• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
மஹாபெரியவாளுடைய சித்திரம். இதில் சுட்டிக்காட்டிய ஒரு சூக்ஷுமம், தானாகவே,
என்னையும் அறியாமல் விழுந்திருப்பதைக் கண்டு மெய் சிலிர்த்துப்போனேன். அதனால்தான் இதன் தலைப்பு ‘காமாக்ஷியும் மீனாக்ஷியும்’. மஹாபெரியவாளைத் தரிசித்த
கோடி கோடி மாந்தர்களில் பலரும் அவரை காஞ்சி காமாக்ஷியாகவே கண்டிருந்தனர்.

மஹபெரியவாளுக்கு எல்லா தெய்வங்களிலேயும், காஞ்சி காமாக்ஷியிடம் ஒரு பக்ஷ பாதம் உண்டு. இதை அவரே சில இடங்களில் கூறியிருக்கிறார். ஒரு முறை ரா.கணபதி அண்ணாவிடம் பேசிக்கொண்டிருக்கை;யில், “……எனக்கு எல்லா ஸ்வாமிக்குள்ளேயும; அம்பாள்னா தனி முக்கியம்.அந்த அம்பாளே பல ரூபங்களிலே இருக்கறதுலே, காமாக்ஷின்னா தனி முக்கியம்னு ஒரு பக்ஷ பாதம்….” ( ஸ்ரீ ரா.கணபதி எழுதிய ‘மஹாபெரியவாள் விருந்து’ என்ற புத்தகத்தில் பக்கம் 28).
இந்தப் படம் வரைய ஆரம்பிக்கும்போது, அவரை மட்டும் தனியாகப் வரையாமல் ஒரு கோவில் கோபுரத்தையும் சேர்த்துப் போடுவோமே என்று நினைத்துத்தான் ஆரம்பித்தேன். என்னிடம் நண்பர் கொடுத்த ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் கோவில் கோபுர ஃபோட்டோ இருந்தது. அதையே வரைந்து விடலாம் என்று முடிவு பண்ணி, வரைந்து முடித்தேன்.
காஞ்சி காமாக்ஷியும் மதுரை மீனாக்ஷியும் ஒரே சித்திரத்தில் சேர்ந்து அமைந்து விட்டது மஹாபெரியவாள் அனுக்ரஹம்
அன்றி வேறென்னவாக இருக்க முடியும்?


Extracted from the Messages collection of Maha Periyaval.
 


A humble submission with no disrespect to the members posting under this thread.--Being mostly copy paste of material and posting of URL links and not being subject matter of discussions , perhaps this thread and similar ones may be moved from "General Discussions" to a more appropriate section of TB website

Kannan
 
--Being mostly copy paste of material and posting of URL links and not being subject matter of discussions , perhaps this thread and similar ones may be moved from "General Discussions" to a more appropriate section of TB website
Dear Sir,

Most of the members have the tendency to look in the GD forum and hence I posted this thread here.

The basic idea is to compile MahAperiyavA's teachings in a thread which will be viewed by more members. :)
 

மனோரத முத்திரை மூர்த்தி
========================
பக்தர்களின் நியாயமான ஆசையை நிறைவேற்றி வைப்பதில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளுக்கு நிகர் யாருமுண்டோ? ப்ரத்யக்ஷ பெரியவாளை சிம்மாசனத்தில் அமர்த்தி சுவாமி புறப்பாட்டிற்காக தேரில் அலங்கரிக்க வேண்டுமென அடிமை வெகுநாளாக அவா கொண்டிருந்தார். காமாட்சி அம்மன் கோவிலில் தத்ரூபமாக ஒரு படம் இருப்பதை பார்த்துவிட்டு அம்மாதிரியே எம்பெருமான் ப்ரத்யக்ஷ ரூபம் இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார்.
ஜகத்துக்கெல்லாம் ராஜாவான வேதவேந்தனை மலர் சிம்மாசனத்தில் வீற்றிருப்பது போல ஒரு காட்சி கிடைத்தால் அதை அவ்வருட ஜெயந்தி பத்திரிகையில் அலங்கரிக்கலாமென்ற எண்ணம். இதற்கு சென்னையை சேர்ந்த ஆடிட்டர்களான சங்கரன், ராகவன், பாலாஜி ஆகியோர் உதவி செய்தனர்.
தானே வலிய வந்து பிரத்யேகமாக இதற்கு முன் யாருக்கும் கிட்டாத திவ்ய சாம்ராஜ்ய சக்கரவத்தியாக காட்சி அளிக்க தயாளன் விழைந்து விட்டார். ஒரு புஷ்ப சிம்மாசனத்தை தயார் செய்து கொண்டு போய் மீளா அடிமை சென்ற போது பிரான் ஏகாதசி உபவாசத்தோடு சயனித்திருந்தார். இருப்பினும், அந்த நியாயமான ஆசையை பூர்த்தி செய்ய ஒப்புக்கொண்டு இசைந்தது புண்ணிய மனம்.
இத்யாதிகளை ஏற்றிக்கொண்ட பிரான் அங்கு காட்சியருளினார். இதற்காக கொண்டு வரப்பட்ட போட்டோகிராபர் பல காட்சிகளை எடுத்தார். எல்லாம் வல்ல இறைவனும் பரம கருணாமூர்த்தியும் உலகில் நடக்கும் எல்லா விஷயங்களும் தெரிந்தவர் மட்டுமல்லாமல் அண்டசராசரங்களை அறிந்தவரான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவா தன்னை நிழற்படம் எடுக்கும்போது இசைந்து அமர்ந்திருந்தது யார் செய்த பாக்கியம்.அடிமைக்கு இந்த அறிய வாய்ப்பு புளகாங்கிதம் அடைய வைத்தது. பல நிழற் திரு உருவங்களில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாள் தனது வலது கரத்தை யார் எது கேட்டாலும் மனோரதங்கள் பூர்த்தி யாகும்படியான வகையில் அமைந்த காட்சி அற்புதமாக அமைந்து விட்டது. அந்த சக்கரவர்த்தி மலர் சிம்மாசனத்தில், மலர் கீரிடம் அணிந்து, மலர் பாதுகையுடன் தன் திருக்கரத்தில் மகோன்னதமான மனோரத முத்திரையுடன் அந்த அருங்காட்சி பிரபல பத்திரிகைகளிலும் அச்சேறி புனித படுத்தியது.
அந்த திருவுருவம் தான் வருடம் தோறும் புஷ்ப ரதம் ஏறி காஞ்சியின் ராஜ வீதிகளில் ராஜ உலா வந்து கொண்டு இருக்கிறது.

