• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My jokes in Tamil and English

Status
Not open for further replies.
எனக்கு வழுக்கைன்னா ரொம்பப் பிடிக்கும்.
என்னடி ஆச்சரியமா இருக்கு? கல்யாண வயசிலே இருக்கிற நீ வழுக்கைதான் பிடிக்குங்கிறே. அவ அவ தலைநிறைய முடி இருக்கிறவங்களைத்தான் பிடிக்கும்னு சொல்றாங்க. நீ என்னடீன்னா?
ஐயோ! நான் சொல்ல வந்ததே வேறே. எனக்கு இளநீர்லே இருக்கிற வழுக்கைதான் ரொம்ப பிடிக்கும்னு சொன்னேன்.
 
அம்மா தாயே, பிச்சை போடுங்க
ஆமாம். காலங்கார்த்தாலே வந்துட்டான் பிச்சை கேக்க. போ, போ.
- - - -
அம்மா தாயே, பிச்சை போடுங்க
மத்தியான வேளையிலே பிச்சை எடுக்க வந்துட்டான். வேறே நேரமே உனக்குக் கிடைக்கல்லியா? போ, போ.
- - - -
அம்மா தாயே, பிச்சை போடுங்க
ஏம்பா, சாயந்திர வேளையிலே யாராவது பிச்சை போடுவாங்களா? போப்பா தொந்திரவு பண்ணாம.
- - - -
அம்மா தாயே, பிச்சை போடுங்க
ஏம்பா, பிச்சை கேக்கறதுக்கு ஒரு நேரம் காலம் கிடையாதா? ராத்திரி வேளையிலே பிச்சை கேக்க வந்துட்டியே. போ,போ.
 
உங்க பையனுக்கு ஏத்த பொண்ணு. ரொம்ப நல்ல மாதிரி. நல்ல படிப்பு. நல்ல குடும்பம்.கொஞ்சம் கருப்பு. ஆனா உங்க பையன் அளவுக்கு கருப்பு இல்லை.
பொண்ணு கருப்புன்னா எங்களுக்கு வேணாம்.
 
நம்ம தலைவர் இறந்த அன்னிக்கு தமிழ்நாடு பூராவும் எத்தனை பேர் செத்தாங்கங்கிற லிஸ்டை அவசர அவசரமா தயார் பண்ணினாங்க.
எதுக்கு?
தலைவர் செத்த துக்கம் தாங்காம இத்தனை பேர் செத்துட்டாங்கன்னு கணக்கு காட்டத்தான்.
 
நீங்க அவளுக்குப் பிச்சை போடாதீங்க.
ஏன்?
கண் தெரியல்லே அம்மான்னு சொல்லிட்டு என்னை மகாலக்ஷ்மி மாதிரி இருக்கேன்னு சொல்லி பிச்சை கேக்கறா? எப்படித் தெரிஞ்சது அவளுக்கு நான் அவ்வளவு அழகா இருக்கேன்னு. இதுலே இருந்தே தெரியல்லியா அவ ஏமாத்தறான்னுட்டு.
நிஜமாவே அவளுக்குக் கண் தெரியல்லை. தெரிஞ்சி இருந்தா உன்னை மஹாலக்ஷ்மின்னு சொல்லி இருப்பாளா?
 
ஒருவர்: அவங்க வீட்டுலே டிவி சீரியல் பார்க்கிறவங்க யாரும் இல்லியே. அப்படி இருக்கும்போது நேத்து அவங்க வீட்டுலே டிவி சத்தம் கேட்டுச்சே.
மற்றவர்: அதுவா? அவங்க வீட்டிலே நேத்து ஒரு சாவு விழுந்துட்டுது. அந்தக் காலமா இருந்தா ஒப்பாரி வச்சி வாய்விட்டு அழுவாங்க. இப்ப அந்த மாதிரி அங்கே அழறதுக்கு யாருமே இல்லையா? அதனாலே தமிழ் டிவி சீரியலைப் போட்டுட்டங்க.
 
டாக்டர், எனக்கு மனசு ரொம்ப பாரமா இருக்கு. இனம் புரியாத கவலை வாட்டி எடுக்குது. துக்கம் துக்கமா வருது. தூக்கமே இல்லை. தற்கொலை பண்ணிக்கலாமான்னு தோணுது.
உங்க மனதுலே அழுத்தம் அதிகமாக இருக்கு. இதையெல்லாம் மறக்கணும்னா நம்ம கவலையை எல்லாம் பறந்து போறமாதிரி இந்த உலகத்தையே சிரிக்க வைக்கிற அகில உலக சிரிப்பு நாயகன் சிதம்பரேஷ் நடித்த படங்களைப் பாருங்க. உங்களுக்கு வந்திருக்கிற டிப்ரஷன் இருக்கிற இடம் தெரியாமல் பறந்து போயிடும்.
டாக்டர் சார், நான்தான் அந்தச் சிதம்பரேஷ் பேசறேன்.
 
World Is always round
One Day A Tourist Comes To The Only Hotel In A Debt Ridden Town. Lays A $100 Note On The Table & Goes To Inspect The Rooms.
Hotel Owner Takes The Note & Rushes To Pay His Debt To The Butcher.
Butcher Runs To Pay The Pig Farmer. Pig Farmer Runs To Pay The Feed Supplier.
Supplier Runs To Pay The Prostitute, Who In These Hard Times Gave Her Services On Credit.
Hooker Then Runs To Pay Off Her Debt To The Hotel Owner For The Rooms She Rented For Her Clients.
Hotel Owner Then Lays The $100 Note Back On The Counter.
The Tourist Comes Down, Takes His Money & Leaves As He Did Not Like The Rooms.
No One Earned Anything. But The Town Is Now Without Debt & Looks To The Future With A Lot Of Optimism.
And That Is How The World Is Doing Business Today.
???????
 
A little girl was talking to her teacher about whales. The teacher said it was physically impossible for a whale to swallow a human because even though it was a very large mammal, its throat
was very small.
The little girl stated that Jonah was swallowed by a whale.
Irritated, the teacher reiterated that a whale could not swallow a human; it was physically impossible.
The little girl said, "When I get to heaven I will ask Jonah".
The teacher asked, "What if Jonah went to hell?"
The little girl replied, "Then you ask him."
 
என்னப்பா, எனக்கு ஒரு சந்தேகம். கூகிள்லே எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லுமா அப்பா?
சொல்லும்.
ஆனா நாளைக்குக் எனக்குக் கணக்குப் பரீட்சையிலே என்ன கேள்வி வரும்னு கேட்டா சொல்ல மாட்டேங்கறதே அப்பா?
 
Indian magic
An Indian And An American Both Were Friends.
They Both Went Into A Chocolate Store.
Everybody Is Busy In The Store So American Steal 3 Chocolates And Put Those In The Pocket.
Both Came Out From The Store Then American Said: “Man, I’m The Best Thief Ever, I Stole 3 Chocolates And No One Saw Me, You Can’t Beat That.”
Indian Replied: “This Is Nothing, You Wanna See Something Better, Lets Go Back To The Shop And I Will Show You Real Stealing.”
So They Went To The Counter And Indian Said To The Shop Boy: “Do You Wanna See Magic?”
Shop Boy Replied: “Yes, Of Course.”
Indian Said: “Give Me One Chocolate Bar.”
Shop Boy Gave Him One, And He Ate It.
Indian Asked For The Second, And He Ate That As Well.
Indian Asked For The Third, And Finished That One Too.
The Shop Boy Asked: “But Where Is The Magic?”
Indian Replied: “Check In My Friends Pocket, And You’ll Find Them.”
You Can’t Beat An Indian.
 
