• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
மானசீக குருமார்கள்.

அசரீரீ போல உண்டு எனக்கு
அனேக குருமார்கள் துணைக்கு!

மலை மேலுள்ள கோவில் ஒன்றில்
மாலையும், காலையும் பாடுவேன்;

திருப்பாவைப் பாடல்களை நான்,
அருள் மார்கழி மாதம் முழுவதும்!

பாடல்கள் கற்க உதவிய அன்னை
M. L. வசந்தகுமாரியும் ஒரு குரு!

பஜகோவிந்தம் மட்டுமின்றி பல
பஜனைகள் கற்க உதவிய அன்னை

M. S. சுப்புலக்ஷ்மியும் ஒரு குரு.
திருப்புகழுக்கு ஸுதா ரகுநாதன்;

நாராயணீயத்துக்கு உயர்திரு
திருச்சூர் ராமச்சந்திரன் குரு.

ஊத்துக்காடு சுப்பையரின் கண்ணன்
பாடல்களுக்கு குரு Bombay Sisters!

தாத்தாவின் பக்திமணி மாலைப்
பாடல்களுக்கு குரு ராஜி ராம்.

அந்தாதி (
அபிராமி) மட்டும்
சொந்த (என்னுடைய) முயற்சி!

சௌந்தர்யலஹரியின் குரு
கன்னட மாமி ராதா பாய்!

(இவர் சரீரி! அல்ல அசரீரி)

அஷ்டபதி கற்பிக்க அரிய
Bombay sisters உம், லீலா

தரங்கிணிக்குத் தயாராக
குரு யேசுதாசும் உள்ள
ர்!

நேரம் கிடைக்கும் போது கற்பேன்
அஷ்டபதியும், தரங்கிணியும்;

நேரத்தை உற்பத்தி செய்தாவது
விரைவிலேயே! இது உறுதி!


 
எனக்குப் பிடித்த கடவுள்(கள்).

யானை முகமும், பானை வயிறும்,
வாமன வடிவும், இவரிடம் மட்டும்
இத்தனை கம்பீரமாக, அமைதியாக,
இத்தனை அழகாக இருப்பதெப்படி?

வேல் எடுத்துப்பகை
யும் கெடுப்பான்,
வேள் நாவல்பழமும் கொடுப்பான்;
ஞானப் பழமும் அவனே தான்!
தீனர்க்கருள்பவன் அவனே தான்!

நாராயணா என்ற மாத்திரத்தில்,
நூறாயிரம் பாவக் கூட்டங்களை;
நெருப்பு எரிக்கும் சரு
குகளாகவே
வேறு யாரால் மாற்றிவிட முடியும்?

அழைக்காமலே ஓடோடிவந்து,
தழைக்கும் கொடுமைகளைக்
களைந்து, முக்தியும் தருவதில்;
சளைக்காதவர் இவரேயன்றோ!

சக்தியையும், யுக்தியையும் தந்து;
பக்தியையும், முக்தியையும் தந்து;
பிள்ளைகளை அன்னைபோலவே
கிள்ளைமொழி இவளே காப்பாள்!

அஷ்ட சித்திகளைப் பெற்றிருந்தும்
கஷ்டம் நீக்கிட பிறருக்காகவே
இஷ்டத்துடன் பிரயோகம் செய்த
இவருக்கு இணை இவரே தான்!

இவர்கள் உடனிருக்கையில் நமக்கு
எவரிடம் என்ன அச்சம் தேவை?
மறவாமல் நாமம் ஜபித்தால் நாம்
பிறவா வரம் எய்துவோம் அன்றோ? :pray:

 
..........

Thank God for placing those bad habits beyond the

purchasing power of common man! :hail:

Dear Sis,

I am sorry to say that NOT all bad habits are "beyond the purchasing power of common man!"

We find in Singaarach Chennai, ALL the government owned wine shops flooding with people,

right from the teen age onwards. Some bad habits are still within their reach! :twitch:

 
LIFE- WHAT?

Our lives are not determined by what happens to us ,But
By how we react to what happens,not by what Life brings
to us but by attitude we bring to life.
A positive attitude causes a chain reaction of positive Thoughts,
Events & Outcome.
It is a catalyst, A Spark that creates extraordinary Result.
Let's change to make change for the Better!

If U Focus on Change U Will get RESULTS
 
தூய மனமே அடிப்படை!

