Namassadhasae
Maha Swamigal paticipated in one Tiruppavai & Tiruvembai Maanadu in Tiruvidimaruthur, a place near Kumbakonam in 1950. He participated in the event on all the eight days. Details of Periyavar's views expressed in the meeting by way of his proclamation (aRikkai) and his speech are given below :
Source: Today's Dinamani Supplement Vellimani - issue dt 18/12/2009.
மகாசுவாமிகள் நடத்திய மகாநாடு
First Published : 18 Dec 2009 07:46:16 PM IST
ஞானச்சுடராக, தவமலையாக, மாந்தருள் மாணிக்கமாகத் திகழ்ந்தவர் காஞ்சி சங்கரமடத்தின் 68வது ஆசார்ய சுவாமிகளான பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். அவர், 1950ம் ஆண்டு டிசம்பர் மாதம், தமிழ்நாட்டு மக்களுக்கு விடுத்த அறிக்கையின் ஒரு பகுதி இங்கே.
""மார்கழி மாதத்தில் ஸ்ரீமாணிக்கவாசக சுவாமிகளது திருவெம்பாவையும், ஸ்ரீ ஆண்டாளுடைய திருப்பாவையும் முறையே சிவாலயங்களிலும், விஷ்ணு ஆலயங்களிலும் ஓதப்பட்டு வருகின்றன. சென்ற 80 ஆண்டுகளாக நம் தமிழ்நாட்டு மக்கள், சிறு பிராயம் முதல் மேல் நாட்டாரின் மொழியையும், நாகரீகத்தையும் பயின்று, அரசியல் கிளர்ச்சிகளில் மாத்திரம் பெரும்பாலும் ஈடுபட்டு வந்தமையால் தாய்நாட்டின் தெய்வீக முறைகளை அறியாது, அருள் வழியில் பெரும் நஷ்டத்தை அடைந்துவிட்டார்கள். நம் முன்னோர்கள் அருளிய அத்திருமுறைகளின் கருத்துக்களையும், அவர்களது தூய வாழ்க்கையையும் நம் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டியது எஞ்சியுள்ள பண்டிதர்களின் கடமையாகும்'' என்றது அந்த அறிக்கை.
இந்த உயரிய நோக்கத்துடன் சுவாமிகள் திருவிடைமருதூரில் அதே டிசம்பர் மாதம் 25 முதல் எட்டு நாட்களுக்கு பெரியதொரு மகாநாட்டை கூட்டினார். அதற்கு, "திருப்பாவை, திருவெம்பாவை, திருமறை ஆறங்க மாநாடு' என்று பெயரிடப்பட்டது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து அறிஞர் பெருமக்களும், சான்றோர்களும், சங்கீத வித்வான்களும், கலாசபை பேராசிரியர்களும், மடாதிபதிகளும் இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். வைணவப் பெரியோர்கள் பரமசிவனது பெருமையையும், சைவப் பெரியோர்கள் ஸ்ரீமன் நாராயணனின் கருணையையும் எடுத்துக் கூறியபொழுது பெரியதோர் மதப்புரட்சியை அன்பர்கள் அங்குக் கண்டார்கள். அந்தப் புரட்சி எல்லாம் பக்தி வெள்ளமாக மாறி எல்லோரின் உள்ளங்களையும் குளிரச் செய்தது. மகாசுவாமிகளும் ஒவ்வொரு நாளும் மாநாட்டிற்கு விஜயம் செய்து அருளாசி வழங்கினார்கள்.
சுருக்கமாக அவர் கூறுகையில், "மதத்தினால் சண்டை உண்டாகுமென்று சொல்வது தவறாகும்' என்றும், "உண்மையான மதம் எப்பொழுதும் சச்சரவை உண்டு பண்ணாது' என்றும், "மதத்தின் அடிப்படையில்லாவிட்டால் அரசியல், பொருளாதாரச் சச்சரவுகள் அதிகரித்து ஆபத்தை விளைவிக்கும்' என்றும், "ஆதலால் இறைவன் வழிபாடு மனிதனுக்கு மிகவும் அவசியமாகும். அவ்வழிபாட்டிற்கு பாவை நூல்கள் உதவும்' என்றும் அருளினார்.
மேலும் அவர் தம் உரையில், "தமிழ்நாட்டிலிருந்து 3500 கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள சயாம் தேசத்தில் (இந்தோ சைனா) வருடந்தோறும் அந்நாட்டு அரசாங்கத்தினால் "த்ரியம்பாவை-த்ரிபாவை' என்ற பெயரில் ஒரு உற்சவம் நடைபெற்று வருவதாயும், நம் நாட்டின் ஆருத்ரா தரிசன உற்சவ சமயத்திலே அங்கு நடக்கிறது' என்ற ஒரு அரிய தகவலையும் வெளிப்படுத்தினார். இன்று தமிழகம் முழுவதும் திருப்பாவை-திருவெம்பாவை பரவ மகா சுவாமிகளது பெரு முயற்சிகளும் காரணமாகும்.
Maha Swamigal, in his way, emphasised the need to have worship of God. The statement that religion will create any conflict is wrong and he explained that real religion will never create any conflict. He had also referred about one utsavam conducted at the time of Arudhra dharsanam (Margazhi Thiruvathirai nakshatram - almost combined with Pournami) in the country Sayam (Indo China), which is about 3500 km away from Tamilnadu, which would definitely be a rare information for most of us. This Maanadu also served as an effort of unity to bring Saiva Vaishnava under one umbrella.
The dates of the maanadu commenced from 24th December 1950 for eight days.
"அவரவர் இச்சையில் எவை எவை உற்றவை அவை தருவித்தருள் பெருமாளே!"
_ திருவக்கரை திருப்புகழ்