I haven't reported my missing credit card to the police because whoever stole it is spending less than my wife. Xxx
 
பையன் தங்கமான பையன். உங்க பொண்ணுக்கு முடிச்சிடலாம்.

அதான் வரதட்சிணை ரொம்ப அதிகமாக் கேக்கறாங்க போல இருக்கு?
 
அந்தப் பிச்சைக்காரர் ஏன் அவங்க வீட்டுக்கு முன்னாடி உட்காந்து போராட்டம் நடத்திக்கிட்டு இருக்கார்?
நேத்து அவங்க வீட்டுலே போட்ட பழைய சாப்பாடு அவருக்கு ஒத்துக்கலையாம். அதுக்கான மருந்து செலவை அவங்கதான் தரணும்னு போராடறார்.
 
அவர் இப்ப ஒரு கிரிமினல் வக்கீலுங்க
இல்லீங்க. அவர் ஒரு சிவில் வக்கீலுங்க.
அதைச்சொல்லல்லீங்க. அவர் ஒரு கொலை பண்ணிட்டு இப்ப கிரிமினல் கேஸுலே மாட்டிக்கிட்டு இருக்காரே. அதைச் சொல்றேன்.
 
கடைசியிலே மாப்பிள்ளை குடியும் குடித்தனமுமா செட்டில் ஆயிட்டார் போல இருக்கே?
அதுதான் ரொம்பக் கவலையா இருக்கு. எப்பவும் பாட்டிலும் கையுமா இருக்கார். கேட்டா நான் நீங்க சொன்ன மாதிரி குடியும் குடித்தனமுமாத் தான் இருக்கேங்கறார்
 
அந்தக் காதல் கதாசிரியரோட பொண்ணு யாரையோ காதலிச்சக்கிட்டு இருந்ததே. கடைசியிலே என்ன ஆச்சு? அவங்க விரும்பின பையனையே கல்யாணம் பண்ணி வெச்சிட்டாரா?
'அதெல்லாம் நான் கதைக்காக பணம் பண்ண எழுதறது. அதை நம்பி காதல் கல்யாணம்னு பேசினா காலை ஒடிச்சிப்பிடுவேன்'னு சொல்லி பெண்ணை மிரட்டி அவர் சொந்தத்திலேயே கல்யாணம் பண்ணி வெச்சிட்டார்.
இவங்க எழுதறது பேசறது எல்லாம் நம்ம ஊர் பகுத்தறிவுவாதிகளோடே கதை மாதிரி ஊருக்குத்தான் உபதேசம்னு சொல்லு. இவங்க பேச்சையும் எழுத்தையும் படத்தையும் நம்பி தங்களோடே நிஜ வாழ்க்கையையே சீரழிச்சிக்கிறாங்களே அந்த இளசுகள் அவங்களைச் சொல்லு.
 
வீட்டுக்கு வீடு:
நம்ம மேனேஜர் பத்தாங் கிளாஸ் புத்தகங்களை எல்லாம் ஒண்ணு விடாம படிச்சிக்கிட்டு இருக்காரே. ஏன்?
அவர் மகன் பத்தாம் கிளாஸ் படிக்கிறான். அவனுக்கு இப்ப பரீட்சை வருதில்லே. அவனுக்கு சொல்லித் தரதுக்காக இவர் படிச்சிக் கிட்டு இருக்கார்
 
