• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
“வேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”



ஒருமுறை மஹாபெரியவரை காஞ்சியில் பார்க்கச்சென்றிருந்தேன். வேதத்தை பற்றிச் சொல்லிக்கொண்டு இருந்தார். உற்றுக்கேட்டு கொண்டு இருந்தேன்.
“வேதம் பொய் சொல்லுமா”, என்று கேட்டார். அவர் கேட்கும் போது ஏதோ விஷ்யம் வரப்போகிறது என்று மௌனமாக இருந்தேன்.
“சரி ராத்திரி 12 மணிக்கு சூரியனை பார்க்க முடியுமா”, என்று கேட்டார். முடியாது என்று சொன்னேன். “அப்போ வேதம் பொய் சொல்லரதே, சதா பஸ்யந்தி சூர்யாக: வரதே சூக்தத்தில்.அப்ப்டின்னா எப்பவும் சூர்யனை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்னுதனே அர்த்தம்”.
மனதில் குழப்பம் இருந்தாலும் பெரியாவாவே சொன்னா நன்ன இருக்கும்ன்னு சொன்னேன்.
அவர் சொன்னார், “வேதம் சொன்னவா நம்மளை மாதிரி கண்ணுக்குத்தெரிந்த உலகை மட்டும் பார்க்கவில்லை அவா ஞனக்கண்ணால் உலகை பாத்தவா. அதனாலதன் எப்பவும் பனிக்கட்டியா இருக்குமாமே பின்லாந்துன்னு ஒரு ஊரு அங்கே வருஷத்துலே சிலநாள் எப்பவும் சூர்யன் பிரகசிக்குமாமே அதை வெச்சுத்தான் எழுதி இருப்பாளோ”!
வேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.

Collected from my friend.
 

Maithreem Bhajatha


Maithreem Bhajatha , Akhila Hruth Jethreem,

Atmavat eva paraan api pashyatha

Yuddham thyajatha , Spardhaam Tyajata ,

thyajatha Pareshwa akrama aakramanam

Jananee Prthivee Kaamadughaastey

JanakO Deva: Sakala Dayaalu

Daamyata Datta Dayathvam Janathaa

Sreyo Bhooyaath Sakala Janaanaam


Translation:

cultivate friendship which will conquer all hearts;

Look upon others as thyself;

Renounce war; forswear competition;

Give up aggression on others which is wrong;

Our Mother is here ready to fulfill all our desires;

We have the ever compassionate Lord our Father to Bless us too;

People of the World! Restrain yourselves; Give and be Kind;

May all people be happy and prosperous"

 
Until now, I never paid attention to the meaning of this song but I just love it and MS's rendition is superb.. This song has to be posted everywhere with the meaning so it can change people's mind about war, and pray for peace nothing but peace and camaraderie..

I was very fortunate to see Maha periyava a few days before his samadhi.. I was three feet away and felt this immense emotion, cannot describe, at that point, he might already be on the verge of leaving his body. Witnessing the presence of three Swamijis was a great experience.. got to speak to Jayendra Saraswathi swamigal... and the younger one was a mere boy at that time.. :-)
 

I got this message by e-mail:


Om Sri Gurubhyo Namaha!

"How much do we suffer if we have not slept for one day ? There is so much happiness in sleep.

From this alone, it is clear that the actionless state is a happy state. Meditation (Dhyanam) in the

actionless state, immersed in the form of the Lord - is our true state."

--- Sri Mahaa Periyavaa
 
Maha Periyava's advice on "Mastering the mind":

There are two different ways of mastering the mind -
the first is outward (bahiranga) and the second is inward (antaranga).

Read more: Kanchi Periva Forum - Divine thoughts of Maha Periva # 93



It is believed that the much awaited DVD Maha Periyavalin Mahathuvangal
(a biographical DVD on Maha Periyava released by Saregama) is available
at all leading music outlets like Giri Traders. Further it is also available through
online ordering.

