[h=5]மூலம் வருவதற்கான காரணம் -
[/h][h=5]வாத, பித்த, கப தோஷங்களுக்கு ஏற்படும் சீற்றத்தால் ஜாடராக்னீ எனப்படும் பசித்தீயின் பலம் குறைகிறது. உணவு சரி வர பாகமடையாததால், மலங்கள் சேருகின்றன. மேலும் பிரயாண உலுக்கல், சமமற்றதும், கடினமானதுமான இடங்களிலும் குத்திட்டு உட்காருதல், மிகவும் குளிர்ந்த நீரைக் கொண்டு ஆசன வாயைக் கழுவுதல், மலக்கழிவின் போது மிகவும் முக்குதல், குடல் கீழ்க்காற்று, சிறுநீர், மலம் இவற்றின் உந்துதலை அடக்குதல் அல்லது அவற்றைப் பலவந்தமாக வெளியேற்றுதல், காய்ச்சல், குல்மம், பேதி, வீக்கம், சோகை ஆகிய நோய்களால் உடல் இளைத்தல், முறைகேடான செய்கைகள், பெண்களுக்கு நிகழும் குறைப் பிரசவம், கரு வளர்ச்சியால் ஆசனவாய் அழுத்தப்படுதல் போன்ற காரணங்களாலும், குடலின் கீழ்ப் பகுதியிலிருந்து செயல்படும் அபான வாயு சீற்றமடைந்து, மலத்தை ஆசனவாய் மடிப்புகளில் தடை செய்கிறது. அவ்விடங்களில் கசிவு உண்டாகி மூல நோய் ஏற்படுகிறது.
மேற்குறிப்பிட்ட காரணங்களால் உண்டான மூல முளைகளை சரி வர சிகிச்சை மேற்கொள்ளாமல் நீங்கள் விட்டிருக்கக் கூடும். வறட்சியுள்ளவையும், மலத்தைக் கட்டும் தன்மையுள்ளவையுமான பயறு, வரகு, சோளம், கடலை முதலியவற்றால் வாயு, தன் இருப்பிடத்தில் சீற்றமடைந்து, பலமுள்ளதாகி கீழ் நோக்கிய மலப்பையை அடைத்து, மலத்தை வற்றச் செய்து, வாயு, மலம், சிறுநீர் ஆகியவற்றின் வெளியேற்றத்தைப் பயங்கரமாக தடை செய்தால், மலப்பை தன் இடம் விட்டு நெகிழ்ந்து வெளியே வந்துவிடும். உங்களுக்கு மலப்பை இறங்கியுள்ளதா அல்லது மூல முளைகள் பெரிதாகி பல்பு போன்று தொங்குகிறதா என்பதை நவீனக் கருவிகள் மூலம் கண்டறிவது நல்லது.
ஒரு சில ஆயுர்வேத மருந்துகளை நீங்கள் பயன்படுத்தலாம். சிரிவில்வாதி கஷாயத்தை 15 மி.லி. அளவில் எடுத்து 60 மி.லி. வெதுவெதுப்பான தண்ணீர் கலந்த சிட்டிகை இந்துப்பு சேர்த்து, 1 ஸ்பூன் (5 மி.லி.) சுகுமார கிருதம் எனும் மருந்துடன் காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 48 நாட்கள் சாப்பிடலாம்.
கல்யாணக்க்ஷôரம் எனும் பொடி மருந்தை சூடான சாதத்துடன் சிட்டிகை கலந்து, காலை, இரவு உணவில் முதல் கவளத்தைச் சாப்பிடலாம். அபயாரிஷ்டம் 30 மி.லி. காலை, இரவு உணவுக்குப் பிறகு சாப்பிடலாம்.
மேற்குறிப்பிட்ட மருந்துகள் மூலம் இறங்கியிருந்தால் நன்றாகச் செயல்படக் கூடியவை. மலப்பை இறங்கியிருந்தால் சாங்கேர்யாதி கிருதம், மூஷிக தைலம் போன்ற விசேஷ மருந்துகளை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டியவை.
குக்குலு பஞ்ச பல சூரணத்தைப் புகைத்து, புகையை மூலத்தின் மீது படரவிடும் அபூர்வ சிகிச்சை முறையாலும் மூலம் சுருங்கக் கூடும். இதே சூரணத்தைத் தேன் குழைத்து உள்ளுக்குள் சாப்பிடும் முறையும் சிறந்ததே.
காலையிலும் இரவிலும் உணவுக்கு அரைமணி நேரம் முன்பாக, நீங்கள் நிறைய மோர் பருக வேண்டும். மோர் ஜீரணித்தவுடன் இந்துப்பு கலந்த மோர் கஞ்சி சாப்பிடுவது மிகவும் நல்லது. இப்படி முப்பது நாட்கள் வரை பருக, மூல உபத்திரவம் குறைய வாய்ப்பிருக்கிறது.
காலை, இரவு உணவுக்குப் பிறகு அபயாரிஷ்டம், தந்த்யரிஷ்டம் ஆகியவற்றை வகைக்கு 15 கிராம் வீதம் கலந்து, மொத்தம் 30 மி.லி. சாப்பிட்டு வருவதும் நல்லதே.
Information Gathered from
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை } 600 123
[/h]