திருமதி வித்யா பல்லாண்டு சீரும் சிறப்புமாய் வாழ இறைவன் அருளட்டும்! :angel:.......... என் திரு மகள் வித்யா பிறந்த நாள் .......
Most important point to note!........... Whoever is in Coimbatore or visits Coimbatore are :welcome: to my humble cottage!!!
குரு சார்! இதோ, ஒரு சிறு விமர்சனம்!.............. நடந்த நிகழுகளை நீங்கள் விவரியுங்கள் .........
குரு சார்! இதோ, ஒரு சிறு விமர்சனம்!
மிக்க ஆவலுடன் எதிர்பார்த்த ஜூலை பதினைந்து! விடியலில் விழிப்பு! என் இனிய நண்பர்களை வரவேற்கத்
தயாராக வேண்டுமே! விரைவாய்க் காலை வேலைகளை முடித்து, வீட்டு உடையே அணிந்து (பத்தரை மணிக்கு
நல்ல உடை அணிந்தால் ஃப்ரெஷ் ஆக இருப்பேனே!!) எங்கள் நால்வருக்கும் சிற்றுண்டி தயாரித்து, சமையலில்
இறங்கினேன். சாப்பாட்டுப் பிரியர்களுக்காக (ராமன் என்று சொல்ல மாட்டேன்!) - அன்றைய மெனு: ஃப்ரைடு ரைஸ்,
சின்ன வெங்காயம் இட்ட சாம்பார் சாதம், தக்காளி பச்சடி, கோதுமை ரவை பாயசம், தயிர் சாதம், இரு வகை சிப்ஸ்,
அப்பளம், ஊறுகாய் (எங்கள் தோட்ட மாங்காய்தான்), VR mam வாங்கி வந்த கோவை ரசகுல்லா! Simple and tasty food!
பதினோரு மணிக்கு டெலிபோன் கிணுகிணுக்க, வழி கேட்ட சுனில் அவர்களின் குரல். ராம் சொன்ன வழியைப்
பின்பற்றி சில நிமிடங்களில் ஆஜர்! Handsome, soft spoken, bright eyed young man! என்னவரின் சகோதரி மகன்களில்
ஒருவரின் ஜூனியர்; இன்னொருவரின் சீனியர்! சில நிமிடங்களிலேயே 'கண்ணா' போட்டுப் பேச வைத்தார்! அடுத்து,
நம்ம ஹீரோ சார், தன் better half சமேதரராக வருகை. அவுட்டுச் சிரிப்பு மன்னருக்கு, அமைதியாகச் சிரிக்கும்
மனைவி; இறைவன் கொடுத்த வரம்! எங்கள் தங்கையின் பெயர் கொண்ட அவரைப் பார்த்ததுமே நெருக்கம்.
அரட்டைக் கச்சேரி ஆரம்பித்து..... இக்கால மாற்றங்கள் பற்றி விரிவான அலசல்கள்; சுனில் வாழும் டென்மார்க்
பற்றிய விவரங்கள்; சிறு சிறு கடி ஜோக்குகள் என்று நீண்டது. இடையில், இருவருக்கு மட்டும் குட்டிக் கப்பில் காபி!
சுனில் அன்று இரவே விமானம் ஏற வேண்டும். அந்த நெருக்கடியிலும் எங்களைச் சந்திக்கச் சில மணிகள்
ஒதுக்கியது, நெஞ்சை நெகிழ வைத்தது! இக்காலத்தில் இப்படி ஒரு இளசா?? அவர் ஒரு மணிக்கே திரும்ப வேண்டும்
என்று சொன்னதால், அவருக்கு மட்டும் உணவு பரிமாறி, விடை கொடுத்தோம்!
பின், எங்கள் பந்தி! Self serving நல்லதென்று அறுவரும் அமர்ந்துவிட்டோம்! நகைச்சுவை கலந்த உரையாடலுடன்
உணவைச் சுவைத்தோம். இன்னும் இருவரை எதிர்பார்த்தால், அவர்களுக்கெனச் சூடாக எடுத்து வைத்திருந்தேன்!