Collection : Maha Swamigal excerpts
 
One of the photos where HH is performing Atmapuja perhaps on Pradhosha evening speaks volumes of His greatness, power, amazing tranquility and above all great compassion, all rolled into one supreme being. Those who are able to see this photo should get His blessings in abundance and should lead a life as taught by Him.


20121123_175730.jpg


20121123_175632.jpg


20121123_175523.jpg
 
[h=2]பத்து பிரதோஷமும் பலா பலன்களும்![/h] http://mahaperiyavaa.wordpress.com/2012/12/14/பத்து-பிரதோஷமும்-பலா-பலன/

(Pradosham) article from - http://jothidasudaroli.blogspot.in/2012/12/blog-post_2.html.




மாதத்தில் இருமுறை பிரதோஷ வழிபாடு செய்யப்படுகிறது சிவன் ஆலயங்களில். இது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
ஆனால் பிரதோஷத்தில் எத்தனை வகைகள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
தெரிந்தால் சந்தோசம். தெரியாவிட்டால் தெரிந்து கொள்ளுங்கள்.
நித்திய பிரதோஷம்.





தினமும் மாலை வேளையில் சூரிய அஸ்த்தமனத்திற்கு முந்தைய 90 நிமிடங்கள் நித்திய பிரதோஷம் எனப்படும். இந்த நேரத்தில் தினம் தோறும் சிவனை வணங்குதல் நல்லது.
 
திவ்ய பிரதோஷம்.





பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தால் அது திவ்ய பிரதோஷம் எனப்படும். அன்று மரகத லிங்கத்திற்கு அபிழேகம் செய்தால் முன்ஜென்ம கர்மம் விலகும்.
தீராத வியாதிகள் தீரும். வழக்கு தொல்லைகள் அகலும். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். இதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் பஞ்சலோகத்தால் ஆன சிவலிங்கத்திற்கு அபிழேகம் செய்தும் பூரண பலனை பெறலாம்.
தீப பிரதோஷம் ( மகா பிரதோஷம் )




சனிக்கிழமையும் திரயோதசி திதியும் இணைந்து வருகிற தினம் மகா பிரதோஷம். அன்று முறையாக விரதம் இருந்து சிவாலயம் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

உங்கள் வயது என்னவோ அதற்க்கு ஏற்றார் போல் அதே எண்ணிக்கையில் விளக்கேற்றி வணங்கலாம்.
உதாரணமாக உங்களுக்கு வயது 25 என்றால் 25 விளக்குகள் ஏற்றி வழிபடுவது சிறப்பு.
சப்தரிஷி பிரதோஷம்.






பிரதோஷ காலத்தில் முறையாக பூஜைகளை முடித்த பின், வெட்ட வெளியில், வானம் முழுமையாக தெரிகிற இடத்தில் நின்று கவனித்தால் சப்தத ரிஷி மண்டலம் என்று சொல்லக்கூடிய நட்ச்சத்திர கூட்டம் தெரியும்.
அந்த ரிஷிகளை வணங்கினால் அவர்கள் ஆசிர்வாதம் கிடைக்கும். ஒரு வேலை வானம் தெளிவாக தெரியாவிட்டால் கிழக்கு முகம் நின்று சப்த ரிஷிகளை மனதில் தியானித்து வணங்கலாம்.
ஏகாட்ச்சர பிரதோஷம்





வருடத்தில் ஒரு முறை மட்டும் வரும் மகா பிரதோஷத்தை ஏகாட்ச்சர பிரதோஷம் என்பார்கள். அன்றைய தினம் சிவாலயம் சென்று ஓம் என்ற பிரணவ மந்திரத்தை சொல்லி வழிபட்டால் கோடி தோஷம் விலகும்.