Read more: Kanchi Periva Forum - DVD on Biography of Periva
 
A must read

Well, I got this article through mail today and thought I must share it with all of you. Was published in "The Hindu" on sep 13th 2012


Please take 5 mins to read this.
”These people are building a monument for Mahaperiyava. Can you
meet them?” It is either a couple of men or a group that generally visits the
office seeking the supplement’s help to take their mission forward. This writer
was therefore unprepared for the elderly lady, accompanied by two men. Her
nine-yard sari, kumkum and dazzling nose studs indicated a life steeped in
tradition. The orthodox façade receded as Rajalakshmi Vittal spoke, revealing a
mind fixed on the welfare of humanity.

“I had the fortune of being associated with Periyava for many
years. His simplicity, focus on logakshemam and kaarunyam always
moved me. ‘You will do something stupendous,’ he once told me. Now I’m beginning
to understand the import of his words,” Maami’s voice trails off as emotion
takes over. The reference is to Shanthi Ashramam run under the auspices of Sri
Jagathguru Kanchi Maamunivar Charitable Trust that she founded two years ago.


The ashramam is located on 1.8 acres in Ayyan Vaaikal South Bank,
Kollidam North Bank, Madhavaperumal Koil village, Nochiam (Tiruchi 621216). The
premises has been sanctified by a Veda pata sala and go(cow)sala run under the
supervision of Maami, who has made the ashram her abode. “Both were favourites
of Mahaperiyava and they are thriving, thanks to his blessings,” she says. The
land is a peninsula, which fact makes the location special.

“I was born and brought up in Tiruchi but didn’t know about
Nochiam or this place until someone offered it for sale,” says Maami. Money? “My
husband offered, other devotees happily pooled in and the land was bought.” A
thatched shed was erected and the Ashramam was born. Puja is offered to the
panchaloha idol of Paramacharya. Homams and Veda parayanam are routine affairs.


“A beginning has been made and there is a long way to go,”
continues Maami. “The thatched affair has to be replaced with a concrete
building. A lady in Bangalore was asked to draw a plan and what she came up with
was on the lines of Sri Chakra. Was it an indication to make a shrine for Ambal
here?” Maami was convinced and a panchaloha idol of Sri Lalitha is ready for
installation. The plan includes shrines for Ganapati, Veda Vyasa, Adi Sankara
and Subramanya.

Chandrasekhar, a stranger who Maami met in the train during a
journey is now a member of the Trust. “The Ashramam project had not materialised
and I was expressing my anxiety to the gentleman with whom I was travelling.
Chandru offered a thousand rupees on the spot and said, ‘I’m on board. Let’s do
it.’ I didn’t know him from Adam. But that is Periyava’s grace. He links you to
the right person provided you are sincere.”

Pointing to Ashokkumar, she says, “He is another pillar. They both
coordinate work from Chennai.” Chandru picks up the thread. “The place has to be
given shape. The Trust needs funds. It is simple. We want every family that
worships Periyava to contribute a hundred rupees. Contribution from a hundred
thousand devotees can help us raise the structure. The benefit of this
kainkaryam should reach everyone.” Maami intervenes to complete the
concept. “That was how Periyava wanted things done. ‘Take at least a rupee from
everyone. Let them participate in the good deed,’ he said often.”

The Trust is clear that they do not want to accumulate funds.
“Money stored brings problems in its train. What we need is adequate money to
cover the expenses. We’ll be happy with what the devotees can spare, even if it
is a rupee. Online transaction is fine. Contribution in the form of material is
also welcome,” says Chandrasekharan.

The Trust’s brochure speaks of retirement homes and arranging
funeral for the underprivileged. Help is extended for education and medical
treatment. “My priority at the moment is to install Sri Lalitha in a shrine.
Vedas should reach everyone. The pandits here will teach slokas and suktams;
anyone willing can learn. Their homes should vibrate with auspicious sounds.”


