ஜவ்வு மிட்டாயைப் பல வண்ணங்களில் தயாரித்து, பிள்ளைகளின் கையில் வாட்ச் போலக் கட்டிய
மிட்டாய்க்காரர் எங்கே?
ஐஸ் கட்டியைத் துருவி, அதில் எஸ்ன்ஸை ஊற்றி, தண்ணீர் விட்டு, சர்பத் விற்று, தாகம் தணித்தவர் எங்கே?
தினமும் மாலை, பூக்குடலையில் பூப் பந்துகளை வைத்து, வீடு வீடாக விற்ற பூப் பண்டாரம் எங்கே?
'நல்ல காலம் பிறக்குது', என்று உடுக்கை அடித்து, பழைய துணிகளை கேட்ட நாடோடிகள் எங்கே?
ஆடிப் பெருக்கன்று சின்ன மூங்கில் துண்டில் பனை ஓலையை ஒலி பெருக்கிபோல் சுற்றி, அதனும்
சின்னக் காய் ஒன்றை வைத்து, பிஸ்டன் ஒன்றால் தள்ளி வெடிக்கும் 'பாப்டாம் குழல்' விற்றவர் எங்கே?
நவராத்திரியில், தினம் ஒரு வேஷம் இட்டு, சுண்டல் வாங்கிச் சென்ற சிறுவர், சிறுமியர் எங்கே?
மார்கழி மாதத்தில், 'நாராயண மூர்த்திக்கு அரோஹரா (??)' என்று கூவி, நாமம் இட்ட சொம்பின் வாயில்
துணி கட்டி, அதில் ஓட்டை செய்து, நாணயங்கள் சேர்த்த குட்டிப் பையன்கள் எங்கே?
ஆருத்ரா தரிசனத்தன்று, வாண வேடிக்கைகளுடன் அரச மரப் பிள்ளையாரைச் சுற்றும் நடராஜ மூர்த்தி எங்கே?
வளையல்களை வெள்ளைத் துணி மூட்டையில் கட்டி, சிறுமிகளுக்குக் கை நிறையப் போட்ட வளைச் செட்டி எங்கே?
சின்ன மண் சட்டியில் வண்ணம் தீட்டி, அதனுள் சர்க்கரையில் செய்த சின்ன பொம்மை தந்த கன்னட மாமி எங்கே?
சிரித்த முகத்துடன் பிரசவ ஆஸ்பத்திரியில் பணி புரிந்த, 'மலையாளத் தமிழ்' பேசும், மேட்ரன் அம்மா எங்கே?
ஏசு நாதர் படத்தில் விபூதி விழுந்தது கண்டு பயந்த, க்ரிஸ்துவ நர்ஸ் பிரகாசம் எங்கே?
இன்னும் எத்தனை எத்தனை பேர்களின் நினைவுகள் அலைகளாக மோதுகின்றன! :couch2: