட்டன .

ஜன்னல் வழியாக அவர் கைகளை ஆட்டுவது
கண்ணில் படாவிட்டால் மயங்கியிருப்பேன்!

ஓடிய
வேகத்திலயே ஜன்னலைப் பற்றிக்கொண்டு
உள்ளே குதித்திருக்கின்றார் ஸ்டண்ட் மாஸ்டர்!

திரைப் படத்தில் பார்த்திருந்தேன் அது போன்ற
உறைய வைக்கும் திகில் காட்சிகளை நான்!

வாழ்க்கையில் பார்த்தது அதுவே முதல் முறை!
ழக்கம் ஆகிவிட்டது பிறகு இவர் ஸ்டண்ட்கள்.

எல்லா ஸ்டேஷன்களிலும் இறங்கியாக வேண்டும்!
ஓடும் ரயிலில் ஓடி வந்து மேலே ஏற வேண்டும்!

எனக்கு வரும் டென்ஷனைக் கண்டால் முகம் மலரும்;
இனிப்பு பலகாரங்கள் நிறைய சாப்பிட்டது போல!

டிக்கட்டை மட்டும் நானே வைத்துக்கொள்ளுவேன்;
டிக்கெட் செக் செய்ய வந்தால் காட்டவேண்டுமே!

"டிக்கெட் அவரிடம்; அவர் எதோ கம்பார்ட்மென்டில்"
டிக்கெட் கலெக்டர் ஒப்புக்கொள்ளுவாரா இதை!

TOM AND JERRY CARTOONS ஏன் பிடிக்கும் தெரிந்ததா!
TOM போலவே TEASE செய்து கொண்டே இருப்பார்!

JERRY போல நான் டபாய்த்துவிடுவேன் எளிதாக!
வாழ்க்கையைத் தானே அதிலும் PROJECT செய்கிறார்கள்!
 
லிட்டில் மாஸ்டர்!

தந்தை எட்டடி பாய்ந்தால், அவன்
தனயன் பதினாறு அடி பாய்வான்!

புது மொழியாக இருக்கிறதா? தாய்க்கு
இது பொருந்தினால் தந்தைக்கும் O. K!

ஜன்னல் வழியாக ரயில் பெட்டிக்குள்
ஜம்ப் செய்தவர் மகன் செய்வது என்ன?

தவறாது அடிவயிற்றில் ஐஸ்கட்டிகளைத்
தோற்றுவிக்கும் Sky diving சாதனைகள்!

"இன்று நாற்பதாயிரம் அடியிலிருந்து!"
"இன்று முப்பதாயிரம் அடியிலிருந்து!"

என்று சச்சின் டெண்டுல்கர் ஸ்கோர் போல,
எங்கள் B.P, heart beats ஐ ஏற்றிவிடுவான்!

"
ரிஸ்க் வேண்டாம் கண்ணா! வீண் ரிஸ்க்" என்றால்,
"ரிஸ்க் எல்லாம் எனக்கு ரெஸ்க் போல" என்பான்!

அள்ளி வீசுவான்
நாம் கவலைப் படாமல் இருக்க.
புள்ளிவிவரங்கள் sky diving எவ்வளவு safe என!

Instructor ஆவதற்குத் தேவையான jumps க்குப்பின்
Intermission வந்துள்ளது இந்த வீர விளையாட்டில்!

இப்போதைய கவலை என்னவென்று தெரியுமா?
"நானும் குதிப்பேன்" என்று ஆசைப்படும் மருமகளையும்,

"நானும் குதிப்பேன்" என்று பேச
த் தெரியாத, ஆனால்
நிச்சயமாக குதிக்கப் போகும், பேரனையும் எண்ணியே!

இரட்டைக் கவலையின் காரணம் அவர்கள் இருக்கும்
இடத்தில் தினமும் குறைந்தது 12 hot air பலூன்களும்,

நூற்றுக்கணக்கான sky diver களும், விண்வெளியில்
சிறு தும்பிகளைப் போல நாளும் காணக் கிடைப்பதே!
 
Dear Sis,

Post # 417 and # 418 .........