 
அர்த்தநாரி பிரதோஷம்.



வருடத்தில் இரண்டு முறை மட்டும் மகா பிரதோஷம் வந்தால், அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் பிரிந்து வாழும் தம்பதிகள் சிவாலயம் சென்று வழிபட்டால் ஓன்று சேர்ந்து வாழலாம். மேலும் கருத்து வேற்றுமையோடு வாழும் தம்பதிகள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் எல்லா நம்மையும் பெறலாம். பிரித்தவர்கள் கூடுவார்கள்.
திரிகரண பிரதோஷம்.



வருடத்திற்கு மூன்று முறை பிரதோஷம் வந்தால் அதை திரிகரண பிரதோஷம் என்பார்கள். இதை முறையாக கடைபிடித்தால் இல்லாமை என்ற சொல் இல்லாமல் போய்விடும். அஷ்ட லக்ஷ்மிகளின் அருளாசியும் கிட்டும்.
பிரம்ம பிரதோஷம்



பிரம்மாவிற்கு திருவண்ணாமலையில் ஏற்பட்ட சாபம் நீங்க,ஒரு வருடத்தில் வரும் நான்கு சனிக்கிழமைகளில் வந்த சனி பிரதோஷத்தை முறையாக கடைப்பிடித்து சாப விமோசனம் பெற்றார். நாமும் இந்த பிரதோஷத்தை கடிபிடித்தால் முன்னோர் சாபம், முன்வினை பாவம் எல்லாம் விலகிவிடும்.
 
கந்த பிரதோஷம்.






சனிக்கிழமையும், திரயோசசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்த பிரதோஷம் என்று பெயர். இது முருக பெருமான் சூர சம்ஹாரத்திற்கு முன் வழிபட்டதால் இந்த பெயர் வந்தது. முருகனருள் வேண்டுபவர்கள் இந்த வழிபாட்டை செய்யலாம்.
சட்ஜ பிரபா பிரதோஷம்




தேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறைபிடிக்க பட்டனர். ஏழு குழந்தைகளை கம்சன் கொன்றான். எனவே எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை அவர்கள் அனுஷ்ட்டித்ததால் கிருஷ்ணன் பிறந்தான்.
வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்து அதை கடைபிடித்தால் பிறவி என்னும் பெரும் கடலை நீந்தி, பிறப்பில்லா பெருமையை பெறலாம்.
அஷ்டதிக் பிரதோஷம்





ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷம் முறையாக கடைபிடித்தால் அஷ்ட்டதிக் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த புகழ், கீர்த்தி, செல்வாக்கு ஆகியவற்றை தருவார்கள்.
 
வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால் அது நவகிரக பிரதோஷம். இப்படி ஒன்பது பிரதோஷம் வருவது மிக மிக அரிது.
அப்படி வந்தால், அதை நீங்கள் அனுஷ்ட்டித்தால் சகல கிரக தோஷமும் விலகும். தடை பட்ட திருமணம், புத்திர பாக்கியம், வேலை வாய்ப்பு, பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை எல்லாம் கிட்டும்.
துத்த பிரதோஷம்




இதற்கு வாய்ப்புகள் குறைவுதான். வருடத்தில் பத்து மகா பிரதோஷம் வந்து, அந்த பத்து பிரதோஷத்தையும் அனுஷ்ட்டித்தால் இந்த உலகமே கையில் கிடைத்த மாதிரி உச்சாணி கொம்புக்கு போவார்கள்.
 
