• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My jokes in Tamil and English

Status
Not open for further replies.
ஒருவர்: நம்ம தலைவர் அடிக்கடி நான் சாதிக்கப் பிறந்தவன், சாதிக்கப் பிறந்தவன்னு சொல்றாரே.
மற்றவர்: நீங்க வேறே. நம்ம ஊர்லே முக்கால்வாசிப்பேர் ஏதோ ஒரு சாதிக்குப் பிறந்தவங்க தான். அவர் இந்த ஊரிலே இருக்கிற மெஜாரிட்டி சாதியைச் சேர்ந்தவர்ங்கறதைத்தான் அவர் சூசகமா அந்த மாதிரி சொல்றார்.
 
(குடி மக்கள் மன்னிக்கவும்)
இவங்க வம்சமே குடிகார வம்சம்.
எதை வச்சி அப்படிச் சொல்றீங்க?
இவங்க தாத்தா தூத்துக்குடி. இவங்க அப்பா லால்குடி. இவங்க அம்மா திட்டக்குடி. இவங்க இன்னொரு தாத்தா இளையான்குடி. ஒரு பாட்டி காரைக்குடி.......
சரி சரி போதும். இவர் இப்போ எங்கே இருக்கார்?
இவர் இப்போ இருக்கிற இடம் பெருங்குடி.
 
என்ன? ராமசாமி டிவியிலே இந்த தமிழ் சீரியலைப் பார்க்க மாட்டாரே. ரங்கசாமி தானே பார்ப்பார்.
இனிமே அவருக்குப் பதில் இவர் தான் இந்த சீரியலைப் பார்ப்பார்
 
உங்க வீட்டுக்காரர் ஜோக் எழுதறதாலே அவர் நிறைய ஃப்ரெண்ட்ஸ்களை சம்பாதிருச்சிருப்பாரே.
நீ ஒண்ணு. என் வயத்தெரிச்சலைக் கொட்டிக்காதே. அவர் காசும் சம்பாதிக்கல்லே. ஃப்ரெண்ட்ஸும் சம்பாதிக்கல்லே. தேவையில்லாத விரோதத்தைத்தான் சம்பாதிச்சிருக்கார்.
 
"Dear, Dad. It is with great regret and sorrow that I'm writing you. I had to elope with my new girlfriend, because I wanted to avoid a scene with Mum and you.
I've been finding real passion with Stacy, and she is so nice, but I knew you would not approve of her because of her piercings, tattoos, tight motorcycle clothes, and because she is so much older than I am.
But it's not only the passion, Dad. She's pregnant. Stacy said that we will be very happy. She owns a trailer in the woods, and has a stack of firewood for the whole winter. We share a dream of having many more children.
Stacy has opened my eyes to the fact that marijuana doesn't really hurt anyone. We'll be growing it for ourselves, and trading it with the other people in the commune, for all the cocaine and ecstasy we want.
In the meantime, we'll pray that science will find a cure for AIDS, so Stacy can get better. She sure deserves it!
Don't worry, Dad. I'm 15, and I know how to take care of myself. Someday, I'm sure we'll be back to visit, so you can get to know your many grandchildren.
Love, your son, Joshua.
P.S. Dad, none of the above is true. I'm over at Jason's house. I just wanted to remind you that there are worse things in life than the school report that's on the kitchen table. Call when it is safe for me to come home!
 
மாமா: நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கியேடா, அந்தப் பொண்ணு உண்மையிலேயே ஒரு தேவதைடா.
பையன்: தேவதையா இல்லையான்னு எனக்குத் தெரியாது மாமா. ஆனால் அவ தேவையில்லாம என்னை தினமும் வதை வதைன்னு வதைக்கிறதுதான் உண்மை.
 