I think, the names of the persons need not be revealed, especially

when you write about their negative qualities!!

Raji Ram :ranger:

True! But there must be 100s of Mrs. Mehtas and scores of Miss Padmas.
In any case in future I will remember not to include the names!
Thanks for pointing out this important point!
V.R.akka.
 
[FONT=comic sans ms,sans-serif]Quotes by Robert Browning.

Oh! If we draw a circle premature,
Heedless of far gain, :llama:
greedy for quick returns of profit, sure

Bad is our bargain. :nod:


The low man goes on adding one to one,

His hundred is soon hit. :roll:

This higher man aiming at a million

Misses a unit. :popcorn:
[/FONT]
 
One (Wo)man show!

எங்கள் நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு
எப்போது பாடுவது நானே தான்!
நானே நட்டுவாங்கமும் செய்வேன்;
நானே முகஅலங்காரமும் செய்வேன்.

அம்மாவுக்கே தான் பெற்ற பெண்ணை
அடையாளம் தெரியாமல் போகும்படி,

ஒரே மாதிரி make up செய்துவிடுவதில்

கொஞ்சமும் விருப்பம் இல்லை எனக்கு.

ஆப்பிள் வடிவத்தில் ரத்த உதடுகள்!
பாதி நெற்றியில் வில் புருவங்கள்;
கன்னங்களில் வரைந்த சுருள்முடி!
தனித்தன்மை போயே போய்விடும்!

தலையைப் பின்னிக் கட்டுவதைத்

தாய்மார்கள் செய்து விடுவார்கள்,
ஆடை, நகை அணிவித்து விட்டு.
கடைசியில் facial make up நான் .

வாடகைகுக்கு கிடைக்கும் நாட்டிய
உடையை எடுக்கவே மாட்டோம்!
எத்தனை வருடங்களில் அவற்றை
எத்தனை பேர் அணிந்திருப்பர்களோ!

துவைக்கும் வழக்கமே கிடையாது!
அவற்றை வாங்கி அணிந்தால், யாரால்
வேண்டுமானாலும் வாசிக்க முடியும்;
மீண்டும் மீண்டும் violin உடம்பில்!

பட்டு அல்லாத நல்ல துணிகளில்
சொந்த உடை தைத்துக்கொள்வார்;
சிலருக்குத் நானே தைத்ததும் உண்டு!
சிலர் ஜோடியாகத் துணிகளை எடுப்பார்!

பக்க வாத்தியங்கள் உண்டு இரண்டு!
பக்க வாத்தியம் தான் தன் மிருதங்கம்
என்பதையே மறந்துவிட்டுப் பெண்களை
எதிர்பாராத ஜாதிகளால் அச்சுறுத்துபவர்!

என்னால் தேர்வு செய்யப்பட்டு, பணியில்
என் மகன்கள் படித்த பள்ளியில் சேர்ந்த,
வீணை வித்வான் ஸ்ரீநிவாஸ் மற்றவர்.
வீணையை என் ஸ்ருதிக்கு வாசிப்பார்!!!

குழந்தைகளுக்கு சிறிய பரிசுகள்;
எனக்கும் கூட ஒரு சிறு பரிசு தான்.
Professional மாஸ்டர்களுக்கு மட்டும்
Professional பீஸ் கவர்களில் வைத்து.

செலவில்லாத நல்ல கலை நிகழ்ச்சி
எங்களிடம் மட்டுமே கிடைத்தது.
மேடையும், மைக்கும் எப்போதும் ப்ரீ!
கூட்டத்துக்கும் குறைவே இருக்காது!

"கர்ச்சு லேக கிளாசிகல் காவலனா?
பிலுவண்டி ஸ்ரீமதி ரமணி காருனி!"
என்று சொல்லும் அளவுக்கு நாங்கள்
அன்று பிரபலங்கள் ஆகிவிட்டோம்.
 
பூசுரர்கள்!

பூசுரர்கள் என்ற ஒரு பெயர் உண்டு
பூமியில் வாழும் அந்தணர்களுக்கு!