[h=5][/h] [h=5]மகா பெரியவா சரணம் : பாவையின் ஏற்றம் இங்கே தொடக்கம்
மார்கழி மாதம் பிறந்து விட்டால் போதும் – தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் கோவில்களின் கோபுரங்களிலிருந்தும் இசைமாரி பொழிய ஆரம்பித்து விடும் – விடியற்காலை நாலு மணியிலிருந்தே !
சிவன் கோவிலாக இருந்தால், திருவெம்பாவையும் திருபள்ளிஎழுச்சியும்; பெருமாள் கோவிலாக இருந்தால், திருப்பாவை.
இது தவிர, திருப்பாவை – திருவெம்பாவை மாநாடுகள்; வைணப் புலவர்கள் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு, ஊர் ஊராகச் சென்று சொற்பொழியாற்றுவார்கள். பள்ளிக்கூடங்களில், பாவப் பாடல் போட்டி – பரிசுகள் !
இத்தனைக் கோலாகலம் எப்போது, யாரால் ஆரம்பிக்கப்பட்டது ?
தலைக்காவேரியில்,நீர்த்திவலைகலாகக் தோன்றும் காவேரி, பறந்து விரிந்து வெள்ளமாகப் பெருகி அகண்டகாவேரியாக மாறிப் பிரமிக்க வைக்கிறது.
அப்படித்தான், பாவைகள் பப்ளிக் ஆனதும், யாரோ சில சைவர்களும் வைணவர்களும் தனித்தனியாக முணுமுணுத்துக்கொண்டிருந்த பாவைகள், பார் எங்கும் பரவி, விசுவரூபம் எடுத்துவிட்டன.
1949, மகாசுவாமிகள் திருவிடமருதூரில் தங்கியிருந்தார்கள்.
மகாலிங்கஸ்வாமி கோவிலில், செட்டியார் வகுப்பைச் சேர்ந்த ஓர் அம்மையார் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு நாள்தோறும் பாடி வருவதைப் பெரியவா கவனித்துவிட்டர்கள்.
‘ அந்த ஆச்சி என்ன பாடிக்கொண்டிருக்கா தெரியுமோ ?’
உடன் வந்துக்கொண்டிருந்த பக்தர் ராமமூர்த்தியையும் கைங்கர்யபரர் கண்ணனையும் பார்த்துக் கேட்டார்கள். பெரியவா.
ஒரே குரலில், ‘தெரியாது’ என்று பதில் வந்தது.
‘அந்த ஆச்சி அம்மாள், திருவெம்பாவை படிச்சிண்டிருக்கா – நல்ல ராகத்தோட..’
இரண்டு நிமிஷ நடை.
‘இந்தப் பாடல்களை எல்லோரும் பாட வேண்டும் என்று பிரசாரம் செய்தால், யாரவது பாடுவார்களா ?..’
‘ஒருவரும் பாட மாட்டார்கள். இது, யாருக்குத் தெரியும் ?..’
பெரியவாள் சிந்தனையில் ஆழ்ந்தார்கள். அவர்கள் மனத்திரையில் மணிவாசகரும் ஆண்டாளும் காட்சி தந்தார்கள் போலும் !
அற்புதமான பாடல்கள், அறைக்குள்ளேயே கிடக்கின்றன, அரங்கத்துக்கு வந்தால் லோகோபகாரமாக இருக்குமே ?..
‘ராமமூர்த்தி.. திருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு நடத்தணும்; ஏற்பாடு செய் ..’
அவ்வாறே ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னணிப் பாடகர்கள், சொற்பொழிவாளர்கள் கலந்துகொண்டார்கள், ஏகப்பட்ட விளம்பரம் !
திருவெம்பாவை – திருப்பள்ளிஎழுச்சி – திருப்பாவை புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டன.
பாவைப் பாடல்களின் பண் நயமும் இலக்கிய நயமும் அறிஞர்களால் விளக்கி மொழியப்பட்டன. அவற்றின் பக்தி ரசத்தைச் சுவைத்து மயங்காதவரே இல்லை.
பாவைப் பாடல் இசைத்தட்டுக்கள் அமோகமாக விற்பனை ஆயின.
மார்கழி மாதம் வந்தது.
பெரியவா, வெறும் உபதேசியார் அல்லர். உபதேசங்களை நத்திக் காட்டுபவர்கள்.
‘மார்கழி விடியற்காலையில் பாவைப் பாடல்களைப் பாட வேண்டும் ‘ என்று சொல்லிவிட்டால் மட்டும் போதுமா ?
‘பிரகலாதன்’ என்று ஒரு யானை ஸ்ரீமடத்தில் இருந்தது. ராமமூர்த்தியையும் கண்ணனையும் அதன் மேல் உட்கார்ந்துகொண்டு, கையில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில், புத்தகத்தைப் பார்த்துப் பாவைப் பாடல்களைப் பாடிக்கொண்டு, திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலின் நான்கு வீதிகளிலும் பவனி வரச் செய்தார்கள்.
அப்புறம் கேட்பானேன் !
தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாவை வெள்ளம் பாய்ந்தது; பக்திப் பயிர் வளர்ந்தது; நாயன்மார் – ஆழ்வார் பக்கம் மக்கள் பார்வை திரும்பியது. தமிழ் பக்தி இலக்கியத்துக்கு அடித்தது யோகம் !
ஓரிரு ஆண்டுகள் சென்றன.
ராமமூர்த்தியையும் கண்ணனையும் அழைத்தார்கள், பெரியவாள்.
‘ஞாபகம் இருக்கா ? — திருவெம்பாவை யாருக்குத் தெரியும் ? அதை யாரும் பாடமாட்டா – ன்னு சொன்னேளே ? — இப்போ யாரவது பாடராளா ?…’
இது, பெரியவாள் கொடுத்த குட்டு இல்லை; அன்புடன் வழங்கிய ஷொட்டு !