“‘I’m a poor old man, what can I do?’ – I cried when Periyava once
said this about welfare projects. Was he a poor man? No. He wanted us to take
the lead. This initiative is his. My appeal to his devotees is to strengthen our
hands so that the superstructure comes up without much delay. That’s the best
homage we can pay to the saint of Kanchi,” Rajalakshmi Maami sums up folding her
palms in prayer.

Cash, demand drafts and cheques made in favour of the Trust may be
sent to Lakshmi Vilas Bank, No 1, Tollgate, A/C number 0784301000016904, Indian
Bank, T.V. Koil, A/C Number 886244176, payable at Tiruchi. Contact 9840283124,
9443370605, 9842441091, 9840410346, 9841077045.
 

Om Sri GurubhyO Namaha.

Ego is the cause of desire and enmity. If ego goes, perception of high and low in any job will not be there.

We will be happily doing the job with the feeling that this is our duty. The world will prosper.

- Sri MahA PeriyavA
 
காஞ்சி சங்கரமடத்துடனும் மகா பெரியவருடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பட்டாபி சார், பெரியவர் பற்றிய மெய்சிலிர்க்கும் விஷயங்களைத் தொடர்ந்து நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.
”பெரியவா மடத்துக்கு வந்து பீடாரோகணம் பண்ணின காலத்துல, கஷ்டமான நிலைல இருந்தது மடம். பாங்க்ல கடன் வாங்கித்தான் நித்தியப்படி செலவுகளையே செய்யவேண்டியிருந்தது. எங்க தாத்தா மகாலிங்கய்யர்கிட்ட பெரியவா இதையெல்லாம் சொல்லியிருக்கார். அபர காரியத்துக்குதான் காய்கறி இல்லாம சமைப்பா.
ஆனா இங்கே, நித்தியப்படி சமையலுக்கே காய் வாங்க வழியில்லாததால, ஆரஞ்சுப் பழத் தோலை எங்கேருந்தாவது தேடிக் கொண்டு வந்து, சாம்பார்ல போட்டுச் சமைக்கற நிலை இருந்துதாம்.
அப்பல்லாம் விவசாயிகள் ல், வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூன்னு தங்களால் முடிஞ்சதைக் கொண்டு வந்து கொடுப்பா.
மத்தபடி காசா- பணமா கொடுக்கமுடியாது அவங்களால. ‘நாமளும் அதை எதிர்பார்க்கக்கூடாது’ம்பார் பெரியவா!
டீன் பருவத்துல பட்டத்துக்கு வந்தார் பெரியவா. கலவையில சேர்ந்தப்ப, அவருக்கு முன்னால பீடாதிபதியா இருந்த ஸ்ரீமகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்தி அடைஞ்சுட்டார். அதனால, ஆச்சார்யாள்கிட்டேருந்து படிக்கறதுக்கும் தெரிஞ்சுக்கறதுக்கும் வழியில்லாம போயிடுத்து. வைஷ்ணவ சம்பிரதாயத்துல ‘சுயம் ஆச்சார்ய புருஷன்’னு சொல்வாளே, அப்படித்தான் பெரியவாளும் வளர்ந்தார். முதல் நாள் காயத்ரி உபாசனை பண்ணிட்டு, மறுநாள் குருவுக்குப் பண்ணவேண்டிய காரியங்களைச் செஞ்சார் பெரியவா.
அந்தக் காலத்துல அந்தணக் குடும்பங்கள்ல, ‘நாடு பாதி, நங்கவரம் பாதி’ன்னு ஒரு வசனம் உண்டு. என்ன அர்த்தம் தெரியுமா இதுக்கு?
நங்கவரம் ஜமீன் ராஜப்ப ஐயர்னு ஒருத்தர்; அவருக்குக் காவிரிக்கரையில பதினஞ்சாயிரம் ஏக்கர் நிலம் இருந்துது. அடுத்தடுத்த காலங்கள்ல அதெல்லாம் போயிட்டுது. ஜமீனோட குடும்பத்தார், மகேந்திரமங்கலம்ங்கிற இடத்துல பாடசாலை ஒண்ணை ஏற்படுத்தி, வித்வான்கள்லாம் வர்றதுக்கு ஏற்பாடு பண்ணி, எல்லா கிரந்தங்களையும் படிச்சுத் தெரிஞ்சுக்கறதுக்கு வசதி பண்ணிக் கொடுத்தா. பெரியவா அதையெல்லாம் ‘மாஸ்டர்’ பண்ணிட்டார். அதாவது, நங்கவரம் ஜமீனும் உடையார்பாளையம் ஜமீனும்தான் மகாபெரியவாளோட வித்யாப்பியாசத்துக்கு ஏற்பாடு பண்ணினாங்கன்னு சொல்லுவா!