அதன் உண்மைப் பொருளை நீங்கள்
அனுபவித்து உணர விரும்பினால்,

செல்ல வேண்டும் தெலுங்கு நாடு!
எல்லை இல்லாத கௌரவம் காண!

கண் கண்ட தெய்வம் ஆகவே நம்மைக்
கனிவோடு போற்றுவார்கள் அவர்கள்!

மங்கலப் பொருட்கள் அளிப்பதற்கு
எங்கிருந்தோ தேடி வருவார்கள்!

விரதம் இருந்து வாடி, வெய்யிலில்
புனிதப் பொருட்களைக் கொண்டு

கொடுக்கும் போது எண்ணத் தோன்றும்
எடுத்துக் கொள்ள நமக்கு என்ன தகுதி?

அந்தணர் குலத்தில் பிறந்ததாலேயே
அந்தத் தகுதி வந்து விடுமா என்ன?

கால்களுக்கு மஞ்சள் பூசிவிட்டு,
கால்களைப் பற்றி வணங்குவார்கள்.

அப்பா செய்வது போலவே நானும்
அவர்கள் வணக்கத்தை மேல்நோக்கி

redirect செய்துவிடுவேன் எப்போதும்!
உரியவர்கள் உள்ள இடம் அது தானே!

பிடிவாதமாக விரதம் இருப்பர்,
சிவராத்திரிக்குக் கண்கள் விழிப்பர்;

நாக வழிபாடு செய்வதில் இவர்,
ஏக மனத்தோடு நன்கு ஈடுபடுவர்.

நகைகளில் உண்டு அதிக நாட்டம்!
நகையை விரும்பாத பெண் யார்?

அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரத்துக்கு
ஆறு பெண்கள் கும்மியடித்தனர்!

ஒவ்வொரு பெண்ணும் ஒரு லக்ஷ்மியே!
ஒரு இடம் விடாமல் உடலில் நகைகள்!

கணவர்களை அழைத்துச் சென்று
கனமான லாக்கர்களிலிருந்து!

எப்போதும், ஆடும் என் மாணவிகளிடம்,
"வேண்டாம் தங்க நகைகள்!" என்பேன்!

அன்று கும்மி முடிந்து அவர்கள்
சென்று வீடு சேரும் வரையில்;

டென்ஷன் எனக்கு அவர்கள்
கணவர்களையும் விட அதிகம்!
 
Underlining and over emphasizing :drum:

are the two tools used by the people

who want to remain under cover :spy:

(for reasons best known to themselves!) :noidea:

It is these very same things that lead to their exposure!

Life IS strange, isn't it? :ohwell:
 
[FONT=comic sans ms,sans-serif]Quotes by Robert Browning.

God is the perfect poet

who in his person acts his own creations. :drama:

[/FONT]
[FONT=comic sans ms,sans-serif]God be thanked, the meanest of his creatures :decision:

Boasts two soul sides, one to face the world with,:evil:

One to show a woman when he loves her.:angel:
[/FONT]
 
பெரிய வீடும், சின்ன வீடும்.

கோவையில் உள்ளன இவருக்கு
தேவைக்கேற்ப இரண்டு வீடுகள்!

அம்மாவின் வீடு பெரிய வீடு!
எங்கள் வீடு தான் சின்ன வீடு!

அளவிலும் சரி, மேலும் அவர்களின்
ஆதிக்கத்திலும் இது ரொம்ப சரியே!

"அம்மாவுக்கு தள்ளவில்லை!" என்று
V. R. (அதுவும் V.R ?) எடுத்தார் இவர்!

அன்றிலிருந்து இன்று வரையிலும்
அம்மா பெரிய வீடு, நான் சின்னவீடு!

இன்று அம்மா இல்லை என்றாலும்
இன்றும் அது (தம்பியின்) பெரிய வீடு!

திருமணம் முடிந்து பத்து ஆண்டுகள்
ஒரு ஊரிலே இருந்தோம் இருவரும்.

பிறகு வந்த பதினான்கு ஆண்டுகள்
இருந்தது வனவாசம் தனித்தனியாக!