அந்த வயசான அம்மாவுக்கு ஞாபக சக்தி ரொம்ப ஜாஸ்தி. எத்தனாவது வருஷம் யாருக்கு என்ன சமையல் செஞ்சிப் போட்டாங்க, யார் என்னென்ன சாப்பிட்டாங்க, அவங்களுக்கு எப்ப கல்யாணம் ஆச்சு, அவங்களுக்கு எத்தனை குழந்தைங்க, அவங்க பேரெல்லாம் என்னென்ன இப்படி எல்லா விவரத்தையைம் ஒண்ணு விடாம ஞாபகம் வெச்சுப்பாங்க. ஆனா ஒரே ஒரு விஷயத்துலே மாத்திரம் மறதி ரொம்ப ஜாஸ்தி.
அப்படியா? அது என்ன?
அதாவது எந்த ஒரு விஷயத்தை நம்ம கிட்டே ஏற்கெனவே பத்து தடவை விவரமாக சொல்லிட்டாங்களோ அதே விஷயத்தைப் பதினோராவது தரமா நம்ம கிட்டேயே மறுபடியும் அப்பத் தான் முதல் தடவையா சொல்றமாதிரி ஆரம்பத்திலிருந்து படு விவரமாச் சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க.
 
ஒரு பெண்: உன் பையன் என்ன இவ்வளவு தின் (thin) னா (ஒல்லியா) இருக்கானே. ஏன்?
மற்றொரு பெண்: அவன் சரியா தின்னாத்தானே.
 
பெரியவர்: மிருகங்களையெல்லாம் நீங்க சொந்த சகோதரர்களா பாவிக்கணும்.
ஒருவர்: அதனாலென்ன? இப்ப பல பேர் சொந்த சகோதரர்களையே மிருகங்களாகத் தானே பாவிக்கிறாங்க
 
அவரை ஏன் எல்லாரும் திட்டறாங்க?
பின்னே, செத்த வீட்டுலே எல்லாரும் அழுதுகிட்டு இருக்கும்போது இவர் அங்கே வந்து செத்த பிணத்திற்காக சாகப்போற பிணங்கள் அழுதான்னு தாயுமானவர் பாடலை பாடினார்னா அங்கே இருக்கிறவங்களுக்குக் கோபம் வராதா என்ன?
ஆமாம். இடம் பொருள் ஏவல் தெரியாமல் தத்துவம் பேசினா இப்படித்தான்.
 
A patient asks a doctor in a hospital:
- Doc, what has happened to me?
- Don't know, but the post mortem will reveal it.
 
நான் அவனுக்குக் கொடுத்த பணம் பத்தாதுன்னு சொன்னானே. என்ன ஆச்சு?
நேத்து அவன் வீடு பத்திக்கிட்டப்போ அந்தப் பணம் பூராவும் அப்படியே எரிஞ்சி போச்சு.
அப்படீன்னா பணம் பத்திடுச்சுன்னு சொல்லு.
 
ஒருவர்: அவங்க வீட்டுலே டிவி சீரியல் பார்க்கிறவங்க யாரும் இல்லியே. அப்படி இருக்கும்போது நேத்து அவங்க வீட்டுலே டிவி சத்தம் கேட்டுச்சே.
மற்றவர்: அதுவா? அவங்க வீட்டிலே நேத்து ஒரு சாவு விழுந்துட்டுது. அந்தக் காலமா இருந்தா ஒப்பாரி வச்சி வாய்விட்டு அழுவாங்க. இப்ப அந்த மாதிரி அங்கே அழறதுக்கு யாருமே இல்லையா? அதனாலே தமிழ் டிவி சீரியலைப் போட்டுட்டங்க.
 
என்னப்பா? இவ்வளவு சந்தோஷமா இருக்கே. என்ன விஷயம் ?
என் வொய்ஃபை தேள் கொட்டிடுத்து நேத்து ராத்திரி.
அதுக்கு ஏன் சந்தோஷப்படறே?
என்னாலே செய்ய முடியாததை தேள் செஞ்சிடுத்தேன்னுதான்.
 
உங்க பையன் யாரைப் பாத்தாலும் எதுக்கெடுத்தாலும் கேள்வி கேட்கிறானே, அவனை வாத்தியாராகவோ இல்லை வக்கீலாகவோ ஆக்கிடுங்க.
 
