கல்யாண கலாட்டா:
மும்பை நண்பர்ஒருவர் என்னை மாப்பிள்ளை தோழனாக வர வற்பறுத்தினார். அதற்குமுன் 2 தடவை மாப்பிள்ளைத் தோழனாக போய் அவஸ்தை பட்டது மறக்கவில்லை .ஆகவே, தாலிகட்டி , சேஷோப ஔபாஸனம் முடிந்து, ராத்திரி சாந்தி மூஷூர்த்தத்க்கு படுக்கை அறைக்குள் போகுறவரை என் ஆலோசனைகளை கடைப்பிடிப்பதாக சத்தியம் செய்தான். கலியாணம் திருவனந்தபுரத்தில். பையன் குடும்பத்தில் ஒன்றுவிட்ட அத்தை பெரியம்மா உட்பட சமார் 30 பேர்கள் திருவனந்தபுரம் போய்ச் சேர்ந்தோம்.
அங்கே இறங்கினதும் முதல் வேலையாக நேராக சமையல் அறைக்கு அவசரஅவசரமாக போனேன். வாயில் வெத்தலை பாக்கு அறைத்துக் கொண்டிருந்தவரிடம், திருமேனி, இங்ஙனே நளபாக மூப்பர் எவடேன்னு கேட்டேன். சாரே , தமிழ் வளர பங்கியாயிட்டு சம்சாரிக்கும். எண்ட பேரு முத்துசாமி ஐயராணும். ஞான்தன்னே சீப்ஃ குக் ஆகணும் என்றார். என்த வர்த்தமானம்? நிங்கள் ஆராகணும் என்று கேட்டார். (என்னோட மாமிக்கு எர்ணகுளம் பூர்வீகம். மாமிகிட்டே கத்துண்ட அரை-குறை மலையாளம் ஞான் சம்சாரிக்கும்). நமஸ்காரம் ஸ்வாமிகளே! நான் கோபாலன். மாப்பிள்ளை தோழன். நீங்கதானா அந்த முத்துசாமி ஐயரா? பீமனோட கரண்டி ஒங்க கையிலேன்னு கேள்விபட்டிருக்கேன். அகோ பாக்யம் என்றேன் (ஆபீசிலே ஆளுமைப் பயிறிசி முதல் அத்யாயம் இது. . மேலும் சென்னையில், துஷ்டம் ப்ரதமே வந்தினம் - துஷ்டனுக்கே முதல் மாரியாதை என்பதை வெங்கட்ராம மாமா
சொன்னதை மறக்கலை. இன்கம் டாக்ஸ் ஆபீசிலே (கேடி) 4-கிளாஸ் பியூனிடம் பேசி, அவர் சொல்லி கொடுத்த பாடம். என்னங்க வேலுசாமி, நல்லா இருக்கீங்களான்ன கேட்டவுடன், மாரி! டேய் ஐயா நம்ப ஆளு. மாடிலே கண்ணாடி ஆபீசர்கிட்டே ரவுசு காட்டாமெ
இட்டாந்துருன்னான். மடமடனு காரியம் நடந்ததை நேரில் பார்த்த அனுபவம் வேறே! ).
நான் மாப்பிள்ளைத் தோழன் என்று சொன்னேன். அம்பி ,இந்த மாமாவுக்கும் மாப்பிள்ளை சாரையும் நன்னா கவனிச்சுக்கோ. இவாளுக்கு அசல் பால்லே மொதல் டிகாஷன் காப்பி கொடுத்துடணும். பாயசமும் அப்டியே . மனசிலாச்சா? ஏன் மாமா அப்படி சொல்றேன்னு கேட்டேன்.
பாருங்கோ நாளை முகூர்த்தம் இல்லையா! அசல் பாலுக்கு தட்டுப்பாடு. பாக்கிகாராளுக்கு புட்டிபால்தான்(பவுடர் மில்க்). மாப்பிள்ளை சாரோட இங்கேயே வந்துடுங்கோள். பரம ரகசியமாக ஞாபகம் வச்சுக்கோங்கோன்னார். சுமார் 4க்கு, கேசரி, பஜ்ஜி, ஒரு பெரிய தவலைப் பானையிலே வந்தது. அத்தே, பெரியம்மா, காலியாண ஆத்லே, ஏதோ காஃபி குடிக்கத்தான் ஜென்மம் எடுத்திருக்கறோம்னு நெனைக்காம, அளவோடு குடியுங்க. இந்த ஊர் தண்ணி ஒங்களுக்கு பழக்கம் இல்லை என்று சொல்லிவிட்டு மாப்பிள்ளை கூட வெளியே போயிட்டேன்.
