• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

*குழந்தைகள் கிறுக்கிடும்
வெள்ளைத்தாள்களை
உற்றுப் பாருங்கள் நன்றாக !
கிடைத்திடும்
உங்களுக்கோர் ஓவியம்
கிறுக்கல்கள் வழியே !:popcorn:

My younger is not only nimble fingered but also a budding artist. When he was a toddler the drawing room walls would filled up with modern arts in colorful chalks up to height of 3 feet from the floor.

Whenever I tell not to draw on the walls, he would retort and tell me, "But this is the drawing room! Where else am I supposed to draw??? :wacko:
 
குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக. . .?
1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக்
கொடுக்கும்.
2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது. 3. வீட்டிற்கு வரும்
சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.
4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.
5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.
7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள்
உண்டாகும்.
8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.
9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.
11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.
12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும்
சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.

:violin:








தாழம்பூ குங்குமம் போதும்

தன்னம்பிக்கையை அதிகரிக்க. :thumb:
 
அம்மாவின் மடியிலோர் குட்டித்
தூக்கம்
நீடிக்க விடாத வேகத் தடை
நின்று கொண்டே பேருந்தில்
பயணம் ...!:popcorn:

அம்மாவின் தோளில் முகவாயைப் பதித்துக் கொண்டு
நின்றபடியே தூங்கிக் கொண்டு பேருந்தில்
3 மணி நேரம் பயணம் செய்த சிறுவனை நான் அறிவேன்!!! :)
 
திருமணத்துக்கோ வேறு சுபகாரியத்துக்கோ
செல்லும்
போது ...ஏமாற்றுவதற்காக ..
ஒன்றுமே இல்லாத
ஒரு பெட்டியை அழகாக சுற்றி
அழகாக
கொடுப்பது வேடிக்கைக்கு மட்டும்
அல்ல
என் நிலையும் அதுதான்
நண்பனே ....!

பரிசு தந்தாலும் தராவிட்டாலும்
அரிய நண்பன் என்றும் நண்பனே! :nod:
 
உன் வாழ்க்கையில் பலரின்
வருகை மகிழ்ச்சியை தரலாம் ....
ஆனால்
எந்த ஒருவரின் வருகையால் ...உன்
வாழ்கை முழுமை அடைந்ததாய் நீ
உணர்கிரையோ ..
அவளே உன் உயிர் தோழி ..:laugh:

அப்படியானால் என் உயிர்த்தோழி

பாரதியின் கண்ணம்மா மட்டுமே!
 
இருபது
வயதில்
வருவதல்ல
காதல்....அது
எழுபது
எண்பது வயதையும்
தாண்டி தொடர்வதே
காதல்...!:clock:


இப்போதெல்லாம் காதல் மலருவதே
வயது அறுபதுகளில் தானோ??? :rolleyes:
 
என்னவளுக்கும் அழகிற்கும்
ஒரே ஒரு வித்தியாசம் தான்
அவள் அழகை விடக் கொஞ்சம்
அழகானவள்...!:yo:



அழகே நாணும் அந்த அழகி யாரோ??? :noidea:
 
இறுதியில் நமக்காக அழ யாரும்
இல்லா இடத்தில் கிடைக்கும்
சொர்கத்தை விட
நமக்காக துடிக்கும் உறவுகள்
வாழும் இடம் நரகமாயினும்
சொர்கமே....:cheer2:

நமக்காக உறவுகள் துடிக்கும் இடம் எப்படி நரகம் ஆகும்??? :nono:
 
இன்றைய காதல் என்பது,
அழகானவர்களை பார்த்த
உடனேயே வருவதாக
இருக்கிறது.... அவள்/ன்
கல்யாணம் ஆனவரா என்பதில்
யாருக்கும் பிரச்சினை இல்லை..
இதுக்கு பேர் காதலாம்...:bump:


விடுதலையும் தொடுப்பும் சுலபம் ஆகிவிட்டனவே!

தடுப்பதற்கு என்ன உள்ளது இனிமேல் இவர்களை??? :bowl:
 
ஒரு நொடி துணிந்தால்
இறந்துவிடலாம்..
ஒவ்வொரு நொடியும்
துணிந்தால்....
நாம் ஜெயித்து விடலாம்...


வாழ்வதற்குத் தேவை துணிவு!


வீழ்வதற்குத் தேவை மடமை!!


 
சுலபமான எண்ணங்கள்
கடினமான வாழ்க்கை
நினைவுகள் நினைக்க மட்டும்
தான்
கனவுகளை கையில் ஏந்த
முடியாது:faint:

நினைவு மொழியாகிப் பின் செயல் ஆகின்றது.