தூய மனத்தில், தூய எண்ணம் வரும்;

தூய எண்ணத்தால், தூய சொல் வரும்;

தூய சொல்லால், தூய நட்பு வரும்;

தூய நட்பால், தூய செயல் வரும்;

தூய செயலால், தூய விளைவு வரும்;

தூய விளைவால், தூய வாழ்வு மலரும்!


:thumb:
 
[FONT=comic sans ms,sans-serif]Quotes by William Blake.

"Prisons are built with stones of Law,
brothels with bricks of Religion."

"Truth can never be told so as to be
understood and not believed."

"You never know what is more than enough,
unless you know what is enough.."
[/FONT]
 
பரோபகாரம்: பரிமாணமும், பரிணாமமும்.

"Want anything at all? Make a beeline to A-30!"
சொன்னது என் இளைய மகன் என்னிடம்,
சொன்னபோது ஆறு வயது அவனுக்கு!
சொன்ன வார்த்தைகள் ஒரிஜினல் தான்!

"ஏன் கண்ணா அப்படிச் சொல்கிறாய்?" என்றால்,
"பின்னே என்ன கடைக்குப் போனா காசு தரணும்,
Q விலே நின்னு அவா காத்திண்டு இருக்கணும்!
இங்கே வந்த ப்ரீயா உடனே கிடைச்சுடுமே!"

என்ன power of observation and Inference!
நானாவது இரவலாகப் பொருட்களைத்
தந்தேன் நண்பர்களுக்காக! பெரிய மகன்
தந்ததோ தவறாமல் Quarterly Blood Donation!

கொடுத்ததால் கெட்டவர்களும் இல்லை!
கொடுக்காததால் வாழ்ந்தவர்களுமில்லை!
கொடுப்பதால் நம்மிடம் கேட்கின்றார்களா?
கொடுக்கின்றோமா நாம் அவர்கள் கேட்பதால்?

மாட்டேன் என்று சொல்லவும் தெரியாது!
முடியாது என்று சொல்லவும் பிடிக்காது!
பேபி சிட்டிங் வேலையிலிருந்து சகலவித
வேலைகளும் தேடி வந்து சேர்ந்துவிடும்!

Godrej Hair dye demonstration செய்ய
தேவை ஒரே ஒரு தலை! அதை யாருமே
தராததால், செகரெட்டரி நண்பிக்காகத்
தலையைத் தந்து, "டை" இல் சிக்கினேன்!

Lioness Club President's post ஐ ஏற்பதற்கு
Lioness club vice president மறுத்ததால்
திடீர் ப்ரெசிடென்ட் ஆக்கப்பட்டேன் நான்,
பிறகு தான் தெரிந்தது காரணம் எனக்கு!

முன்னர் இருந்த கிளப் ப்ரெசிடென்ட்
பின்னைய வருடத்தின் subscription ஐயும்
முன்னமேயே வசூலும் செய்து அதைத்
தன் ஆண்டிலேயே செலவழித்தும் விட்டார்!

காலி கஜானா! போஸ்டல்ஸ்டேஷனரிக்குக் கூடப்
பணம் வைக்கவில்லை அந்த மஹா லேடி டாக்டர்!
கடுப்பினால் எப்போதும் எனக்கு எதிர் கட்சியே!
தொடங்கும் முன்பே மூடுவிழா செய்யமுயல்வார்!

தட்டுத் தடுமாறி, பணமும் இல்லாத,
ஒற்றுமையும் இல்லாத, 'சிங்கி'னியை
நடத்தினோம் நாங்கள் சிலர், பெற்றோம்
முடிவில் அத்தனை அவார்டுகளையும்!

உதவி செய்யக் கணவரும் உடன் இல்லை;
அதுவே பிறகு பிளஸ் பாயிண்ட் ஆயிற்று!
தன்னந் தனியாக நின்று சமாளித்தோம் என
அத்தனை பேரும் எங்களைச் சிலாகித்தார்கள்.

இந்திராகாந்தி இறந்த வருடம் அது!
ஒரு சிறு புத்தகமும் வெளியிட்டோம்!
முதல் பக்கத்திலிருந்து இறுதிவரை
மொத்தமும் எந்தன் கை வரிசையே!