பெரியவாளோட தபஸ், யாத்திரை, பிரசங்கம், அவரோட புகழ்னு ஜனங்களுக்குத் தெரிய ஆரம்பிச்சப்ப… மடமும் செழித்து வளர ஆரம்பிச்சுது. அவரோட மகிமையைத் தெரிஞ்சுண்டு மடத்துக்கு உதவின மக்கள் ஏராளம்.
ஆனாலும், பண விஷயத்துல பெரியவா ரொம்பக் கவனமா, ஜாக்கிரதையா இருப்பா. எத்தனையோ பெரிய மனுஷங்க எல்லாம் பணத்தைக் கட்டி எடுத்துண்டு வந்து பெரியவா காலடியில கொட்டினாலும், எல்லாத்தையும் ஏத்துக்கமாட்டார். யார்கிட்டேருந்து வாங்கலாம்; யார்கிட்டே வாங்கக் கூடாதுன்னு அவருக்குத் தெரியும்.
அந்தக் காலத்துலேயே ஒரு பெரும் பணக்காரர் கோடி ரூபாயைக் கொடுக்க முன்வந்தப்பகூட, வேண்டாம்னு மறுத்த மகான் அவர்!
பழங்கள், அரிசி- பருப்புன்னு கொடுத்தா, வாங்கிப்பார். பணமா கொடுத்தா, தொடக்கூட மாட்டார். கிராமம் கிராமமா நடந்து போயிருக்கார். பஸ் ஸ்டாண்ட், ஸ்கூல், மரத்தடி, ஆத்தங்கரையோரம்னு, வசதி வாய்ப்புகளையெல்லாம் பார்க்காம, எங்கே இடம் கிடைக்கறதோ அந்த இடத்துல தங்கிப்பார், பெரியவா!
அவரோடயே நாங்களும் தங்குவோம்; சமைக்கிறதுக்கு அரிசி, பருப்பெல்லாம் கையோடு எடுத்துண்டு போயிடுவோம். ஒரு தடவை, சித்தூர் செக்போஸ்ட்ல இருந்த அதிகாரிகள் எங்ககிட்ட இருந்த ஒரேயரு அரிசி மூட்டையையும் பறிமுதல் பண்ணிட்டா.
‘அரசாங்கம் கேக்கறது; கொடுத்துடு’ன்னு சொல்லிட்டார் பெரியவா.
‘அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு என்ன பண்றது?’ன்னு எங்களுக்கெல்லாம் ஒரே கவலையா போச்சு! இந்த விஷயம் தெரிஞ்சதும், அப்ப ஆந்திர மாநில சீஃப் மினிஸ்டரா இருந்த என்.டி. ராமராவ் பதறிப்போயிட்டார். அரிசியைத் திருப்பிக் கொடுக்க உத்தரவு போட்டதோடு, ஓடி வந்து பெரியவாகிட்டே நேரில் மன்னிப்பும் கேட்டுண்டார். பெரியவா மேல அவருக்கு அபரிமித மரியாதை!
உடனே பெரியவா, ‘இதுல மன்னிப்புக் கேக்க என்ன இருக்கு? அரசாங்க சிப்பந்திகள், அவாளோட கடமையைத்தானே செஞ்சா! அதுல குத்தம் சொல்லப்படாது. காஞ்சி மடத்துமேல நீங்க வைச்சிருக்கற அன்பும் மரியாதையும் என்னிக்கும் மாறாம இருக்கணும்’னு ஆசீர்வதிச்சார் கருணையுடன்!
என்.டி.ஆர், சென்னாரெட்டி, எம்.ஜி.ஆர்-னு எல்லாருமே பெரியவா மேல பெரிய பக்தியோடு இருந்தா. ‘அவா நம்ம மடத்துமேல மரியாதை வெச்சிருக்கிறது பெரிசில்லே; அந்த மரியாதையை நாம காப்பாத்திக்கணும். அதான் பெரிசு’ன்னு அடிக்கடி சொல்வார் பெரியவா!” என்று சிலிர்த்தபடி சொன்ன பட்டாபி சார், காஞ்சி மகானுக்கும் மற்ற மகான்களுக்குமான தொடர்புகளையும் விவரித்தார்.
”திருக்கோவிலூர் ஞானானந்தகிரி சுவாமிகள்னு பெரிய மகான் இருந்தார். அவர் வாழ்ந்த இடத்தைத் ‘தபோவனம்’னு சொல்வா. முக்காலமும் உணர்ந்த மகான் அவர்; உட்கார்ந்த இடத்துலேருந்தே எத்தனையோ பக்தர்களைக் காப்பாத்தி அருள்பாலிச்சிருக்கார்! எப்பவும் சிரிச்ச முகத்தோடு இருப்பார்; தெய்வாம்சம் உள்ள ஞானி. இன்னிக்குப் பிரபலமா இருக்கிற நாமசங்கீர்த்தனத்துக்கு மூல காரணம், அவர்தான்!
ஒருமுறை, அவரைத் தரிசனம் பண்ண வந்த ஜனங்களும், அங்கேயே இருக்கிறவங்களும் கவலைப்பட ஆரம்பிச்சுட்டா. ஏன்னா… சுவாமிகள் ஒரே இடத்துல உக்கார்ந்துண்டு, ஆடாம அசையாம அப்படியே ஸ்தம்பிச்சு இருந்தார். அதைப் பார்த்து என்னமோ, ஏதோன்னு பதறிப்போயிட்டா. அதுவும், சிலை மாதிரி அஞ்சாறு நாள் அசைவில்லாம உட்கார்ந்திருந்தா, பார்க்கிறவாளுக்குப் பதற்றம் வரத்தானே செய்யும்?!யார்கிட்ட போய், என்னன்னு கேக்கறதுன்னு தெரியலை பக்தர்களுக்கு! அதே நேரம், சுவாமிகளை அந்த நிலையில் பார்க்கிறதுக்கும் மனசு சங்கடப்பட்டுது. அப்ப யாரோ சிலர், ‘எல்லாரும் உடனே காஞ்சிபுரம் போய், பெரியவாகிட்ட விஷயத்தைச் சொல்லி, என்ன பண்றதுன்னு கேளுங்கோ’ன்னு யோசனை சொல்ல… பக்தர்கள் சில பேர் கிளம்பி, பெரியவாகிட்ட வந்து, ஞானானந்தகிரி சுவாமிகள் பத்தி விவரம் சொன்னா.