டாக்டர் திருமதி நாராயணி தம் இல்லத்தில் பல விருந்தினர் வந்திருப்பதால், அவர்களுக்கு உணவு அளித்து
வருவதாகக் கூறியபடி, வந்தார் சிறிது நேரத்தில், இனிப்பு, காரம், பழங்கள் என்று கை நிறையப் பைகளுடன்! முகம்
நிறையச் சிரிப்பு; அகம் நிறைய நட்பு; இதுதான் அவரைப் பற்றிச் சிறு குறிப்பு! தன் அனுபவங்கள் பலவற்றைப் தெள்ளத்
தெளிவாகப் பகிர்ந்துகொண்டார். திரு T V K யின் அதிரடி கேள்விகளுக்கு அமைதியாகப் பதில் உரைத்தார். பின்பு,
கொஞ்சம் உணவும் சுவைத்தார். பிரியா விடை கொடுத்து மூவரையும் அனுப்ப, இதயம் நிறைந்தது!
ஒருவேளை ஐந்து நட்சத்திர உணவகத்தில் 'மீட்டிங்'கை வைத்திருந்தால், இன்னும் நிறையப்பேர் வந்திருப்பாரோ?
ஆனாலும், திரு T V K சொல்வதுபோல் அந்த உணவு நமக்கு ஒத்துக்கொள்ள வேண்டுமே!! எத்தனை நாள் பழையது,
மைக்ரோவேவில் நுழைந்து, தட்டில் வருமோ?
சரி.... ஒரு ஜோக்குடன் முடிக்கிறேன்!
சாப்பிட வந்தவர், கோபமாக: முந்தாநாள் இதே ஹோட்டலில் சாப்பிட வடை எவ்வளவு அருமையா இருந்தது!
இன்னைக்கு ஏன் நல்லாவே இல்ல?
சர்வர்: என்ன சார்! அநியாயமாக் குத்தம் சொல்லறீங்க! அதே வடைதானே சார் இது!! :dance:
ஏன் சார் Thanglish? உங்கள் அழகி எங்கே போனாள்? :bolt: ???Athu Sariiiiii..... Aduthathu Eppothu...???!!
ஏன் சார் thanglish? உங்கள் அழகி எங்கே போனாள்? :bolt: ???
:dance:ஆஹா......அழகி எங்கும் போகவில்லை.....
Oh! Not again, dear Sis! I fixed the date only to enable Sing. Chennai guys to meet you!
The transport is so expensive that many chose not to attend! That is my guess...
Cab for five hours - non AC - costs nearly 600 bucks! That is the rate here! opcorn:
நான் மறக்கவில்லை, சார்!I think ..You have forgotten ..what we have discussed earlier... Transportation could have been arranged from pre-defined spots if more members expressed their interest..
Hello VR Mam , I hope that I do not disturb in late night,its my reply regarding the posts 286,287. I remember the saying when a person describes the taste ,aroma,flavour,texture of sweet /spicy dish ,through the opponent person gets familiar and knowledge of the particular thing ,unless and until he/she happen to experience by themselves will not know the value of it .the same is applied to our meet. To my personal view ,when a person wants /need to interact ,socializing with more people,the quantity of time spend ,expenses for transport ,or what ever be the other valid reasons will be WORTH while.I just remains me the LORD HANUMAM ,does not know the power,value of himself .but when been in proper team mates(jambavan ,angathan the roles in ramayan) they understand their own value and power.
Money matters!!! opcorn:
Money matter is not the only matter in life! :nono:
I am sure you had to shell a pretty sum for the call taxi on that day. :car:
I too feel it was worth the time could spend together. :hug:
AAHA... See the gender bias...!!!... Nobody worried about my expense.....!!...Edu kundalavaada....Govinda..Govinda...!!
TVK
Come on TVK Sir! I really appreciate your 'VikramAdhithan' efforts to hold the meeting!
So nice of you to have brought your better (best?) half to our sweet home! :yo:
PS: I was taken aback by the red color!! It is supposed to be the color for a 'warning' post by the moderator!! :scared:
Did you notice that your thread has four stars now?? :thumb:O.K. I will adopt another COLOUR....!!!
Did you notice that your thread has four stars now?? :thumb:
Go to the opening page of this forum, go to chit chat section and SEE next to your thread title!Ha.Ha...Where is it..? What it means...? ...