Reference : Facebook

[/h]
 
[h=2]கர்மத்திலேயே ஆரம்பிக்க வேண்டும்[/h] http://mahaperiyavaa.wordpress.com/2012/12/15/கர்மத்திலேயே-ஆரம்பிக்க-வ/




அநேக நியமங்களோடு பெரிய யக்ஞம் செய்வது, விரதம் இருப்பது, பிரம்மாண்டமாக கோயில் கோபுரங்களைப் பார்த்துப் பார்த்துக் கட்டுவது, குளம் வெட்டுவது என்றிப்படியெல்லாம் முன்னே பல காரியங்களைச் செய்து வந்தார்களே, இவையெல்லாம் அந்தந்த லட்சியத்தோடு நின்றுவிடவில்லை. இவற்றின் முக்கியமான லட்சியம் சித்தத்தை ஒருமுகப்படுத்தி சுத்தமாகப் பழகுவதேயாகும். இந்த ஸத்காரியங்களின் நடுவிலும் அநேக கஷ்டம், அநேக அவமானம் எல்லாம் வரத்தான் செய்யும். ஆனாலும் காரியத்தை முடித்தாக வேண்டும் என்பதால், அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு மேலே மேலே எடுத்துக் கொண்ட வேலையில் போய்க் கொண்டிருப்பார்கள். இதுவே சித்த சுத்திக்கு நல்ல உபாயமாகும். அப்புறம் சுவாசபந்தம், தியானம் எல்லாம் வைத்துக் கொள்ளலாம். முடிவிலே, ஒரு கழக்கோடி எப்படி எந்த அழுக்கிலும் பட்டுக் கொள்ளாமல் கிறுகிறு என்று உருளுகிறதோ – அந்தக் கழக்கோடி மேலே நாம் கொஞ்சம் விபூதியைப் பூசினால் அதைக்கூட உதிர்த்துவிட்டு ஒடும் – அப்படி எந்த துன்பத்திலும் ஒட்டாமல் பரமாத்மாவை நோக்கி ஒடி அவரைச் சேர்ந்து விடுவோம். இந்த சேர்க்கை தான் யோகம் என்பது. அதுதான் நம் மூலமான நிலை. அதுவேதான் முடிவான நிலையும். நடுவாந்திரத்தில் நாம் எப்படியோ மாறிபோயிருக்கிறோம். அதனால் அந்த நிலை இப்போது நமக்குப் புரியவில்லை. நமக்குப் புரிகிற இடத்திலிருந்து அந்த நிலைக்குப் போக வேண்டுமானால் கர்மத்திலேயே ஆரம்பிக்க வேண்டும்.
 




அது 1974-ஆம் ஆண்டு..காஞ்சி மகா பெரியவாளுக்கு ஒரு கண்ணில் பார்வை பழுதுபட்டது. கிட்டத்தட்ட ஒரு கண்ணின் பார்வை இன்றியே தன் நித்ய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து வந்தார். தேகத்தில் ஏற்படும் மகான்களுக்கு ஒரு பொருட்டல்ல. அதற்கேற்றாற்போல் அவரது செயல் பாடுகளில் எந்த ஒரு மாறுதலும் இல்லை.இருந்தாலும், சில அன்பர்களது வற்புறத்தலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட கண்ணுக்கு ஒரு கட்டத்தில் சிகைச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அது போதிய பலன் தரவில்லை.
அதோடு, பாதிக்கப்பட்ட அந்தக் கண்ணில் மேற்கொண்டு எந்த சிகிச்சையும் செய்ய இயலாது…அது பலன் தராது
என்கிற நிலையும் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்னொருகண்ணின் உதவியுடனேயே இருந்து வந்தார் மகா பெரியவா.
நாளடைவில் நன்றாகச் செயல்பட்ட அந்த இன்னொரு கண்ணிலும் கேட்ராக்ட்..[புரை] ஏற்பட்டது.இதை அறிந்த
பெரியவாளின் அணுக்கத் தொண்டர்களும் ஸ்ரீமடத்து விசுவாசிகள் பலரும் பெரியவாளை அணுகி “கேட்ராக்ட்டுக்குப்