இன்று ஒரே ஊரில் உள்ளோம் ஆனால்
அவர் தம்பியுடன், நான் நூல்களுடன்!

இங்கு வந்தும் பதினான்கு ஆண்டுகளாக
எங்களுடைய வனவாசம் தொடர்கின்றது! :ohwell:
 
பாம்புகளும், நானும்.

பாம்பென்றால் படையும் அஞ்சும் என்றால்,
பெண்கள் நாம் அஞ்சுவதில் என்ன வியப்பு?

ஆனைமலையில் ஊருக்கே வெளியே வீடு ;
அழைக்காமலேயே வந்து விடும் பாம்புகள்.

தாத்தா கம்பு எடுத்து அதை விரட்டிவிடுவார்.
அப்பா,"அதைப் போகச் சொல்லுமா(!)" என்பார்!

அம்மாவோ நாகப்பாம்பையே கிணற்றிலிருந்து
அச்சப்படாமல் மீட்
டார் அதன் சீற்றத்தையும் மீறி!

அக்கா வீட்டைச் சுற்றிப் பல பாம்புகள் ஓடும் ;
collapsible door இல் வெட்டுண்டதும் உண்டு!

துணியக் காயவைத்துவிட்டு உள்ளே வந்ததும்;
"தொபக்"கென்று மஞ்சள் சாரை விழுந்தது எங்கே?

நான் நின்று கொண்டிருந்த இடத்திலேயே தான் ! :scared:
நான் நின்றபோது மரத்திலிருந்து விழுந்திருந்தால்!

எட்டடி நீளமும் எண்பது கிலோவும் இருக்குமோ?
எத்தனை வண்ணம், வர்ணம், எத்தனை நீளம்! :fear:

மொட்டை மாடியில் கோதுமையைக் காயவைக்க
மாடிக் கதவைத் திறந்தவள் செய்தேன் ஹைஜம்ப்!

நான் கால் வைத்திருக்க வேண்டிய இடத்தி
ல் இருந்த
பாம்பு செய்தது கலவையான (லாங் ஜம்ப் + ஹை ஜம்ப்)!

நான் அலறிக்கொண்டு என் வீட்டுக்குள்ளே ஓடிவிட,
அது எதிர் திசையில் சரசர என்று ஓட்டம் பிடிக்க;

போன் செய்து செக்யூரிட்டியைக் கூப்பிட்டால்,
"போட்டுத்தள்ளுங்கள் நீங்களே" எனப் பெர்மிஷன் !

வலை போட்ட என் வீட்டுக்குள்ளே வந்துவிட்டது,
விரியன் பாம்பு ஒன்று, என் திருமண நாள் அன்று!

எப்போதும் போல என் அறைக்குள் நுழைந்தால்,
ரிப்பன் போல ஒன்று சுவர் ஓரமாகக் கிடந்தது!

Blouse தைத்த பாக்கித் துணிஎன்று எடுக்கக்
கையை நீட்டினால், அது நகரத் தொடங்கியது!

இருதயம் வாய்க்குள் வந்தது போல அதிர்ச்சி!
இவரும் வீட்டில் இல்லை, இரவு 11 மணி! :help:

பெட்டியின் அடியில் சென்று ஒளிந்தது அது!
கதவின் அடியாக வந்துவிடுமோ வெளியே?

மிதியடிகளை வைத்து gap ஐ அடைத்தேன்!
Security க்கு போன் செய்ததும் வந்தார்கள்!

அதற்குள் பவர் கட்! இரவு 12 மணி வரை!
அடியாட்கள் போல
த் தடிகளுடன் நாலு பேர்!

"போய் விட்டுக் கரண்ட் வந்ததும் வாருங்கள்!"
போக மறுத்தனர் பாம்புடன் என்னை விட்டுவிட்டு!

கரண்ட் வந்ததும் அறையில் நுழைந்தால்,
கண்ணா மூச்சியாடியது ஒளிந்திருந்த பாம்பு!

பெட்டியின் அடியில் இருந்து ஜாகையை மாற்றி
பீரோ அடியில் ஒளிந்து கொண்டிருந்தது அது.

ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர் வெளியே வந்தனர்
குச்சியின் ஓரத்தில் பாம்பைத் தொங்கவிட்டபடி!

"விஷப் பாம்புதான் அம்மா! கண்ணில் பட்டதே!"
விழுந்து விழுந்து கும்பிடும் முருகன் காத்தான்!

அடுத்தநாள் இவரிடம் நடந்த கூத்தைச் சொன்னால்,
"அதுவே வெளியில் போகவில்லையா?" என்கின்றார்!

அது எப்படி வலை போட்ட வீட்டில் நுழைந்தது?
அது ஏன் திருமண நாளைத் தேர்ந்தெடுத்தது?

மாமி தனியாக இருக்கின்றாள் என்று துணைக்கு
சாமி அனுப்பினதைக் கொன்று விட்டோமோ? :noidea:



 
We boast of being Tamil Brahmins...

yet efforts were made by a group of people,

to stop the posts made by us in Tamil!

Asking for English translation (by those who do not know Tami) is one thing

but Tamils trying ban Tamil posts is quite another.

Now the threads are being targeted.

I only wish to state a prover in Tamil

"keduvaan kedu ninaippaan!" :croc:

The one who plans foul things will meet a foul end!
 
Dear Sis,

As long as some members enjoy reading the Tamil write-ups, we can continue to contribute!

FYI, I have never done any translations of my posts in English, so far!

The same posts (with permission of course!) in another forum is also well received!

Raji Ram :typing:
 
Dear Raji,

It is not so much as the language or the stuff they object to

as the hand behind the key board and the person who writes them.


Well. It takes all types of people to make up this world!

V. R. Akka.
:ohwell:
 
[FONT=comic sans ms,sans-serif]Quote by Robert Browning.

The lark's on the wing,
The snail's n the thorn,
God is in his heaven-
All is right with the world.
[/FONT]
 
பழனியும், பழனிச்சாமியும்.

இஷ்ட தெய்வம் பழனி முருகன்.
இஷ்டமான மலை தென் பழனி.
எத்தனை முறை சென்றிருப்பேன்
எனக்கே சரியாகத் தெரியவில்லை!

கல்லூரியில் பணிபுரிந்துவந்த சில
மலையாள தேச staff மெம்பர்கள்
பழனி முருகனின் பெரும் பக்தர்கள்;
அழகனைப் பிடிக்காதவர் யார் உளார் ?

மாதம் ஒருமுறை டாக்ஸ்யில்
மாலைக்குச் சென்று தரிசிப்போம்.
கீழே பிடித்த ஓட்டம் படிகளில்
மேலே சென்று தான் நிற்போம்!

விறு விறு என்று பிரதட்சிணம்,
பாலபிஷேகம், அர்ச்சனை செய்து
விரைவாகத் திரும்பிவிடுவோம்
இரவு உணவுக்கு hostel லுக்கு.

பழ
னிக்குப் இன்று போகாவிட்டாலும்
பழனியின் தொடர்பு விடவில்லை!
தெரிந்தவர்களில் பாதிப்பேர் பெயர்
பழனிச்சாமி தான்! அதிசயமாக!

பால்காரர் பெயர் பழனிச்சாமி,
ஆட்டோக்காரர் பெயர் பழனிச்சாமி;
இஸ்திரி செய்பவரும் பழனிச்சாமி!
பேப்பர் பையனும் பழனிச்சாமி!

இங்கு அங்கு என்னாதபடி
எங்கும் நிறைந்திருப்பது
இன்றும் அன்றும் என்றும்
பழனியும், பழனிச்சாமியுமே!
 
புலி வந்தது!

நானும் என் தோழி ஒருவரும்

நாள் தவறாமல் செல்லுவோம்

பெரிய வாக்கிங், ஒரு ரவுண்டு!

பெரிய காலனியைச் சுற்றியும்.

நாலரை மணிக்குக் கிளம்பினால்,

ஆறு (A.M) திரும்பி விடுவோம்!

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக

ஆக்கியது இந்த நடைப் பயிற்சி!