Lioness Queen என்ற அவார்டு வாங்க நான்
சென்றது வழக்கம் போலத் தனியாகவே!
நண்பர்கள் கூட்டமும் கூட வரவில்லை!
என் குடும்பமும் கூட வர முடியவில்லை!

பாட்டே தெரியாதவர்களுக்குப் பாட்டும்,
நாட்டியத்தின் அடிப்படை அறிவில்லாத
குட்டிகளுக்கு அதைச் சொல்லிக்கொடுத்து
நாட்டியம் ஆடவைப்பதும் வேலையாயிற்று!

செய்த முயற்சிகள் வீண் போகாது அல்லவா?
பொறுமையை வளர்த்திட அவை உதவின!
பலனை எதிர்பாராமல் கீதை சொல்வதுபோல
பணிபுரியும் மனப் பாங்கை அவை வளர்த்தன.

எவரையும் எதற்கும் எதிர்பார்ப்பதில்லை!
முடித்த செயலை செய்ய மறுப்பதும் இல்லை!
பணத்துக்காக நான் எதுவும் செய்வதில்லை!
குணத்தை மதிக்க நான் தவறுவதும் இல்லை!

There is no pain without gain;
There is no gain without pain;
There is no greater truth than,
These two sterling statements!
 
பேச்சுப் பயிற்சி.

சிறு வயதிலிருந்தே உரக்க வாய்விட்டு
நிறைய படித்து வந்திருந்ததால் எனக்குப்
பேசுவதில் எந்தவிதக் கஷ்டம் இல்லை.
பேசுவது ( A.K.47 ) அம்மாவைப் போலவே!

"சிங்க"க் கிளப்பின் ப்ரெசிடென்ட் ஆனதும்
இங்கும் அங்கும் நிறையப் பேசவேண்டும்,
ஆங்கிலத்தில் elite கூட்டங்களிலும்;
தெலுங்கில் மற்ற பல இடங்களிலும்.

சுந்தரத் தெலுங்கிலும், ஆங்கிலத்திலும்
எந்தக் கஷ்டமும் இல்லை பேசுவதற்கு!
வேகத்தைக் குறைக்க வேண்டி இருந்தது;
ஏக மனத்தோடு முயன்று முயன்று நான்!

அரை மணி நேரம் நிறுத்தி நிதானமாக
அலுக்காமல் படித்து வந்தேன் தினமும்;
ஒரு நாள் பயிற்சி முகாம் ஒன்று நடந்தது,
ஒரே நாளின் பேச்சளார்களை உருவாக்க!

காலையில் தட்டுத் தடுமாறியவர்கள்,
மாலையில் விளாசித் தள்ளினார்கள்!
உண்மையிலேயே மிக நல்ல திட்டம்,
எண்ணமுடியாத ஒரு முன்னேற்றம்!

ஆங்கிலத்தில் பேசினால் கேட்கும்
"மதராஸ்! மதராஸ்!" என்ற சொற்கள்!
தெலுங்கில் பேசினாலோ கேட்கும்
"தமிழ்! தமிழ்!" என்ற சொற்கள் அங்கு.

கூட்டத்தினர் ஒருவருக்கு ஒருவர்
என்னைப் பற்றித் தெரிவிப்பது தான்!
வட்டம் பெரிதான பிறகு இத்தகைய
கிட்டப் பார்வை அறிமுகம் இல்லை!

பாடிப் பாடிக் குரல் நயமானதால்
நன்றாக இருக்கும் மைக்கில் கேட்க.
பேசுவர் சில பெண்களும் ஆண் குரலில்,
கீசு கீசு என்பவர்களும் உள்ளார்களே!

இரயிலில் எங்கள் கம்பார்ட்மென்ட்டில்
இருந்தார் ஒருமுறை பெங்காலி பாபு;
"நீங்கள் மியூசிக் டீச்சரா?" என்று கேட்டு
எங்கள் எல்லோரையுமே அசத்தினர்!

"நிச்சயமாக நீங்கள் ஒரு டீச்சரே!
நிச்சயமாக நீங்கள் பாடுவீர்கள்!
நீங்கள் பேசும் போதே கூட எனக்கு
நீங்கள் பாடுவதுபோலவே உள்ளது!'

இரயிலில் வருபவர் மொழி, இனம்,
தொழிலைக் கண்டுபிடித்து அவர்களை
அசத்தும் என்னையே, ஒரு பெங்காலி பாபு
அசத்திவிட்டார் அந்த பயணத்தில் அன்று!