பையன் அப்பா அம்மாவை, பெண்ணோட பெரியப்பா கலியாண மண்டபத்தை சுத்திக்காட்ட கூடிக்கொண்டு போய்விட்டார். பையன் தம்பி எனனிடம், அத்தை-பெரியம்மா கூட்டம் நன்னாயிருக்கே, ஏதுடி கல்யாண ஆத்திலே, கூட ஒரு டம்ளர் குடிச்சா கொறஞ்சா போயிடும்? காபி நன்ன திக்கா கூழ்போல இருக்கேன்னு 2 ரெண்டு டம்ளர் குடிச்சா! ஏதோ காணதது கண்டது போல ஆலா பறந்தது நன்னாவா இருக்கு என்றான். சிரித்து, அவாளெல்லாம் பழய காலத்துக்காரா. நனைஞ்சு சொமப்பாள்! விடு என்று சொல்லவிட்டேன்.
ராத்திரி சாப்பட்டில், டேய் எனக்கு பால் பாயாசம் பிடிக்கும், ஒரு கை பாக்கணும் என்றான். கண்ணா இந்த ஊர் தண்ணி ஒனக்கு ஒடம்புக்கு ஆகாட்டி, நான்னா பொண்ணு கழுத்திலே தாலி கட்டணும்ன்னேன். கப்சிப். பரிசாக அம்பி கொண்டு வந்த டம்ளர் பாயாசத்தை ஆளுக்கு பாதியா குடிச்சோம். பையனோட அப்பாவை, ஒங்களுக்கு சக்ரதை வியாதி வரும்னு சொல்லி மாமி பாயசம் குடிக்கவிடலை. அவளும் குடிக்கலை. பாதிபேரும் கொஞ்சமா சாப்பிட்டார்கள்.
காலையில் 7மணிக்கு மூகூர்த்தம் . பிள்ளை வீட்டுக்காரர்கள் சுமார் 20 பேருக்கு குறைவாக இருந்தார்கள். மறுநாள் ஊருக்கு திரும்பினேம் அத்தை சொன்னா, அம்பி நீ என்னவோ ஊர் தண்ணி ஒடம்புக்காதுன்னே. சரியா போச்சு. சின்ன வயசிலே, எங்கம்மா கடுக்காய் கஷாயத்திலே வெளக்கெண்ணை விட்டு குடிக்க சொல்லுவாள் . அதே மாதிரி இன்னைக்கி காலம்பற இந்த வயசிலேயும் நாங்க எடுத்த சொம்பை கீழே வெக்கவேயில்லை. நாங்க தங்கி இருந்த ஆங்களிலே பாரூம் எல்லாம் புதுசா, சுத்தமா இருந்ததோ, பொழைச்சோமோ! ஆமாம் , கேரளத்துக்காரா அவாளெல்லாம் ரொம்ப சுத்தம் என்றேன் . பொட்டிபால் அருமை புரிந்தது. மிருதங்ககாரன்-பாடகர், சமையல்காரர்- மாப்பிள்ளை, பியூன்-ஆபீசர் -எல்லா இடத்திலும் -"துஷ்டம் பிரதமே வந்திதம்".
எவ்வளவு பெரிய வேதாந்தம். சிக்கில் குருசரணுக்கும், சஞ்சய் சுப்ரமணியனுக்கும் மிருதங்க வித்வான்களும் உள்ள பரஸ்பர மரியாதை இப்போன்னா தெரியறது! - எலத்தூர் ராமலிங்க பாகவதர் பெண்ணுக்கு மிருதங்க வித்வான் பால்லே நேர்வாளம் கலந்து கொடுத்த கதை சுப்புடு சொல்ல மறந்தது!