பெரியவா ஏதாவது சிகிச்சை எடுத்துக்கணும்” என்று விக்ஞாபித்துக் கொண்டனர்.
புன்னகையுடன் அந்தக் கோரிக்கையை மறுத்து விட்டார். பெரியவா, “போதும்டா…இந்த ஒரு கண்ணை வெச்சுண்டே
நான் சந்த்ரமௌலீஸ்வரர் பூஜையை நடத்திக்கிறேன். இந்தப் பார்வையே எனக்குப் போதும்” என்று அன்புடன்
மறுத்து விட்டார்.
ஆனால் மகா பெரியவாளின் இந்த சமாதானமான பதிலை ஸ்ரீஜயேந்திரர் ஏற்கவில்லை. கேட்ராக்ட்டுக்கு அவசியம்
ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்று பெரியவாளிடம் வற்புறுத்திக் கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில்
பெரியவாளும் இதற்கு சம்மதித்தார்.
அப்போது மயிலாப்பூரில் பிரபல வக்கீலாக இருந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மூலம் டாக்டர் பத்ரிநாத்
மகா பெரியவாளுக்கு அறிமுகம் ஆனது.இந்த நேரத்தில்தான், சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியில்
இருந்தார் பத்ரிநாத். இவரது சேவை மனப்பான்மை பற்றியும் தொழில் நேர்த்தி குறித்தும் ஸ்ரீமடத்துக்கு சிபாரிசு செய்யப்பட்டது. ஸ்ரீமடத்து அதிகாரிகள் கலந்தாலோசித்த பிறகு பத்ரிநாத்தைக் கொண்டே மகா பெரியவாளுக்கு கேட்ராக்ட் ஆபரேஷன் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
முதலில் ஸ்ரீஜயேந்திரரைச் சந்தித்த பத்ரிநாத் பெரியவாளுக்கு எப்படி ஆபரேஷன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை
விளக்கினார். ‘ஒரு சந்நியாசிக்கு மருத்துவமனையில் வைத்தெல்லாம் சிகிச்சை செய்யக் கூடாது. அதுபோல்
நர்ஸ்,மருத்துவ உதவியாளர்கள் போன்றோரின் ஸ்பரிசம் பெரியவாளின் மேல் படவே கூடாது” என்றெல்லாம் சில
விஷயங்கள் ஸ்ரீமடத்தின் சார்பில் பத்ரிநாத் முன் வைக்கப்பட்டது.
“நானும் மகா ஸ்வாமிகளின் பக்தன்தான். அவரது துறவற வாழ்க்கைக்கு எந்த ஒரு பங்கமும் ஏற்படாதவாறு இதைப்
பார்த்துக் கொள்கிறேன்” என்றார் மென்மையாக.
ஆபரேஷன் சமயத்தில் பத்ரிநாத் மட்டுமே மருத்துவர் என்ற முறையில் இருந்தார். இவரைத் தவிர, மருத்துவமனை
சிப்பந்திகள் எவரும் இந்த சிகிச்சையின்போது உடன் இல்லை. அப்படி என்றால், டாக்டர் பத்ரிநாத்துக்கு ஆபரேஷன்
நேரத்தில் உதவியவர்கள் யார்?
மகா பெரியவாளின் அணுக்கத் தொண்டர்கள் சிலருக்கே தேவையான மருத்துவப் பயிற்சி கொடுத்து,அவர்களைத்
தன் உதவியாளர்களாக ஆக்கிக் கொண்டார் பத்ரிநாத். காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கல்யாண மண்டபம்,
ஆபரேஷன் தியேட்டராக மாற்றப்பட்டது. ஆபரேஷனுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் சென்னையில்
இருந்தே கொண்டு வரப்பட்டன. எல்லாம் தயார் ஆன பின், மிகக் கச்சிதமாக மகா பெரியவாளுக்கு ஆபரேஷன் முடிந்தது.