போலீஸ்: இந்த செத்துப் போனவர் யாருன்னு கண்டு பிடிக்க அடையாளம் ஏதாவது தெரியுமா உங்க யாருக்கேனும்?
ஒருவர்: ஓ! தெரியுமே. அவர் பேசும்போது திக்கித்திக்கிப் பேசுவார். தூங்கும்போது பலமா குறட்டைவிடுவார்.
 
English Kadi joke
Teacher: “John, why are you doing your math multiplication on the floor?”
John: “You told me to do it without using tables.”
 
அவர் ஏன் அப்படித் தூண் மாதிரி நிக்கிறார்?
அவர் தான் அந்த வீட்டையே தாங்கறவர். அதான்.
 
நீங்க புதுசா ட்ராஃபிக் கான்ஸ்டபிள் வேலைக்கு சேர்ந்து இருக்கலாம். அதுக்காக ஒன் வே (one Way) யிலே நடந்து போறவங்களை எல்லாம் சார்ஜ் செய்யறது டூ மச்.
 
எனக்கு இப்ப அர்ஜண்டா ஆயிரம் ருபாய் வேணும்.
நீங்க இப்ப என்னை தொந்திரவு பண்ணாதீங்க. எங்கிட்டே இப்ப சுத்தமா பணமே கிடையாது.
அதனால என்னங்க? நான் என்ன உங்க கிட்டே சலவை நோட்டா கேக்கிறேன். நோட்டு சுத்தமா இருக்கணுங்கிற அவசியம் இல்லீங்க. கொஞ்சம் அழுக்கு நோட்டா இருந்தாலும் பரவாயில்லை. கொடுங்க.
 
இந்த ரயில்வே பட்ஜெட்டுலே உங்க ஊருக்கு புது ரயில் விடப் போறாங்களாமே?
பட்ஜெட்டுலே ரயிலை விட்டு என்னங்க பிரயோஜனம்? தண்டவாளத்துலே ரயிலை விட்டாத்தானே நாமெல்லாம் போகமுடியும்.
 
உலக மகா மேதைன்னு உலகமே புகழ்கிற அந்த அறிஞர் ஏன் எப்பவும் வருத்தமாவே இருக்கார்?
அவர் எவ்வளவு பெரிய மேதையா இருந்து என்னங்க பிரயோஜனம்? வீட்டுலே அவர் பேச ஆரம்பிச்சாலே " உங்களுக்கு ஒண்ணும் தெரியாது. சும்மா கெடங்க"ன்னு சொல்லி மூணாம் க்ளாஸ் கூட படிக்காத அவர் மனைவி விடாம அவர் வாயை அடக்கிக்கிட்டே இருந்தா அவருக்கு வருத்தமா இருக்காதா?
 
ஜெயிலுக்கும் ஆபீஸுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் என்ன சொல்லு?
ஜெயில்லே சொன்ன வேலையை செஞ்சு நல்லபடியா நடந்துகிட்டா, தண்டனை குறையும். ஆபீஸுலே அப்படி நடந்துகிட்டா தண்டனை ஜாஸ்தி ஆகும். அதாவது எல்லா வேலையையும், எல்லார் வேலையையும் உங்க தலையிலே கட்டிடுவாங்க.
 
இப்ப எல்லாம் எலிகளோடே வாழ்க்கைத் தரம் ரொம்பவும் உயர்ந்துட்டுதுங்க.
என்ன சொல்றீங்க நீங்க ?
முந்தியெல்லாம் எலிங்க குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள், நெருக்கடியான கடைத்தெருக்கள் இந்த மாதிரி இடங்களிலேதான் இருக்கும். ஆனா இப்ப பாருங்க பஸ், ரயில், ஜெனரல் ஆஸ்பத்திரி, பெரிய பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ் இந்த மாதிர இடங்களிலேயும், ரொம்ப லேடஸ்டா ஏரோப்ளேன்லேயும் கூட இருக்குன்னா பாத்துக்கங்களேன்.
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top