கனவு மெய்ப்பட்டால் கைகளில் ஏந்தலாமே!
 
வரதட்சணை :washing:

வரதட்சணை வாங்கி கொண்டிருக்கும் வாலிபர்களே ..!
அதன் விளைவை விவரிக்கிறேன்..
ஏழை வீட்டில் பிறக்கும் பெண் குழந்தைகள் கருவறையை விட்டு இறங்கியவுடன் கல்லறைக்கு அனுப்படுகிறது..
மணவறை ஏற நீங்கள் கேட்கும் விலைக்கு பயந்து..
:washing:




காலம் மாறிவிட்டது ஐயா! :nono:

இப்போதெல்லாம் பெண்கள் என்றாலே :mullet:


ஆண்களுக்குச் சிம்ம சொப்பனம் தெரியாதா? :scared:
 
மகனே ! இது தந்தையின் தவிப்பு



மகனே !
சொல்லால் எனை வதைக்காதே
சொல்லிவிடு பாரம் என்று
சொல்லாமல் போய் விடுகிறேன்
வெகு தூரம் !

சாடையில் எனை சாடாதே
பாடையில் எனை அனுப்ப நேரம் தேடாதே !
பனை வெட்டி உன்னை பள்ளிக்கு
அனுப்பினேன் !
கல் சுமந்து உன்னை கல்லூரிக்கு
அனுப்பினேன் !

என் பெயரோ இனியன்
நீ எனக்கு கொடுக்கும்
பட்டமோ சனியன் !

மூச்சுமுட்ட மூணு வேளைக்கு
நல்லா திங்க தெரியுது
ஆனால் வேலை செய்ய
முடியலையோ என்கிறாயே !

மகனே
வேலை செய்ய உள்ளம் ஒத்துழைக்கிறது
ஆனால்
உடல் ஒத்துழையாமை இயக்கம் நடத்துகிறதே
நான் என்ன செய்வேன் !


அதற்கு நீ போடாதே
பகல் வேஷம் என்கிறாயே
நான் மட்டுமா வேஷம் போடுகிறேன்
வாழ்கையே ஒரு வேசம்தானடா
நீயும்தான் போடுகிறாய்
பாசம் என்னும் வேஷம் !

பரவாயில்லை ,
இறைவனிடம் ஒன்று
உனக்காக வேண்டி கொள்கிறேன்
உனது முதுமை காலத்தில்
எனது இந்நிலை வராமல்
காத்திட எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிகொள்கிறேன்

ஒரு இனியவனுக்குள் இறைவா

இருக்குமா இத்தனை கசப்பு???
 
பெத்த மனம் பித்து :der:

பிள்ளை மனம் கல்லு :hand:


இது ஏன் என்று தெரியுமா ???


தொடர்ந்து படியுங்கள் !!!
 
[h=1]தொடரும் வகையில்[/h]
தாய் தந்தையருக்குத் தருவதற்குத்
தாமதம் செய்யும் அவர் மகன்கள்,
தாம் பெற்ற செல்வங்களுக்கு மட்டும்
தங்கு தடை இன்றி அளிப்பது ஏன்?

தம்மை வாரிசுகளாகப் பெற்றவரைவிடத்
தம் வாரிசுகளிடம் அதிக அக்கறை ஏன்?
விடுகதை போலத் தோற்றம் அளித்ததை,
விடாமல் ஒரு நாள் நான் ஆராய்ந்தேன்!

ஓடும் ஒரு பெரு நதியைப் போலவே
ஓடவேண்டும் சந்ததிகளும் என்றே,
கடவுள் வகுத்த நியதியே இந்தக்
காரணம் கூற இயலாத பண்பு!

தனக்குத் தந்தவருக்கே தானும் தந்தால்,
கணக்குத் தீர்ந்து, முடிந்து போகுமே!
கணக்குத் தொடர நாம் விரும்பினால்,
கணக்கைத் தீர்த்துவிடக் கூடாது!

தந்தை தன் மகனுக்கு என்றும், அவன்
தன்னுடைய மகனுக்கு என்றும் ஒரு
சங்கிலித் தொடர்போலத் தொடருவதே
இங்கிதமான வாழ்க்கை முறை ஆம்.

இறைவன் அறிவான் நல்ல வழிகளை,
இயல்பை அமைப்பான் தகுந்தபடியே.
செய்தவனுக்குத் தெரியாதா மீண்டும்
செய்ய வேண்டியது என்ன என்று?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
விரிசல்...



விதையின் விரிசலில்தான்
வெளிவருகிறது
முளை..

உறவின் விரிசலில்தான்
வெளிவருகிறது
உண்மை பாசம்...!