லலித கலைகள் கற்றவர்களிடம்
மலரின் மணம் போல அதன் சாயல்கள்;
கலந்து நன்கு பரிமளிக்கும் அதனை
எளிதில் இனம் கண்டு கொள்ள முடியும்!

 
"Life, believe is not a dream,

So dark as the sages say;

Oft a little morning rain :rain:

Foretells a pleasant day!" :flame:

Charlotte Bronte.



"Novelists should never allow themselves :suspicious:

to weary of the study of real life" :spy:

Charlotte Bronte.
 
பஞ்ச கனபாடிகள்!

ஒரு நாள் காலிங் பெல் ஒலி கேட்டுத்
திறந்த கதவின்பின் திகைத்து நின்றேன்;

பஞ்ச பாண்டவர்கள் போல ஐந்து பேர்கள்,
பஞ்ச கச்சம் கட்டிய ஐந்து நிஜ கன body கள்!

"இன்றைக்கு உணவு உங்கள் வீட்டில்தான்!
எல்லோருமே இங்கேயே போகச் சொல்ல

இங்கு வந்தோம் நாங்கள்! காசி செல்லும்
வழியில்" என்றதும் திகைத்து நின்றேன்!

"அரை மணியில் வருகின்றோம்" என்று
இறங்கிச் சென்று விட்டனர் மாடிப்படிகளை!

ஐந்து ஆழாக்கு சாதம் வடித்து, ரசம், அப்பளம்,
கீரைக் குழம்பு, மோர் தயார் செய்து விட்டேன் !

பரிமாறினால் கபகப என்று காலியாகின்றன
பண்டங்கள், பசி தீர்ந்ததாகத் தெரியவில்லை!

கடைசிச் சட்டுவச் சாதம் போடுகையில் நான்
கடவுளை வேண்டினேன் "பசி தீரட்டும்" என!

ஒருவர், "போதும்" என்ற சொல்லைக் கேட்டு
மட்டற்ற மகிழ்ச்சி அடைய முடியுமா என்ன?

"அமிர்தமாக இருந்தது அம்மா!" என்ற ஒரு
அழகான சான்றிதழ் வேறு கிடைத்தது எனக்கு!

இன்று யோசிக்கின்றேன் எப்படிச் சரியாக
என்னுடைய வீட்டுக்கு வந்தார்கள் அவர்கள்?

நண்பர்களின் வழிகாட்டுதல்தானா அன்றி
என் பெயர் அவர்களுக்குத் தெரிந்து வந்தனரா?

இன்று ஐந்து பேர்கள் கதவைத் தட்டினால்
நம்பி உள்ளே வரவிடுவோமா அவர்களை?

காலம் கெட்டு வருகின்றதா அல்லது நாம்
ஞாலத்தைப் புரிந்து கொண்டுவிட்டோமா?

பெரிய பரீட்சை ஒன்றில் தேர்ச்சி பெற்ற
திருப்தியே மனதில் நிலவியது எனக்கு!

பஞ்சகனபாடிகள் உண்ணவந்தார்களா அன்றிப்
பஞ்சபூதங்களே சோதிக்க வந்தார்களா அன்று???
 
கொண்டாட்டமும், திண்டாட்டமும்.

என் கணவர் G.C.T 1962 batch student!
இன்றும் அந்த batch சந்திக்கின்றார்கள்
ஆண்டு தோறும் கோவை /சென்னையில்;
Alumni Association மூலமாகத் தவறாமல்!

'கோவை கொண்டாட்ட'த்தில் பிக்னிக் ஒன்று
தேவை என்று எண்ணினார்கள் இங்கு சிலர்!
பார்வை இடச் செல்லும்போது என்னையும்
பலவந்தமாக உடன் அழைத்துச் சென்றார்கள்.

முதலிலேயே சொல்லிவிட்டேன் தெளிவாக
"மலையிலிருந்து இறங்க முடியாது என்னால்!
தவறாமல் உதவி தேவை" என்று கணவரிடம்,
அவரும் "சரி, சரி" என்று சொன்னார் ஆனால்,

கிடு கிடு பள்ளத்தில் தனியே விட்டு விட்டு
குடு குடு என்று இறங்கிப் போய் விட்டார்!
கூப்பிடுவதும் கேட்கவே இல்லை! அவர்
தப்பித் தவறித் திரும்பிப் பார்க்கவுமில்லை!