எல்லாத்தையும் கேட்டுண்ட பெரியவா, ‘கவலைப்படாதீங்கோ! அவருக்கு ஒண்ணும் ஆகலை. அவர் சமாதி நிலைல இருக்கார்; சாம்பிராணிப் புகை போடுங்கோ. அது ஒருவித ஆராதனை; சமாதி நிலையிலேர்ந்து எழுந்துடுவார்’னு சொன்னார். பக்தர்களுக்கு எல்லையில்லாத சந்தோஷம்.‘சுவாமிக்கு ஒண்ணும் ஆகலே’ங்கிற மகிழ்ச்சியோடு திருக்கோவிலூருக்கு ஓடினா. பெரியவா சொன்னபடி, சாம்பிராணி புகை காட்டி, ஆராதனை பண்ணினா. அதன் பிறகு, ஞானானந்தகிரி சுவாமிகள் சமாதி நிலைலேருந்து மீண்டு வந்தார்.
ஒருமுறை, பெரியவா திருவண்ணாமலை போயிருந்தப்போ, கிரிப் பிரதட்சிணம் பண்ணினார். அவரோடு இன்னும் நாலஞ்சு பேர் போனா. கொஞ்ச நேரத்துல, பகவான் ரமணரோட சீடர்கள் சில பேர், கையில் பிட்சைப் பாத்திரத்தோடு எதிரே வந்துண்டிருந்தா.
பெரியவாளைப் பார்த்ததும் நமஸ்காரம் பண்ணிட்டு, ‘நாங்க பகவான் ரமணரோட சீடர்கள். பகவான் அங்கே ஆஸ்ரமத்துல இருக்கார்’னு சொன்னா. உடனே பெரியவா, ‘அப்படியா’ங்கிறாப்பல தலை அசைச்சுக் கேட்டுண்டுட்டு, புன்னகையோடு அவங்களை ஆசீர்வாதம் பண்ணிட்டு, மேலே நடக்க ஆரம்பிச்சார்.
ரமண பக்தர்கள் கொஞ்சம் தயங்கி நின்னுட்டுக் கிளம்பிப் போனாங்க. அவாளுக்கு வருத்தம்… ரமணரைப் பத்தி, அவரோட சௌக்கியம் பத்தி, பெரியவா ஒண்ணுமே விசாரிக்கலையே; தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலையேன்னு!