உறவின் விரிசல் = ஊடல்

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்.

 
கணவன்-மனைவி


டாக்டர் கணவன் உடம்பை சோதித்துவிட்டு - "இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...."

மாலை 5 மணி : கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள்.

எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கட்டி சட்னியும் செஞ்சி குடும்மா, இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு....

மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்...

இரவு 10 மணி : நல்ல பசும்பால்ல, உங்கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு....!!!

இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான்.



அவள் : பேசாம படுங்க...காலைல எழுந்தவுடன் ஆயிரம் வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும்.....
உங்களுக்கு காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல.....!!!



:clock:

ஜரூர் மனைவி! :mmph:
உஷார் கணவரே! :attention:
போகாவிட்டாலும் கூட உம்மைப் :behindsofa:

பாக் செய்து அனுப்பிவிடுவாள் போல! :rolleyes:
 
Some people even pull up devotees who have come for worship and engage in gossip. The Shastras declare this to be a sin. Hence, no one should speak unnecessary, unrelated things in a temple. They should be well focused in worship alone.Do not give room to discussing worldly topics in a temple. Only worship, meditation and chanting should go on. - Sri Sri Bharati Tirtha Mahaswamigal
 
தொடரும் வகையில்


தாய் தந்தையருக்குத் தருவதற்குத்
தாமதம் செய்யும் அவர் மகன்கள்,
தாம் பெற்ற செல்வங்களுக்கு மட்டும்
தங்கு தடை இன்றி அளிப்பது ஏன்?

தம்மை வாரிசுகளாகப் பெற்றவரைவிடத்
தம் வாரிசுகளிடம் அதிக அக்கறை ஏன்?
விடுகதை போலத் தோற்றம் அளித்ததை,
விடாமல் ஒரு நாள் நான் ஆராய்ந்தேன்!

ஓடும் ஒரு பெரு நதியைப் போலவே
ஓடவேண்டும் சந்ததிகளும் என்றே,
கடவுள் வகுத்த நியதியே இந்தக்
காரணம் கூற இயலாத பண்பு!

தனக்குத் தந்தவருக்கே தானும் தந்தால்,
கணக்குத் தீர்ந்து, முடிந்து போகுமே!
கணக்குத் தொடர நாம் விரும்பினால்,
கணக்கைத் தீர்த்துவிடக் கூடாது!

தந்தை தன் மகனுக்கு என்றும், அவன்
தன்னுடைய மகனுக்கு என்றும் ஒரு
சங்கிலித் தொடர்போலத் தொடருவதே
இங்கிதமான வாழ்க்கை முறை ஆம்.

இறைவன் அறிவான் நல்ல வழிகளை,
இயல்பை அமைப்பான் தகுந்தபடியே.
செய்தவனுக்குத் தெரியாதா மீண்டும்
செய்ய வேண்டியது என்ன என்று?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.


வீட்டிற்க்கு வீடு வாசல்படிதான், பல பெற்றோர்களின் நிலை அதுவேதான்.

இதற்க்கு ஒரு கதையே உண்டு. ------
ஒரு மகன் தன் தகப்பனுக்கு ஒரு ஓட்டை அலுமினியம் தட்டில் சோறு போடுவானாம்.
இதை பார்த்துகொண்டு இருந்த அவன் மகன் ஒரு நாள் அந்த தட்டை எடுத்துக்கொண்டு மேலே உள்ள பலகையில் வைத்துவிட்டானாம்.
இதை பார்த்த தகப்பன் பிள்ளையை கேட்டதர்க்கு அவன் சொன்னானாம்: அப்பா நீ தாதா மதிரி ஆகும்போது உனக்கு சாதம் போட தட்டு வேண்டாமா அதுக்குதான் எடுத்துவைத்திருக்கிரேன் என்றானாம். எப்படி? அது மாதிரி இந்தக்காலத்தில் யாராவது செய்கிரார்களா? தெரிந்தால் சொல்லுங்களேன்.
 
..................
This thread is devoted exclusively

to the words of wisdom of the

well known people and not

every Tom, Dick and Harry or

every Amar, Akbar and Antony or

every Appu, Kuppu and Chuppu!

I hope the message is clear enough.

So NO prattle & rattle, no craps & scraps.

No trolling, drooling or spoiling the thread.

While this thread is not a private property

nor is it a No-man's-land (porampokku)

to dump personal grudge and garbage.......
Just a reminder! :ranger:
 
Thanks for the timely reminder sweetie. :hug:

I missed your :whip: more than I thought I would.

By the way isn't this thread better than :decision:

singing and swinging on the past meet

till the next meet???
Laie_23.gif
 

Latest ads

Back
Top