ஒரு முறை வந்துவிட்டது புலி ஒன்று

காட்டைப் போல இருக்கும் காலனியில்!

ஒரு மாடியில் தென்பட்டது அது .

இரண்டாவது நிமிடம் பள்ளியில்.

பார்க்கிலும், பள்ளி மைதானத்திலும்

பார்க்குமிடங்களில் எல்லாம் புலியே .

வந்ததுவும் தெரியாது அது எங்கு

போனதென்றும் தெரியாது! மாயாவி

காலனியையே ஆட்டிப் படைத்தது!

தனியே யாரும் செல்ல மாட்டார்கள்!

இத்தனை நடந்தபோது எங்களுடைய

நடைப்பயிற்சியில் மாற்றம் இல்லை!

எப்போதும் போல நடக்கச் சென்றோம்

எத்தனை பேர் பயமுறுத்திய போதிலும்.

ஒருநாள் வசமாக மாட்டிக்கொண்டது

ஒரு கிரிக்கெட் கும்பலிடம் அந்தப் புலி!

செத்த பாம்பை அடிக்கும் சுத்த வீரர்களும்,

மொத்து மொத்தென்று மொத்திவிட்டர்கள். :deadhorse:

புலிக்கு ஆயுசு கெட்டி! சாகவில்லை!

புலி மயங்கியவுடனே வீரர்கள் அதைக்

கெட்டிக் கயிற்றால் கட்டிப் போட்டனர்!

காட்டுக்குள் சென்று அவிழ்த்து விட்டனர்! :bolt:

புலியும் பிழைத்து ! காலனியும் தான் !

எங்கள் நடைப்பயிற்சி தொடர்ந்தது!
சுற்றிலும் அத்தனை காடுகள் இருக்க :peep:

சுவர் ஏறிக் குதித்து வந்ததா? அல்லது

வாட்ச்மேன் இல்லாதபோது கம்பீரமாக

கேட்டு வழியாகவே நுழைந்து வந்ததா? :noidea:
 
[FONT=comic sans ms,sans-serif]Quotes by Robert Browning.

White shall not neutralize the black. :nono:
Nor good compensate the bad in men,absolve him so; :help:
Life's business is being just the terrible choice.:doh:

It is not what a man does that exalts him,
but what a man would do.:high5:
[/FONT]
 
சம்பளம் எதற்கு?

கல்லூரியில் பணி புரியும் போது,
கண்டிப்பாகச் சம்பளம் கிடைக்கும்

முதல் தேதி என்பது இல்லை!
முனகிக் கொண்டு தருவார்கள்,

எதோ ஒரு நன்னாளில், "ஐயோ
விதியே!" என்று எண்ணியபடி!

நாகேஷ் போல ஒரு மாமா!
நாமதாரி! விவகாரம் செய்வார்!

"எங்களுக்குக் கிடைக்கவில்லை
மாதச் சம்பளம் இன்னும்" என்றால்,

"உங்களுக்கு எதுக்கும்மா பணம் ?
Hostel இல் கிடைக்கிறது சாப்பாடு!

கணக்கில் வாங்கிக் கொள்ளுங்கள்
கண்ணாடி, சோப்பு, சீப்பு, பவுடர்!

கையில் எதுக்குப் பணம் சொல்லு?"
மெய்யாகவே மிகக் கோபம் வரும்!

கொஞ்சம் ஏமாந்தால்
எங்களை
க்
கொத்தடிமை ஆக்கி இருப்பார்கள்!

அல்லது உணவுக்கு வேலை என்று கூறி
கல்லாவை நிரப்பிக்கொண்டிருப்பார்கள்!

விழித்துக் கொண்டிருந்தால் நன்கு
பிழைத்துக் கொள்ளுவோம் நாம்!

ஏமாளிகளானால் விழுங்கி பெரிய
ஏப்பமும் விட்டு, ஜீரணித்து விடுவர்!


அகத்திய மகரிஷி அன்று அந்தக் கொடிய
வாதாபியை உண்டு ஜீரணித்தது போல!
 
Last edited:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top