பலவந்தமாக அழைத்து வந்துவிட்டு இப்படி
பரிதாபமாக விட்டுச் சென்று விட்டார்களே!
இறங்கவும் முடியாது மலையிலிருந்து!
உருண்டுதான் செல்ல வேண்டுமோ? முருகா!

அங்கேயே நின்று விட்டேன் சிலை போல!
எங்கும் ஒரு மரக் கிளை கூட எட்டவில்லை!
அன்று நடந்ததை நினைத்தால் எனக்கு
இன்றும் மெய் சிலிர்க்கின்றது மெய்யாகவே!

வந்தார்கள் மூன்று teenage பையன்கள்!
வெடு வெடு என்று ஒருவன் நல்ல உயரம்!
அவன் கைகளில் ஒரு கனமான மரத்தடி;
நான் பறிக்க முயன்று தோற்றது போல
வே.

என்னைத் தாண்டிச் செல்லும் போது,
என் கால்களின் அருகே
அதை வைத்தான்.
திரும்பிப் பார்க்காமல் சென்றான் தன்
அருமை நண்பர்களுடன் கீழிறங்கி!

முருகன் ஒரு தண்டபாணி அல்லவா?
அருளின் மறு உருவம் அவனல்லவா?
முட்டி தேய்ந்த ஒரு கிழவிக்காக அவன்
முட்டி தேய மலை மீது ஏறி வந்தானா ?

அவனுக்குத் தடியே தேவை இல்லையே!
அவன் ஏன்
அதைக்
கொண்டு வந்தான்?
அவன் ஏன் என்னருகில் அதை வைத்தான்?
அவன் ஏன் மீண்டும் கீழிறங்கிப் போனான்?

பதிலே இல்லாத கேள்விகள் எத்தனை?
பதித்துக் காலை ஔவை போல மெல்ல
வந்ததும் முதல் கேள்வி என்ன தெரியுமா?
"இத்தனை நேரம் நீ என்ன செய்தாய்?"

விட்டு விட்டு வந்ததும் நினைவில்லை!
தட்டுத் தடுமாறியதும் தெரியவில்லை!
அழைக்காமலே வந்து உதவிய செய்ததே
'அவனு'க்கும் நமக்கும் உள்ள வேறுபாடு!


 
To say thank you and sorry whether expected or not but needed should be expressed. You know the reason why I thanked you, I presume. In case, if you guess, you will know. In case, you are unable to guess. wjich is most unlikely, let it be there even if it is worthless in your opinion.raja48
 
There has been some confusion I suppose!

My post # 386 was in reply to Mrs. Raji Ram's post # 385.

My post # 391 is in reply to her post # 390.

And I can :hug: her and :kiss: her since she is my own younger sister!

Hope nobody has any objections to this! :peace:
 
Lesson learnt today! :faint:

Never post a message without addressing a person- :yo:

even if your reply follows immediately the post it answers!
::typing:
 
The human heart is like Indian rubber:
a little swells it but a great deal will not burst it. :boom:

There is always a "but" in this imperfect world. :playball:


All our talents increases in the using and
every faculty both good and bad strengthen by exercise. :boxing:

Anne Bronte.
 
எப்போதும் வனவாசமே!

ஆனைமலையில் வீடு ஊருக்கு வெளியே!
அதுவே பிறகு என்னைத் தொடரலாயிற்று!


எந்த ஊரில் இருந்தாலும் நான் ஊருக்குள்
வசித்ததே இல்லை; என்றும் வனவாசமே!

உடுமலைக் கல்லூரியும் ஊருக்கு வெளியே!
மதுரைக் கல்லூரியும் ஊருக்கு வெளியே!

Alwyn காலனியும் ஊருக்கு வெளியே தான்!
B.H.P.V.Township பும் ஊருக்கு வெளியே தான்!

இப்போது வசிப்பதும் சற்று ஊருக்கு வெளியே!
இப்போது தெரிந்தது ஏன் அப்படி அமைந்ததென!

சந்தடி இல்லாத இடங்களில் தான் நம்மால்
சிந்திக்க முடியும் நன்கு! அது இறையின் பரிசு!

தனிமையும் ஒரு வரமே! நன்கு உழைத்து
இனியவற்றை இயன்றளவு இயற்றுவதற்கு! :hail:


 
குட்டி கண்ணன்கள் இருவர்!

