இதுவா சுவர்க்கம்?
தினமும் பூமிக்கு இறங்கி வரும் இரு
திவ்வியமான அன்னப் பறவைகள்;
வருவது சுவர்க்கத்திலிருந்து – வலம்
வருவதோ ஓர் அழகிய நீர் நிலையை.
அன்னப் பறவைகளுக்கு உண்டு ஒரு
அன்பான நண்பன், அந்நீர் நிலையில்.
வண்ணங்கள் பல கொண்ட வாத்து, பால்
வண்ண அன்னங்களின் ஒரு தோழன்!
விவரமான அந்த வாத்து, அன்னங்களிடம்
விவரமாகக் கேட்டுக் கேட்டு அறியும்,
அற்புதமான அந்த சுவர்க்கத்தில் உள்ள
அற்புத அதிசயங்கள் அனைத்தையும்.
ஒரு நாள் அந்த அன்னங்கள் வாத்துத்
தோழனையும் தம்முடன் வரும்படி
விரும்பிப் பலமுறை அழைக்கவே,
தோழனும் மகிழ்ந்து உடன் சென்றது.
எத்தனை எத்தனை அதிசயங்கள்;
எத்தனை எத்தனை அற்புதங்கள்!
நான்கு தந்தம் கொண்ட ஐராவதம்;
நாம் கேட்டதைத் தரும் கற்பக மரம்!
அமுதம், அப்சரசுகள், தேவர்கள்,
அமுதமயமான இன்னிசை, நடனம்;
எங்கு நோக்கினும் மகிழ்ச்சிக் கடல்!
எங்கு நோக்கினும் ஒளி வெள்ளம்!
“எங்கள் சுவர்க்கம் உனக்குப் பிடித்தா?
எல்லாம் சுற்றி வந்தோமே!” என்று
வினவிய வெள்ளை அன்னங்களிடம்
வினோத விடை பகர்ந்தது வாத்து!
“இது என்ன பெரிய சுவர்க்கம்?
இங்கு ஒரு புழுவும்கூட இல்லை;
ஒரு பூச்சியும் இல்லை; நான் அளையச்
சேறு, சகதி எதுவும் இங்கே இல்லை!”
அமுதமும், ஐராவதமும் இருந்தாலும்,
அது தேடியதோ புழுவும், பூச்சியுமே!
சேறும், சகதியும் இல்லாததும்கூட ஒரு
பெரும் குறையே அதன் பார்வையிலே!
மனிதருள்ளும் இரு வகையினர் உண்டு!
இனிய நிறைவுகள் காணுவர் ஒரு சாரர்;
மன நிறைவு என்று ஒன்று உண்டு
எனவும் அறியாதவர் மறு சாரர்.
நிறைகளையே காண்பவர் எங்கும்
நிறைந்த மனத்தோடு மகிழ்வார்;
குறைகளையே பட்டியல் இடுபவரோ,
குறைகளைத் தேடி அல்லல்படுவார்!
நிறைகளையே எப்போதும் தேடுவோம்;
குறைகளைக் காண்பதை விடுவோம்!
நிறைகளையே கண்டால் என்றும் இன்பமே;
குறைகளையே கண்டால் என்றும் துயரமே!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
தினமும் பூமிக்கு இறங்கி வரும் இரு
திவ்வியமான அன்னப் பறவைகள்;
வருவது சுவர்க்கத்திலிருந்து – வலம்
வருவதோ ஓர் அழகிய நீர் நிலையை.
அன்னப் பறவைகளுக்கு உண்டு ஒரு
அன்பான நண்பன், அந்நீர் நிலையில்.
வண்ணங்கள் பல கொண்ட வாத்து, பால்
வண்ண அன்னங்களின் ஒரு தோழன்!
விவரமான அந்த வாத்து, அன்னங்களிடம்
விவரமாகக் கேட்டுக் கேட்டு அறியும்,
அற்புதமான அந்த சுவர்க்கத்தில் உள்ள
அற்புத அதிசயங்கள் அனைத்தையும்.
ஒரு நாள் அந்த அன்னங்கள் வாத்துத்
தோழனையும் தம்முடன் வரும்படி
விரும்பிப் பலமுறை அழைக்கவே,
தோழனும் மகிழ்ந்து உடன் சென்றது.
எத்தனை எத்தனை அதிசயங்கள்;
எத்தனை எத்தனை அற்புதங்கள்!
நான்கு தந்தம் கொண்ட ஐராவதம்;
நாம் கேட்டதைத் தரும் கற்பக மரம்!
அமுதம், அப்சரசுகள், தேவர்கள்,
அமுதமயமான இன்னிசை, நடனம்;
எங்கு நோக்கினும் மகிழ்ச்சிக் கடல்!
எங்கு நோக்கினும் ஒளி வெள்ளம்!
“எங்கள் சுவர்க்கம் உனக்குப் பிடித்தா?
எல்லாம் சுற்றி வந்தோமே!” என்று
வினவிய வெள்ளை அன்னங்களிடம்
வினோத விடை பகர்ந்தது வாத்து!
“இது என்ன பெரிய சுவர்க்கம்?
இங்கு ஒரு புழுவும்கூட இல்லை;
ஒரு பூச்சியும் இல்லை; நான் அளையச்
சேறு, சகதி எதுவும் இங்கே இல்லை!”
அமுதமும், ஐராவதமும் இருந்தாலும்,
அது தேடியதோ புழுவும், பூச்சியுமே!
சேறும், சகதியும் இல்லாததும்கூட ஒரு
பெரும் குறையே அதன் பார்வையிலே!
மனிதருள்ளும் இரு வகையினர் உண்டு!
இனிய நிறைவுகள் காணுவர் ஒரு சாரர்;
மன நிறைவு என்று ஒன்று உண்டு
எனவும் அறியாதவர் மறு சாரர்.
நிறைகளையே காண்பவர் எங்கும்
நிறைந்த மனத்தோடு மகிழ்வார்;
குறைகளையே பட்டியல் இடுபவரோ,
குறைகளைத் தேடி அல்லல்படுவார்!
நிறைகளையே எப்போதும் தேடுவோம்;
குறைகளைக் காண்பதை விடுவோம்!
நிறைகளையே கண்டால் என்றும் இன்பமே;
குறைகளையே கண்டால் என்றும் துயரமே!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.