அந்த பக்தர்கள் மலையேறிப் போய், ஸ்ரீரமண பகவான்கிட்ட பிட்சையைக் கொடுத்துட்டு, வழியில காஞ்சிப் பெரியவாளைத் தரிசித்ததைச் சொல்லி, தங்களது வருத்தத்தையும் தெரிவிச்சாங்க.அதைக் கேட்டதும் வாய் விட்டுச் சிரிச்சாராம், ரமண பகவான்! ‘அட அசடுகளா?! நாங்க ரெண்டு பேரும் பேசிண்டாச்சு; இப்பவும் பேசிண்டிருக்கோமேடா; இதுக்கா வருத்தமா இருக்கேள்?!’ன்னாராம். திகைச்சுப் போய் நின்னாளாம், பக்தர்கள்!

இதையெல்லாம் அப்போ நேர்ல இருந்து பார்த்த 87, 88 வயசு தாண்டின சுமங்கலி மாமி, எங்கிட்ட இதைச் சொன்னப்போ, அப்படியே நெகிழ்ந்துபோயிட்டேன்.காஞ்சிப் பெரியவரும் ஸ்ரீரமணரும் மகா ஞானிகள்; தபஸ்விகள். அவங்களுக்குள்ளே எப்பவும் சம்பாஷணை நடந்துண்டிருக்குன்னு தெரிஞ்சபோது ஏற்பட்ட நெகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை!

பால் பிரன்ட்டன் என்பவர் ஆன்மிக விஷயமா பேசறதுக்கு மகா பெரியவாகிட்ட வந்தார். அப்ப பெரியவா, ‘அவர் ஞான மார்க்கத்துல போயிண்டிருக்கார். நான் கர்ம மார்க்கத்துலே போயிண்டிருக்கேன். உன்னோட கேள்விகளுக்கெல்லாம் பதில் தரக்கூடியவர், திருவண்ணாமலையில இருக்கார். உன் சந்தேகங்களையெல்லாம் அவராலதான் தீர்த்துவைக்க முடியும்’னு சொல்லி, பால் பிரன்ட்டனை ரமணர்கிட்டே அனுப்பி வைச்சார். பால் பிரன்ட்டனும் அதன்படியே ரமணரை வந்து சந்திச்சு, தன்னோட சந்தேகங்கள் எல்லாம் விலகி, அவரோட பக்தர் ஆகி, புஸ்தகமே எழுதினாரே!