மேடை பயம் இருக்கக் கூடாது என்று
மகன்களை மேடை ஏற்றி விடுவேன்!

Fancy dress, skating, dance, அல்லது
Tableau, funny skits, வீணை வாசிப்பு!

பெரியவனுக்கு வெறும் மூன்று வயது!
அரசகுமாரன் வேடம் அணிவித்தேன்!

வீட்டில் நன்றகப் பேசிக் காட்டியவன்,
மேடைமீது விட்டவுடன் ஒரே ஓட்டம்!

"Prince Rajesh Varma தன்னுடைய
Privy purse ஐ வாங்கச் செல்லுகின்றார்!"

என்று கூறி நிலைமையைச் சமாளித்தேன்!
எல்லோருக்கும் சிரிப்புத் தாங்கவில்லை!

சின்னவன் அதற்கு நேர் எதிர்மறை!
சின்னக்கிருஷ்ணன் வேடம் அணிவித்தேன்!

'கை கொட்டிக் களிக்கும்' பெண்கள் அன்று
'கை கொட்டினார்கள்' இவனைச் சுற்றி!

இறங்க மறுத்தான் நடனம் முடிந்த பிறகும்!
"இங்கேயே இருக்கேன்" என்றான் மேடையில்!

அலுங்காமல்
அவனைத்தூக்கிக்கொண்டு
அங்கிருந்து இறங்கி வரவேண்டி இருந்தது !

ஒருநாள் கன்னட பஜன் பாடும் போது,
மெல்லிய சிரிப்பொலி அரங்கத்திற்குள்!

மிகவும் நல்ல, M.S.S. பாடிய பாட்டு அது!
மிக மெல்லிய நகைப்புக்குக் காரணம்???

Eye-level இல் பார்க்கவேண்டும் நாம்
மேடை மீது இருக்கும் போதெல்லாம்!

கீழே பார்த்தால், தொலைந்த பொருளைக்
கீழே தேடுவது போலவே இருக்கும்!

மேலே பார்த்தால் முகமே தெரியாது!
மேடை மேலே eye-level பார்வை தான்!

அதனால் தான் தெரியவில்லை எனக்கு,
மெல்லிய சிரிப்பலையின் காரணம்!

சப்தம் செய்யாமல் படிகள் எறிவந்து,
சமர்த்தாக என்னிடம் நின்று இருந்தது,

யார் என்று கூறுங்கள் பார்க்கலாம்!
என் குட்டிமகன் என் பிரிவைத் தாங்காமல்!

மூன்று நிமிடங்கள் மேடைக்குப் போனால்
பின்னாலேயே அங்கும் வந்துவிட்டான்!

Happy feet Mumbles போலவே என்னைத்
தலையை உயர்த்திப் பார்த்துக்கொண்டு !

அவனுக்கு என் தோழி வைத்த பெயர்
"அம்மா தோகா = அம்மாவின் தோகை"
,
முருகனும் மற்றும் வேடனும் என்று
திரு முருகனின் இரு அவதாரங்களில்,

இருவரையும் வைத்து ஒரு tableau!
சிறப்பாக அமைந்துவிட்டது அது!

costumes and properties எல்லாமே
Home-made என்பது தான் அதிசயம்!

எங்கள் வாழ்வில் அது ஒரு பொற்காலம்,
எங்களை உருவாக்கினதே அந்த நாட்களே!

 
Lesson learnt today! :faint:

Never post a message without addressing a person- :yo:

even if your reply follows immediately the post it answers!
::typing:

And one more lesson for you to learn, dear Sis!

To mention which thread you are talking about, or at least give the section in which it appears!!
A few days back, I had to solve the puzzle for a senior member here!!:ranger:
 
Dear Raji,

I did not want to give unnecessary publicity to that infamous thread by giving its

title!
Anyway I will remember both these points in future. Thank you!

with best wishes and regards,
V. R. Akka
:tea:
 
Madam,
I will follow in future about addressing the reply. Presently I am unable to understand. I will be thankful if it is explained preferably with an example. I have come acroos a handful at the most who posts new threads/replies. I do not like to call any lady by name unless it is absolutely essential. That is why I address them as Madam. Of course, male counterparts, I address as Sir or by name. I hope there is no harm in my principle. raja48
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top