Reference : Face Book - Mr Narayanan
 

பெரியவா திருவிசநல்லூர் என்ற இடத்தில் இருந்தபோது இரண்டு கண்ணும் தெரியாத ஸ்ரீவித்யா உபாசகி ஒருவர் வந்தார். அது தெரிந்த பெரியவா தன்னிடம் கைங்கரியம் செய்து வந்த கண்ணனை அழைத்து, அவருக்கு தங்க இடம் முதலிய ஏற்பாடுகளைச் செய்யும்படிச் சொன்னார். மேலும் அவர் மிகுந்த ஆசாரமுடையவர். ஆதலால், “நீயே ஒரு பலகாரம் செய்து கொடுத்துவிடு” என்றும் கூறினார்.
“நானாகவே அவர் இருக்குமிடம் சென்று தரிசனம் தருகிறேன்.கண்தெரியாமல் அவர் என்னைத் தேடி வர ண்டாம்”என்றும் தெரிவிக்கச் சொன்னார். கண்ணன் அவ்வாறே செய்தார். சிறிது உப்புமாவைக் கிண்டி அவளெதிரே வைத்து “சாப்பிடுங்கள்…” என்று உபசரித்த கண்ணனுக்கு அதிசயம் ஒன்று காத்திருந்தது.
அதை நைவேத்தியம் செய்வது போல் சுற்றிவிட்டு அந்த அம்மாள் தன் மார்பிலே கையை வைத்தார். உடனே அவள் கையில் ஒரு ஸ்ரீசக்கரம் வந்துசேர்ந்தது. மறுபடியும் ஏதோ செய்தார். அது மறைந்துவிட்டது. அதைப் பார்த்த கண்ணன், பெரியவாளை அவர் தரிசனம் செய்யும்போது தானும் கூட இருப்பதென்று முடிவு செய்தார்.
“இவர் என்ன மாய மந்திரங்கள் செய்யப் போகிறாரோ! இவருக்கு சுவாமிகளிடமிருந்து என்ன கிடைக்கப் போகிறதோ?” என்ற கேள்விக்குறிகளால் ஆவலுடன் காத்திருந்தார். பெரியவாளிடம் போய் அவர் தரிசனத்துக்குக்காத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லி, தான் எதிர்பார்க்கும் சந்தர்ப்பம் சீக்கிரம் வராதா என்று ஏங்கினார்.
“ராத்திரி வரேன்னு சொல்லிவிடு” என்று அவரைப் பெரியவா அனுப்பப் பார்த்தார். கண்ணனுக்கு ஒவ்வொரு விநாடியும் யுகமாகக் கழிந்தது.எதிர்பார்த்திருந்த நேரமும் வந்தது.
இரவு. எலெக்ட்ரிக் விளக்குகள் இல்லாத காலம்.அங்கொன்றும் இங்கொன்றும் முணுக்முணுக் என்று எரியும் கைவிளக்குகள் ஒளியில் பெரியவா நடந்து வந்து அந்த அம்மாவின் எதிரில் அமருகிறார்.
“நான் வந்துவிட்டேன்!” என்று குரல் கொடுக்கிறார். அவளும் நமஸ்கரித்து விட்டு உட்காருகிறாள். “எதற்கு வந்திருக்கிறாய்?” என்று வினவுகிறார் எல்லாம் தெரிந்த சுவாமிகள்.
“உங்களுக்குத் தெரியாதா சுவாமி! எனக்கு இன்னும் சஹஸ்ரகாரத்தில் ஜோதி தரிசனம் கிடைக்கவில்லையே! எனக்கு அதுதான் வேணும்.அதற்காகத்தான் வந்தேன்!”என்கிறாள்.
“என்ன நடக்கப் போகிறதோ?” என்று கண்ணன் ஆவலுடன் காத்திருக்க…பரமாச்சார்யாளோ, நிதானமாக, ”அப்படியா! நீ சிறுது நேரம் தியானம் பண்ணு!” என்றார்.
கண்ணனிடம், “நான் ஜாடை காட்டுவேன்.அப்போது எல்லா விளக்குகளையும் அணைத்துவிடு” என்று கட்டளை இடுகிறார். காலை முதல் அந்த நொடிக்குக் காத்திருந்த கண்ணனுக்குப் பெருத்த ஏமாற்றம்.கும்மிருட்டில் நடப்பது ஒன்றுமே தெரியாதே..என்ன செய்வது? என்று ஏதுவுமே செய்ய முடியாதே!
பெரியவா சொன்னவுடன் விளக்குகள் அணைக்கப்பட்டன. அடுத்த இரண்டாவது நிமிடம் அம்மையாரிடமிருந்து பெரிய கூக்குரல் எழுந்தது.
“நான் ஜோதி தரிசனம் கண்டேன், கண்டேன்!” என்று கூத்தாடினார். ”போதும்!போதும்!காமாட்சி! நிறுத்திவிடு! நிறுத்திவிடு!” என்று அலறினாள்.உடனே பெரியவா விளக்கையெல்லாம் ஏத்தச் சொல்லிவிட்டு விடுவிடுவென்று நடந்து மறைந்துவிட்டார்.
போவதற்கு முன் கண்ணனிடம், “அந்த அம்மாவை ஊருக்கு அனுப்பி விடு!” என்று சொன்னார்.
அந்த அம்மாள் கிளம்புமுன், கண்ணன் அவரிடம், “என்ன நடந்தது? ஏன் கத்தினீர்கள்? நீன்ங்களாவது சொல்லி விட்டுப்போவீர்களா!” என்று கெஞ்சினார்.
அவரும், “நான் கேட்ட ஜோதி தரிசனம் சஹஸ்ராரத்தில் கிடைத்துவிட்டது. அதை இரண்டு நிமிடத்துக்கு மேல் என்னால் பார்க்க முடியாததால் நிறுத்தச் சொல்லி அலறினேன்!” என்றார்.
எப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்தவராக இருந்தால் இத்தனை எளிதில் ஒருவருக்கு ஜோதி தரிசனம் காணும்படிச் செய்ய முடியும்? பெரியவா இறைவன்தான் என்று நினைத்தால் மட்டுமே புரியும்! தவிர, மனிதர்களால் இப்படி ஒரு சாதனையைச் செய்ய முடியாது.
எத்தனை பாடுபட்டாலும் பெற முடியாத ஒரு தரிசனத்தை, ஒரு ரயிலில் வந்து பார்த்துவிட்டு, அடுத்த ரயிலில் ஊருக்குப்புறப்படுகிறார் ஒரு பெண். அந்த அதிசயத்துக்கு வேறு எப்படி விளக்கம் தர முடியும்?
அவரது அனுக்கிரகத்தால் உயர்ந்த ஒன்றக் கேட்டுப் பெறுபவர்களே பாக்கியசாலிகள். அந்த அம்மா பேறு பெற்றவள்.