*(ஃபோனில் கோபமாக) என்னங்க? எங்கே போய்த் தொலைஞ்சீங்க? ரொம்ப நேரமா உங்களைக் காணோம்?
உனக்கு வைர நெக்லஸ் வேணும்னு ஒருநாள் ஆசையாக் கேட்ட இல்லியா?
ஆமாம்
அப்போ என் கிட்டே காசு இல்லேன்னு சொன்னேன் இல்லியா?
(கோபம் தணிந்து)
ஆமாம்
இன்னொரு நாள் அதை நான் உனக்கு வாங்கித் தரேன்னு சொன்னேன் இல்லையா?
(ஆர்வம் தாங்காமல் ) ஊம். ஆமாம் சொன்னீங்க. ஓ, அதை இன்னிக்கி வாங்கி வரதுக்காகப் போயிருக்கீங்களா? ஏங்க? என்னைக் கூப்பிட்டு இருந்தா நானும் கூட வந்திருப்பேன் இல்லை. சரி. பரவாயில்லை. எத்தனை நேரமானாலும் இருந்து வாங்கிக்கிட்டு வாங்க.
நான் அந்தக் கடைக்குப் பக்கத்துலே இருக்கிற பீடாக் கடையிலே நீ கேட்ட வெத்தலையை வாங்கப் போயிருக்கேன்.
 
மந்திரி எந்த இடத்துக்கு வந்தாலும் பின்னாலே கேட் இருக்கான்னு கேக்கறாரே. எதுக்குங்க?
அவர் மந்திரி ஆனதே பின் வழியாத்தானே. அதனாலே இருக்கலாம். இல்லை. ஒரு ஆபத்துன்னு வந்ததுன்னா பின் பக்கமா தப்பிச்சி ஓடறதுக்கும் இருக்கலாம்.
 
முன்னேறாமலிருக்க முன்னூறு வழிகள்னு ஒரு புத்தகம் எழுதப்போறதா 15 வருஷத்துக்கு முன்னாடி சொன்னீங்களே. அந்தப்புத்தகத்தை எழுதி முடிச்சி வெளியிட்டுட்டீங்களா?
இல்லை.
ஏன்?
அதுலே நான் சொன்ன முதல் வழியை கடைப்பிடிக்கறதனாலே.
அதென்ன வழி?
அதான் எந்தக்காரியத்தையும் செய்யணும் செய்யணும்னு நெனச்சுக்கிட்டு செய்யாமலே இருக்கிறது.
 
The person at the LIC counter on seeing me asked
" Have you brought your death certificate"
Without any demur, I answered "YES"
You are surprised isn't it?
It did happen.
After my wife's death, when I went to LIC office to claim her insurance, the staff concerned wanted me to produce her death certificate with the form, which I didn't have at that time. So he asked me to get the certificate. After a few days, when I went back, the person on seeing me asked as above.
 
Pgtuxrkutsxwjaimky
What is it that you have written?
I have written my name.
What ? I am not able to read it.
Every other letter starting from p (p,t,x,k,j and i) are all silent. So now you read it.
Oh! It reads Guruswamy. Now I understand . That is indeed your name.Why then have you used so many unwanted letters and say they are all silent?
That is English. You don't ask me why. I don't Know. Ask English pundits
 
அமெரிக்கப் பெண்மணி தமிழ்நாட்டு சைவச்சமையல் பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் ஒரு புத்தகம் எழுதி இருக்காங்க. இப்ப நம்ம ஊர்லே இந்தப் புத்தகத்துக்குத் தான் ஏகப்பட்ட டிமாண்டாம். என் ஸிஸ்டர் என் ஒய்ஃப்கிட்டே கொடுக்கச் சொல்லி என்கிட்டே கொடுத்து இருக்கா. அதான் பாக்கறேன்.

நம்ம ஊர் விஷயங்களை அது சாப்பாடா இருந்தாலும் சரி, சாத்திரமா இருந்தாலும் சரி, எல்லாம் யாராவது ஒரு அமெரிக்கனோ அல்லது வெளிநாட்டானோ புகழ்ந்து பேசினாத்தான் நம்ம ஊர் ஆட்கள் அதையெல்லாம் மதிப்பாங்க. அதுதான் நம்ம ஊர்.
 
எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்
என் கிட்டே இத்தனை நாளா உன் அவரைப் பத்திச் சொல்லவேயில்லையே. யாருடீ அந்த அவர்?
அட சீ, நான் அவரைக்காயைச் சொன்னேன்
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top