[h=1]முடியாததில்லை.[/h]
நூதன நோயால் துன்புற்ற மகனின்
வேதனை தாள இயலாத தந்தை,
வியாதிக்கு ஒரு மருந்தைக் கேட்டு
வியப்பிலே ஆழ்ந்து போய்விட்டான்.
மனிதனின் மண்டை ஓடு ஒன்றிலே,
மழை நீரும், நாகப் பாம்பின் விஷமும்,
சுவாதி நட்சத்திரத்தின் உச்சத்தில்
சேகரித்துக் கொடுக்க வேண்டுமாம்!
யாரால் செய்ய இயலும் இவைகள்,
பாரில் அந்தப் பரந்தாமனைத் தவிர?
“சிறுவனைக் காக்க நீதான் எனக்கு
ஒரு வழி காட்ட வேண்டும் ஐயனே!”
மறுநாள் காலையில் உச்சத்தை
சுவாதி நட்சத்திரம் அடையுமாம்.
மற்றவற்றுக்கும் அந்த மாலவனே
சுலப வழிகளைக் காட்ட வேண்டும்!
காலையிலே பிரார்த்தனைகளுடன்
சென்றவன் கண்டான் மண்டையோடு;
காலத்துக்குத் தேடினாலுமே எளிதில்
சென்ற இடத்தில் கிடைக்காத ஒன்று!
மேலும் பிரார்த்திக்கையில் அங்கே
மழை பெய்யத் தொடங்கியது பாரீர்!
“தேவை இன்னும் ஒன்றே ஒன்றுதான்;
தேவன் அதுவும் எனக்கு அருளுவான்!”
மழையில் நனைய வெளியே வந்தது
மண்டூகம் ஒன்று, சப்தமிட்டபடியே.
பாம்பு அதைக் கவ்வ முயன்றபோது,
பாம்பிடம் மாட்டாது, தாவியது தவளை.
விஷம் விழுந்தது, மண்டை ஓட்டில்
விழுந்து கொண்டிருந்த மழை நீரிலே!
“இறைவா! உன் கருணையே கருணை!”
இறையருளால் சிறு மகன் பிழைத்தான்.
முடியுமா, நடக்குமா என்றெல்லாம்,
மனத்தைக் குழப்பிக் கொள்ளற்க!
முயற்சி, நம்பிக்கை ஒன்றானால்,
முடியாதது எது? நடக்காதது எது ?
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
நூதன நோயால் துன்புற்ற மகனின்
வேதனை தாள இயலாத தந்தை,
வியாதிக்கு ஒரு மருந்தைக் கேட்டு
வியப்பிலே ஆழ்ந்து போய்விட்டான்.
மனிதனின் மண்டை ஓடு ஒன்றிலே,
மழை நீரும், நாகப் பாம்பின் விஷமும்,
சுவாதி நட்சத்திரத்தின் உச்சத்தில்
சேகரித்துக் கொடுக்க வேண்டுமாம்!
யாரால் செய்ய இயலும் இவைகள்,
பாரில் அந்தப் பரந்தாமனைத் தவிர?
“சிறுவனைக் காக்க நீதான் எனக்கு
ஒரு வழி காட்ட வேண்டும் ஐயனே!”
மறுநாள் காலையில் உச்சத்தை
சுவாதி நட்சத்திரம் அடையுமாம்.
மற்றவற்றுக்கும் அந்த மாலவனே
சுலப வழிகளைக் காட்ட வேண்டும்!
காலையிலே பிரார்த்தனைகளுடன்
சென்றவன் கண்டான் மண்டையோடு;
காலத்துக்குத் தேடினாலுமே எளிதில்
சென்ற இடத்தில் கிடைக்காத ஒன்று!
மேலும் பிரார்த்திக்கையில் அங்கே
மழை பெய்யத் தொடங்கியது பாரீர்!
“தேவை இன்னும் ஒன்றே ஒன்றுதான்;
தேவன் அதுவும் எனக்கு அருளுவான்!”
மழையில் நனைய வெளியே வந்தது
மண்டூகம் ஒன்று, சப்தமிட்டபடியே.
பாம்பு அதைக் கவ்வ முயன்றபோது,
பாம்பிடம் மாட்டாது, தாவியது தவளை.
விஷம் விழுந்தது, மண்டை ஓட்டில்
விழுந்து கொண்டிருந்த மழை நீரிலே!
“இறைவா! உன் கருணையே கருணை!”
இறையருளால் சிறு மகன் பிழைத்தான்.
முடியுமா, நடக்குமா என்றெல்லாம்,
மனத்தைக் குழப்பிக் கொள்ளற்க!
முயற்சி, நம்பிக்கை ஒன்றானால்,
முடியாதது எது? நடக்காதது எது ?
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.