Ref : Face Book
 
காந்த சேவை =============
காஷ்ட மௌனத்திலிருந்த மஹா பெரியவர் மாமேதை அரியக்குடியை அழைத்து ‘ ஸ்ரீசுப்பிரமணியாய நமஸ்தே’ என்ற பாடலை பாடச் சொல்லிக் கேட்டார். அரியக்குடியிடம் விளையாட்டாக மகான், ‘நீ இவ்வளவு நாள் கச்சேரி செய்ததில் ஒரே ஒருவர் ஆடியன்சில் உக்கார்ந்து கேட்டது இப்போது தானே என்று தான் மட்டும் கேட்டதை வினவினார்.
அறியக்குடியோ, பாடியதற்கும் மேலாக அமுத மொழியில் ‘அடியேன் ஜென்ம ஜென்மாந்திரங்களில் செய்த புண்ணியம் இப்படி ஏகாந்த சேவை கிடைத்தது’ என்றார். ********


‘ஓதுவார்கள் எங்கே?’
==================




ஒருமுறை காஞ்சிக்கு தருமபுரம் மடாதிபதி வந்திருந்தார். அவருடன் பலர் வந்திருந்தனர். சந்திப்பின் போது வரவேற்பும் நடந்தது. மகாபெரியவர் அங்கிருந்த அனைவரையும் பார்த்து விட்டு, கை ஜாடையால் ‘ஓதுவார்கள் எங்கே?’ என்றார். உடனே அவர்கள் வர, அப்பர் சுவாமிகள் அருளிய திருத்தாண்டகத்தில் வரும் ‘நிலைபெறுமாறு எண்ணுயேல்’ என்ற பாடலை பாடச் சொன்னார். ஓதுவார் மூர்த்திகள் கல்லும் கரையும்படி பாடினார். அனால் என்ன அதிசயம் நிகழ்ந்ததெனில் நடமாடும் தெய்வம் நடமாடும் தெய்வமாகிறது. தன்னை மறந்து பாடலுக்கு அபிநயம் செய்து ஆடினர். கூடியிருந்த அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர். எது புலி, பதஞ்சலிக்கும், காரைக்கால் அம்மைக்கும் கிடைத்ததோ, அது சாமானியர்களுக்கும் கிடைத்தது.
விஜய பாரதம் – தீபாவளி இதழ்

Ref : Old Collections
 
Shri Periyavaa

Dear All

I would like to share an existing blog on Shri Periyavaa, which may impress / serve all seekers.

Sai Ram Quote: paramachariar.blogspot.in Unquote:
 
Dear Raji Ram - Periyavaa's anugnai for every one of us.

கடவுள் நமக்கு அருள் புரிந்து நம்மைத் தம்மிடம் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், நாம் அவருக்கும், உலகத்துக்கும் செய்யவேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்யவேண்டும். இவைதான் நம்முடைய தருமம். நாம் செய்யும் காரியங்கள் இம்மைக்கும், மறுமைக்கும் பயன் அளிப்பவையாக இருந்தால் அது தருமம் எனப்படும். மறைந்தபின் உய்வு பெற தரும வழிகளிலான கடமைகளைச் செய்ய வேண்டும். மற்றவர்களின் நலனுக்காக் நாம் இன்ஸ்யூரன்ஸ் சேய்வதைவிட இது முக்கியமானது. தரும காரியங்கள் அவைகளைச் செய்பவரின் மறுமை நலனுக்கு இன்ஸ்யூரன்ஸ் போலாகும்.
 
EPILOGUE
Later HMV recording company entered into an agreement with TTD to market the proposed music album “Balaji Pancharatnamala” and agreed to bear with all its recording expenses. As part of their understanding TTD immediately deposited rupees four lakhs in the name of MS, two lakhs in the name of Sadasivam and one lakh in the name of their daughter Radha Viswanathan who will also be taking part in the music album project. This amount will be kept in a fixed deposit and the accrued monthly interest will be going to them as long as they so desire.
After successfully completing its recording in 1980, the album”Balaji Pancharatnamala” was simultaneously released all over India in an unprecedented fashion…While the first LP was released by the then President of India Neelam Sanjeeva Reddy, the second was released by the Prime Minister Indira Gandhi. Rest of the three albums was released by the chief ministers and governors in their respective states. The fifth album was released by the Peetadhipathis of various Peethams spread all over India.
In the very first year of its release the “Balaji Pancharatnamala” album received tremendous response from all over India generating a record amount of revenue recovering the entire money spent on it. This album went on to break all the previous records in India making MS a household name all over the country.
In 1998 the government of India honored MS with the country’s highest civilian award the “Bharat Ratna” for revolutionizing devotional music in India and also for earning global recognition to Indian classical music. Unfortunately Sadasivam was not there to witness this once in a life time event as he passed away just a year before that in 1997.
Most of the literary masterpieces by great sages would have remained unknown to the world if they were not given that magical touch by the mellifluous golden voice of MS.
Finally on 11th December2004, leaving behind a legacy of devotional classicism and leaving every music fan in an emotional sea of tears and melancholy, music queen MS left this human world and entered the holy abode of her beloved Lord Perumal and remained there rested in
peace at His divine Lotus feet.
Conclusion
“Puttutayu nijamu,povutayu nijamu… Nattanadi mee pani natakamu..
Yettanedhuta galadi prapanchamu.. Kattakadapatidhi kaivalyamu..
Naanaati batuku naatakamu..Naatakamu..Naatakamu..”
– Saint Annamacharya (Page 2)
 
Last edited:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top