பெரியவாளுக்கும் பகவான் ரமணருக்கும் பரஸ்பரம் அன்பு இல்லேன்னா இது நடந்திருக்குமா? மொத்தத்துல, காஞ்சி மகானும் ஸ்ரீரமண பகவானும் நம் தேசத்துக்குக் கிடைச்சது மாபெரும் பாக்கியம்!
 
Last edited:
நேத்திக்கு ஒரு அம்மா சொன்னார். நான் நெறைய ஸ்லோகம் பாராயணம் பண்றேன்.மத்யானம் சாப்பிடவே ஒரு மணியாறது. ஆனா பிரச்சினைகள் தீரலே…பகவான் கண் பார்க்கலேன்னு வருத்தப்பட்டார்.

“ஸ்லோகம் சொல்றச்சே சுவாமி முன்னாடி உட்கார்ந்துண்டு, சுவாமியை மனசிலே நிறுத்திண்டுதானே பாராயணம் பண்றேள்”னு கேட்டேன்.
“அதெப்படி முடியும்? குளிச்சிண்டே,வேற வெலை பார்த்துண்டே தான் சொல்றேன்.எல்லாம் மனப்பாடம்.தப்பு வராது”ன்னா.
காய் நறுக்கணும்னா அரிவாள்மணை,கத்தியைக் கிட்டே வைச்சுக்கறோம். சமைக்கணும்னா அடுப்பு கிட்டே போகணும்.
குளிக்கணும், துவைக்கணும்னா தண்ணீர் பக்கத்திலே போறோம். ஸ்கூட்டர், கார் எதுவானாலும் கிட்ட இருந்து ஓட்டினா தான் ஓடறது.
ஆனா ஸ்லோகம் சொல்லணும்னா மனசு சுவாமிகிட்டே போக வேண்டாமா? “ஸர்வாந்தர்யாமி” தான் அவன். ஆனாலும் பிரச்சினை பெரிசுன்னா பக்கத்துல உட்கார்ந்து அனுசரணையா சிரத்தையா
சொல்லுங்கோ… நிச்சயம் கேட்பான்.
வேறு வேலையில் கவனம் இல்லாமிலிருந்தால் விபத்து நடக்கும். ஆனா பகவான் ஞாபகம் இல்லாம ஸ்லோக மந்திரத்தை முணு முணுத்தா போறும்னு நெனைக்கலாமா?
புதுப் பூவைப் பார்த்தா பகவானுக்குத் தரணும்னு ஆசை வரணும். தளதளன்னு இருக்கிற சந்தனத்தை பகவானுக்கு பூசிப் பார்க்கணும்னு நெனைப்பு வரணும்.இந்தப் புடவையிலே அம்பாள் எப்படி
இருப்பாள்னு நெனைச்சு தியானம் பண்ணினாலேகருணை செய்கிறவாளாச்சே!
கல்லைத் தூக்கி சமுத்திரத்திலே போட்டா மூழ்கிடும். ஆனா மரத்தாலே கப்பல் பண்ணி, அதிலே எத்தனை கல் ஏத்தினாலும் மூழ்கிறதில்லே!
கவலைகள் கல்லு மாதிரி,பகவான் தெப்பம் மாதிரி, மனசு என்கிற சமுத்திரத்திலே பகவானைத் தெப்பமாக்கணும். தெய்வத்தை இணைக்கிற ஆணிகள் தான் பூஜை மந்திரங்கள் எல்லாம்.
அப்புறம் கவலைகளைத் தூக்கி தெப்பத்தில் இறக்கலாம். சம்சாரசாகரத்தில் மூழ்கடிக்கப்படாமல் கரை சேர்ந்து விடலாம்.

Collection from : Maha Swamigal's messages
 
Dear BAla Sir,

Thanks for the post no 43. Who else but Mahaperiyava can explain everything in such a simple language!! Superb posting.

