Quotable Quotes Part II

1901287_678968452144245_702051269_n.jpg

The SUN of Wisdom rises just before DAY of Life sets!!! :tsk:
 
அச்சம், மடம் , நாணம், பயிர்ப்பு இதில் அச்சம் நாணம் என்றால் என்னவென்று எல்லோருக்கும் தெரியும்... அது என்ன மடம், பயிர்ப்பு....?..பதில் தெரிந்தால் கூறுங்களேன்.....எனக்கு தெரியவில்லை...


அச்சம் = பயம்.

மடம் = அறியாமை

நாணம் = வெட்கம்

பயிர்ப்பு = பிற ஆடவன் தொடுவதை வெறுப்பது.


என்ன என்பதையே முற்றிலுமாக மறந்து விட்டோம் - பிறகு :loco:

இருக்கிறதா இல்லையா என்று எப்படிக் கண்டறிய முடியும்??? :pout:
 


அச்சம் = பயம்.

மடம் = அறியாமை

நாணம் = வெட்கம்

பயிர்ப்பு = பிற ஆடவன் தொடுவதை வெறுப்பது.


என்ன என்பதையே முற்றிலுமாக மறந்து விட்டோம் - பிறகு :loco:

இருக்கிறதா இல்லையா என்று எப்படிக் கண்டறிய முடியும்??? :pout:


மற்ற ஒரு பதிலையும் பார்க்கலாமா.



அச்சம் நாணம் இரண்டிற்கும் பொருள் விளக்கம் தேவை இல்லை

எல்லோரும் அறிவார்கள். மடம்--மடமை அல்லது
அறியாமை. சில சூழ் நிலைகளில் தெரிந்ததையும்
தெரியாததுபோல் பாவனை செய்வார்கள் பெண்கள். இது மடம். இது ஒரு பாவனை. இது அகப் பொருள் இலக்கியம் சார்ந்த பாவனை குணம்.சான்றாக காமத்தைப் பற்றி ஆண்
பேசினால் அது தெரிந்திருந்தும் தெரியாததுபோல் தன் அறியாமையை வெளிபடுத்துவாள்.இந்த பாவனை பெண்மையின் மெல்லியல்பாக பழைய தமிழ் சமுதாயத்தில் எதிர்பார்க்கப் பட்டது. அதற்காக பெண்கள் அறிவிலியாக
இருக்க வேண்டும் என்று பழைய சமுதாயம் சொல்லவில்லை.

இப்பொழுது பெண்களே டாக்டர்கள்.பெண் டாக்டர்கள் காமம் அல்லது செக்ஸ் பற்றிய கேள்விக்கு வெட்கப் படமுடியுமா ?

பயிர்ப்பு ----அருவருப்பு என்று பொருள் படும் அவைக்கு உதவாத சொற்களை அல்லது பெண்கள் முன் சொல்லக் கூடாத சொற்களை கேட்கும்போது ஏற்படும் அருவருப்பு.
பிற ஆடவன் தொடும்போது கற்பினால் ஏற்படும் அருவருப்பு.
தற்காலத்தில் பெண்கள் போலீசிலும் ராணுவத்திலும் பணிபுரிகிறார்கள். தவறு செய்யும் ஆடவனை தொட்டு தட்டிக் கேட்காமல் இருக்க முடியுமா ?

நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்....என்று பாரதி எழுதிப் போந்தபின் அச்சம் மடம் பயிர்ப்பு பெண்களுக்கு தேவையற்றது. காலத்திற்கு பொருந்தாது. நாணம் எல்லா பெண்களிடமும் இயல்பாய் பொருந்தி நிற்கும் குணம்.
பெண்ணில் நாணம் வரையும் சித்திரத்தில் பெண் இன்னும் அழகு பெறுகிறாள்.இது கவிஞன் கண்ட உண்மை.

பூவுக்கு வாசம் போல்

பெண்ணுக்கு நாணம்

நாணிச் சிவந்தன மாதரார் கண்கள்
----பழைய பாடல்
நாணமோ இன்னும் நாணமோ
கண்கள் போடும் நாடகம் என்ன
அந்த பார்வை கூறுவதென்ன
நாணமோ ...நாணமோ ...
----வாலியின் அழகிய பாடல் வரிகள்
 
ஆள்வினையுடைமை

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும் 611

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு 612

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு 613

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும் 614

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண் 615

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் 616

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள் 617

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி 618

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் 629

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர் 620

FAITH, HOPE and EFFORT can rewrite our destiny! :thumb:
 
சுவர்க்கம், நரகம்!



சுவர்கமும் நரகமும் எப்படி வேறுபடும்?
அவற்றுள் என்ன பேதம் அறிவீரா?
சுவர்க்கமும் நரகமும் வேறுபடுவது
அவற்றுள் வசிக்கும் ஆத்மாக்களாலே!

சுவர்க்கம் நரகம் இரண்டையுமே
சுற்றி வந்து ஒருவர் பார்த்தபோது,
இரண்டில் உள்ளவர்களின் நிலையும்
இருந்தது ஒரு போலவே, விந்தை!

கையுடன் சேர்த்துக் கட்டி இருந்தனர்
கனத்த நீண்ட மரக் கரண்டி ஒன்று.
எதிரில் அறுசுவை உணவு இருந்தும்,
எடுத்துத் தாமே உண்ண இயலாது!

நரகத்தில் வசிப்போர் உணவின்றி
நானா இன்னல்கள் அடைத்தாலும்,
சுவர்க்கவாசிகள் உணவு உண்டு,
சுகமாகவே இருந்து வந்தனர்!

எப்படி இது சாத்தியம் என வியந்தால்,
இப்படித்தான் எனச் செய்து காட்டினர்.
சுவர்க்கவாசி ஒவ்வொருவரும் தம்
எதிரே உள்ளவருக்கு ஊட்டிவிட்டார்.

நரகவாசிகள் நவின்றதோ இப்படி!
“நான் ஏன் ஊட்டிவிட வேண்டும்?
பசியுடன் நான் இருப்பது போலவே,
பசியுடன் அவனும் இருக்கட்டுமே!”

நரகமும் சுவர்க்கமும் நமது மனங்களே!
நரகமும் சுவர்க்கமும் வெளியே இல்லை.
நாலு பேருக்கு உதவுவதுதான் சுவர்க்கம்.
“நான்! எனது!” என்றே வாழ்வது நரகம்.


வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
Back
Top