• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II


"I may have all the six ingredients (effort, initiative, courage, intelligence, resourcefulness and perseverance) for success but still there may be something that makes the difference between success and failure. By my prayer, I invoke daivam, the seventh factor, to take care of the unknown element .Without the 6 ingredients, even prayer cannot help.Without prayer, just the 6 ingredients alone are inadequate."- Swami Dayananda
 
1#5a. ஹயக்ரீவன் (1)


பதினாயிரம் ஆண்டுகள் போரிட்டார் விஷ்ணு,
பயங்கரமாக அசுர வீரர்களுடன் தொடர்ந்து.

களைத்துப் போய்விட்ட விஷ்ணு சிறிது நேரம்
களைப்பாறினார் சமதளத்தில், பத்மாசனத்தில்.

வில்லை வலுவாகப் பதித்தார் பூமியில் – அந்த
வில்லின் நுனியில் பதித்தார் தன் முகவாயை.

சத்தம் இல்லாமல் நித்திரை செய்தார்;
எத்தனையோ நீண்ட காலம் ஓடிவிட்டது.

யாகம் செய்ய விரும்பினர் தேவர்கள் – ஆனால்
யாக கர்த்தா விஷ்ணுவோ ஆழ்ந்த நித்திரையில்.

‘விழிக்கும் வரை காத்திருப்போம்!’ என்றால்
விழிப்பதாகத் தெரியவில்லை நெடுங்காலம்.

ருத்திரர் கூறினார் எழுப்புவதற்கு உபாயம்.
“குத்திட்ட வில்லின் நாணை செல்லரித்தால்.

நிமிர்ந்து விடும் வில்லின் மறு நுனி – அதனால்
நீங்கி விடும் விஷ்ணுவின் ஆழ்ந்த உறக்கம்.

தேவ காரியம் நடைபெறவேண்டும் – எனவே
தேவேந்திரன் அரிக்கட்டும் செல்லாக மாறி.”

“பாதியில் நல்ல நித்திரையைக் கலைப்பதும் ;
பாதியில் புண்ணிய கதையை நிறுத்துவதும் ;

பாதியில் கலவி இன்பத்தைக் குலைப்பதும் ;
பாதகமாகும் தாய் சேயைப் பிரிப்பது போல “

தேவேந்திரன் மறுத்தான் பாதகம் புரிந்திட;
தேவர்கள் விடவில்லை அவனை மறுத்திட.

“யாகத்தில் அளிப்போம் அவிர்பாகம் உனக்கு!
யோசனை செய்யாமல் விஷ்ணுவை எழுப்பு!”

செல்லுருவம் எடுத்து வில்நாணை அறுத்தான்.
வில்நுனி நிமிர்ந்தது நடுக்கும் பேரொலியுடன்!

நடுங்கினர் தேவர்கள்; நடுங்கியது பூமி;
நடுங்கின மலைகள்; கடல் கொந்தளித்தது;

இருண்டு விட்டது சூரிய அஸ்தமனம் போல்!
பறந்து சென்றது நாரணன் தலை அதிர்வில்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
1#5b. ஹயக்ரீவன் (2)


அந்தகாரம் நீங்கி விட்டது சற்று நேரத்தில்;
அந்தோ இருந்தது சிரமற்றுச் சிதைந்த உடல்!

கபந்தத்தைக் கண்டு ஓலமிட்டனர் தேவர்கள்;
“அபயம் அளிக்கும் பெருமானுக்கு அபாயமா?

அழிவே இல்லாதவனுக்கு அழிவு ஏற்பட்டதே?
அழிக்க முடியாத ஒருவனை அழித்தது எது?

எங்கள் கதி என்ன ஆகுமே இனிமேல் அறியோம்!
எங்களாலேயே விளைந்தது இந்தக் கொடுமை!”

ஆறுதல் கூறினார் தேவகுரு பிருஹஸ்பதி.
“அழுவதும், அரற்றுவதும் பயன் தர மாட்டா!

தெய்வப் பிரயத்தனத்துடன் நம் பிரயத்தனம்;
செய்யும் அனைத்தும் நிகழ்வது இவற்றால்!

நமது முயற்சிக்கு வெற்றியை அளித்திடும்
நமது முயற்சியுடன் கூடிய தெய்வ முயற்சி.

தெய்வ சங்கல்பமின்றி நிகழ்ந்து விடாது ஏதும்!
தெய்வ சங்கல்பமே முயற்சியும் அதன் பலனும் “

மறுத்தான் தேவகுருவின் கருத்தை ஏற்பதற்கு;
மாறுபட்ட கருத்துக் கொண்டிருந்த இந்திரன்!

“உறக்கம் கலைவதற்கு செய்தோம் முயற்சி;
பறந்து சென்று விட்டது விஷ்ணுவின் தலை!

நம் முயற்சி, தெய்வ முயற்சி, இவை இரண்டும்
தம்மில் வேறுபடாமல் நேருமா இக் கொடுமை?”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

http://visalakshiramani.weebly.com/devi-bhaagavatam-skanda-1--2.html
 
An imaginative article

ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது...


பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும்

உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த
செலவுக்காக வரவு வைக்கப்படும்.

ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.
அவை -
1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் உங்கள்
கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.

2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்ற முடியாது.

3) அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு.

4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக்
கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400 ரூபாய்
வரவு வைக்கப்படும்.

5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த
ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம்.

6) வங்கி - "முடிந்தது கணக்கு" என்று சொன்னால்
அவ்வளவுதான். வங்கிக் கணக்கு மூடப்படும்,
மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.

இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?
உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள்
மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள்
இல்லையா? உங்களுக்கு முன்பின் அறிமுகம்
இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள்.
ஏனென்றால் அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக
மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் -
அப்படித்தானே? முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும்
எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே?

உண்மையில் இது ஆட்டமில்லை - நிதர்சனமான உண்மை..
ஆம்

நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக்
கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.

அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின் பெயர் - காலம்.

ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும்
போது வாழ்க்கையின் அதியுன்னத பரிசாக
86400வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.
இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும்
நேரம் நமக்காக சேமித்து வைக்கப் படுவதில்லை.
அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள்
தொலைந்தது தொலைந்தது தான்.நேற்றைய பொழுது
போனது போனது தான்.ஒவ்வொரு நாள் காலையிலும்
புத்தம் புதிதாக நம் கணக்கில் 86400நொடிகள்.

எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும்
வங்கி உங்கள் கணக்கை முடக்க முடியும்.
அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
உண்மையில் 86400வினாடிகள் என்பது அதற்கு சமமான
அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும்
மதிப்பு வாய்ந்தது அல்லவா?

இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின்
ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க
மாட்டோமா? காலம் நாம் நினைப்பதை விட வேகமாக
ஓடிவிடும்.

எனவே உங்களைப் பொன் போல பேணுங்கள் - சந்தோஷமாக
ருங்கள் - சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள்
-வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.
 
The one Absolute, called Brahman by the Vedas, transcends our faculties. Yet it comes within our grasp and comprehensive in any form, shape and characteristic that we choose to invest it with. So God is worshiped in any form which a devotee wishes to, and he is considered to be still within the Hindu fold.

Souce : Scriptures
 
The reason angels can fly is because they take themselves lightly.


G.K. Chesterton

Then why do they need wings?

9k=
 

Latest ads

Back
Top