Thanks again. Cheers
 

Om Sri Gurubhyo Namaha!

"Having taken several births, having performed numerous activities, with the impressions of the past (purva vAsanAs),

we have hidden our real form which is one of bliss."

- Sri MahA PeriyavA
 
An interesting input one can read and enjoy.

adi-shankara.jpg



ஆசார்யாள் உத்ஸவமும் இந்த மடத்துக் கைங்கர்யமும் நீங்களெல்லாம் திரவியத்தாலும் தேஹத்தாலும் செய்யணுமென்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். ‘வருஷத்தில் ஒரு வாரம் லீவு போட்டுவிட்டு வந்தாவது மட கைங்கர்யம் பண்ணுங்கள்; வாரத்தில் week-end ஒருநாள் மடத்துக்குக் கொடுங்கள்’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன். அதெல்லாவற்றையும்விட இன்றைக்கு இப்போது அஞ்சு நிமிஷம் ” ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ” என்று மனஸை நிறுத்தி மனஸுக்குள் சொல்லிவிட்டீர்களானால் அதுதான் மஹா உத்ஸவம், மஹா பெரிய மடத்துக் கைங்கர்யம். நீங்கள் நன்றாயிருக்க, உங்களை மடம் நன்றாகவைக்க — எல்லாவற்றுக்கும் இந்த ஜபத்தைவிட எதுவும் வேண்டாம்! பதார்த்தத்தால், கைங்கர்யத்தால் செய்வதைவிட மனஸால் செய்வது பெரிசு. I have been saying many times that you all must participate in the celebration of Adi Shankaracharya’s Jayanthi and Mutt’s activities providing assistance both physically and materially. “Take a week off from office work every year and utilize that time to come to the Kanchi Mutt and help out in its various needs; And spare atleast one day every weekend for the Mutt”, I have said all along. But more than that, I request you all, now and here, to chant ‘Hara Hara Shankara, Jaya Jaya Shankara’ in your minds in a focussed manner for atleast 5 minutes. This will be the best festivity and the loftiest assistance to the Mutt possible! Nothing more than this Hara Hara Shankara japam is required to take care of your well being and for the Mutt to take care of you. This Chant in the mind is superior to all physical and material assistance to the Mutt.
வாய்விட்டுச் சொல்லாமல் எல்லாரும் ஒரு அஞ்சு நிமிஷம், ” ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ” என்று ஜபித்துக் கொண்டிருங்கள் — நான், ” அரோஹரா ” என்று சொல்கிற வரை!
Everyone, chant ‘Hara Hara Shankara, Jaya Jaya Shankara’ in their minds alone (and not chanting it audibly) for 5 minutes now, until I say ‘Arohara’!
(இவ்விதம் கூறிச் சில நிமிஷங்கள் எல்லோரையும் மானஸிகமாக ஜபிக்கச் செய்கிறார்கள். அதன்பின் மும்முறை “அரோஹரா” சொல்லி அவர்களையும் சொல்ல வைத்து, ” கோவிந்த நாம ஸங்கீர்த்தனம் “என்று தாம் கூறி,” கோவிந்தா கோவிந்தா “என்று ஸபையோர் கோஷிக்க, அன்றைய உபந்நியாஸத்தை முடிக்கிறார்கள்.)
— இப்பகுதி 1960 ஆச்சார்ய ஜெயந்தி அன்று திருச்சியில் ஆற்றப்பட்ட உரையில் வருவதாகும்.
(He said thus to those assembled to chant in total meditation. And then Says ‘Arohara’ three times, makes them also say it, and then Says, ‘Govinda Nama Sankeerthanam’ to which the devotees say in unison ‘Govinda, Govinda!’. And thus ends that day’s Discourse)
— This is part of His discourse at Trichy in 1960 on Adi Shankaracharya’s Jayanthi.


The above Tamil text is from Deivathin Kural, Shankara Charitham, Vol 5.
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top