பித்ரு தோஷம் என்றால் என்ன?
பித்ரு என்பது ஒரு ஜாதகரின் தந்தை அல்லது அவரின் மூதாதையர்களைக் குறிக்கும். பித்ரு தோஷம் என்பது, தந்தை அல்லது தந்தை வழி மூதாதையர் செய்த கெட்ட/ பாவச் செயல்கள் அல்லது அவர்கள் வாழும் காலத்தில் செய்த தவறான செய்கைகளே அவர்களின் சந்ததிகளைத் தாக்கச்செய்யும்.
எப்படி ஒருவரின் தேடிவைத்த சொத்துக்கள் அவரின் சந்ததியினரை சென்று அடைகிறதோ அதுபோலவே அவரின் கர்ம வினைகளும் அவரின் சந்ததியினரை வந்தடையும். மூதாதையினரின் சொத்துக்கு போட்டிபோட்டு, பூலோக கோர்ட்டுக்கு அலைந்து திரிந்து பெறவிழைக்கிறோம். அதுபோலவே இந்த கர்ம பலனை இறைவனின் நீதிமன்றம் நாம் கோராமலே அதற்கான பங்கை அது அளித்துவிடுகிறது.
அதுவே எச்சரிப்பது போல ஒருவரின் ஜாதகத்தில் குறியாக வந்து நிற்கிறது. மூதாதையர்கள் செய்த தீவினைகளின் தண்டனைகளை எளிமையாக, ஜபம், பூஜை, ஹோம்ம், தேவையானவர்களுக்கு சேவை செய்தல், அன்னதானம் செய்தல், வறுமையில் உள்ளவர்களுக்கு பணமோ/ பொருளோ அளித்து உதவுதல் போன்றவற்றை செய்து பித்ரு தோஷத்திலிருந்து தப்பலாம் என்பதை தப்பு கணக்கு போட்டு விடமுடியாது.
2, பித்ரு தோஷம் வரக்காரணமான செயல்கள்/ குற்றங்கள் என்னென்ன?
1, கொடூரச் செயலை செய்வது/ ஏமாற்றுவது/ சித்திரவதை செய்வது/ கொலை செய்வது போன்றவற்றை தாமாக நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாக தமது பங்களிப்பைச் செய்வது.
2, தமக்கு சொந்தமில்லாத எந்த பொருளையும், தன்வசப்படுத்திக்கொள்வது,கட்டாயப்படுத்தி அதனை அடைவது, கொள்ளையடிப்பது அல்லது ஏமாற்றுவது, போன்றவற்றை நேர்மை அற்ற முறையிலோ அல்லது சட்டத்திற்குப் புறம்பாகவோ அடைவது.
3, உண்மைத் தன்மையை அறியாமலும் கெட்ட எண்ணத்துடனும் புரளியைப் பேசுவது.
4, ஒற்றுமையாக இருந்த ஒரு குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் பிரித்தாண்டு, குடும்ப அமைப்பைச் சீர்குலைப்பது.
5, உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, பாலின தொல்லை ரீதியாகவோ, ஒரு பெண்ணுக்குத் தொல்லை கொடுத்துச் சீரழிப்பது.
3, பித்ரு தோஷ வகைகள் எத்தனை?
தோஷம் என்பது எவ்வாறு உண்டாகிறது என்பதனை முதலில் அறிதல் நன்று. முதலில் மற்றவருக்கு நாம் செய்யும் செயல்களால்/ பேசும் பேச்சால் அவர்களுக்கு ஏற்படும் கோபம், அது நாளடைவில் தொடருகையில் சாபமாகும். பின்னர் அதுவே தோஷமாகி சந்ததியினரைத் தொல்லை பெறச் செய்யும்.
1, ஒருவரின் குடும்ப அங்கத்தினர்களால் அடிப்படைத் தேவையான ஆண்டு சடங்குகளை, அவர் குடும்பத்தில் பிரிந்த ஆன்மாக்களுக்குச் செய்யாத்தால், உருவாகும் சாபங்களினால் ஏற்படும் தோஷம்.
2, குடும்பத்தினர் அல்லாத மற்றவர்களுக்கு, நாமோ அல்லது நமது குடும்பத்தினர்களில் இருப்பவர் அல்லது மறைந்த ஆத்மாக்களால், பாதிப்பு ஏற்படும்படி நடந்து கொண்ட செயல்கள்.
3, வயதானவர்களை கவனிக்காமல் அவர்களை தனியே இருத்தி அவர்களுக்கு உடல் மற்றும் மனத்தால் தாங்கொணா வலி ஏற்படுத்தும் செயல்களால், இந்த மூன்றுமே அதன் பித்ரு சாபங்களாகி தோஷமாக மாறுபவையாகும்.
4, பித்ரு தோஷத்தின் பாதிப்புகள் என்னென்ன?
1, திருமண கால தாமதம் அல்லது தடையை உருவாக்கும்.
2, திருமண வாழ்வைக் கவிழ்த்து விடும்
3, ஒரே குடும்பத்தில் திருமணம் வெற்றி பெறாமலும் தோல்வி கொண்டதுமான நபர்கள் இருப்பர்.
4, ஒரே குடும்பத்தில், திருமணமே ஆகாத ஆண்களும், பெண்களும் இருப்பர்.
5, குழந்தைப் பேறு பாக்கியம் இல்லாமல் போகலாம்.
6, தாய்மைப் பேருக்கு காத்திருக்கும் பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்படலாம்.
7, உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ ஊனம் உற்றவர்கள்/ சவாலானவர்கள் இருக்கலாம்
8, எதிர்பாராத துர்மரணங்கள் ஏற்படலாம்.
9, வீட்டில் கொள்ளைச் சம்பவமோ/ தீப்பிடித்து எரிதல் போன்ற விபத்துக்கள் ஏற்படலாம்.
10, தீராத வாட்டியெடுக்கும் வறுமை, எவ்வளவு பிரயத்தனம் செய்தாலும் தீராத கடன் தொல்லைகள்.
5, ஜாதகத்தில் பித்ரு தோஷத்தை அறிவது எவ்வாறு?
ஒருவரின் ஜன்ன ஜாதகத்தில் பித்ரு கார்ரான சூரியன் ராகுவுடன் 5 ஆம் வீட்டிலோ அல்லது 9 ஆம் வீட்டிலோ இணைந்திருப்பது.
ராகு தனித்து 5 ஆம் வீடிலோ அல்லது 9 ஆம் வீடிலோ இருப்பது.
6, பித்ரு தோஷ நிவாரணம்/ பரிகாரம் என்னென்ன?
தேவையானவர்களுக்கு அன்னமும், வஸ்திரமும் அளித்தால் நன்மை பயக்கும்.
அரச மரக்கன்றை ஆவணி மாத்த்தில் நட்டுவைத்தால் நல்லது.